HEADER

... (several lines of customized programming code appear here)

Sunday, 25 December 2022

 



எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களும் சூப்பர்ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக கேங்ஸ்டா எனும் பாடல் இன்று மாலை வெளியாகிறது.

வருகிற பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், துணிவு படத்தின் பட்ஜெட் மற்றும் முழு பிசினஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளருக்கு இப்பாடம் லாபமா? இல்லை நஷ்டமா? வாங்க பார்க்கலாம்..

அஜித் சம்பளம் - ரூ. 70 கோடி

துணிவு படத்தின் பட்ஜெட் - ரூ. 160 கோடி

துணிவு பிஸ்னஸ் ரிப்போர்ட்

தமிழ்நாடு உரிமை - ரூ. 75 கோடி

கேரளா உரிமை - ரூ. 2.50 கோடி

கர்நாடகா உரிமை - ரூ. 3.50 கோடி

ஆந்திரா - தெலுங்கானா உரிமை - ரூ. 3 கோடி

ஹிந்தி டப்பிங் உரிமை - ரூ. 25 கோடி

வெளிநாட்டு உரிமை - ரூ. 14 கோடி

ஆடியோ உரிமை - ரூ. 2 கோடி

நெட்ஃபிலிஸ் டிஜிட்டல் உரிமை - ரூ. 75 கோடி

கலைஞர் டிவி சாட்டிலைட் உரிமை - ரூ. 20 கோடி

முழுமையாக துணிவு படத்தின் வியாபாரம் மட்டும் - ரூ. 220 கோடி

இதனை வைத்து பார்க்கும் பொழுது இன்றைய தேதியில் துணிவு படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ள லாபம் - ரூ. 60 கோடி 

துணிவு படத்தின் பிசினஸ்.. தயாரிப்பாளருக்கு லாபமா? நஷ்டமா?:-

Friday, 9 December 2022

 


தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களாக பார்க்கப்படுபவர்கள் அஜித் மற்றும் விஜய். இந்த வருட ஆரம்பத்தில் இவர்களின் படங்கள் ரிலீஸ் ஆகின, விஜய் நடித்த பீஸ்ட் படமும், அஜித் நடித்த வலிமை திரைப்படமும் வெளியாகி இருந்தது.

இந்த இரண்டு படங்களுமே வசூலில் நல்ல வேட்டை நடத்தியது, நஷ்டம் என்பது இலலாமல் சாதாரண வசூலை இரண்டு படங்களுமே பெற்றது.

ஆனால் விஜய்-அஜித் ரசிகர்கள் தங்களது நாயகனின் படம் தான் நல்ல வசூல் வேட்டை நடத்தியது என் சண்டை போட்டு வந்தார்கள்.

தற்போது வலிமை 200+cr மற்றும் பீஸ்ட்180cr திரைப்பட வசூல் குறித்து ஒரு முக்கிய பிரபலம் பேட்டி கொடுத்துள்ளார். முக்கிய விநியோகஸ்தரான திருச்சி ஸ்ரீதர் ஸ்ரீ ஒரு பேட்டியில், வலிமை படம் அதிக விலைக்கு வியாபாரம் ஆனது, ஆனால் பீஸ்ட் அப்படி இல்லை.

கலெக்ஷனில் வலிமை படம், பீஸ்ட் படத்தை விட கொஞ்சம் அதிகமான வசூலை பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

விஜய்யின் பீஸ்ட்டை விட அஜித்தின் வலிமை தான் அதிக வசூல் செய்தது- முக்கிய பிரபலம் ஓபன் டாக்:-

Thursday, 10 November 2022

 


துணிவு

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் துணிவு. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து முதல் முறையாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

ட்ரைலர் விமர்சனம்

இந்நிலையில், படங்கள் குறித்து விமர்சனம் தெரிவித்து வரும் சென்சார் போர்டு நபரான Umair Sandhu, துணிவு படத்தின் ட்ரைலர் குறித்து விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இதில் ட்ரைலர் தீயாக இருகிறது என்று எமோஜி மூலம் பதிவு செய்துள்ளார். இதன்முலம் துணிவு படத்தின் ட்ரைலர் வெறித்தனமாக தயாராகியுள்ளது என்று தெரிகிறது. 

