அதாவது வலைப்பேச்சு அந்தனன் பேசிய முழு வீடியோவையும் நான் பார்க்கவில்லை. எனினும் நான் பார்த்த சில காட்சிகளில் என்னுடைய கருத்தை சொல்கிறேன் என சொல்லிவிட்டு ‘யாரையும் நாம் வற்புறுத்த முடியாது. எங்கே வர வேண்டும், வரக்கூடாது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவரிடம் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும். எந்தவொரு நடிகருக்கும் தனிப்பட்ட கொள்கை என ஒன்று இருக்கும். அதன் படி அவர்கள் நடந்து கொள்கிறார்கள்’ என கூறினார்.
HEADER
Friday, 1 March 2024
Wednesday, 28 February 2024
ASHIKA RANGANATH CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2024/02/ashika-ranganath-cute-images.html
ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து 1996ம் வருடம் வெளிவந்த திரைப்படம் இந்தியன். லஞ்சத்துக்கு எதிராக வயதான சுதந்திர போரட்ட தியாகி ஒருவர் பொங்கி எழுதுவதை திரைக்கதையாக உருவாக்கியிருந்தார் ஷங்கர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது.
அதன்பின் 20 வருடங்களுக்கு பின் சில வருடங்களுக்கு முன்பு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்கினார் ஷங்கர். கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர் என பலரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. ஆனால், பல காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.
தற்போது இப்படம் முடிவடையும் நிலையை எட்டியிருக்கிறது. இதில் என்ன ஆச்சர்யம் எனில் இந்தியன் 3வது பாகத்துக்கான காட்சிகளையும் சேர்த்து ஷங்கர் எடுத்து முடித்துவிட்டார் என்பதுதான். எண்ணூர் துறைமுகத்தில் சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் பங்குபெறும் ஒரு பாடல் காட்சி பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார் ஷங்கர். இந்த பாடலில் சுமார் 500 நடன கலைஞர்கள் நடனமாடவுள்ளனர்.
இதோடு, இன்னும் சில காட்சிகள் மட்டும் எடுத்துவிட்டால் படம் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. அதன்பின் கிராபிக்ஸ் உள்ளிட்ட மற்ற வேலைகள் முடிந்து மே மாதம் 30ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். கோடை விடுமுறை என்பதால் கண்டிப்பாக வசூலுக்கு சிக்கல் இருக்காது
அதோடு, கமலின் விக்ரம் படம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்ட நிலையில் இந்தியன் 2 படமும் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது. ஒருபக்கம் தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கிற படத்தையும் ஷங்கர் இயக்கி வருகிறார். ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பின் ராம் சரண் நடிக்க துவங்கிய படம் இது.
ஆனால், அதுவும் இப்போது வரை முடியாமல் இழுத்துக்கொண்டே போகிறது. விரைவில் இந்த 2 படங்களையும் ஷங்கர் முடித்துவிட்டு இந்தியன் 3 ரிலீஸ் தொடர்பான வேலைகளை செய்ய துவங்குவார் என சொல்லப்படுகிறது. விக்ரமுக்கு பின் இந்தியன் 2 படம் கமலுக்கு நல்ல மைலேஜை கொடுக்கும் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒருவழியா ரிலீஸ் தேதியை குறித்த ஷங்கர்!.. பிரம்மாண்டமாக வெளிவரும் இந்தியன் 2:-
ஒவ்வொரு படங்களின் வசூல் தான், அப்படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது. மேலும் அதை தெரிந்துகொள்ள ரசிகர்களும் ஆர்வமாக இறுகிறுகிறார்கள். அதுவும் முன்னணி நட்சத்திரங்கள் படங்களின் வசூல் என்றால் சொல்லவே தேவையில்லை.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த முன்னணி நடிகர்களின் படங்கள் என்னென்ன என்பது குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
இதில் முதலிடத்தை கமலின் இந்தியன் பிடித்துள்ளது. ஆம், ஷங்கர் கமல் இயக்கத்தில் உருவான இந்தியன் திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படமாகும்.
