HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday, 30 July 2022

 


நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மீண்டும் H.Vinoth இயக்கத்தில்  அஜித் நடித்துவரும் திரைப்படம் AK 61. இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் தல அஜித்துடன் இணைந்து முதல் முறையாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார். மேலும், வில்லனாக நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக அண்மையில் தகவல் ஒன்று வெளிவந்தது.

இந்நிலையில், இப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிப்பது ஏறக்குறைய உறுதியாகயுள்ளதாம். ஆம், ஏனென்றால் இதுவரை நடந்த AK 61 படத்தின் படப்பிடிப்பில் சஞ்சய் தத் தன்னுடைய 90% சதவீத காட்சிகளை நடித்து முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் மீதம் இருக்கும் சில காட்சிகளை வரும் நாட்களில் நடிகர் சஞ்சய் தத் நடித்து முடித்துவிடுவார் என்று கூறப்படுகிறது.

தல அஜித் - சஞ்சய் தத் கூட்டணி படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

AK 61 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்:-

Tuesday, 26 July 2022


அஜித் வலிமை படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடித்த வருகின்றார். மிகப்பெரிய வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

எனவே தான் தற்போது நடித்துவரும் ak61 படத்தை அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கும்படி கொடுக்கவேண்டும் என்ற முனைப்பில் அஜித் இருக்கின்றார். அதற்கு ஏற்றாற்போல வினோத்தும் திரைக்கதையை அமைத்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.

மேலும் இப்படத்திற்காக அஜித் தன் உடல் எடையை குறித்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இதைத்தொடர்ந்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கின்றார்..

இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இருதியில் துவங்கவுள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் அஜித் நடித்த பிறகு AK63 படத்திற்காக மீண்டும் சிவாவுடன் கூட்டணி அமைப்பார் என பேசப்பட்டது.

ஆனால் தற்போது வந்த தகவல் என்னவென்றால் அஜித் AK63 or AK64 படத்திற்காக சுதா கொங்கரா இயக்க போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் மீடியாக்களை சந்தித்த சுதா கொங்கராவிடம், அஜித்தை எப்போது இயக்க போகிறீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சுதா கொங்கரா, பண்ணலாம். ஒவ்வொன்றாக பண்ணலாம். ஒரு படம் முடிக்க எனக்கு 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு படத்தை முடித்த பிறகு தான் மற்றொரு படத்தை துவக்க முடியும் என்றார்.

#AK63 Or #AK64 Might Be #AjithKumar and @Sudha_Kongara combo Waiting Eagerly @gvprakash Musically #AK61 #AK62

அப்போ அது உண்மை தானாஇதனால் சுதா கொங்கரா, அஜித்தை இயக்க போகிறார் என்ற தகவல் உண்மை தான் என தெரிகிறது. தற்போது சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை இயக்கி வரும் சுதா கொங்கரா, இதற்கு பிறகு கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 படங்களை தயாரித்த ஹம்பாலே ஃபிலிம்ஸ் அடுத்து தயாரிக்க உள்ள படத்தை சுதா கொங்கரா தான் இயக்க போவதாகவும், இதில் லீட் ரோலில் நடிக்க சிம்புவிடம் பேசப்பட்டு வருவதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.
ஆனால் ஒரு படத்தை முடிக்க 3 ஆண்டுகள் தேவைப்படுவதாக அவரே சொல்வதால் அஜித், சூர்யாவுடனான படங்களை எப்போது எடுப்பார் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

தேசிய விருது இயக்குனரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அஜித்.. மாஸ் கூட்டணியில்:-

Tuesday, 19 July 2022




 உலக நாயகன் கமலஹாசனின் திரைப்படம் விக்ரம் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை கமல் ஒவ்வொரு விதமாக கொண்டாடி வருகிறார். இந்த படத்தில் இயக்குனர்கள் நடித்த நடிகர்களுக்கு பலவிதமான பரிசு பொருட்களை அளித்து வந்தார், அடுத்ததாக பல படங்களை தொடங்குகிறார் கமல்ஹாசன்.

 கமலஹாசன் பொருளாதார ரீதியாக வெற்றி பெற ராஜ் கமல் பிலிம்ஸ் முக்கிய நடிகர்களை வைத்து படம் எடுக்க உள்ளார் என்று செய்திகள் வந்தன. அதன் வரிசையில் அஜித், விஜய், சூர்யா, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் முடிவு செய்யப்பட்டது.

இப்போது சிவகார்த்திகேயன் திரைப்படம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அடுத்து யார் என்று பேசிக்கொண்டிருக்கையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் தயாரிப்பில் யாரும் எதிர்பார்க்காத ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளன.

நண்பர் ரஜினிகாந்துக்கு எப்படியாவது ஒரு படம் தயாரித்து விட வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே கமலுக்கு இருந்துதான் வந்தது. அதனை கருத்தில் கொண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்ட கூட்டணி ஒன்றை உருவாக்க உள்ளனர்.

எனக்கு எப்படி 500 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது படமாக விக்ரம் அமைந்ததோ அதே போல் ரஜினிகாந்துக்கு ஒரு படத்தை தயாரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கூட்டணி அமைய உள்ளதாம். இதற்கான முயற்சியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறதாம்.

தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதியின் 67 வது படத்தை முடித்த பின் இந்த படம் உடனடியாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு காம்பினேஷனில் படம் வெளிவந்தால் கண்டிப்பாக கோலிவுட் வட்டாரத்தில் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த முதல் படமாக இது இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.


கமல்ஹாசனுடன் கூட்டணி போடும் ரஜினிகாந்த்.. 1000 கோடி வசூல் கன்பார்ம்!

