HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday, 20 November 2021


 தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் நாளை உலக நாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். நாளை மறுநாள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்பதை அவர் அறிவிப்பார்.

இந்த வார நாமினேஷனில் இறந்தவர்களில் இசைவாணி மிக மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று கடைசி இடத்தில் இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தோம். இந்த நிலையில் தற்போதைய ஓட்டுகளின் நிலவரப்படி யார் எந்தெந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

தற்போது வரை கடைசி இடத்தில் இசைவாணி தான் இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக நிரூப் மற்றும் தாமரை செல்வி ஆகியோர் இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்மூலம் கடைசி இடம்பிடித்த இசைவாணி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது இவர் தான்?? வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ:-

Friday, 19 November 2021

 


சன் பிக்சர்ஸ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. விசுவாசம் திரைப்படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சிறுத்தை சிவாவின் முந்தைய படங்களின் சாயல் இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். பல கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் இந்த படத்தை பற்றி சில விஷயங்களை தொலைபேசியின் மூலம் நம்மிடையே பகிர்ந்துள்ளார். அதாவது இந்தப் படத்தின் முதல் சிங்கிள் வெளியான போது தன் மூன்றாவது பேரன் வேத், படத்தை எப்பொழுது பார்க்கலாம் என்று என்னிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தான்.

அவன் தொல்லை தாங்காமல் நான் இயக்குனரிடம் சீக்கிரம் படத்தை அவனுக்கு காட்டுங்கள் என்று கூறினேன். பின்னர் படம் ரெடியான உடனே சன் பிக்சர்ஸ் சார்பில் எங்களுக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது.

அதைப்பார்த்த என் பேரன் மிகவும் சந்தோஷத்துடன் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டான். இந்தப் படம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுமட்டுமில்லாமல் சிறுத்தை சிவா என்னிடம் படத்தின் கதையை கூறிய பொழுது கிளைமாக்ஸ் காட்சியில் என்னையறியாமல் நான் அழுதுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் சிறுத்தை சிவா இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அதிலும் பெண்கள் அனைவரும் உங்கள் படத்தை நிச்சயம்  விரும்புவார்கள் என்று என்னிடம் கூறினார். அவர் சொன்னது போலவே இப்பொழுது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சொல்லி அடிச்சாரு சிவா என்று அண்ணாத்த படத்தை பற்றி சூப்பர் ஸ்டார் பெருமையாக கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் அவர் நடித்த எந்த படத்தைப் பற்றியும் இந்த அளவு கூறியது இல்லை. ஆனால் அண்ணாத்த திரைப்படத்திற்காக அவர் இவ்வாறு வாய்ஸ் ஓவர் பிரமோஷன் செய்துள்ளார். இதுவும் படத்தின் வசூலை அதிகரிக்க செய்யும் ஒரு செயலே என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

விரைவில் 250 கோடி வசூல்!தமிழ்நாட்டில் மட்டும் அண்ணாத்த 150 கோடி வசூல் விரைவில் வர வாய்ப்பு உள்ளதாம்

எந்த படத்திலும் செய்யாத வேலை பார்த்த அண்ணாத்த ரஜினி.. அதான் இம்புட்டு கலெக்சன் போல:-

Wednesday, 17 November 2021

 


Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE



தஜ்ஜாலின் ஆட்சி போரின் மூலமா? அல்லது பொருளாதாரத்தின் மூலமா:-

Tuesday, 16 November 2021

 


தமிழ் திரையுலகின் ஜாம்பவான் ஆக திகழ்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்பில் இவரை மிஞ்ச ஆளே கிடையாது. இவர் தான் நடிக்கும் படங்களில் எத்தனை நடிகர்கள் நடித்தாலும் தன்னுடைய நடிப்பை தனியாக தெரிய வைத்து அசத்துபவர்.

திரையுலகில் தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து சாதித்தவர் கமல்ஹாசன். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் கொடுத்த வெற்றி படங்கள் ஏராளம். தற்போது கூட அவருடைய படங்கள் வெளியீட்டிற்காக வரிசை கட்டி நிற்கின்றன.

இது தவிர வெற்றிமாறன், பா ரஞ்சித், மகேஷ் நாராயணன், மீண்டும் லோகேஷ் கனகராஜ், ஷங்கரின் இந்தியன்-2 போன்ற இயக்குனர்களும் உலக நாயகனை இயக்குவதற்காக காத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை கடந்த நான்கு வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.