துணிவு ட்ரைலர் விமர்சனம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்?:-

Monday, 7 November 2022

 


அப்படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கமல்.

இந்நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு கமலின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம். அதன்படி தற்போது அவரின் லைன் அப் குறித்து பார்ப்போம்.

கமல் 233 - எச்.வினோத் (2023 ரீலிஸ்)

கமல் 234 - மணிரத்னம் (2024 ரீலிஸ்)

கமல் 235 - லோகேஷ் கனகராஜ் (2025 ரீலிஸ்)

அடுத்தடுத்து முன்று வருடங்களில் வெளியாகவுள்ள கமலின் பிரம்மாண்ட திரைப்படங்கள்! வேற லெவல் லைன் அப் | Kamal Hassan Line Up

அடுத்தடுத்து முன்று வருடங்களில் வெளியாகவுள்ள கமலின் பிரம்மாண்ட திரைப்படங்கள்! வேற லெவல் லைன் அப்:-

Sunday, 25 September 2022

 



சென்னை: பாலிவுட், டோலிவுட் நடிகர்களை விட அதிகளவில் 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கி வருகின்றனர் கோலிவுட் நடிகர்கள். அஜித், ரஜினிகாந்த், விஜய்,  வரிசையில் தற்போது கமல்ஹாசனும் 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகராக மாறி உள்ளார்.

ஆனால், மற்ற நடிகர்கள் அனைவரையும் ஒரேயடியாக ஓரங்கட்டி அதிக சம்பளம் வாங்கும் நடிகர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன

விக்ரம் படம் வெளியாவதற்கு முன்னர் வரை கமல்ஹாசனின் சம்பளம் வெறும் 30 கோடி தான் என்கின்றனர். ஆனால், கமல் தயாரித்து நடித்த விக்ரம் படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி கோலிவுட்டுக்கு மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த நிலையில், ராக்கெட் வேகத்தில் கமலின் சம்பளம் உயர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் தான் முதன் முதலில் 100 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோவாக மாறினார். அவரை தொடர்ந்து நடிகர் 

விஜய் அதன் பிறகு தற்போது நடிகர் அஜித்தும் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களாக உள்ளனர். அவர்களின் படங்களின் வசூல் குறைந்தபட்சம் 200 கோடியை கடந்து வருகிறது. இந்நிலையில், அந்த பட்டியலில் அதிரடியாக இடம்பிடித்துள்ளார் கமல்.

விக்ரம் படம் 450 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த நிலையில், இந்தியன் 2 படத்துக்கு லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து கமலுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப் போவதாக சினிமா வட்டாரத்தில் பெரும் பேச்சு நிலவி வருகிறது. இது மட்டும் உண்மையாக இருந்தால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் கமலாகத்தான் இருப்பார்.

கமல்ஹாசனுக்கு இந்த அளவுக்கு சம்பளம் கொடுக்க வாய்ப்பிருக்கா? என்கிற கேள்விக்கு இந்தியன் 2 கண்டிப்பாக 1000 கோடி வசூலை குறிவைத்து உருவாகி வருகிறது என்றும் விக்ரம் வெற்றியால் ஓவர்சீஸ் மார்க்கெட்டில் கமல்ஹாசனின் மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது. கண்டிப்பாக இந்த சம்பளத்தை அவருக்கு தாராளமாக கொடுப்பார்கள் என்கின்றனர். ஆனால், இதுதொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. மற்ற நடிகர்கள் சம்பளம் போலவே இதுவும் தகவலாகவே பரவி வருகிறது

இது தவிர பிக் பாஸ் சீசன் 6-ஐ தொகுத்து வழங்க 100 கோடி வரை நடிகர் கமல்ஹாசனுக்கு சம்பளம் தரப் போவதாகவும் பரபரப்பு தகவல்கள் பறந்து வருகின்றன. பாலிவுட்டில் இந்தி பிக் பாஸை தொகுத்து வழங்க நடிகர் சல்மான் கானுக்கு 350 கோடி வரை சம்பளம் கொடுப்பதாக கூறுகின்றனர்


