தமிழ் திரையுலகின் ஜாம்பவான் ஆக திகழ்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்பில் இவரை மிஞ்ச ஆளே கிடையாது. இவர் தான் நடிக்கும் படங்களில் எத்தனை நடிகர்கள் நடித்தாலும் தன்னுடைய நடிப்பை தனியாக தெரிய வைத்து அசத்துபவர்.
திரையுலகில் தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து சாதித்தவர் கமல்ஹாசன். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் கொடுத்த வெற்றி படங்கள் ஏராளம். தற்போது கூட அவருடைய படங்கள் வெளியீட்டிற்காக வரிசை கட்டி நிற்கின்றன.
இது தவிர வெற்றிமாறன், பா ரஞ்சித், மகேஷ் நாராயணன், மீண்டும் லோகேஷ் கனகராஜ், ஷங்கரின் இந்தியன்-2 போன்ற இயக்குனர்களும் உலக நாயகனை இயக்குவதற்காக காத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை கடந்த நான்கு வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.
மக்களின் குறைகளை கேட்பது, பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வை இடுவது என்று கமல்ஹாசன் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் கூட சென்னை வெள்ள நீரால் மக்கள் பாதிக்கப்பட்ட போது உலகநாயகன் ஆட்டோவில் சென்று பொதுமக்களை பார்த்து குறைகளை கேட்டறிந்தார்.
2021-சட்ட மன்ற தேர்தலில் அவரது கட்சி தோல்வி அடிந்தபோதும். சினிமாவில் எட்டிய உயரத்தை அரசியலில் எட்ட தனது கட்சியை வலுப்படுத்திக்கொண்டிக்கிறார் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாக வேண்டும் என்றால் இது போன்ற தோல்விகள் சகஜமே.
Post a Comment