HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday, 20 February 2024

 


தல அஜித் அவர்களை பற்றி தெரியாமல், அவரை பற்றி வலைப்பேச்சு அந்தணன் தவறாக பேசியுள்ளார் என்று பிரபல பத்திரிகையாளர் அமலான் தனியார் You tube channel-க்கு பேட்டியளித்துள்ளார். 

அந்தணன் தல அஜித்தை கடுமையா விமர்சனம் செய்தது மட்டுமில்லாமல். தல அஜித் மற்றும் விஜயகாந்த் இடையே பிரச்னை இருப்பதாக கூறினார்

என்னை மாதிரியே: 

ஆனால் அதெல்லாம் பொய். மேலும் அவர் கூறியது, தல அஜித் மற்றும் விஜயகாந்த் இடையில் எந்த பிரச்னையும் இல்லை. விஜயகாந்த் அவர்கள் தல அஜித் மேல் மிகவும் மரியாதை வைத்திருந்ததாகவும். நடிகர் சங்க கடனுக்காக ஏன் அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் சில குறிப்பிட்ட தொகையை கொடுத்தாலே கடனை அடைக்கலாம் என்று சொல்லி; தன் பங்காக பத்து லட்சம் ரூபாயை விஜயகாந்த்திடம் கொடுத்துவிட்டு #Thala அஜித் கிளம்பினார்.

அந்த விஷயம் விஜயகாந்த்தை கவர்ந்துவிட்டது.
உடனே தனது அருகே இருந்தவரிடம், “என்னை மாதிரியே அஜித் இருக்காருப்பா” என்று புகழ்ந்தார்.
இவ்வாறு அமலான் பேசியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




தல அஜித் அவர்களை பற்றி எதுவுமே தெரியாமல் அந்தணன் அவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்!:-

 


ASHIKA RANGANATH CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2024/02/ashika-ranganath-cute-images.html

சமீபகாலமாக அஜித்தை பற்றி பல காரசாரமான விமர்சனங்கள் பத்திரிக்கைகளில் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதை பற்றி கொஞ்சம் கூட கவலையில்லாமல் அஜித் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருகிறார். இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தனன் அஜித் குறித்து அவருடைய ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்திருக்கிறார்.

அஜித்தின் சமீபகால நடவடிக்கைகள் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த தமிழ் சினிமாவிலேயே இருந்து கொண்டு தமிழ் சினிமாவிலேயே பணம் சம்பாதித்து ஆனால் தமிழ் சினிமாவை துளி கூட மதிக்க மாட்டேன் என இருக்கும் ஒரே நடிகர் அஜித். அதனால் அஜித்தை புறக்கணிப்போல் என அந்தனன் கூறினார். தமிழ் சினிமாவை மதிக்க மாட்டேன், தமிழ் சினிமாவை எட்டி உதைப்பேன். ரசிகர்களை மதிக்க மாட்டேன் என ஒரு நடிகர் இருக்கிறார். அவரை உச்சத்தில் வைத்து கொண்டாடும் ரசிகர்களை திருத்துவதுதான் என் கடமை என அந்தனன் கூறினார்.அஜித்தின் ஒரு பழைய பேட்டியில் ‘ஒருவர் அவரவர் கடமையை சரியாக செய்தால் போதுமானது’ என அஜித் கூறியிருக்கிறாராம். இதை குறிப்பிட்டு பேசிய அந்தனன் ‘ நீங்க முதலில் உங்க கடமையை செய்தீர்களா? எந்தப் படத்திலேயாவது டை அடித்துக் கொண்டு நடிக்கிறீர்களா? இயக்குனர் தான் கதை எழுதும் போது தன் நடிகன் இப்படி இருக்க வேண்டும், இந்த மாதிரியான உடை அணிய வேண்டும் என்றெல்ல்லாம் நினைத்துதான் எழுதுவான். அவர்களுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்கிறீர்களா? நீங்க கடமையை பத்தி பேசுறீங்க?’ என கேட்டிருக்கிறார்.