இதை தொடர்ந்து இரண்டாவது இடத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிடித்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளிவந்த படையப்பா திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் ரூ. 50 கோடியை கடந்து வசூல் செய்த இரண்டாவது திரைப்படமாகும்.
இதன்பின் விக்ரமின் அந்நியன் மூன்றாவது இடத்தையும், அஜித்தின் பில்லா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்களின் முழு லிஸ்ட் இதோ பாருங்க..
- இந்தியன் 2 - ரூ. 55 கோடி
- படையப்பா - ரூ. 60 கோடி
- அந்நியன் - ரூ. 63 கோடி
- வரலாறு - ரூ. 60 கோடி
- பில்லா - ரூ. 75 கோடி
- சிங்கம் - ரூ. 53 கோடி
- வேலாயுதம் - ரூ. 66 கோடி
- வேலையில்லா பட்டதாரி - ரூ. 55 கோடி
- ரெமோ - ரூ. 55 கோடி
- காஷ்மோரா - ரூ. 50 கோடி
- மாநாடு - ரூ. 87 கோடி
ரஜினி, கமல், அஜித், விஜய் யாருடைய படம் முதலில் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.. முழு லிஸ்ட் இதோ :-
Friday, 23 February 2024
ASHIKA RANGANATH CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2024/02/ashika-ranganath-cute-images.html
Thala Ajith: நடிகர் அஜித்தை பற்றி சில தினங்களுக்கு முன் வலைப்பேச்சு அந்தனன் மிக கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது பொதுவாழ்க்கைக்கு என வந்த பிறகு யார் எப்படி போனால் எனக்கென என இருப்பது சரியா? அஜித் சமீபகாலமாக அப்படித்தான் செய்து வருகிறார். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. அதாவது அஜித்தை புறக்கணிப்போம் என கூறியிருந்தார்.
இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் அவருடைய யு டியூப் சேனலில் சில தகவல்களை கூறியிருக்கிறார்
தல அஜித்தை கடுமையாக விமர்சித்த பிரபலம் சொன்னத்துக்கு சரியான பதிலடி கொடுத்த சித்ரா லட்சுமணன்
Thursday, 22 February 2024
சென்னை: விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
கமல் ஹாசன் கடைசியாக விக்ரம் படத்தில் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தரமான வெற்றியை பதிவு செய்தார். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம் ஆகியவை தற்போது கமலின் லைன் அப்பாக இருக்கிறது. இடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் குறித்த அடுத்தக்கட்ட அப்டேட்டுகள் எதுவும் வரவில்லை. எனவே அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதாக பலரும் கூறுகிறார்கள்
Thug Life - தனக்கு பெரும் திருப்புமுனையை தரும் நம்பிக்கையை பலமாக கொண்டிருக்கும் படக்குழு:-
Tuesday, 20 February 2024
தல அஜித் அவர்களை பற்றி தெரியாமல், அவரை பற்றி வலைப்பேச்சு அந்தணன் தவறாக பேசியுள்ளார் என்று பிரபல பத்திரிகையாளர் அமலான் தனியார் You tube channel-க்கு பேட்டியளித்துள்ளார்.
அந்தணன் தல அஜித்தை கடுமையா விமர்சனம் செய்தது மட்டுமில்லாமல். தல அஜித் மற்றும் விஜயகாந்த் இடையே பிரச்னை இருப்பதாக கூறினார்
என்னை மாதிரியே:
ஆனால் அதெல்லாம் பொய். மேலும் அவர் கூறியது, தல அஜித் மற்றும் விஜயகாந்த் இடையில் எந்த பிரச்னையும் இல்லை. விஜயகாந்த் அவர்கள் தல அஜித் மேல் மிகவும் மரியாதை வைத்திருந்ததாகவும். நடிகர் சங்க கடனுக்காக ஏன் அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் சில குறிப்பிட்ட தொகையை கொடுத்தாலே கடனை அடைக்கலாம் என்று சொல்லி; தன் பங்காக பத்து லட்சம் ரூபாயை விஜயகாந்த்திடம் கொடுத்துவிட்டு #Thala அஜித் கிளம்பினார்.
