பேட்ட படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி சொன்ன மாற்றம் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது என கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் துவண்டுபோன மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய படங்களில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு. பேட்ட படத்திற்கு முன் ரஜினியின் கபாலி மற்றும் காலா படங்கள் ரஜினியின் வழக்கமான பாணியில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
கபாலி படம் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் காலா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை. இதனால் கொஞ்சம் வருத்தத்தில் இருந்த சூப்பர் ஸ்டாருக்கு சந்தோஷம் கொடுக்கும் படமாக அமைந்தது பேட்ட.
பழைய ரஜினியை பார்த்ததுபோல் சுறுசுறுப்பான ரசிகர்கள் இந்தப் படத்தை திரையரங்குகளில் கொண்டாடித் தீர்த்து விட்டனர். அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் ராம ஆண்டாலும் பாட்டுக்கு ரஜினி போட்ட நடனம் வேற லெவல்.
முதலில் கிளைமாக்ஸ் காட்சியில் அந்த பாடல் இடம் பெறவில்லையாம். அதற்கு பதிலாக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அனிருத் இணைந்து வேறொரு இசையை ரெடி செய்திருந்தார்களாம். முரட்டுத்தனமான அதே நேரத்தில் பயத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாம் அந்த இசை.
இதை கவனித்த ரஜினிகாந்த், படம் முடிந்து ரசிகர்கள் சந்தோசமாக வெளியே செல்ல வேண்டும் என்பதற்காக இந்த பாடலை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என கூறினாராம். பின்னாளில் அந்த காட்சியில் ரஜினி அந்த பாடலுக்கு நடனமாடும் போது தியேட்டரே எழுந்து குத்தாட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது
Post a Comment