சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் எந்திரன். 2010 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.
இன்று வரை பல இடங்களில் எந்திரன் படத்தின் வசூல் தான் டாப் இடத்தில் உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். எந்திரன் படத்தில் ரஜினிக்கு முன்பாக கமல்ஹாசன் தான் நடிக்க இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
1998 ஆம் ஆண்டு கமல் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா நடிப்பில் உருவாக இருந்த எந்திரன் படத்தின் போட்டோ சூட் நடைபெற்றதுடன் படப்பிடிப்பு காலதாமதமாகி கைவிடப்பட்டது. அதற்கு காரணம் என்ன என்பதை அந்தப் படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றிய முத்து என்பவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
கமல் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா கூட்டணியில் உருவான எந்திரன் படத்தை மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்ததாம். மேலும் சங்கர் கொடுத்த பட்ஜெட்டை யோசித்து யோசித்து நாட்கள் கடத்திக் கொண்டிருந்தார்களாம். இதனால் கடுப்பான கமலஹாசன் மற்ற படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் எந்திரன் படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்துவிட்டாராம்.
அதன் பிறகுதான் இந்த படம் ரஜினிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு எந்திரன் படம் படைத்த சாதனை எல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒரு கட்டத்தில் எந்திரன் படமும் மொத்தமாக கைவிடப்பட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானது.
அதன்பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் எந்திரன் படத்தை கையில் எடுத்து பிரமாண்ட வெற்றிப் படமாக கொடுத்ததாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எப்போதுமே நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல பேட்டிகளிலும் தெரிவித்துள்ளார். ஒருவேளை எந்திரன் படத்தில் கமல் நடித்திருந்தால் படம் எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனையாக ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.
Post a Comment