கடந்த ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்காக மத்திய அரசு நீட் தேர்வை அமலுக்கு கொண்டுவந்தது. இந்த நீட் தேர்வு பற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும் மத்திய அரசு கவலை படவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மையங்களை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் அமைத்தது . அதன் படி நேற்று திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை கேரளாவில் உள்ள எர்ணாகுளத்திற்கு நீட் தேர்வு எழுத அழைத்து சென்றார்.
அப்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கிருஷ்ணசாமி கேரளாவில் மரணம் அடைந்தார். கிருஷ்ணசாமியின் மறைவிற்கு மன அழுத்தமே காரணம் என கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த நீட் தேர்வால் சிலர் மரணத்தை சந்திக்கின்றனர்.
இது பற்றி கமல் தனது ட்விட்டர் தளத்தில் கூறுகையில் ஒக்கி புயல் முதல் நீட் தேர்வு என்று தமிழர்கள் அல்லல் படும்பொழுதெல்லாம் உதவிக்கரம் நீட்டிய அண்டை மாநில முதல்வர் திரு.பிணராயி விஜயனிடம் பேசி தமிழர்களின் நன்றியைத் தெரிவித்தேன்.மாணவரின் தந்தை உடல் திருத்துறைப்பூண்டி வந்தடையும் வரை எனது கட்சி உதவிகள் செய்யும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் .
Post a Comment