அந்த விஷயம் விஜயகாந்த்தை கவர்ந்துவிட்டது.
உடனே தனது அருகே இருந்தவரிடம், “என்னை மாதிரியே அஜித் இருக்காருப்பா” என்று புகழ்ந்தார்.
இவ்வாறு அமலான் பேசியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தல அஜித் அவர்களை பற்றி எதுவுமே தெரியாமல் அந்தணன் அவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்!:-
ASHIKA RANGANATH CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2024/02/ashika-ranganath-cute-images.html
சமீபகாலமாக அஜித்தை பற்றி பல காரசாரமான விமர்சனங்கள் பத்திரிக்கைகளில் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதை பற்றி கொஞ்சம் கூட கவலையில்லாமல் அஜித் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருகிறார். இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தனன் அஜித் குறித்து அவருடைய ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்திருக்கிறார்.
அஜித்தின் சமீபகால நடவடிக்கைகள் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த தமிழ் சினிமாவிலேயே இருந்து கொண்டு தமிழ் சினிமாவிலேயே பணம் சம்பாதித்து ஆனால் தமிழ் சினிமாவை துளி கூட மதிக்க மாட்டேன் என இருக்கும் ஒரே நடிகர் அஜித். அதனால் அஜித்தை புறக்கணிப்போல் என அந்தனன் கூறினார். தமிழ் சினிமாவை மதிக்க மாட்டேன், தமிழ் சினிமாவை எட்டி உதைப்பேன். ரசிகர்களை மதிக்க மாட்டேன் என ஒரு நடிகர் இருக்கிறார். அவரை உச்சத்தில் வைத்து கொண்டாடும் ரசிகர்களை திருத்துவதுதான் என் கடமை என அந்தனன் கூறினார்.அஜித்தின் ஒரு பழைய பேட்டியில் ‘ஒருவர் அவரவர் கடமையை சரியாக செய்தால் போதுமானது’ என அஜித் கூறியிருக்கிறாராம். இதை குறிப்பிட்டு பேசிய அந்தனன் ‘ நீங்க முதலில் உங்க கடமையை செய்தீர்களா? எந்தப் படத்திலேயாவது டை அடித்துக் கொண்டு நடிக்கிறீர்களா? இயக்குனர் தான் கதை எழுதும் போது தன் நடிகன் இப்படி இருக்க வேண்டும், இந்த மாதிரியான உடை அணிய வேண்டும் என்றெல்ல்லாம் நினைத்துதான் எழுதுவான். அவர்களுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்கிறீர்களா? நீங்க கடமையை பத்தி பேசுறீங்க?’ என கேட்டிருக்கிறார்.
கடமையை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத ஆளு அஜித். எந்தப் பட ப்ரோமோஷனுக்கும் வருவது இல்லை. அதை ஒரு கொள்கையாகவே வைத்துக் கொண்டு சுற்றும் ஒரே நடிகர் அஜித். இப்படிப் பட்டவரை கண்டிப்பாக நாம் புறக்கணிக்க வேண்டும் என அந்தனன் கூறினார்.
இந்நிலையில் அஜித் ரசிகர்கள் வாழு வாழ விடு என்று எங்கள் தலைவர் பாதையில் அமைதியாக காந்தி வழியில் பயணிக்கிறோம் எங்களை சிண்டி பார்க்காதே அடிக்கு அடி-னு நேதாஜி வழியில் திருப்பி அடிக்க ரொம்ப நேரம் ஆகாது…. என கன்னடகளை தெரிவித்து வருகின்றனர்.
