HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday, 5 May 2018

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் வட்டாரம் வைத்திருப்பவர்கள் ரஜினி-கமல், அஜித்-விஜய். இவர்கள் படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடம் எப்படிபட்ட வரவேற்பு பெறும் என்பதை நாம் பார்த்திருப்போம்.
சமீபத்தில் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துவரும் சதீஷ் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது அவரிடம் பைரவா படத்தில் விஜய்யை கலாய்த்தது குறித்து கேட்டபோது, திடீரென்று ஸ்பாட்டில் வந்தது, அதை அப்படியே படப்பிடிப்பு செய்து விட்டார்கள்.
அனைவரும் நன்றாக இருக்கிறது என்று கூற, நானும் பார்த்தபோது எனக்கு பயமாக இருந்தது, விஜய் அவர்களிடம் இது வேண்டாம் ரசிகர்கள் என்னை திட்ட போகிறார்கள் என்று கூறினேன். அதற்கு அவர் அதெல்லாம் ஒன்றும் இல்லை, நீ சொன்னால் ரசிகர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று விஜய் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.


என் ரசிகர்கள் எப்போதும் பிரச்சனை செய்ய மாட்டார்கள்- ஒரு விஷயத்தில் ரசிகர்கள் குறித்து விஜய்...

Friday, 4 May 2018

சென்னை: சென்னையில் உள்ள எம்.ஐ.டி.யில் ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகர் மற்றும் டெஸ்ட் பைலட்டாக நடிகர் அஜித் குமாரை நியமித்துள்ளனர்.
விமானம் ஓட்டும் உரிமம் வைத்துள்ளார் அஜித் குமார். அவர் ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்குவதில் வல்லவர். அவர் ஆளில்லா விமானங்களை இயக்கும்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்நிலையில் அஜித்துக்கு புதிய பொறுப்பு ஒன்று கிடைத்துள்ளது.
போட்டி
ஆளில்லா விமானம்
மெடிக்கல் எக்ஸ்பிரஸ்- 2018 யுஏவி சேலஞ்ச் போட்டியின் இறுதிச் சுற்று ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லேண்டில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியா உள்ளிட்ட 55 நாடுகள் மட்டுமே இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
எம்.ஐ.டி.
அஜித்
மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்சில் கலந்து கொள்ளும் குழுவுக்கு உதவி செய்ய அஜித் குமாரை எம்.ஐ.டி. நியமித்துள்ளது. அவர் ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகர் மற்றும் டெஸ்ட் பைலட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சம்பளம்
தானம்
அஜித்தின் உதவியுடன் இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று எம்.ஐ.டி.காரர்கள் நம்புகிறார்கள். அவர் ஒவ்வொரு முறையும் எம்.ஐ.டி.க்கு வந்து செல்லும்போது அவருக்கு ரூ. 1,000 வழங்கப்படும். அதை எம்.ஐ.டி.யில் உள்ள ஏழை மாணவர்களின் கல்விக்கு அளித்துவிட்டார் அஜித்.
மெடிக்கல்
ரத்த மாதிரி
யுஏவி சேலஞ்சில் ஆளில்லா விமானத்தை 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நோயாளியின் இடத்திற்கு செல்லவிட்டு அவரிடம் இருந்து ரத்த மாதிரியை சேகரித்துக் கொண்டு திரும்பி வர வேண்டும். மாதிரிகளை ஆய்வகத்திற்கு கொண்டு வருவது தான் சவால் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள்
மகிழ்ச்சி
எம்.ஐ.டி. அஜித் குமாருக்கு அளித்துள்ள கவுரவம் பற்றி அறிந்த தல ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பெருமையாக பேசி வருகிறார்கள்.




ஆளில்லா விமானத்தை உருவாக்க 'எம்.ஐ.டி.'க்கு உதவும் அஜித்...