அடேங்கப்பா 150 கோடியா.. இந்தியன் 2 படத்துக்காக இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கப் போறாரா கமல்?:-

Saturday, 17 September 2022

 


VJ BHAVANA BALAKRISHNAN IMAGES 2:-https://e-funandjoyindia.blogspot.com/2022/09/vj-bhavana-balakrishnan-images-2.html


கமல்ஹாசன் நடிப்பில் ’இந்தியன் 2’ படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பில், கிரேன் விபத்து, கொரோனா பரவல், பட்ஜெட் தொடர்பாக ஷங்கருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் பிரச்சினை எனப் பல காரணங்களால் படப்பிடிப்பு பலமுறை தள்ளிப்போடப்பட்டது. இதனால் இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாயின.

பின் ஒருவழியாக அனைத்து பிரச்சனைகளும் தற்போது சுமூகமாக முடிந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

சென்னை வடபழனி பிரசாத் லேபில் இந்தியன் 2 படத்திற்கான அரங்குகள் அமைக்கப்பட்டு கட்ந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களுள் ஒருவரான பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், பேட்டி ஒன்றில் பேசுகையில் இந்தியன் 2 படம் மொத்தம் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் இருப்பதாகக் கூறினார். மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இப்படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தான் இப்படத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன் இடம்பெறும் 10 நிமிடக் காட்சி ஒன்றில் கமல்ஹாசன் 14 மொழிகள் கெண்ட ஒரு முழு நீல வசனத்தைப் பேசியுள்ளதாகவும் அக்கட்சி கேமாராவை எங்கும் நிறுத்தாமல் சிங்கிள் டேக்காக எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சி படத்தில் மிக முக்கிய காட்சியாகவும் படம் வெளியான பிறகு இக்காட்சி பெருமளவில் பேசப்படும் எனக் கூறப்படுகிறது.


இந்தியன் 2 படத்தில் புது முயற்சியை செய்து முடித்த கமல்ஹாசன்!:-
























VJ BHAVANA BALAKRISHNAN IMAGES 2:-

Thursday, 15 September 2022


இண்றய இஸ்லாமிய சமூகத்தை நினைக்கும் போது மிக மனவேதனை தருகிறது...நமக்கு புரிவது ஏன் அபுகளுக்கு புரியவில்லை.

allah, allah names, ya allah   

PLEASE WATCH VIDEO HERE


 அநியாயக்காரர்களுக்கு எதிராக அல்லாஹ் வைத்துஇருக்கும் அளவுகோல்-மல்ஹாமா(WW3); இறுதி நூற்றாண்டு-31:-https://e-funandjoyindia.blogspot.com/2022/09/ww3-31.html


யூப்ரடீஸில் தங்கம், நபி(ஸல்) தடுத்தது ஏன்?இறுதி நூற்றாண்டு-32:-

Sunday, 11 September 2022

 


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், அவர் நடிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் AK61 திரைப்படம் உருவாகி வந்தது.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் திடீரென படப்பிடிப்புக்கு பிரேக் விட்டுவிட்டார்கள்.

மேலும் நடிகர் அஜித் பைக்கில் லடாக், இமயமலை என வெளிமாநிலங்களில் சுற்றி வருகிறார். அதுமட்டுமின்றி அப்படத்தின் நாயகி மஞ்சு வாரியரும் அவருடன் அந்த பைக் ட்ரிபில் இணைந்ததை பார்த்திருந்தோம்.

இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது, படத்தின் தயாரிப்பாளர் பிரபல விநியோகஸ்தர் ஒருவரிடம் ஃபைனான்ஸ் வாங்கித்தான் படப்பிடிப்பை நடத்தி வந்துள்ளார்.

