HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday, 30 September 2017



நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை என்றே    கூறிவிடலாம். அந்த அளவிற்கு தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர்.
ஹீரோயினுக்காக படங்கள் பார்க்க வருபவர்கள் குறைவு, அந்த குறையை தீர்த்தவர் நயன்தாரா தான், இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
அதில் இவர் தன்னுடன் நடித்த நடிகர்கள் குறித்து பேசினார், அப்போது அஜித் குறித்து கூறுகையில் ‘நான் பார்த்த நடிகர்களில் பெண்களுக்கு மிகவும் மரியாதை தரக்கூடிய நடிகர்கள் ரஜினி சாரும், அஜித் சாரும் தான்.
அதிலும் அஜித் சார் பில்லா நடிக்கும் போது நான் பெரிய ஸ்டார் எல்லாம் இல்லை, ஆனால், அஜித் உச்சத்தில் இருக்கின்றார்.
அஜித் ஒரு இடத்தில் கூட தான் பெரிய நடிகர் என்று காட்டியதே இல்லை, எல்லோரையும் சரி சமமாக தான் நடத்துவார்’ என்று கூறியுள்ளார்.


அந்த ஒரு விஷயத்தில் நான் பார்த்தத்தில் சிறந்தவர்கள் அஜித், ரஜினி மட்டுமே- நயன்தாரா ஓபன் டாக்

Sunday, 17 September 2017

அஜித் ரசிகர்கள் எப்போதும் தங்கள் நாயகனின் ஸ்பெஷல் விஷயங்களை மறக்கவே மாட்டார்கள். அது அவருடைய படமாக இருந்தாலும் சரி, சொந்த விஷயங்களாக இருந்தாலும் சரி.
தற்போது அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படம் உலகம் முழுவதும் வசூலில் மாஸ்காட்டி வருகிறது. இந்த நிலையில் இப்படம் இன்று தனது 25 நாளை எட்டியுள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் 25, 50, 75 போன்ற நாட்களை எட்டுவது ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் விஷயம்.
தற்போது அஜித்தின் விவேகம் படமும் 25 நாளை எட்டியுள்ளதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இப்போதும் பல திரையரங்குகளில் படம் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.


அஜித் ரசிகர்களுக்கு இன்று மிக முக்கியமான நாள்- அதிரடி கொண்டாட்டம்

Monday, 11 September 2017








அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் விவேகம். இப்படம் கடுமையான விமர்சனம், நல்ல வசூல் என செல்ல, அடுத்து அஜித் யாருடன் கூட்டணி வைப்பார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பும்.
பலரும் அஜித்தின் அடுத்தப்படமும் சிவா தான் என கூறி வந்தனர். விவேகம் கிளைமேக்ஸில் கூட AK-58 லோடிங் என்று ஒரு வாசகம் வரும்.
அதை வைத்து கண்டிப்பாக அடுத்தப்படத்தை இயக்கப்போவது சிவா தான் என்று கூறி வருகின்றனர்.இந்நிலையில் விவேகம் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி ‘தலயுடன் அடுத்தப்படம் செய்வீர்களா? என்றால், கண்டிப்பாக அவருடன் எத்தனை படம் வேண்டுமானாலும் வேலை செய்வேன்.ஆனால், அடுத்தப்படத்தை அவர் தான் அறிவிக்க வேண்டும். மேலும், இதே கூட்டணி மீண்டும் அமைந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்.
இந்நிலையில், சமீபத்தில் வெளிவந்துள்ள தகவலின் படி இயக்குனர் விஷ்ணுவரதன் தல58 படத்தை இயக்கவுள்ளார் எனவும், இது கிட்டதட்ட உறுதியான விஷயம் தான் எனவும் கூறுகிறார்கள். சரித்திரப்படமான இந்த படத்தில் நடிக்க அஜித் சரியாக 200 நாட்கள், அதாவது 7 மாதங்கள் கால்ஷீட் ஒதுக்கவுள்ளார் என முதற்கட்ட தகவல்கள் கசிந்துள்ளன
ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அஜித் தன்னுடைய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரொம்ப நாள் வெயிட் பண்ண வேண்டாம். இன்னும் இரண்டு வாரத்திற்குள் அடுத்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துவிடும்.

தல58 இயக்குனர் கிட்டத்தட்ட உறுதியானார்..! அஜித் கால்ஷீட் மட்டும் இவ்வளவு நாளா..?

