த்ரிஷ்யம் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மற்ற மொழிகளில் த்ரிஷ்யம் 2 படத்தை ரீமேக் செய்வதற்கான வேலைகளை தொடங்கி விட்டனர். தெலுங்கு சினிமாவில் திரிஷ்யம் 2 படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.
இந்நிலையில் தமிழில் கமல்ஹாசன் பாபநாசம் என்ற திரிஷ்யம் ரீமேக் படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது பாபநாசம் 2 படத்தை உருவாக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்களாம். மேலும் பாபநாசம் 2 படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பழங்கால நடிகை ஸ்ரீபிரியா வாங்கியுள்ளார்.
சமீபத்திய பேட்டியில் கூட ஸ்ரீபிரியா கமலஹாசன் இல்லாமல் பாபநாசம் 2 வாய்ப்பே இல்லை என குறிப்பிட்டிருந்தார். தற்போது அரசியலில் பிசியாக இருக்கும் கமலஹாசனும் ஸ்ரீபிரியாவும் இது குறித்து பேசியதாக செய்திகள் வெளியாகின.
பாபநாசம் படத்தை மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் இயக்கினார். ஆனால் அப்போது கமலுக்கும் ஜீத்து ஜோசப்புக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. கமலஹாசன் கதையில் தலையிட்டதாகவும் கூறுகின்றனர்.
இதனால் தன்னுடைய மாற்றத்திற்கு அவர் சரிபட்டு வரமாட்டார் என தெரிந்து ஜீத்து ஜோசப் வேண்டாம் என கூறிவிட்டாராம் கமல். இந்நிலையில் கமலஹாசனின் ஃபேவரைட் இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் பாபநாசம் படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
மேலும் தேர்தல் முடிந்து ஒரே மாதத்தில் பாபநாசம் 2 படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிப்பதற்கான வேலைகளை முன் கூட்டியே செய்து விடுங்கள் என தயாரிப்பு நிறுவனத்திற்கு கமல் கூறியதாக தெரிகிறது. கமல் மற்றும் கே எஸ்ரவிக்குமார் கூட்டணியில் முதல் முறையாக ஒரு திரில்லர் படம் உருவாக உள்ளது. தமிழில் இப்படி இழுபறி நடந்துகொண்டிருக்கும் நிலையில் மலையாளத்தில் த்ரிஷ்யம் 3 படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள் என்பதும் கூடுதல் தகவல்.
Post a Comment