விநியோகஸ்தரிடம் நடத்தபட்ட சமீபத்திய ரெய்டு பிறகு அவர் யாருக்கும் பணத்தை ரிலீஸ் செய்யாமல் இருக்கிறார். அவரிடமிருந்து பணம் வந்த பிறகுதான் படப்பிடிப்பை மீண்டும் துவங்க முடியும் என்ற நிலையில், இப்போது அனைத்து பிரச்னை முடிந்து செப்டம்பர் 15 மீண்டும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் துவங்கும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. AK61 கதாநாயகி மஞ்சு வாரியர் இதை உறுதிப்படியுள்ளார்.



AK61 திரைப்படத்தின் ஷூட்டிங் இவரால் தான் நடக்காமல் இருக்கிறதா! இறுதிகட்ட படப்பிடிப்பு எப்போது? இதோ, வெளியான அதிகாரபூர்வ தகவல்:-

Saturday, 10 September 2022

 இண்றய இஸ்லாமிய சமூகத்தை நினைக்கும் போது மிக மனவேதனை தருகிறது...நமக்கு புரிவது ஏன் அபுகளுக்கு புரியவில்லை.


allah, allah names, ya allah   

PLEASE WATCH VIDEO HERE


கான்ஸ்டான்டிநோபிளின் முக்கியத்துவம், நஜ்த் பற்றிய நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு,இறுதி நூற்றாண்டு-27,28,29,30:-https://e-funandjoyindia.blogspot.com/2022/08/27282930.html


அநியாயக்காரர்களுக்கு எதிராக அல்லாஹ் வைத்துஇருக்கும் அளவுகோல்-மல்ஹாமா(WW3); இறுதி நூற்றாண்டு-31:-

Monday, 5 September 2022

 



அஜீத் குமாருக்கும் பைக் ரைடிங்கிற்கும் இடையேயான காதல் கதை முடிவில்லாதது ஆனால் ஒவ்வொரு முறையும் முந்தையதை விட சுவாரஸ்யமாக இருக்கும். சமீப காலங்களில் கவர்ந்திழுக்கும் நட்சத்திரம் தனது இரு சக்கர வாகனத்தில் ஒரு முழு இந்திய சுற்றுப்பயணத்தையும் ஐரோப்பிய பயணத்தையும் முடித்துள்ளார். பயணங்களின் போது அவர் செய்த சாகசங்கள் குறித்து பகிரப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகின

கார் மற்றும் பைக்குகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் அஜித். ஆரம்பத்தில் கார் பந்தயங்களில் ஆர்வமாக பங்கெடுத்து வந்த அஜித், அதில் பலமுறை விபத்தில் சிக்கி, அதன்மூலம் தனது சினிமா கெரியரும் பாதிப்பை சந்தித்ததால், அதில் கலந்துகொள்வதை சுத்தமாக நிறுத்திக்கொண்டார். அதற்கு பதிலாக பைக்கின் மீது தனது கவனத்தை செலுத்த தொடங்கினார் அஜித்.

பைக் ரைடிங் செல்வது என்பது அஜித்துக்கு மிகவும் பிடித்த விஷயமாம். இந்தியாவாக இருந்தாலும் சரி, உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்றாலும் சரி, அங்கு ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஜாலியாக கிளம்பி விடுவார் அஜித். அந்த வகையில், சமீபத்தில் கூட ஐரோப்பா மற்றும் லண்டனுக்கு சுற்றுலா சென்றபோது பைக்கில் வலம் வந்தார் அஜித்.

தற்போது லடாக்கிற்கு பைக் ட்ரிப் சென்றுள்ளார் அஜித். அங்கு அவருடன் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்து பைக் ரைடிங் செய்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் அஜித்தும், மஞ்சு வாரியரும் முதன்முறையாக இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், லடாக் ட்ரிப்பிற்காக நடிகர் அஜித் ஓட்டிச் சென்ற பைக்கிற்கு இன்சூரன்ஸ் இல்லை என புது சர்ச்சை கிளம்பி உள்ளது. அந்த பைக்கின் இன்சூரன்ஸ் கடந்த 2020-ம் ஆண்டே முடிந்துவிட்டதாகவும், அதன்பின் அதனை அஜித் புதுப்பிக்கவே இல்லை என ஒருவர் ஆதாரத்தை வெளியிட்டு உள்ளார்.