கடமையை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத ஆளு அஜித். எந்தப் பட ப்ரோமோஷனுக்கும் வருவது இல்லை. அதை ஒரு கொள்கையாகவே வைத்துக் கொண்டு சுற்றும் ஒரே நடிகர் அஜித். இப்படிப் பட்டவரை கண்டிப்பாக நாம் புறக்கணிக்க வேண்டும் என அந்தனன் கூறினார்.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் வாழு வாழ விடு என்று எங்கள் தலைவர் பாதையில் அமைதியாக காந்தி வழியில் பயணிக்கிறோம் எங்களை சிண்டி பார்க்காதே அடிக்கு அடி-னு நேதாஜி வழியில் திருப்பி அடிக்க ரொம்ப நேரம் ஆகாது…. என கன்னடகளை தெரிவித்து வருகின்றனர்.

விடாமுயற்சி படத்திற்குப் பிறகு, அஜீத் குமார் மார்க் ஆண்டனி இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஏகே63 என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கைகோர்க்க உள்ளார். திரைப்படத் தயாரிப்பாளர் யென்னை அறிந்தால் நடிகரின் தீவிர ரசிகர், மேலும் அவர் தயாரிக்கும் படங்களில் நடிகருக்கு அடிக்கடி ஓட்ஸ் கொடுத்தார். படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் மறைக்கப்பட்ட போதிலும், தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் படத்தின் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார் என்பதை பிங்க்வில்லா பிரத்தியேகமாக அறிந்திருந்தது...

டுபாக்கூர் வலைப்பேச்சு அந்தனனுக்கு மரண எச்சரிக்கை விடுத்த அஜித் ரசிகர்கள் !:-

Monday, 19 February 2024






தஜ்ஜாலும் வரலாற்றின் ஆரம்பமும், இறுதி நூற்றாண்டு இறுதி சமுதாயம்-41:-

Sunday, 18 February 2024

 



திரையுலகில் பெரும் சர்ச்சையான விஷயங்களில் ஒன்று அஜித் - பாலாவிற்கு இடையே நடந்த ஒரு விஷயம் தான். இதுகுறித்து பலரும் பல விதமான தகவல்களை கூறியுள்ளனர். நான் கடவுள் படத்தில் நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அஜித்.

அப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித்திற்கு ரூ. 1 கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், படப்பிடிப்பு துவங்க மிகவும் தாமதமாகியுள்ளது. இதனால் பணம் கொடுத்தவர், கொடுத்த ரூ. 1 கோடி அட்வான்ஸ் பணத்தை வட்டியுடன் சேர்த்து ரூ. 3 கோடியாக தரவேண்டும் என நடிகர் அஜித்திடம் கூறியுள்ளார். 

இதுதான் பிரச்சனையின் ஆரம்ப புள்ளியாக இருந்துள்ளது. இதற்கு அஜித், பட தாமதமானதற்கு நான் காரணம் இல்லை இயக்குனர் பாலா தான் என கூறியுள்ளார். இதற்கான பஞ்சாயத்து பிரபல ஹோட்டலில் நடந்துள்ளது. அப்போது அஜித்தை சுற்றி இயக்குனர் பாலா, பைனான்ஷியர் அன்பு மற்றும் சில ஆட்கள் இருந்துள்ளார். அஜித்துக்கு சில நெருக்கடிகளை கொடுத்துள்ளனர்.

அப்போது அஜித் யாரும் எதிர்பார்க்காத ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளார். பில்லா படத்தில் வருவது போல் தன்னை சுற்றி நின்று கொண்டிருந்த ஆட்களை ஒரு விஷயம் செய்தார். அதன்பின் அனைவரும் அப்படியே பின்வாங்கிவிட்டார்களாம்.

அதே இடத்தில் உடனடியாக செட்டில்மென்ட் போட்டு பணத்தை கொடுத்துவிட்டு, அந்த இடத்திலிருந்து அஜித் வெளியேறிவிட்டாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் - பாலா பிரச்சனை.. அஜித் - பாலா பிரச்சனை.. ஹோட்டலில் சம்பவம் செய்த அஜித்:- சம்பவம் செய்த அஜித்:-

Friday, 9 February 2024

 


விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் தொடர்ந்து பல படங்களை கமிட் செய்து வருகிறார் கமல் ஹாசன். இதில் ஹெச். வினோத்துடன் துவங்கவிருந்த கமல் 233 படம் திடீரென சில காரணங்களால் ட்ராப் ஆகிவிட்டது

இதை தவிர இந்தியன் 2, தக் லைப், கல்கி 2898 AD, அன்பு - அறிவு இயக்கும் கமல் 237வது படம் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் கமல் ஹாசன். இதில் அவர் வில்லனாக நடிக்கும் திரைப்படம் தான் கல்கி 2898 ad

இதில் ஹீரோவாக பிரபாஸ் நடிக்க நாக் அஸ்வின் இயக்குகிறார். இப்படத்தில் தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பாட்னி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த படத்தில் புதிதாக தென்னிந்திய சென்சேஷனல் நடிகை மிருணாள் தாகூர் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சீதா ராமம், Hi நானா போன்ற படங்களில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த நடிகை மிருணாள் தாகூர், கல்கி 2898 AD படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.

இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து வெளிவரவில்லை என்றாலும், விரைவில் வெளியாகும் என கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று

முதல் முறையாக கமல் ஹாசனுடன் இணைந்த 31 வயது சென்சேஷனல் நடிகை.. யார் தெரியுமா:-

Thursday, 8 February 2024

 


அஜித் லைன் அப்

அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது

விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ஏகே 63 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின் அஜித் நடிக்கப்போகும் ஏகே 64 குறித்து சமீபத்தில் தகவல் ஒன்று வெளிவந்தது. அதன்படி, ஐந்துவது முறையாக சிறுத்தை சிவாவுடன் அஜித் கைகோர்க்க போகிறார் என கூறப்படுகிறது.

வெற்றிமாறன் - அஜித்

இந்நிலையில், தொடர்ந்து லைன் அப் வைத்திருக்கும் அஜித், வெற்றிமாறனுடன் இணையப்போவதாக பேசப்பட்டு வருகிறது. திரை வட்டாரத்தில் இதுகுறித்து தொடர்ந்து பேச்சு எழுந்துகொண்டு இருக்கிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதி.. பிரபல பத்திரிகையாளர் அதிரடி | Ajith To Join Hands With Vetrimaaran

ஆம், அஜித் - வெற்றிமாறன் கூட்டணியில் படம் உருவாகப்போகிறது.   வெற்றிமாறன், அஜித் அவர்களை சந்தித்து கதை கூறியதாகவும், அந்த கதையில் நடிக்க தல சம்மதம் சொன்னதாகவும். அப்படத்தை பிரபல தயாரிப்பாளர் எல்ட் ரெட் குமார் தான் தயாரிக்க போகிறாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.   

#Thala64 வெற்றிமாறன் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதி.. பிரபல பத்திரிகையாளர் அதிரடி:-

Wednesday, 31 January 2024

 



அஜித் நடிப்பில் உருவாகி வரும் 62வது படமான விடாமுயற்சியில், ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித் மற்றும் அர்ஜுனின் கூட்டணி மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஏற்கனவே மங்காத்தா படத்தில் இணைந்து நடித்த இவர்கள், அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர். இதனால், விடாமுயற்சி படத்திலும் இவர்களது கூட்டணி சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி படம் ஒரு ரோட் ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித் மற்றும் அர்ஜுன் இருவரும் ஆக்‌ஷன் காட்சிகளில் கலக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் அர்ஜுனை அசத்திய சம்பவம்படப்பிடிப்பின் போது, அஜித் ஒரு சர்ப்ரைஸ் சம்பவத்தை நடத்தி அர்ஜுனை அசத்தினார். அதன்படி, படப்பிடிப்பின் நடுவே அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோரை ஸ்டைலாக போட்டோ ஷூட் நடத்தினார். இந்த போட்டோ ஷூட் பார்த்து அர்ஜுன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ்தற்போது வரை இரண்டு ஷெட்யூல்கள் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்க விடாமுயற்சி படக்குழு ரெடியாகிவிட்டதாம். இன்னும் ஓரிரு மாதங்களில் விடாமுயற்சி படப்பிடிப்பு முடியும் என்றும், மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் அடுத்த படங்கள்விடாமுயற்சியை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இது முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், அஜித்தின் ஏகே 64 படத்தை வெற்றிமாறன் இயக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி ரிலீஸுக்குப் பின்னர் தான் இந்த அப்டேட்கள் அபிஸியலாக வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜித் ஏழு நாள் தூக்காமல் நடித்தாராம்இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் விடாமுயற்சி படத்திற்காக அஜித் ஏழு நாள் தூக்காமல் நடித்துள்ளாராம் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இந்த தகவல் உண்மையா என்பதை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


மிரள வைக்கும் விடாமுயற்சி அப்டேட்!! அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட் !! வெளியான தரமான மாஸ் அப்டேட் இதோ !!