Wednesday, 6 September 2017


விஜய்சேதுபதி  நடிப்பில் உருவான ‘புரியாத புதிர்’ கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இருந்தாலும் படம் ம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை என்று கூறி வந்தது தயாரிப்பு நிர்வாக
அஜீத்தின் விவேகம் கடந்த 24ஆம் தேதி வெளியான நிலையில் அந்த படம் தோல்வி என்றும் தியேட்டரில் ஆளே இல்லை என்றும் பொய்யாக வெளிவந்த வதந்தியை நம்பி ‘புரியாத புதிர்’ அடுத்த வாரமே ரிலீஸ் ஆனது. ஆனால் ‘விவேகம்’ படம் பற்றி கூறியது எல்லாமே வதந்தி என்பது தெரியவந்தது. மேலும் ‘விவேகம்‘ படம் தொடர்ந்து இரண்டாவது வாரமாக நல்ல வசூல் செய்ததால் ‘புரியாத புதிர்’ படத்திற்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்காதது மட்டுமின்றி எதிர்பார்த்த வசூலும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது
விஜய்சேதுபதி அவசரப்பட்டிருக்க வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக இருந்து ஒரு வாரம் கழித்து இந்த படத்தை ரிலீஸ் செய்திருந்தால் ஹாட்ரிக் வெற்றியை பெற்றிருப்பார் என்று கூறப்படுகிறது.

விவேகம் படத்தால் அவதிப்படும் விஜய் சேதுபதி?

Tuesday, 5 September 2017

தமிழகத்தில் போராட்டம்



சென்னை/புதுவை : நீட் தேர்வால் மருத்துவ படிப்பு பறிபோனதால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தமிழகம் மற்றும் புதுவையில் கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெற முடியாததால் அரியலூர் அனிதாவின் மருத்துவ கனவு தகர்ந்தது. எனினும் விடாபிடியாக உச்சநீதிமன்றம் வரை சென்றும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை.
இதனால் மனமுடைந்த அனிதா கடந்த 1-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து அன்று முதல் அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரி மாநிலம் முழுவதும் மாணவர்கள் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் போராட்டம்

தமிழகத்தில் கும்பகோணம், தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, விருத்தாசலம், தூத்துக்குடி, நெல்லை சங்கரன்கோவில், அரியலூர், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளிலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
புதுவையில் போராட்டம்

புதுவையில் போராட்டம்

அனிதாவுக்கு நீதி கோரி புதுவையில் உள்ள துணை நிலை ஆளுநர் மாளிகையை கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட சென்றனர். அப்போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
வீரியம் அடைந்த போராட்டம்

வீரியம் அடைந்த போராட்டம்

தமிழகம் மற்றும் புதுவையில் மாணவர்களின் எழுச்சி போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இவர்களை சமாளிக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
2-ஆவது நாளாக போராட்டம்

2-ஆவது நாளாக போராட்டம்

இந்நிலையில் 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமையும் திருவாரூர் அரசு கலைக் கல்லூரி, திண்டுக்கல்லில் தனியார் பொறியியல் கல்லூரி, வேலூர் திருப்பத்தூர் கல்லூரி, மன்னார்குடியில் ராஜகோபாலசுவாமி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கடலூர், நாகை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம், புதுவையில் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு


விவேகம் படம் ஒரு சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.
ஆனால், விமர்சனங்கள் எந்த விதத்திலும் வசூலை பாதிக்கவில்லை, இந்நிலையில் இப்படம் 4 நாட்களில் ரூ 100 கோடி வரை வசூல் செய்தது.
தற்போது இரண்டு வார முடிவில் இப்படம் ரூ 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாக வட இந்திய ஊடகங்கள் கூறுகின்றது.
அப்படி  என்றால் அஜித்தின் முதல் ரூ 150 கோடி படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வசூலில் விவேகம் தொட்ட மைல் கல்- முதல் அஜித் படம் இது தான்

Monday, 4 September 2017




அஜித்தின் விவேகம் படம் ரசிகர்களுக்கு புதிய விவேகத்தை கொடுத்துள்ளது. படத்திற்காக அஜித் செய்த கடும் உழைப்புகளுக்கு பதில் கிடைத்துள்ளது என்றே கூறலாம். படம் தமிழ்நாடு மட்டுமில்லாது ஆந்திரா, கேரளா, வெளிநாடு என எல்லா இடங்களிலும் பிரம்மாண்ட வரவேற்பு பெற்றிருக்கிறது.
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
இப்படம் சென்னையில் 11 நாள் முடிவில் ரூ. 8.57 கோடி வரை வசூலித்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் படம் ரூ. 9 கோடியை நெருங்க இருப்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது


விவேகம் 11 நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com