ஆனால் உண்மையில் நடந்தே வேறு அஜித் தகுந்த ஆவணத்துடன் தான் சென்றார் எனவும் இது அஜித்தை பிடிக்காதவர்கள் செய்த வேலை என்றும் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறினார் இதோ அந்த வீடியோ மற்றும் ஆதாரம்.




இந்நிலையில் அஜித் ரசிகர்கள் #NationalTrollMaterialVijay என்ற ஹாஸ்டக்கை ட்ரெண்டு செய்து விஜய் ரசிகர்களுக்கு தக்க பதிலடி கூறிவருகின்றனர் அஜீத் மற்றும் மஞ்சு வாரியர் முன்னணி ஜோடியாக எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஏகே 61’ திரைப்படம் தற்போது தயாரிப்பில் உள்ளது. பயணத்திற்குப் பிறகு இருவரும் பாங்காக்கில் அதிக ஆக்டேன் ஆக்‌ஷன் காட்சிகள் பதிவு செய்யப்படும் இறுதி நீண்ட கால அட்டவணையில் சேர்வார்கள்.

பைக் இன்சூரன்ஸ் பிரச்னைக்கு முற்று புள்ளி வைத்த அஜித் !!என்றுமே Mr.Clean அஜித் என நிரூபணம் !!! நடந்து என்ன ?:-

Monday, 29 August 2022



KAAVYAARIVUMANI CUTE IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2022/08/kaavyaarivumani-cute-images.html

தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர்கள்  அஜித் மற்றும் விஜய்.

மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள இவர்கள் ஒரே நாளில் திரைப்படத்தை வெளியிடுவது தமிழ் சினிமாவின் மிக பெரிய மோதல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அப்படி கடைசியாக 8 வருடங்களுக்கு முன்பு  வீரம் மற்றும் ஜில்லா திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களில் வீரம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது. ஜில்லா ஆவெரேஜ் ஹிட் ஆனது

இந்நிலையில் தற்போது விஜய்யின் வாரிசு திரைப்படம் 2023 பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தற்போது வாரிசு படத்துன் தல அஜித்தின் AK61 படமும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், அதன்படி தல அஜித் நடித்து வரும் AK61 படத்தை தமிழகத்தின் முன்னணி விநியோக நிறுவனம் RED GIANT MOVIES பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 





போடுறா வெடிய அஜித் 61 படத்தின் ரிலீஸ் இது தான் !! RED GIANT MOVIES வெளியிடுகிறது, 8 வருடங்களுக்கு பிறகு அஜித் VS விஜய் மோதல்; வெளியான அறிவிப்பு இதோ:-

Saturday, 27 August 2022

 


கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன்.

இவர்கள் இருவரின் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ஹிட், சூப்பர்ஹிட், ப்ளாக் பஸ்டர், இண்டஸ்ட்ரி ஹிட் என பல வகையில் மக்களால் வெற்றிபெற்றுள்ளது.

அதில் குறிப்பாக பார்க்கப்படுவது இண்டஸ்ட்ரி ஹிட் பிரிவு என்று சொல்லலாம். இந்நிலையில், இண்டஸ்ட்ரி ஹிட் பிரிவில் இதுவரை கமல், ரஜினி எத்தனை படங்களை கொடுத்துள்ளார்கள் தெரியுமா.

ரஜினிகாந்த் 10 படங்களும், கமல் ஹாசன் 11 படங்களும் கொடுத்துள்ளார்கள். அவை என்னென்ன படங்கள் என்பதை வரிசையாக காண்போம்..

இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்

ரஜினிகாந்த்                                  

1. தளபதி - 1991  

 2. மன்னன் - 1992                        

3. அண்ணாமலை - 1992

4. பாட்ஷா - 1995

5. படையப்பா - 1999

6. சந்திரமுகி - 2005

7. சிவாஜி - 2007

8. எந்திரன் - 2010

9. கபாலி - 2016

10. 2.0 - 2018

 கமல் ஹாசன்                     

1. பதினாறு வயாத்னிலே- 1977

2. மரோ சரித்ரா- 1978

3. ஏக் துஜீ கே லியா- 1981 

4.சகலகலா வல்லவன்- 1982

5. சாகர சங்கமம்-  1983

6. நாயகன் - 1987

7. அபூர்வ சகோதர்கள்- 1989

8. தேவர் மகன் - 1992

9. இந்தியன் - 1996

10. தசாவதாரம்- 2008

11. விக்ரம் - 2022



அதிக இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த நடிகர் யார்.. ரஜினி அவர்களா, கமல் அவர்களா :-

Thursday, 25 August 2022

 



உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன்.

தமிழ் சினிமாவின் முதல் பான் இந்தியாவில் வெற்றியடைந்த திரைப்படமாக இந்தியன் திரைப்படம் மாறியது. வரலாறு காணாத வெற்றியடைந்த அப்படத்தின் இரண்டாம் பாகத்தை கிட்டதட்ட 26 வருடங்களுக்கு பின் உருவாக்க இருக்கின்றனர்.

அதன்படி ஏற்கனவே இப்படத்தின் 60% படப்பிடிப்பு முடிந்த நிலையில் விபத்து காரணமாக திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சில காலங்கள் கழித்து தற்போது இப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது கமலின் ரசிகர்கள் இந்தியன் திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி இந்தியன் திரைப்படத்தின் முதல் விளம்பரப்படுத்தும் பணிக்காக வெளியிடப்பட்ட போஸ்டர்களை பதிவிட்டுள்ளனர்.

மேலும் அப்போது இந்தியன் படத்தின் போஸ்டரை எல்லா நாளிதழ்-லிலும் ஒரு பக்கம் முழுவதுமாக வெளியிட்டுள்ளனர். படத்தின் பூஜையின் போது ஸ்டுடியோ மற்றும் நகரம் முழுக்க விளம்பரம் படுத்தியுள்ளனர்

அதனை ஒப்பிடுகையில் லைக்கா நிறுவனம் பெரிய விஷயமாக எதுவும் செய்யவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   


GalleryGalleryGalleryGallery



26 வருடங்களுக்கு முன் வெளியான இந்தியன் படத்திற்கு செய்யப்பட்ட விளம்பரங்கள்! இவ்வளவு பிரம்மாண்டமா?:-

Tuesday, 23 August 2022

 


இந்தியன் 2 படத்துக்காக அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசனுடன் பிரபல ஹாலிவுட் நடிகை புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குபிறகு நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்துக்காக தயாராகிவருகிறார். இதற்காக தற்போது அவர் அமெரிக்கா சென்றுள்ளார். 

இந்தியன் முதல் பாகம் மற்றும் அவ்வை சண்முகி படங்களில் கமல்ஹாசனுக்கு ஒப்பனை செய்தவர் மைக்கேல் வெஸ்ட்மோர். தற்போது இந்தியன் 2 பட ஒப்பனைக்காக அவரை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துள்ளார். 

இந்த சந்திப்பின்போது மைக்கேலின் மகளும் ஹாலிவுட் நடிகையுமான மெக்கென்சி வெஸ்ட்மோரும் உடனிருந்தார். மெக்கென்ஸி கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, உலகின் மிக இனிமையான இந்த இருவருடன் இருப்பது மகிழ்ச்சியும் பெருமையாகவும் இருக்கிறது. 

ஒருவர் எனது அப்பா, மற்றொருவர் கமல்ஹாசன் (இவரும் குடும்பத்தில் ஒருவர்) இவரை உங்களுக்கு தெரியவில்லையென்றால் கமலின் புதிய படமான விக்ரம் படத்தைப் பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்தியன் 2': கமல் அவர்களை புகழ்ந்து பதிவிட்ட ஹாலிவுட் நடிகை - வெளியான சுவாரசியத் தகவல்:-

Sunday, 21 August 2022










































KAAVYAARIVUMANI CUTE IMAGES:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com