விடாமுயற்சி படத்திற்குப் பிறகு, அஜீத் குமார் மார்க் ஆண்டனி இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஏகே63 என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கைகோர்க்க உள்ளார். திரைப்படத் தயாரிப்பாளர் யென்னை அறிந்தால் நடிகரின் தீவிர ரசிகர், மேலும் அவர் தயாரிக்கும் படங்களில் நடிகருக்கு அடிக்கடி ஓட்ஸ் கொடுத்தார். படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் மறைக்கப்பட்ட போதிலும், தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் படத்தின் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டார் என்பதை பிங்க்வில்லா பிரத்தியேகமாக அறிந்திருந்தது...
டுபாக்கூர் வலைப்பேச்சு அந்தனனுக்கு மரண எச்சரிக்கை விடுத்த அஜித் ரசிகர்கள் !:-
Monday, 19 February 2024
Sunday, 18 February 2024
திரையுலகில் பெரும் சர்ச்சையான விஷயங்களில் ஒன்று அஜித் - பாலாவிற்கு இடையே நடந்த ஒரு விஷயம் தான். இதுகுறித்து பலரும் பல விதமான தகவல்களை கூறியுள்ளனர். நான் கடவுள் படத்தில் நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அஜித்.
அப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித்திற்கு ரூ. 1 கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், படப்பிடிப்பு துவங்க மிகவும் தாமதமாகியுள்ளது. இதனால் பணம் கொடுத்தவர், கொடுத்த ரூ. 1 கோடி அட்வான்ஸ் பணத்தை வட்டியுடன் சேர்த்து ரூ. 3 கோடியாக தரவேண்டும் என நடிகர் அஜித்திடம் கூறியுள்ளார்.
இதுதான் பிரச்சனையின் ஆரம்ப புள்ளியாக இருந்துள்ளது. இதற்கு அஜித், பட தாமதமானதற்கு நான் காரணம் இல்லை இயக்குனர் பாலா தான் என கூறியுள்ளார். இதற்கான பஞ்சாயத்து பிரபல ஹோட்டலில் நடந்துள்ளது. அப்போது அஜித்தை சுற்றி இயக்குனர் பாலா, பைனான்ஷியர் அன்பு மற்றும் சில ஆட்கள் இருந்துள்ளார். அஜித்துக்கு சில நெருக்கடிகளை கொடுத்துள்ளனர்.
அப்போது அஜித் யாரும் எதிர்பார்க்காத ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளார். பில்லா படத்தில் வருவது போல் தன்னை சுற்றி நின்று கொண்டிருந்த ஆட்களை ஒரு விஷயம் செய்தார். அதன்பின் அனைவரும் அப்படியே பின்வாங்கிவிட்டார்களாம்.
அதே இடத்தில் உடனடியாக செட்டில்மென்ட் போட்டு பணத்தை கொடுத்துவிட்டு, அந்த இடத்திலிருந்து அஜித் வெளியேறிவிட்டாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் - பாலா பிரச்சனை.. அஜித் - பாலா பிரச்சனை.. ஹோட்டலில் சம்பவம் செய்த அஜித்:- சம்பவம் செய்த அஜித்:-
Friday, 9 February 2024
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் தொடர்ந்து பல படங்களை கமிட் செய்து வருகிறார் கமல் ஹாசன். இதில் ஹெச். வினோத்துடன் துவங்கவிருந்த கமல் 233 படம் திடீரென சில காரணங்களால் ட்ராப் ஆகிவிட்டது
இதை தவிர இந்தியன் 2, தக் லைப், கல்கி 2898 AD, அன்பு - அறிவு இயக்கும் கமல் 237வது படம் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் கமல் ஹாசன். இதில் அவர் வில்லனாக நடிக்கும் திரைப்படம் தான் கல்கி 2898 ad
இதில் ஹீரோவாக பிரபாஸ் நடிக்க நாக் அஸ்வின் இயக்குகிறார். இப்படத்தில் தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பாட்னி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த படத்தில் புதிதாக தென்னிந்திய சென்சேஷனல் நடிகை மிருணாள் தாகூர் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சீதா ராமம், Hi நானா போன்ற படங்களில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த நடிகை மிருணாள் தாகூர், கல்கி 2898 AD படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.
