HEADER

... (several lines of customized programming code appear here)

Wednesday, 30 April 2025

 



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் #Thala அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.20 நாட்களில் உலக அளவில் 288 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் 300 கோடியை தொடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குட் பேட் அக்லி : 20 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

Friday, 25 April 2025

 



தமிழ்நாட்டில் வசூலில் தூள் கிளப்பிய 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றாலே மிகப்பெரிய வரவேற்பு கொடுப்பதுண்டு இது மட்டுமில்லாமல் ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூலே தீர்மானித்து வருகின்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த பத்து திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

1. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 212 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.

2.இரண்டாவது இடத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 172.3 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது

3. மூன்றாவது இடத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 170.5 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.

4. நான்காவது இடத்தில் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று 168 கோடி வசூல் செய்து உள்ளது

5. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 165 கோடி வசூல் செய்து உள்ளது.

6. ஆறாவது இடத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 160 கோடி வசூல் செய்துள்ளது.

7. அஜித் குமார் நடிப்பில் வெளியான விஸ்வாசம்  திரைப்படம் 145 கோடி வசூல் செய்துள்ளது.

8. தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் 141 கோடி வசூல் செய்துள்ளது

9. மாஸ்டர் படம் 128 கோடி வசூல் செய்துள்ளது.

10. பத்தாவதாக அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு  திரைப்படம் 125 கோடி வசூல் செய்துள்ளது

இந்தப் பத்து திரைப்படங்களில் ஐந்து திரைப்படங்கள் தளபதி விஜய் படங்கள் வசூல் செய்துள்ளது சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பத்து திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில் வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?

Sunday, 20 April 2025




தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் 10 நாட்களில்  தமிழ்நாட்டில் மட்டும் 140 கோடியும் உலக அளவில் 240 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு..

விரைவில் 300 கோடியை நெருங்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.



குட் பேட் அக்லி படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

Tuesday, 15 April 2025



 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் 5 நாட்களில்  தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடியும் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு..

விரைவில் 300 கோடியை நெருங்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.




குட் பேட் அக்லி படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

Thursday, 10 April 2025

 



#Thala அஜித் ஒட்டு மொத்த இந்தியாவும் நடுங்கும் கேங்ஸ்டராக இருக்க, அந்த வேலையால் அன் குடும்பத்திற்கு ஆப்பத்து வருகிறது. இதனால் பிறந்த குழந்தையை கூட பார்க்க அனுமதிக்க மறுக்கிறார் திரிஷா.

இதனால் அஜித் போலிஸிடம் சரண்டர் ஆகி, திருந்தி 17 வருடம் கழித்து தன் பழைய கேங்ஸ்டர் வாழ்கையை மறைத்து மகனை பார்க்க வருகிறார்.

அப்படி பார்க்க வந்த இடத்தில் அஜித் மகனை அர்ஜுன் தாஸ் போலிஸிடம் ஏதோ ஒரு காரணத்துகாக சிக்க வைக்கிறார். இதனால் குட் இருந்த அஜித் பேட் ஆக மாறுகிறார்.

அர்ஜுன் தாஸ் ஏன் தன் மகனை ஜெயிலுக்கு அனுப்பினார் காரணத்தை தெரிந்து தன் மகனை ஜெயிலில் இருந்து AK மீட்டாரா என்ற சரவெடியே இந்த GBU மீதிக்கதை. 

படத்தை பற்றிய அலசல்

அஜித் ஒன் மேன் ஷோ தான் இந்த குட் பேட் அக்லி. ஆதிக் ஒவ்வொரு ப்ரேமும் ரசித்து ரசித்து எடுத்துள்ளார், இந்த அஜித்தை தானயா கேட்கிறோம் என ரசிகர்கள் ஆர்பரிப்பு தான் அஜித்தின் பெர்ப்பாமன்ஸ் படம் முழுவதும்.

குட் அப்பாவாக எல்லோரையும் கலாய்த்து ஜாலியாக இருக்க மகனுக்காக பேட் ஆக மாற அவர் எடுக்கும் செய்யும் காட்சிகள் சரவெடி தான். அதிலும் இடைவேளை போது பேங் ஆ, மொட்டையா என்ற காட்சி மங்காத்தா பிறகு ஒரு அடி தூள் இண்டர்வெல்.

இரண்டாம் பாதி தொடங்கியதும் அஜித் யார் என்ற ப்ளாஷ்பேக் அதில் டான் லீ, ஜான் விக், ப்ரோபோஷன் ரெபரன்ஸ் என 10 தீபாவளி காட்டியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

பிரசன்னா, சுனில் எல்லாம் அஜித்துடன் கூடவே வந்து, அவ்வபோது அஜித்தை பில்டப் செய்யவே மட்டும் தான் வருகிறார், படத்தில் பல சர்ப்ரைஸ், சிம்ரன் எண்ட்ரி, அதை கையண்ட விதம் என அந்த காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்க் விருந்து தான்.

அர்ஜுன் தாஸ் இவர் எப்படி அஜித்திற்கு வில்லன் என கேட்டவர்களுக்கு நல்ல பதிலடி, 2கே கிட்ஸ் அஜித்தை வம்பு இழுத்தால் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார்கள்.

படம் முழுவதும் அஜித் ரெபரன்ஸ் என ரசிகர்கள் கத்திக்கொண்டே இருக்கட்டும் என நினைத்தார் போல ஆதிக், ஏதாவது வந்துக்கொண்டு இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த பழைய பாடல், சவுண்ட் எல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல் போதும்ப்பா என்ற சலிப்பையும் தட்டுகிறது, ஆதிக் அதை கொஞ்சமாக பயன்படுத்துங்கள், லாஜிக் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்க கூடாது போல.

படம் டெக்னிக்கலாக இசை ரசிகர்களுக்கு விருந்து என்றாலும், சத்தம் கொஞ்சம் ஓவர் டோஸ், ஒளிப்பதிவு நன்றாக உள்ளது, அதே நேரத்தில் ஒரு சில இடங்கள் ஏன் அத்தனை மங்கலாக உள்ளது என கேட்க வைக்கிறது.

க்ளாப்ஸ்

அஜித் அஜித் அஜித்.

அஜித் ப்ளாஷ்பேக் காட்சிகள்.

சண்டை காட்சிகள், மாஸ் மொமண்ட்.

பல்ப்ஸ்

ஓவர் சத்தம் சலிப்பு வருகிறது.

மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கு ஓர் அஜித் ரசிகர் வைத்த அறுசுவை விருந்தே இந்த Good Bad Ugly - 4.5/5...

குட் பேட் அக்லி திரை விமர்சனம்:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com