அண்மைக்காலமாக தமிழகத்தில் தெலுங்கு கன்னட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வசூல் வேட்டையாடி வருகின்றன.
கடந்தாண்டே ‘புஷ்பா’ படம் வெளியாகி பட்டைய கிளப்பியது.
இந்தாண்டு 2022ல் வலிமை, ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய படங்களும் இந்திய சினிமாவையே கலக்கி வருகிறது.
ஆனால் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ & விஜய் நடித்த ‘பீஸ்ட்’ ஆகிய படங்கள் நெகட்டிவ் விமர்சனங்களால் படு வீழ்ச்சியடைந்தன.
இவ்வாறாக தமிழகத்தில் தமிழ் படங்களுக்கு மவுசு குறைந்து வருவதாக ரசிகர்கள் மத்தியில் கருத்துக்கள் உலா வருகின்றன. ஏனென்றால், அஜித் நடித்த ‘வலிமை படம் மற்றுமே இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது..இந்த படம் சுமார் 230 கோடி வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது.
வலிமை தண்டி வேற எந்த படமும் வெற்றி பெறாததால் இந்த கருத்து உலா வருகிறது.வலிமை அடுத்து பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ‘பீஸ்ட்’ படுதோல்விசந்தித்துள்ளது.
இந்த நிலையில் கமல் நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘விக்ரம்’ படத்தை திரையரங்கம் உரிமையாளர்கள் & ரசிகர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில்.. “உங்களை தான் நம்பி இருக்கிறோம், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும், யோவ் ஏமாத்திடாதே என்றெல்லாம் ரசிகர்கள் லோகேஷிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அந்த பதிவை லோகேஷ் கனகராஜூம் லைக் செய்து ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.
எனவே தற்போதைய நிலையில் அஜித்துக்கு பிறகு கமலை மட்டுமே நம்பியிருக்கிறது தமிழ் சினிமா.
Post a Comment