அஜித் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் நாட்டம் கொண்டவர். பைக் ரேஸ், புகைப்படம் எடுப்பது, சமையல், விமானம் ஓட்டுவது என நிறைய விஷயங்களில் அவருக்கு ஈடுபாடு அதிகம்.
தற்போது என்ன விஷயம் என்றால் நடிகர் அஜித், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை தொழில்நுட்ப கல்லூரியின் ஹெலிகாப்டர் சோதனை விமானி மற்றும் ஆளில்லா விமான பயிற்சி ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகவல் அவரது ரசிகர்களை மிகவும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. அதோடு இந்த சந்தோஷ செய்தியை டுவிட்டரில் ஷேர் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.





அஜித்துக்கு கிடைத்த பெரிய கௌரவம், பிரபல பல்கலைக்கழகம் கொடுத்த மதிப்பு- கொண்டாடும் ரசிகர்கள்...

கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் தான் ஹேராம். இப்படம் வந்த போது யாரும் பெரிதும் பாராட்டவில்லை, ஆனால், வழக்கம் போல் தற்போது தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.
ஹேராம் படத்திற்கு இசை இளையராஜா, இவரின் இசை படத்திற்கு பெரும் பலம், ஆனால், முதலில் இப்படத்திற்கு இசையமைத்தது வேறு ஒரு இசையமைப்பாளராம்.
அவர் அந்த படத்திலிருந்து விலக, கமலுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ராஜாவிடன் போய் நின்றாராம்.
அப்போது இளையராஜா நீ கவலைப்படாதே, என்று கூறி, முன்பு வாய் அசைத்த பாடலுக்கும், காட்சிக்கும் கொஞ்சம் கூட தவறில்லாமல் இசையமைத்து கொடுத்தாராம்.


ஹேராம் படத்தின் பல நாள் ரகசியம் வெளிவந்தது, இதோ..

Thursday, 3 May 2018

மே 1 அன்று பிறந்த நாள் கொண்டாடிய அஜித்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் வரை வாழ்த்து கூறினார். ஆனால் ஒருவரின் பிறந்த நாளுக்கு 3.9  மில்லியன் டிவீட்ஸ் செய்வது என்பது இந்தியாவில் இதுவே முதல் முறை இந்த ரெகார்டை அஜித் ரசிகர்கள் படைத்துள்ளனர். 
இதுவரை எந்த ஒரு ரசிகரும் செய்யாததை செய்து காட்டியுள்ளனர். 
இதனால் ட்விட்டரில் தாங்கள்தான் மாஸ் என்பதை அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.





3.9 மில்லியன் டிவீட்ஸ் இந்தியாவிலேயே முதலிடம் அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்..

அஜித்தின் பிறந்தநாள் நேற்று சமூக வலைத்தளங்களில் உலக அளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடப்பட்டது. அப்போது இயக்குனர் சுசீந்திரனும் தன் வாழ்த்தை அஜித்திற்கு கூறினார்.
அதே நேரத்தில் அஜித் தன் நண்பரின் சிகிச்சைக்கு பணம் கொடுத்ததாக சுசீந்திரன் தெரிவிக்க, இதை ஒருவர் மறுத்து பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.
இதை தொடர்ந்து அவரின் கருத்திற்கு கிழே கமெண்ட் பாக்ஸில் ஒருவர் ‘ரோஜா ரமணனுக்காக அஜித் சாரிடம் உதவி கேட்டு சென்ற குழுவில் நானும் ஒருவன். அஜித் சாரிடம் பிரதானமாக பேசியது நீங்கள் தான் இலக்கியன். ஆனால் அப்போது அவர் நடித்துக்கொண்டிருந்தது வரலாறு படம் அல்ல., வில்லன். அஜித் சாரின் சார்பாக ராஜா என்பவரின் மூலமாக 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ரோஜா ரமணின் பெயருக்கு ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது’ என்று கருத்தை கூறியவருடன் சென்ற கணேஷ் என்பவரே தெரிவித்துள்ளார்.
இதில் அவர் சொன்ன கருத்திற்கு வரலாறு என்று தவறாக சொன்னதை வில்லன் என்று மாற்றிய அந்த நபர் அஜித் பணம் கொடுத்ததை மட்டும் ஏன் ஏற்க மறுக்கின்றார் என்பது எல்லோருக்கும் குழப்பம் தான்.




அஜித் பணம் கொடுத்தது உண்மை தான், ஆதாரத்துடன் நிரூபணம், நேர்மைக்கு கிடைத்த பரிசு,விஜய் ரசிகர்கள் ஷாக்..