மக்களின் குறைகளை கேட்பது, பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வை இடுவது என்று கமல்ஹாசன் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் கூட சென்னை வெள்ள நீரால் மக்கள் பாதிக்கப்பட்ட போது உலகநாயகன் ஆட்டோவில் சென்று பொதுமக்களை பார்த்து குறைகளை கேட்டறிந்தார். 

2021-சட்ட மன்ற தேர்தலில் அவரது கட்சி தோல்வி அடிந்தபோதும். சினிமாவில் எட்டிய உயரத்தை அரசியலில் எட்ட தனது கட்சியை வலுப்படுத்திக்கொண்டிக்கிறார் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாக வேண்டும் என்றால் இது போன்ற தோல்விகள் சகஜமே.


அரசியலில் தான் ஹீரோ சினிமாவில் விஸ்வரூபம் எடுக்கும் கமல்.. அடுத்தடுத்து மிரட்டும் 5 கூட்டணி:-

Wednesday, 10 November 2021



Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE



FACEBOOK- ன், புதிய பெயர் META, மெட்டா என்றால் யூத(Hebrew) மொழியில் மரணம் என்று அர்த்தம்:-

 



ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் ரிலீஸ் ஆன 4 நாட்களில் செம கலெக்ஷனை பெற்றது.

5வது நாளில் தமிழகத்தில் மழை நீடிக்க அப்படியே வசூல் குறைந்தது. மழையெல்லாம் நின்ற பிறகு அதாவது அடுத்த வாரத்தில் படத்தின் வசூல் அதிகமாகலாம் என கருதப்படுகிறது.

படம் 2 நாட்களிலேயே ரூ. 100 கோடியை வசூலித்தது, ரசிகர்கள் நிறைய ஸ்பெஷல் டாக் கிரியேட் செய்து கொண்டாடினார்கள்.

தற்போது படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 150 கோடி நெருங்கிவிட்டதாம், தமிழ்நாட்டில் ரூ. 82 கோடி வரை வசூல் என கூறப்படுகிறது.

ரஜினியின் அண்ணாத்த படம் உலகம் முழுவதும் இத்தனை கோடியை நெருங்கிவிட்டதா?- செம வசூல்:-

Monday, 8 November 2021


Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE





கிளாசுக்கோ மாநாடும், இறுதி நாளின் அடையலாம் பற்றி முன்னறிவிப்பும்:-

Friday, 5 November 2021

 


உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விக்ரம்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமலின் பிறந்தநாள் என்பதால் அன்று இப்படத்தின் அப்டேட் வெளியாகும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்றே விக்ரம் படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதனிடையே அந்த அறிவிப்புடன் கமல் வரும் ஏப்ரல் மாதம் விக்ரம் வெளியாகும் என்பதையும் பதிவிட்டுள்ளார்.  

விக்ரம் படத்தின் ரிலீஸை அறிவித்தார் கமல் ஹாசன், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.எப்போது தெரியுமா?

Thursday, 4 November 2021

 



சிவாவின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எப்படி இருக்குனு பார்க்கலாம் வாங்க.

பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ரஜினிகாந்த் அநியாயங்களை தட்டிக் கேட்டு சண்டையிட்டு வருகிறார். வெளியூரில் படிக்கும் தம்முடைய தங்கை கீர்த்தி சுரேஷ் தனது உயிரையே வைத்துள்ளார். கீர்த்தி சுரேஷுக்கு கல்யாணம் பண்ணி பார்க்க வேண்டும் என்ற ஆசை மாப்பிள்ளையைத் தேடி கல்யாணமும் முடிவு செய்திருக்கிறார். கடைசியில் ஒரு பிரச்சினை வர அதனை ரஜினி எப்படி சமாளிக்கிறார் என்பது தான் இந்தப் படத்தின் கதை.

பல வருடங்களுக்கு பிறகு யங்கான கெட்டப்பில் பழைய துள்ளலுடன் ரஜினிகாந்த் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

நயன்தாரா வழக்கம்போல் அவரது கதாபாத்திரத்தை அழகாக ஸ்கோர் செய்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் நடித்துள்ள பிரகாஷ்ராஜ் குஷ்பூ மீனா சூரி மற்றும் பலர் அவர்களது வேலையை கச்சிதமாக செய்து கொடுத்துள்ளனர்.

இசை : டி இமான் இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம்.

ஒளிப்பதிவு : வெற்றியின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கி உள்ளது.