Thursday, 19 October 2023

 



DHIVYA DURAISAMY CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2023/10/dhivya-duraisamy-cute-images.html

ஒரு பக்கம் விலங்குகளை காப்பாற்றுவது, இன்னொரு பக்கம் காபி ஷாப், மனைவி, குழந்தைகள் என சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் பார்த்திபன். இந்த நிலையில் ஒரு நாள், தன் குழந்தைக்கு சிலரால் ஆபத்து நேரிட, எதிரில் நிற்கும் அத்தனை பேரையும் நெற்றி பொட்டில் சுட்டு வீழ்த்துகிறார் பார்த்திபன். இதனையடுத்து கொல்லப்பட்டவர்களின் கூட்டாளிகள் பார்த்திபனையும், அவனின் குடும்பத்தையும் கொல்ல முற்பட, அவர்களுடன் பெரும் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார் பார்த்தி.

இதனிடையே பார்த்தியின் வாழ்க்கைக்குள் வரும் ஆண்டனி தாஸ் அங்கு இருப்பது பார்த்தி அல்ல லியோ என புது குழப்பத்தை உருவாக்குகிறார். அப்படியென்றால் உண்மையில் அங்கு இருப்பது பார்த்தியா, லியோவா என்ற கேள்விக்கான பதிலை கண்டு பிடித்தால் அதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தில் முற்றிலும் வேறு விதமான விஜயை பார்க்க முடிகிறது. ஆம், அன்பு பொழியும் அப்பாவாக, பொறுப்புள்ள கணவனாக, குடும்பத்துக்காக பொங்கி எழும் பார்த்தியாக, கில்லாடி லியோவாக நடிப்பில் வேரியேஷன் புகுத்தி வியப்பு காட்டுகிறார். குறிப்பாக லோகேஷின் பிரேமில் விஜய் வரும் சில இடங்கள் கிளாஸ் ரகத்தை சேர்ந்தவை. விஜய், திரிஷா காதலில் அவ்வளவு ஆழம் இருந்தது.

ஆனால் அந்த காதலை இன்னும் ரசிக்கும் படியாக அமைத்து இருக்கலாம். அர்ஜுனின் தர லோக்கல் ஆக்ஷன் ரசிக்கும் படியாக இருந்தது. ஆண்டனியாக வரும் சஞ்சய் தத் வழக்கமான வில்லனிசத்தில் மிரட்டுகிறார். கவுதம் மேனன் அவருக்கே உரித்தான கிளாஸ் பாணியில் கலக்கி இருக்கிறார். இதர கதாபாத்திரங்கள் கதைக்கு நியாயம் செய்திருக்கின்றன.

முதல் பாதியில் கதையை பிட்ச் செய்ய நேர்த்தியான திரைக்கதையை கையாண்ட லோகேஷ், இரண்டாம் பாதியில் அதை கோட்டை விட்டு இருக்கிறார். ஆம், லோயோவிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு அவர் வைத்த காரணம் இன்னும் ஸ்ட்ராங்காக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதை கொஞ்சம் மறக்கடித்து திரையை நோக்கி நம்மை இழுத்து செல்வது விஜயின் நடிப்பும், ஆக்ஷனும் தான். பின்னணி இசையில் அனிருத் முழு பலம் கொடுத்து தாங்கி இருக்கிறார். எல்.சி. யூ கனெக்ட் சுவாரசியம் கூட்டியது. இதற்கு முன்னதாக லோகேஷ் படங்களில் இரண்டாம் பாதி எப்போதுமே தாண்டவமாக அமைந்து இருக்கும்.

ஆனால் அது இதில் மிஸ்ஸானது சற்று ஏமாற்றம் தான். இருப்பினும் ஆக்ஷனில் லோகேஷ் மற்றும் அன்பறிவு மாஸ்டர்ஸ் மேற்கொண்ட மென கெடல் பாராட்டுக்கு உரியது. மனோஜ் ஒளிப்பதிவு அபாரம். கதையின் ஆழத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால், லியோவை கொண்டாடி இருக்கலாம்.நீங்கள் ‘விக்ரம்’ அல்லது ‘கைதி’யை எதிர்பார்த்தால், நீங்கள் ஏமாற்றமடைவீர்கள் என்பது உறுதி.