முதல் முறையாக கமல் ஹாசனுடன் இணைந்த 31 வயது சென்சேஷனல் நடிகை.. யார் தெரியுமா:-
Thursday, 8 February 2024
அஜித் லைன் அப்
அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது
விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ஏகே 63 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பின் அஜித் நடிக்கப்போகும் ஏகே 64 குறித்து சமீபத்தில் தகவல் ஒன்று வெளிவந்தது. அதன்படி, ஐந்துவது முறையாக சிறுத்தை சிவாவுடன் அஜித் கைகோர்க்க போகிறார் என கூறப்படுகிறது.
வெற்றிமாறன் - அஜித்
இந்நிலையில், தொடர்ந்து லைன் அப் வைத்திருக்கும் அஜித், வெற்றிமாறனுடன் இணையப்போவதாக பேசப்பட்டு வருகிறது. திரை வட்டாரத்தில் இதுகுறித்து தொடர்ந்து பேச்சு எழுந்துகொண்டு இருக்கிறது.

ஆம், அஜித் - வெற்றிமாறன் கூட்டணியில் படம் உருவாகப்போகிறது. வெற்றிமாறன், அஜித் அவர்களை சந்தித்து கதை கூறியதாகவும், அந்த கதையில் நடிக்க தல சம்மதம் சொன்னதாகவும். அப்படத்தை பிரபல தயாரிப்பாளர் எல்ட் ரெட் குமார் தான் தயாரிக்க போகிறாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
#Thala64 வெற்றிமாறன் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதி.. பிரபல பத்திரிகையாளர் அதிரடி:-
Wednesday, 31 January 2024
அஜித் நடிப்பில் உருவாகி வரும் 62வது படமான விடாமுயற்சியில், ஆக்ஷன் கிங் அர்ஜுனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித் மற்றும் அர்ஜுனின் கூட்டணி மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏற்கனவே மங்காத்தா படத்தில் இணைந்து நடித்த இவர்கள், அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர். இதனால், விடாமுயற்சி படத்திலும் இவர்களது கூட்டணி சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடாமுயற்சி படம் ஒரு ரோட் ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித் மற்றும் அர்ஜுன் இருவரும் ஆக்ஷன் காட்சிகளில் கலக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் அர்ஜுனை அசத்திய சம்பவம்படப்பிடிப்பின் போது, அஜித் ஒரு சர்ப்ரைஸ் சம்பவத்தை நடத்தி அர்ஜுனை அசத்தினார். அதன்படி, படப்பிடிப்பின் நடுவே அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோரை ஸ்டைலாக போட்டோ ஷூட் நடத்தினார். இந்த போட்டோ ஷூட் பார்த்து அர்ஜுன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
விடாமுயற்சி படத்தின் ரிலீஸ்தற்போது வரை இரண்டு ஷெட்யூல்கள் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்க விடாமுயற்சி படக்குழு ரெடியாகிவிட்டதாம். இன்னும் ஓரிரு மாதங்களில் விடாமுயற்சி படப்பிடிப்பு முடியும் என்றும், மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தின் அடுத்த படங்கள்விடாமுயற்சியை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இது முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், அஜித்தின் ஏகே 64 படத்தை வெற்றிமாறன் இயக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி ரிலீஸுக்குப் பின்னர் தான் இந்த அப்டேட்கள் அபிஸியலாக வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஜித் ஏழு நாள் தூக்காமல் நடித்தாராம்இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் விடாமுயற்சி படத்திற்காக அஜித் ஏழு நாள் தூக்காமல் நடித்துள்ளாராம் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இந்த தகவல் உண்மையா என்பதை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.



































