இளைய தளபதி' என்று பெயர் சூட்டிக் கொண்டு இன்றுவரையிலும் இனம் புரியாத பாசத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் ரசிகர்களை வைத்து அடுத்து என்ன ஸ்டெப் எடுப்பது என்பதில் ஏகப்பட்ட குழப்பங்களுடன் இருந்து வரும் இப்போதைய 'தளபதி' விஜய்..!
படத்தில் "ஒரு கை காட்ட வேணாம்.. கண் ஜாடை காட்டினாலே போதும்.. பொங்கிருவானுங்க..." என்று தன்னுடைய அன்புத் தம்பிகளை பெருமையுடன் கூறிய அன்பு அண்ணன் விஜய்..
என்னங்கண்ணா..! எங்கண்ணா போனீங்க..?
இன்னிக்கு போஸ்டரைத்தான் நார், நாரா கிழிச்சுத் தொங்க விட்டிருக்காங்க. பாதி முகம் கிழிஞ்ச நிலைமைல தியேட்டர் வாசல்ல உங்க போஸ்டர்தான் தொங்கிக்கிட்டிருக்கு..
உங்களுடைய அன்புத் தம்பிகள் அனைவரும் நேற்று காலையில் இருந்தே தொடர்பு எல்லைக்கு அப்பாலே போய்விட்டார்கள். அரசியலும், போலீஸும் சேர்ந்தாலே எவ்வளவு பெரிய ரவுடிகள் என்பதும், அவர்கள் எத்தனை பெரிய ரவுடித்தனம் செய்வார்கள் என்பதெல்லாம் தெரிந்துதான் அவர்கள் தலைமறைவாகிவிட்டார்கள்..!
நீங்க சும்மாதான இருக்கீங்க..! வெளில வந்து பேசலாமே..? அதான் தென்னிந்திய மொழி திரையுலகத்துலேயே இளவரசன் மாதிரி இருக்கீங்களே.. உங்க வாய்ஸுக்கு பவர் இருக்காதாண்ணே..!?
"இது சென்சார் சான்றிதழ் பெற்ற படம். என்னுடைய விருப்பப்படிதான் படம் முழுவதும் தயாரானது. என்னுடைய ஆலோசனைப்படிதான் 'கோமளவல்லி' என்ற பெயர் வரலட்சுமிக்கு வைக்கப்பட்டது. என்னுடைய கருத்துப்படிதான் 'இலவசப் பொருட்கள் தேவையில்லை' என்கிற கருத்து படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இப்போது ஆளுகின்ற அதிமுக அரசே என் படத்திற்கு எதிராக வன்முறையைக் கட்டவிழித்துவிட்டிருப்பது அராஜகம். ஒரு நேர்மையான அரசு செய்யக் கூடிய செயல் அல்ல இது.
நான் அரசியலுக்கு வருவதை இந்த அரசு விரும்பவில்லை போலும். நான் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் ஒரு நடிகரின் திரைப்படம் என்ற ரீதியில்தான் இதனை அணுக வேண்டும். கருத்துச் சுதந்திரம் எனக்கும் உண்டு. இயக்குநருக்கும் உண்டு.. அதிமுக அரசின் அடிமைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.." -
- இப்படி ஒரு பேச்சு பேசிட்டு நின்னீங்கன்னா வந்துட்டாருய்யா உண்மையான சுந்தர் ராமசாமின்னு நாமளும் பாராட்டிருப்போம்..!
வீட்டுக்குள்ளேயே பயந்து போய் அமைதியா உக்காந்துக்கிட்டு ரவுடிகளை அனுப்பி வைத்த அதே முதலமைச்சருக்கே தூதுவிட்டு "நேரம் கொடுங்க. பேசணும்"ன்னு சொல்றதை பார்த்தால்..
நாங்க எழுதின 'சர்கார்' விமர்சனத்தையே இப்போ டெலீட் செஞ்சுட்டுப் போகலாம் போலிருக்குங்கண்ணா..!
வேண்டாங்கண்ணா.. இவ்வளவு பயப்படுற ஆளுக்கெல்லாம் அரசியல் ஒத்து வராது. பேசாமல் நீங்க வெறும் நடிகராவே இருந்திருங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது. தமிழ்நாட்டுக்கும் நல்லது.
Post a Comment