இந்த தீவிர குற்றபடம் வெகுஜனங்களுக்கு கொஞ்சம் பிடிக்காமல் இருக்கலாம். லோகேஷ் கனகராஜ் ஆண்ட்ரூ கார்ஃபீல்டு போல நடந்து கொண்டார், மேலும் 1477 பேட்டிகளில் எதையும் வெளிப்படுத்தவில்லை, திரைப்படம் LCU இன் கீழ் வருகிறது என்பது வெளிப்படையானது. கைதியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் நெப்போலியன் இங்கே காவலராக வருகிறார், அது எப்படி இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பாதியில், த்ரிஷாவும் ஜிவிஎம்மும் விஜயின் பின்னணியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். டிசோசா (மன்சூர்) ஃப்ளாஷ்பேக்கை சொல்கிறார். லியோ தாஸின் நுழைவு சிறிது வேகத்தை எடுத்தது, ஆனால் இன்னும் குறிப்பிடத்தக்கதாக எதுவும் இல்லை. லியோ தாஸ் திருமலை விஜய்யை நிச்சயம் நினைவுபடுத்துவார். விஜய்யின் தங்கையாக மடோனா செபாஸ்டியன் அமெச்சூர். படத்தின் ஒரே பாசிட்டிவ் காரணி ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன். வழக்கம் போல், லோகி இரண்டு ரெட்ரோ பாடல்களைப் பயன்படுத்தியுள்ளார், ஆனால் அது விக்ரம் போல போதுமான வரவேற்பைப் பெறவில்லை. ‘தாமரை பூவுக்கும்’ பாடலைப் பயன்படுத்தினார்.ஆமை வேகம்.. பொறுமை சோதிக்கும் இரண்டாவது பாதி படத்தில் செண்டிமெண்ட் சீன் நம்புற மாதிரி இல்ல !மொத்தத்துல விஜய் ரசிகர்களை தவிர யாருக்கும் பிடிக்கல போல 

மொத்தத்தில்- லியோ படத்தில் LCU இல்ல பார்த்த நமக்கெல்லாம் ICU இருக்கு !

மதிப்பீடுகள்: ⭐ ⭐  ✰ 2.25/5


LEO MOVIE REVIEW :விஜய் நடித்த லியோ படத்தின் முழு விமர்சனம் இதோ !

Sunday, 15 October 2023

























 

DHIVYA DURAISAMY CUTE IMAGES

Wednesday, 11 October 2023

 தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் தல அஜித் குமார் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பு வந்து இருந்தாலும் தற்போது தான் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

 விடாமுயற்சி படத்தை அடுத்து, தல அஜித், விடுதலை பட தயாரிப்பாளர் Elred Kumar Santhanam RS.Infotainment தயாரிப்பில் நடிக்க இருப்பதாக தகவல் வருகிறது. 

இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அல்லது  P.S. Mithran இவர்களில் ஒருவர் இருக்கலாம் என்று தகவல் வந்துள்ளது. இப்படத்திற்காக தல அஜித்துக்கு,  ரூ 170 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Bike ride முடித்த பிறகு இந்த படத்தில் அஜித் நடிக்கப்போவதாகவோம் இந்த படம் 2026 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் விரைவில் இது பற்றி அதிகார்வபூர்வ அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது...



தல அஜித்தின் அடுத்து படத்தின் இயக்குனர் இவர் தானா?..பல மடங்கும் சம்பளத்தை உயர்த்திய தல:-

Sunday, 17 September 2023

 



SIIMA விருது

வருடா வருடம் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்படும் விருது விழாக்களில் ஒன்று SIIMA. தென்னிந்திய நட்சத்திரங்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது விழா தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

நேற்று 2023கான விருது விழா நேற்று நடைபெற்றுள்ளது. இதில் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள். கலந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் யார்யார், எந்தெந்த பிரிவில் விருதுகளை வென்றுள்ளார்கள் என முழு லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதை பார்க்கலாம் வாங்க..

