
தல அஜித் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம் மங்காத்தா. இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படம் கொரொனா காரணமாக தற்காலிகமாக நின்றுள்ளது, இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து வலிமை படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.
இந்நிலையில் பல வருடம் கழித்து ஒரு சர்ச்சை அஜித் படத்தில் தற்போது எழுந்துள்ளது. அதில் மங்காத்தா படத்தில் அஜித் செய்த பைக் ஸ்டெண்ட் சாகசம் அவர் செய்தது இல்லை என்று ஒரு தகவல் பரவி வருகிறது.
இதுக்குறித்து சில வருடங்களுக்கு முன்பு ஸ்டெண்ட் மாஸ்டர் சில்வாவே ஒரு பேட்டியில் அந்த பைக் ஸ்டெண்ட் எல்லாம் அஜித் சார் தான் செய்தது, டூப் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment