செம்மர கட்டைகளை சட்டவிரோதமாக கடத்தும் புஷ்பராஜின் கதை தான் இப்படம். அதன்படி இரண்டாம் பாகத்தில் புஷ்பா தனக்கென ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி கொள்கிறார். அதன் மூலம் இன்டர்நேஷனல் லெவலில் டீலிங் வைத்து பெரும் காசு பார்க்க திட்டம் போடுகிறார்.
ஆனால் பகத் பாசில் அதை தடுப்பதற்கு எல்லா வழிகளிலும் முயற்சி செய்கிறார். இவர்கள் இருவருக்கும் பிரச்சனை இருக்கும் நிலையில் முதல்வரால் புஷ்பா அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் தன் சித்தப்பாவை அந்த பதவியில் உட்கார வைக்க முடிவெடுக்கிறார் புஷ்பா.
அதற்கு அதிகபட்ச பணம் தேவைப்படும் நிலையில் துணிந்து ஒரு காரியத்தை செய்ய இறங்குகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா? பகத் பாஸில் புஷ்பாவின் திட்டத்தை முறியடித்தாரா? முதல்வர் பதவி என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த பாகம்.
3 மணி நேரம் 20 நிமிடங்கள் படத்தின் நீளம் என்றாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. அடுத்து என்ன நடக்கும் என்ற சுவாரஸ்யத்துடன் திரைகதையை கொண்டு சென்றுள்ளார் இயக்குனர். அதற்கு உயிர் கொடுக்கும் வகையில் ஒன் மேன் ஆர்மியாக பட்டையை கிளப்பி இருக்கிறார் அல்லு அர்ஜுன்.
அவருக்கு அடுத்ததாக பகத் பாஸில் வழக்கம் போல மிரட்டி எடுத்துள்ளார். இருவரும் சந்திக்கும் காட்சி ஒவ்வொன்றும் அனல் பறக்கிறது. அதே போல் புஷ்பாவின் மனைவியாக வரும் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய கதாபாத்திரத்தை குறைவில்லாமல் செய்துள்ளார்.
மேலும் விறுவிறுப்பான கதைக்கு இடையே வரும் நகைச்சுவை காட்சிகளும் பொருத்தமாக இருக்கிறது. அதேபோல் பின்னணி இசை பாடல்கள் அனைத்தும் சிறப்பு. அறிமுக காட்சியில் தொடங்கி பல இடங்களில் இயக்குனர் ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைத்துள்ளார்.
இப்படி படத்தில் பாராட்டுவதற்கு பல விஷயங்கள் இருந்தாலும் சில குறைகளும் இருக்கிறது. அவ்வப்போது சறுக்கும் கதை, லாஜிக் மீறல் என சில விஷயங்கள் உறுத்தலாக இருக்கிறது. ஆனால் அதைத் தாண்டி புஷ்பராஜ் மிரட்டி இருக்கிறார். அதனால் படத்தை ஒருமுறை பார்க்கலாம்.
சினிமா பேட்டை ரேட்டிங்; 3/5
Post a Comment