முழு லிஸ்ட் இதோ

சிறந்த அறிமுக நடிகை - அதிதி ஷங்கர் [விருமன்]

சிறந்த அறிமுக நடிகர் - பிரதீப் ரங்கநாதன் [லவ் டுடே]

சிறந்த அறிமுக இயக்குனர் - மாதவன் [ராக்கெட்ரி]

சிறந்த நகைச்சுவை நடிகர் - யோகி பாபு [லவ் டுடே]

சிறந்த பாடலாசிரியர் - இளங்கோ கிருஷ்ணன் - [பொன்னியின் செல்வன் பொன்னிநதி

SIIMA 2023ல் விருதுகளை வென்ற தமிழ் நட்சத்திரங்கள்.. முழு லிஸ்ட் இதோ | Siima 2023 Tamil Award Winners List

சிறந்த ஒளிப்பதிவாளர் - ரவிவர்மன் [ பொன்னியின் செல்வன்

சாதனையாளர் விருது - மணிரத்னம்

சிறந்த பின்னணி பாடகர் - கமல் ஹாசன் - [விக்ரம்] பத்தல பத்தல

சிறந்த பின்னணி பாடகி - ஜோனிடா காந்தி [அரபிக் குத்து]

விமர்சன ரீதியாக சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ் [சாணி காயிதம்]

சிறந்த நடிகர் முதன்மை கதாபாத்திரத்தில் - மாதவன் [ராக்கெட்ரி]

Popular Choice சிறந்த நடிகை - திரிஷா [பொன்னியின் செல்வன்

Popular Choice சிறந்த நடிகர் - கமல் ஹாசன் [விக்ரம்]



சிறந்த இசையமைப்பாளர் - அனிருத் [விக்ரம்]

சிறந்த படம் - பொன்னியின் செல்வன் 1

சிறந்த இயக்குனர் - லோகேஷ் கனகராஜ் [விக்ரம்] 

SIIMA 2023ல் விருதுகளை வென்ற தமிழ் நட்சத்திரங்கள்,முழு லிஸ்ட்; இரண்டு விருதுகளை தட்டிச்சென்ற உலகநாயகன் கமல் அவர்கள் இதோ வீடியோ

Thursday, 7 September 2023

 


விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் இயக்குனர் ஹெச் வினோத் உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமாகப் படக்குழு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

ஹெச் வினோத்தின் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற முந்தைய படங்கள் தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

அதே போல மீண்டும் கமலை வைத்து மாபெரும் ஹிட் படத்தை கொடுப்பார் என்று சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

டீசர் 

இந்நிலையில்  கமலின் 233 படத்தின் ஸ்டண்ட் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ பாருங்கள் 

கமல், ஹெச் வினோத் இணைந்துள்ள படத்தின் வெறித்தனமான டீசர் இதோ!..


 தமிழ் சினிமாவில் பழைய படங்களை பட்டி டிக்கெரிங் பார்த்து புதிய கலர் அடித்து ராஜா ராணி மற்றும் தெறி, என கல்லா கட்டிய இயக்குனர் அட்லி. மெர்சல் மற்றும் பிகில் என ரெண்டு சுமாரான படத்துக்கு பிறகு, பாலிவுட்டுக்கு சென்று தனது காப்பி மேஜிக்கில் சக்சஸ் காட்டினாரா? இல்லையா? என்பதை ஜவான் படத்தின் விமர்சனத்தில் பார்க்கலாம்.

புதிய ஸ்க்ரிப்ட் எழுத துடிக்காத இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர். எப்பொழுதும் ஹீரோக்கள் தான் அவரது படங்களை பிளாக்பஸ்டர் ஆக்குகிறார்கள், அதுதான் ‘ஜவான்’ படத்திலும் நடந்துள்ளது. இந்தப் பழிவாங்கும் நாடகத் திரைப்படத்தை ஷாருக் பிளாக்பஸ்டர் தொகுப்பாக உருவாக்கியுள்ளார். எஸ்.ஆர்.கே.க்கு அடுத்தபடியாக, சில மின்னூட்டம் தரும் பின்னணி ஸ்கோர் மற்றும் அடக்கமான ட்யூன்களுக்கான அனைத்து கிரெடிட்களும் அனிருத்துக்குச் செல்ல வேண்டும்.

ஷாருக்கான் மற்றும் நயன்தாரா தலைமையில் ஒரு குழும நடிகர்கள் நடிக்கும் இந்த அட்லீ இயக்கிய திரைப்படத்தின் முழு ரன்னிங் நேரத்திலும் பார்வையாளர்கள் இருக்கைகளின் நுனியில் இருப்பார்கள். விக்ரம் ரத்தோர் மற்றும் ஆசாத் ரத்தோராக ஷாருக்கானின் கவர்ச்சிகரமான இரட்டை நடிப்பு திரைப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். அவரது நடிப்பில் அச்சுறுத்தல் மற்றும் வசீகரம் ஆகியவற்றின் கவர்ச்சியான கலவையால் ரசிகர்கள் பரவலான ஈர்க்கும் தருணங்களை அனுபவிக்கலாம்.