Wednesday, 2 May 2018



அஜித் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர். இவரின் படம் வெற்றி, தோல்வி தாண்டி இவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்த நிலையில் அஜித் பிறந்தநாளுக்கு நேற்று பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறினார்கள். அரசியல்வாதிகள் கூட சிலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தன் ரெட் சில்லிஸ் நிறுவத்தின் சார்பாக தன் வாழ்த்துக்களை கூறினார்.
இதில் ‘தமிழகத்தின் மெகா ஸ்டார், பலருக்கும் ரோல்மாடலாக இருக்கும் அஜித்திற்கு வாழ்த்துக்கள்’ என்று டுவிட் செய்துள்ளனர்.


Conversation

A megastar. An inspiration to millions. A powerhouse of talent. Here’s wishing #ThalaAjith a very Happy Birthday! #HBDThalaAJITH

அஜித் பிறந்தநாளுக்கு ஷாருக்கான் கூறிய சூப்பர் வாழ்த்து, என்ன சொன்னார் தெரியுமா?



   பிள்ளைகள் தவறு செய்யும் போது தாய்மார்கள் காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளால் பிள்ளைகளை திட்டுகிறார்கள். சபிக்கிறார்கள். இதனால் தான் பெண்கள் அதிகமாக நரகத்திற்குச் செல்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கோபம் ஏற்படும் போது நிதானத்தைக் கடைபிடித்து குழந்தைகளைத் திருத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹஜ்ஜுப் பெருநாள்’ அல்லது “நோன்புப் பெருநாள்’ தினத்தன்று முஸல்லா எனும் தொழுகைத்திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, “பெண்கள் சமூகமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை எனக்குக் காட்டப்பட்டது” என்று குறிப்பிட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?” எனப் பெண்கள் கேட்டதும். “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்களின் புத்தியை, அறிவிலும் மார்க்க(த் தின் கடமையி)லும் குறையுடையவர்களான நீங்கள் போக்கி விடுவதையே நான் காண்கின்றேன்” என்று கூறினார்கள்.

அறி : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),

நூல் : புகாரி (304)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு வாய்மையாளர் அதிகமாகச் சாபமிடுபவராக இருப்பது தகாது” என்று சொன்னார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் (5062)




#பிள்ளைகளை_சபிக்க_கூடாது:-...

Tuesday, 1 May 2018


நடிகர் அஜித் குமார் என்னதான் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியே இருந்தாலும், அவரது ரசிகர்கள் பலம் எப்போதும் அதிகரித்துகொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் இன்று அஜித்தின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது அஜித்திற்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். எதிர்பார்க்காத ஒருவரிடம் இருந்து வந்த வாழ்த்து அஜித் ரசிகர்களை சர்ப்ரைஸ் ஆக்கியுள்ளது.


தல அஜித்திற்கு இவரே வாழ்த்து கூறிவிட்டாரா - ரசிகர்கள் சர்ப்ரைஸ் மேலும் படிக்க.. #Thala #Ajith



அஜித் தனது 47வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார். ரசிகர்கள் அனைவரும் இதனால் சந்தோஷமாக தன் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பல பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை அஜித்திற்கு தெரிவித்து வர, இதை டுவிட்டர் இந்தியா பக்கமே குறிப்பிட்டு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
அஜித்தின் பிறந்தநாளை இந்தியாவே கோலகலமாக கொண்டாடுவதாக அவர்கள் கூறியுள்ளனர், மேலும், பல திரைப்பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை அஜித்திற்கு கூறி வருகின்றனர்.
Fans and colleagues around the nation are wishing the "Thala" of Tamil cinema a happy birthday. #HBDThalaAjith

ட்விட்டர்ரே பயந்து விட்டது இன்று அஜித் ரசிகர்களின் செயலை கண்டு டுவிட்டர் அதிகாரப்பூர்வ பக்கமே வெளியிட்ட சூப்பர் தகவல் #HBDThalaAjith #thala #thalafans


Now Exclusive video in front of Thala house #Happy_birthday_wishes_thala..

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com