எடிட்டிங் : ரூபனின் எடிட்டிங் கனகச்சிதம்.

இயக்கம் : சிறுத்தை சிவா சென்டிமென்ட்டுகளை கொண்ட அழகிய கதையை கொண்டு அண்ணாத்த படத்தினை பக்கா கிராமத்து கதையாக கொண்டு சென்றுள்ளார். டயலாக்குகள் பவர்புல்.

தம்ப்ஸ் அப் :

1. ரஜினிகாந்தின் நடிப்பு

2. காமெடி

3. ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ் கம்பினேஷன்

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்

2. ரன்னிங் டைம் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில்:- இது ஒரு  அண்ணன்-தங்கை செண்டிமெண்ட் படம். இந்தப் படம் முழுக்க முழுக்க ரஜினிகாந்தைச் சார்ந்து இருக்க விரும்பவில்லை என்பது ஒரு தனித்தன்மை. சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆக வேண்டும், அதற்கு ரஜினி ஒரு ஊடகமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்புகிறார். இது வெற்றி பெறுமா இல்லையா என்பது இன்னொரு நாள் கேள்வி. ஆனால் ஒரு திருவிழா திரைப்படத்திற்கு, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாட இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Ratings:- 3/5

Movie Review : சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் எப்படி இருக்கு ? #annathey #annathe #rajinikanth #moviereview #annathereview

Thursday, 28 October 2021

 


கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் விபத்து காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், பின்பு மோதகமாக அப்படத்தை ஓரம்கட்டினர்.

மேலும் இப்படம் பாதியிலே நின்று போனதால் கமல் மற்றும் ஷங்கர் தங்களின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகினர்.

இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த விவாகரத்திற்கு நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது.

அதன்படி இந்தியன் 2 பட பிரச்சனைக்கு தீர்வு காணும் சமரசத்தில் பங்கேற்க இருப்பதாக லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் மற்றும் இயக்குனர் ஷங்கர் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

மேலும் இவர்களின் முடிவை ஏற்ற சென்னை உயர்நிதிமன்றம் தற்போது இவர்களின் வழக்கை முடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இந்தியன் 2 திரைப்பட விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர தீர்மானம்! வெளியான புதிய தகவல்:-

Saturday, 23 October 2021

 


இந்த வருடம் வெளிவந்த தமிழ் படங்களில் தியேட்டர்களில் அதிக நாட்கள் ஓடிய படமாகவும் நல்ல வசூல் செய்த படங்கள் ஆகவும் இருப்பது இளையதளபதி விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ஆகியவை தான். இந்த இரண்டு படமும் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன அதுமட்டுமில்லாமல் தியேட்டருக்கு மக்களை இழுத்து வந்த படங்களாகவும் கருதப்படுகின்றன.

அந்தவகையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அண்ணாத்த படத்தை தியேட்டர்காரர்கள் வெகுவாக எதிர்பார்த்துள்ளனர். அண்ணாத்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ஏற்கனவே கவர்ந்துவிட்டது.

இந்நிலையில் அடுத்ததாக அண்ணாத்த படத்தின் டிரைலரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான அறிவிப்பு வந்து விடும் என்கிறது சினிமா வட்டாரம். இது ஒருபுறமிருக்க தீபாவளி ரிலீஸ் என்பதால் படத்தின் வியாபாரத்தையும் ஆங்காங்கே தொடங்கிவிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

அந்த வகையில் அண்ணாத்த திரைப்படம் பெரும் தொகை கைமாறி உள்ளதாக கூறுகின்றனர். எப்போதுமே ரஜினியின் படங்களுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இந்த முறை அமெரிக்காவில் வெளியாகும் ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு டிக்கெட் விலையாக சுமார் 20 டாலர் உயர்த்தியுள்ளார்கலாம். அதாவது நம்ம ஊர் மதிப்பில் சுமார் 1,400 ரூபாய்.

தமிழ்நாட்டிலும் முதல் நாள் முதல் காட்சி அனுமதி கிடைத்தால் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிக்கெட் விற்க வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ரஜினியின் முந்தைய படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை சுமார் ஆயிரம் ரூபாய்க்கு மேல் தான் இருந்தது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் தியேட்டர்காரர்கள் இந்த நடை முறையை கடைபிடிப்பதை அரசாங்கம் எப்போது தட்டிக்கேட்கும் என்பதுதான் தெரியவில்லை.