பாலிவுட்டில் அறிமுகமான நயன்தாரா தென்னகத்தின் பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். அவரது அழகு மற்றும் நடிப்புத் திறமையால், படம் முழுவதும் அவருக்கு ஒரு கண்கவர் இருப்பைக் கொடுப்பதால், இந்தி சினிமாவில் அவரது அடுத்த முயற்சிகளை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். ஜவானின் சிறப்பம்சங்களில் ஒன்று விஜய் சேதுபதி படத்தின் வில்லனாக காளியாக நடித்திருப்பது. அவரது அச்சுறுத்தும் நடத்தை மற்றும் திறமையான லைன் டெலிவரி காரணமாக வணிகத்தில் சிறந்த வில்லன்களில் ஒருவராக அறியப்படுகிறார்.தீபிகா படுகோனே மற்றும் திரைப்படத்தில் சில முக்கியமான கேமியோக்கள் முழு கதைக்கும் பரிமாணத்தை கொடுக்கின்றன. 

சன்யா மல்ஹோத்ரா கதைக்கு வியக்கத்தக்க வகையில் பங்களிக்கிறது, மேலும் பிரியாமணி, ரிதி டோக்ரா மற்றும் பிறரை உள்ளடக்கிய குழும நடிகர்கள் மர்மத்தின் கூடுதல் ஆழத்தை சேர்க்கிறார்கள். ஷாருக்கான் அட்லீயால் ஒரு புதிய வெளிச்சத்தில் காணப்படுகிறார், மேலும் அவர் துணை நடிகர்களைக் கையாள்வது பாராட்டுக்குரியது. ஒளிப்பதிவாளர் ஜி.கே.யின் பணி. விஷ்ணு ஆக்‌ஷன் காட்சிகளின் ஈர்க்கக்கூடிய ஓட்டத்தை நிறுவுவதன் மூலம் படத்தின் காட்சி ஈர்ப்பை மேம்படுத்துகிறார்.

ஜவானின் ஏறக்குறைய மூன்று மணி நேர நீளம், கதையை ஒன்றாக இணைத்திருப்பதால் சலிப்பூட்டுவதாகத் தெரியவில்லை. திரைப்படம் விரைவாக நகர்கிறது, ஒரு காட்சியிலிருந்து அடுத்த காட்சிக்கு சிரமமின்றி பாய்கிறது, மேலும் ஒவ்வொரு புதிய வளர்ச்சியையும் பார்வையாளர்களை ஆர்வத்துடன் எதிர்பார்க்க வைக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்புக் குறிப்புக்கும் மிகப் பெரிய கைதட்டலுக்கும் உரியவை.

முடிவில், ஒரு புதிரான யோசனை, பரபரப்பான வேகக்கட்டுப்பாடு மற்றும் நட்சத்திரங்கள் நிறைந்த குழுமத்துடன் ஜவான் அவசியம் பார்க்க வேண்டிய ஆக்‌ஷன் த்ரில்லர். ஷாருக்கானின் இரட்டை வேடம், நயன்தாராவின் மயக்கும் நடிப்பு மற்றும் விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பால் இந்தப் படம் குறிப்பிடத்தக்கது. அட்லீயின் இயக்கத்தாலும், ஜி.கே என்பதாலும் ஒருபோதும் மந்தமான தருணம் இல்லை. விஷ்ணுவின் ஒளிப்பதிவு, படத்தின் ஒட்டுமொத்தத் திறனையும் உயர்த்தியது. ஜவானை பெரிய திரையில் பார்க்கும் அனுபவம் அற்புதமானது.ஒட்டுமொத்தமாக, படத்தின் ஆன்மாவாக ஷாருக்கான் உடன் ஒரு ஆக்ஷன் நிறைந்த ஒரு ப்ளாக் பஸ்டர் படம்  

மதிப்பீடுகள்: ⭐ ⭐ ⭐ ✰

#JAWANMOVIEREVIEW : ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் முழு விமர்சனம் இதோ !:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com