அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். சினிமா ஸ்டிரைக்கிற்கு பிறகு படபிடிப்புகள் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடக்கிறது.
இந்நிலையில் ஆரம்பம், பில்லா படங்களை இயக்கிய விஷ்ணு வர்த்தன் அஜித்திடம் சொல்லியிருந்தாராம். அஜித் பிசியாக இருப்பதால் இப்படம் கரண் ஜோகருக்கு சொல்லப்பட்டதாம்.
படத்தை அவர் உறுதி செய்துவிட்டாராம். இதில் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி.
இந்நிலையில் தற்போது இப்படத்தை தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்களாம். மேலும் இது கார்கில் போர் சமயத்தில் வீரமரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாம்.
Post a Comment