அண்ணாத்த படத்தை வைத்து கொள்ளையடிக்க தியேட்டர்காரர்கள் திட்டம்.. FDFS டிக்கெட் விலை தெரியுமா?

Tuesday, 19 October 2021

 


நடிகர் கமல்ஹாசன் 10 தோற்றத்தில் நடித்த திரைப்படம் தசாவதாரம். இதில் அவர் வெளிநாட்டவர், சைனீஸ், வயதான பாட்டி போன்ற மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து நம்மை பிரமிக்க வைத்தார்.

இந்த கதாபாத்திரங்களின் மேக்கப், முக அமைப்பு மற்றும் குரல் என அனைத்தையும் மாற்றி நடித்திருப்பார். இது அனைவராலும் ரசிக்கப்பட்டு பாராட்டைப் பெற்றது. மேலும் இத்திரைப்படத்திற்காக அவர் சிறந்த நடிகர், வில்லன், கதாசிரியர் போன்ற பல விருதுகளை பெற்றார்.

இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே நடிகர் கமல் ஒரு திரைப்படத்தில் எட்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1981 இல் வெளிவந்த எல்லாம் இன்பமயம் என்ற படம்தான் அது. இந்த படத்தில் கமல் வேலை தேடி சென்னைக்கு வருவார். அங்கு முதலாளியாக இருக்கும் ஜெய்சங்கர் இடம் வேலைக்கு சேருவார்.

முதலாளிக்கு விசுவாசமாக இருக்கும் கமலை ஜெய்சங்கர் ஏமாற்றி சிறையில் தள்ளுவார். முதலாளியை நம்பி ஏமாந்த கமல் அவரை பழிவாங்க முடிவெடுப்பார். இதற்காக அவர் பல மாறுபட்ட தோற்றத்தில் நடித்து ஏமாற்றுவார்.

இதில் கமல் வயதான தோற்றம், டான்சர், ரவுடி போன்ற 8 கேரக்டர்களில் வருவார். இப்படத்தில் கமலுடன் இணைந்து ஒய் ஜி மகேந்திரன், மாதவி, சுமன் போன்றோர் நடித்துள்ளனர். இயக்குனர் ஜி என் ரங்கராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் கமல் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் போன்ற திரைப்படங்களிலும் இரண்டிற்கும் மேற்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

தசாவதாரம் படத்திற்கு முன்பே 8 கெட்டப்பில் நடித்துள்ள கமல்.. படம் பெயரே சும்மா தூக்கலா இருக்கே.:-

Friday, 15 October 2021

 



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. வலிமை படத்தின் ஸ்டாண்ட் கொரியோகிராஃபர் திலீப் சுப்பராயன் படத்தில் இருக்கும் சண்டைக் காட்சிகள் ரசிகர்களுக்கு பிடிக்கும் என தெரிவித்தார்.

மேலும் படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு சண்டைக்காட்சிகளிலும் அஜீத் தனது முழு உழைப்பை போட்டு இருப்பதாகவும் இது திரையரங்கில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் எனக் கூறினார். அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் வினோத்திடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது. கேள்விகளுக்கு பதிலளித்த வினோத் அஜித்திடம் தான் கேட்ட கேள்வியை பற்றியும் வெளிப்படையாக கூறினார். அதாவது சார் நீங்க எனக்கு நேர்கொண்டபார்வை என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தீங்க, அது கமர்சியல் படம் என்பதால் எனக்கு இன்னொரு படம் இயக்குவதற்கான வாய்ப்பு கொடுத்தீங்க, என்னுடைய வாழ்க்கையில் மாற்றம் வந்திருச்சு.

இதே மாதிரி நிறைய இயக்குனருக்கு நீங்க வாய்ப்பு கொடுத்தால் அவர்களது வாழ்க்கையும் மாறும் எனக் கூறினேன் என்பதை கூறினார். அதற்கு அஜித் சார் எனக்கு கம்பர்ட்டா வேலை செய்து ரொம்ப முக்கியம் யாருடைய கம்பர்ட்டா  இருக்கிறேன்  ஃபீல் பண்றேன்னோ அவங்ககூட தொடர்ந்து வேலை செய்கிறேன் என கூறினார். அதனால்தான் தொடர்ந்து வினோத் உடைய படங்களில் அஜித் நடித்து வருவதாக கூறினார்.

அஜித் வினோத்திற்கு வாய்ப்பு தர இதுதான் காரணம்.. சினிமால இது ரொம்ப முக்கியம்:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com