தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் வட்டாரம் வைத்திருப்பவர்கள் ரஜினி-கமல், அஜித்-விஜய். இவர்கள் படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடம் எப்படிபட்ட வரவேற்பு பெறும் என்பதை நாம் பார்த்திருப்போம்.
சமீபத்தில் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துவரும் சதீஷ் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது அவரிடம் பைரவா படத்தில் விஜய்யை கலாய்த்தது குறித்து கேட்டபோது, திடீரென்று ஸ்பாட்டில் வந்தது, அதை அப்படியே படப்பிடிப்பு செய்து விட்டார்கள்.
அனைவரும் நன்றாக இருக்கிறது என்று கூற, நானும் பார்த்தபோது எனக்கு பயமாக இருந்தது, விஜய் அவர்களிடம் இது வேண்டாம் ரசிகர்கள் என்னை திட்ட போகிறார்கள் என்று கூறினேன். அதற்கு அவர் அதெல்லாம் ஒன்றும் இல்லை, நீ சொன்னால் ரசிகர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று விஜய் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment