HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday, 15 August 2017


அஜித், விஜய் ரசிகர்கள் இருவருமே தங்களது நாயகனின் டீஸர், டிரைலர் வந்தாலே குஷியாகிவிடுவார்கள். அதோடு யூடியூபில் சாதனை படைக்க வேண்டும் என்றும் போராடுவார்கள்.
அந்த வகையில் அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது விவேகம் பட டிரைலருக்காக தான். டிரைலர் வரும் என்பதை தாண்டி எப்போது வரும் என்று இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட புதிய பாடல் டீஸர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இதோ

விவேகம் படத்தின் புதிய பாடல் டீஸர் வீடியோக்கள்

Friday, 11 August 2017





விஜய் ரசிகர்கள் எப்போதும் தங்கள் நாயகனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எப்போதும் அவருக்காக குரல் கொடுப்பார்கள். அதேசமயம் விஜய் சொல்லும் அறிவுரைகளையும் கேட்டு நடப்பார்கள். சமீபத்தில் கூட விஜய் ரசிகர்கள் சில பிரச்சனைகளை எதிர்க்கொண்டார்கள். இந்த நிலையில் மெர்சல் பட புதுப் பாடலை கேட்ட நடிகை கஸ்தூரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மெர்சல் பட பாடலை கேட்டேன், உண்மையை சொன்னால் விஜய் ரசிகர்கள் என்ன செய்வார்களோ என்பது போல் டுவிட் செய்துள்ளார். அதோடு ஏ.ஆர். ரகுமான், இளைய தளபதி கூட்டணியில் நான் நிறைய எதிர்ப்பார்க்கிறேன் என்றார்.

தளபதி பற்றி மனம் திறந்த கஸ்துரி.... என்ன பேசினார் தெரியுமா.... ரசிகர்கள் அதிர்ச்சி.....

மெர்சல் ‘ஆளாப்போறான் தமிழன்’ பாடல் இதோ

https://youtu.be/3XmrZaVVUpc


#Mersal #ARRahman #Vijay








Image may contain: 1 person, smiling, close-up

மெர்சல் ‘ஆளாப்போறான் தமிழன்’ பாடல் இதோ

அஜித் நடித்திருக்கும் விவேகம் படத்தின் புதிய HD புகைப்படங்கள்


மற்றவர்களுக்கு உத்வேகம் தருவதில் அஜித்துக்கு நிகர் அவரே என்று ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெஹிக் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 24-ம் தேதி ‘விவேகம்’ வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் அஜித்தின் ‘கவுண்டர் டெரரிஸ்ட் ஸ்க்வாட்’ அணியில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெஹிக்.
அஜித்துடன் நடித்தது குறித்து அமிலா டெர்ஜிமெஹிக் கூறியிருப்பதாவது:
‘விவேகம்’ போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த சர்வதேச படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கால் பதிப்பது பெரிய பெருமை. இந்த வாய்ப்பினை அளித்த இயக்குனர் சிவாவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹாலிவுட்டில் பியர்ஸ் பிராஸ்னன் நாயகனாக நடித்த ‘தி நவம்பர் மேன்’ படத்தில் செய்திருந்த கதாபாத்திரத்தை பார்த்த இயக்குனர் சிவா ‘விவேகம்’ பட வாய்ப்பினை எனக்களித்தார் என அறிந்தேன். ‘விவேகம்’ படத்திற்காக நடிப்பு மட்டுமின்றி ஆக்‌ஷன் காட்சிகளில் கடின சண்டை போடும் திறனும் தேவைப்பட்டது.
ஆக்‌ஷன் படங்களின் ரசிகையாக எனக்கு இயக்குனர் சிவா கூறிய ‘விவேகம்’ படத்தின் கதையும், கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது. அஜித்குமாரை முதல் முறையாக சந்திப்பதற்கு முன்னரே இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய நட்சத்திரம் என்பதை தெரிந்துகொண்டேன். ஆனால் சந்தித்த பொழுது துளி கூட தலைக்கனம் இல்லாமல் அவ்வளவு எளிமையாக மனிதராக எல்லோருடனும் பழகினார். அவருடைய தொழில் பக்தி நான் இதுவரை வேறெந்த நடிகரிடமும் பார்த்ததில்லை.
அனைத்து ஆபத்தான சண்டை காட்சியிலும் டூப் வேண்டாம் என்று தானே நடித்துக் கொடுத்தார். இவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் இன்னமும் அவரது கண்களில் ஒரு சிறுவனின் துள்ளல் உள்ளது. எனது சினிமா வாழ்க்கையும் இந்த உலகத்தையும் அஜித்தின் கண்ணோட்டத்திலேயே கண்டு வாழ விரும்புகிறேன். மற்றவர்களுக்கு உத்வேகம் தருவதில் அவருக்கு நிகர் அவரே.
‘விவேகம்’ படத்தின் ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த தொழில் பக்தியுடன் உண்மையாக உழைத்துள்ளார்கள். இந்திய சினிமா ரசிகர்கள் ‘விவேகம்’ படத்தை நிச்சயம் மாபெரும் வகையில் ரசித்துக் கொண்டாடுவார்கள்
இவ்வாறு அமிலா டெர்ஜிமெஹிக் தெரிவித்துள்ளார்.

அஜித்திற்கு நிகர் அவரே தான்..! ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெஹிக்

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com