Friday, 8 July 2022




 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகரை ரசிகர்கள் உலகநாயகன் என்று போற்றி வருகிறார்கள் அந்த வகையில் இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூலில் 400 கோடியை மிஞ்சியது மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் விக்ரம்  திரைப்படத்தின் வெற்றியால் கிடப்பில் உள்ள இந்தியன் 2 திரைப்படத்தையும் விரைவில் வெளியிட வேண்டும் என பட குழுவினர்கள் முடிவு செய்துள்ளார்கள். 

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் படபிடிப்பானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக பட குழுமங்கள் தெரிவித்தது மட்டுமில்லாமல் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் சமீபத்தில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக பட குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் நெடுமுடி வேணு மற்றும் விவேக் ஆகிய இருவரும் நடித்துள்ளார்கள் ஆனால் அவர்கள் இருவரும் தற்பொழுது காலமாகிவிட்டார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் இந்நிலையில் இவரது காட்சியை வேறொரு நடிகர் களை வைத்து மீண்டும் படமாக்குவார்களா? இல்லை நீக்குவார்களா? என்பதை நாம் பார்த்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதேபோல இந்த திரைப்படத்தில் நடித்த காஜல் அகர்வால் அவர்கள் திருமணமாகி தற்பொழுது குழந்தை பெற்றுவிட்டதால் இந்த திரைப்படத்தில் மீண்டும் தொடர்ந்து நடிப்பாரா என்பதும் சந்தேகத்தில் உள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு இல்லையா Sir ஒரு End-u ரசிகர்கள் கவலையிலுள்ளனர். ஆனால் இதற்கான மாற்றுத்திறன் இயக்குனர் சங்கரிடம் உள்ளதாகவும் படப்பிடிப்பில் எந்த ஒரு பிரச்சனையும் வராது எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பு அறுபது சதவீதம் முடிவடைந்த நிலையில் இவ்வரிடத்தில் மீதமுள்ள படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய உள்ளதாக பட குழுவினர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.



இந்த பிரச்சனைகளுக்கு இல்லையா Sir ஒரு End-u; இரண்டு நடிகர்கள் மறைந்த பின்னும் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்க போகும் ஷங்கர்..! இது எப்படி சாத்தியம்..?

Tuesday, 5 July 2022

 தல அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். ஹெச் வினோத் உடன் அஜித்துக்கு இது மூன்றாவது படம். தல அஜித் பிறந்தநாளுக்கு இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வரும் என்று தான் ரசிகர்கள் காத்திருந்தார்கள், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் தற்போது பரவி வரும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி ஏகே61 படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவர வாய்ப்பிருக்கிறது என்பது தான்.

தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்தநாள் தான் ஆகஸ்ட் 13. நடிகர் தல அஜித்தும் ஸ்ரீதேவி மீது அதிகம் மரியாதை வைத்திருந்தார், அவரது இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்தில் சம்பளம் வாங்காமல் கூட நடித்து கொடுத்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அதனால் தற்போது தல அஜித் ரசிகர்கள் ஆகஸ்ட் 13ம் தேதிக்காக காத்திருக்க தொடங்கி இருக்கிறார்கள். 

தல அஜித் தற்போது ஐரோப்பிய நாடுகளில் இருக்கிறார். அவர் அங்கு பைக் ட்ரிப் செல்லும் புகைப்படங்கள் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. இந்த மாத இறுதியில் இந்தியா திரும்பி ஏகே61 ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தல AK61 டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் எப்போது.. தேதியுடன் லேட்டஸ்ட் தகவல் இதோ:-

Saturday, 2 July 2022

 


விஸ்வரூபம் படத்திற்கு பிறகு படங்கள் கமிட்டாவதையும், நடிப்பதையும் நிறுத்தி இருந்தார் கமல்ஹாசன், அதாவது இடைவேளை விட்டிருந்தார்.

ஆனாலும் சின்னத்திரையில் கலக்குவது, அரசியலில் ஈடுபடுவது என பிஸியாகவே இருந்தார். இந்தியன் 2 படமும் நடித்து வந்தார், ஆனால் சில பிரச்சனைகளால் படம் அப்படியே நின்றுவிட்டது, எப்போது தொடங்கும் என தெரியவில்லை.

இந்த நேரத்தில் தான் மீண்டும் நடிக்கலாம் என முடிவு செய்து விக்ரம் என்ற படத்தில் நடித்தார் கமல். அப்படம் கடந்த ஜுன் 3ம் தேதி வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.

இப்படத்திற்காக கமல்ஹாசன் செய்த புரொமோஷன் தான் மிகவும் ஹைலைட். ஒரு பேட்டியில் கூட இயக்குனர் லோகேஷ் பேசும்போது, ஒரு சேனலுக்கு சென்று பேட்டி கொடுத்துவிட்டு வருவதற்குள் கமல்ஹாசன் அவர்கள் இன்னொரு மாநிலத்தில் இருப்பார்.

அந்த அளவிற்கு இப்படத்திற்காக அவர் செய்த புரொமோஷன் வேலை அதிகம் என பேசியிருந்தார்.

4 வாரத்தை தாண்டி 5வது வாரத்திலும் படத்திற்கு நல்ல புக்கிங் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் 30 நாட்களில் படம் ரூ. 16.28 கோடி வரை வசூலித்துள்ளதாக அட்டகாசமான தகவல் வந்துள்ளது.

முப்பது நாட்களில் சென்னையில் தரமான வசூல் வேட்டை நடத்தியுள்ள கமல்ஹாசனின் விக்ரம்- இதுவரை இவ்வளவு வசூலா?

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com