சிவாவின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எப்படி இருக்குனு பார்க்கலாம் வாங்க.
பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ரஜினிகாந்த் அநியாயங்களை தட்டிக் கேட்டு சண்டையிட்டு வருகிறார். வெளியூரில் படிக்கும் தம்முடைய தங்கை கீர்த்தி சுரேஷ் தனது உயிரையே வைத்துள்ளார். கீர்த்தி சுரேஷுக்கு கல்யாணம் பண்ணி பார்க்க வேண்டும் என்ற ஆசை மாப்பிள்ளையைத் தேடி கல்யாணமும் முடிவு செய்திருக்கிறார். கடைசியில் ஒரு பிரச்சினை வர அதனை ரஜினி எப்படி சமாளிக்கிறார் என்பது தான் இந்தப் படத்தின் கதை.
பல வருடங்களுக்கு பிறகு யங்கான கெட்டப்பில் பழைய துள்ளலுடன் ரஜினிகாந்த் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
நயன்தாரா வழக்கம்போல் அவரது கதாபாத்திரத்தை அழகாக ஸ்கோர் செய்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
படத்தில் நடித்துள்ள பிரகாஷ்ராஜ் குஷ்பூ மீனா சூரி மற்றும் பலர் அவர்களது வேலையை கச்சிதமாக செய்து கொடுத்துள்ளனர்.
இசை : டி இமான் இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம்.
ஒளிப்பதிவு : வெற்றியின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கி உள்ளது.
எடிட்டிங் : ரூபனின் எடிட்டிங் கனகச்சிதம்.
இயக்கம் : சிறுத்தை சிவா சென்டிமென்ட்டுகளை கொண்ட அழகிய கதையை கொண்டு அண்ணாத்த படத்தினை பக்கா கிராமத்து கதையாக கொண்டு சென்றுள்ளார். டயலாக்குகள் பவர்புல்.
தம்ப்ஸ் அப் :
1. ரஜினிகாந்தின் நடிப்பு
2. காமெடி
3. ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ் கம்பினேஷன்
தம்ப்ஸ் டவுன் :
1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்
2. ரன்னிங் டைம் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில்:- இது ஒரு அண்ணன்-தங்கை செண்டிமெண்ட் படம். இந்தப் படம் முழுக்க முழுக்க ரஜினிகாந்தைச் சார்ந்து இருக்க விரும்பவில்லை என்பது ஒரு தனித்தன்மை. சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆக வேண்டும், அதற்கு ரஜினி ஒரு ஊடகமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்புகிறார். இது வெற்றி பெறுமா இல்லையா என்பது இன்னொரு நாள் கேள்வி. ஆனால் ஒரு திருவிழா திரைப்படத்திற்கு, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாட இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Ratings:- 3/5
Post a Comment