HEADER

... (several lines of customized programming code appear here)

Friday, 8 October 2021


குளோபல் வார்மிங் மற்றும் மின்சாரம் இவைகளைவைத்து தஜ்ஜால் செய்யும் மோசடியும்; அதன்மூலம் அஜெண்டா 21 நிறைவேற்ற முயற்சியும்?:-https://e-funandjoyindia.blogspot.com/2021/10/21.html

கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து தனது வேலையை செய்ய ஆரம்பித்தார்.

 விக்ரம் படத்தில் கமல்ஹாசன் காட்சிகள் ஏறக்குறைய எடுத்து முடித்து விட்டனர். இதனால் தற்போது கமல்ஹாசன் அடுத்த படத்தின் மீதான கவனத்தை செலுத்தியுள்ளார். மேலும் பல இயக்குனர்களும் கமல்ஹாசனிடம் கதையை கூறியுள்ளனர். ஆனால் கமல்ஹாசன் கதையில் பெரிய அளவில் சுவாரசியம் இல்லை என்பதால் பல இயக்குனரிடமும் கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.

இந்த சமயத்தில் வெற்றிமாறன் தான் படித்த ஏழை குழந்தையின் படிப்பை பற்றிய புத்தகத்தை அப்படியே கொண்டுபோய் கமல்ஹாசனிடம் ஒப்படைத்துவிட்டார்.  இந்தக் கதையைத்தான் உங்களை வைத்து படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். நீங்க என்ன சொல்கிறீர்கள் என கேட்டுள்ளார். கமல்ஹாசன் படத்தின் நாவலை படித்து மனப்பாடம் பண்ணி இந்த  படத்தில் நடிக்கிறேன் என கூறியுள்ளார்.

இதனால் தற்போது வெற்றிமாறன் மகிழ்ச்சியில் உள்ளார். வெற்றிமாறன் எப்போதுமே ஒரு நாவலை மையமாகக் கொண்டுதான் படத்தை இயக்குவார். அப்படியே இவர் இயக்கிய படங்கள்தான் அசுரன், விசாரணை. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

கமல்ஹாசன் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் படம் உருவாவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கூடிய விரைவில் விக்ரம் மற்றும் பிக் பாஸ் ஷூட்டிங் முடிந்த பிறகு இந்த படப்பிடிப்பை நடத்துவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

இந்த நாவலை படிக்க சொன்ன வெற்றிமாறன்.. மனப்பாடம் பண்ணி தேதியை கொடுத்த கமல்:-

Tuesday, 5 October 2021

 மன்னு, சல்வா :-


وَظَلَّلْنَا عَلَيْکُمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰى‌ كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ‌ وَمَا ظَلَمُوْنَا وَلٰـكِنْ كَانُوْآ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏

மேலும் நாம் உங்கள் மீது மேகத்தை நிழலிடும்படிச் செய்தோம். உங்களுக்கு மன்னுஸல்வா (எனும் உணவுகளை) இறக்கி வைத்தோம். நாம் உங்களுக்கு உணவாக அருளியுள்ள நல்ல பொருள்களைப் புசியுங்கள்(என்றும் உங்களிடம் கூறினோம்). எனினும் (உங்கள் மூதாதையர் வரம்பு மீறினார்கள்; அதன் மூலம்) அவர்கள் எமக்கு அநீதி இழைக்கவில்லை; மாறாக அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டனர்.


(அல்குர்ஆன் : 2:57)


மன் என்றால் என்ன ?


மன் என்றால் அருள், தயாளம், பெருந்தன்மை எனப்பொருள். ஆனால் மன்னூ என்னும் சொல் இங்கே குறிப்பிடுவது இஸ்ரவேலர்களுக்கு இறைவன் புறத்தில் இருந்து வழங்கப்பட்ட ஒரு சிறப்பு உணவை குறிக்கிறது. சினாய் பள்ளதாக்கில் தன் வற்றாக்கருணையினால் இறைவன் அவர்களுக்கு இந்த உணவை வழங்கினான். இந்த உணவை பெறுவதற்காக அவர்கள் நிலத்தை பயன்படுத்தவில்லை எதுவும் செய்யாமல் அவர்களுக்கு இந்த உணவு விலை இல்லாமல் உழைப்பில்லாமல் கிடைத்தது.


சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக் கொண்டது. விடியற்காலத்தில் பாளையத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது. பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ வனாந்திரத்தின் மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின்மேல் கிடந்தது. இஸ்ரவேல் புத்திரர் அதைக்கண்டு அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி : இது கர்த்தர் உங்களுக்கு புசிக்கக் கொடுத்த அப்பம்... அதை விடியற்காலந்தோறும் அவரவர் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போம். (யாத்திராகமம் அத் : 16 வச : 13-15,21)


பனிப்படலம் போன்ற உணவு அது என்பதை இதன் மூலம் விளங்குகிறோம். பாலிப்பயிர்களில் மணிகளைப்போல அப்பனிபடலம் நிலத்தின்மீது படர்ந்து காணப்படும். காலை கதிரவனின் ஒளி தீவிரம் அடைவதற்கு முன்னால் அதனை சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும். கதிரவனின் ஒளிபடத் தொடங்கிவிட்டால் மணிமணிகளாக காட்சி அளிக்கும் அந்த உணவு உருகிப்போய்விடும். இந்த உணவை உழைப்பில்லாமல் கஷ்டப்படாமல் விலை செலுத்தாமல் இறைவனின் புறத்தில் இருந்து அருளாக அருட்கொடையாக உழைப்பதற்கோ உணவை ஈட்டுவதற்கோ வழியோ வாய்ப்போ இல்லாத சினாய் பள்ளதாக்கில் அவர்களுக்குக் கிடைத்தால் இந்த உணவு மன்னு என்னும் பெயரைப்பெற்றது. ( அரபு மொழியும் இப்ரானி மொழியும் ஒரே மொழிப் குடும்பத்தைச் சார்ந்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்)


மன்னு என்ற பெயர்வர இது தான் காரணமாக இருக்கும் என்றே படுகின்றது. ஆனால் மேற்கண்ட தவ்ராத்தின் மேற்கோள் மூலமாக ஒரு விஷயம் விளங்குகின்றது வியப்பளிக்கும் இந்த விநோத உணவைக் கண்ட இஸ்ரவேலர்கள் தங்களுக்குள்ளாக கேள்விகளை எழுப்பி கொண்டார்களாம். மன் ஹூவ என்ன இது ? இந்த கேள்விதான் மருவி மன்னு என்றாகி விட்டதாம் ஆனால் இந்த பெயர்காரணம் கொஞ்சமும் பொருத்தமானதாக நமக்கு படவில்லை. மொழியும் அதற்கு ஒத்துழைக்க மறுக்கின்றது. அறிவும் அதனை ஏற்காமல் நிராகறிக்கின்றது. அப்பம் என இந்த உணவை மூஸா அவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே இது ரொட்டியைப்போன்று இது இருந்திருக்கும் என எண்ணலாகாது. அப்பமும் ரொட்டியும் உணவு என்னும் பொருளிலேயே கையாளப்படுகின்றது. உணவு, சாப்பாடு என்பதைக் குறிக்க பல மொழிகளிலும் ரொட்டி எனும் சொல்லை பயன்படுத்துகிறார்கள். உருது போன்ற பல இந்திய மொழிகளிலும் இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது.


சல்வா என்றால் என்ன ?


சல்வா என்பதன் பொருள்


மன்னு என்பதை போன்றே சல்வா என்னும் சொல்லும் வேதக்காரர்கள் வழியாகத் தான் அரபிமொழிக்கு வந்துசேர்ந்தது. அரபுக்கள் இச்சொல்லை தங்கள் கவிதைகளிலும் பயன்படுத்தி உள்ளனர். சினாய் பள்ளதாக்கில் இஸ்ரவேலர்களுக்கு இறைவன் ஏற்பாடு செய்துகொடுத்த ஒரு பறவை இனம் அது. அப்பறவையை வெகு எளிதாக வேட்டையாடி பிடித்துக் கொள்ளலாம். யாத்திராகமம் அதிகாரத்தில் இச்செய்தி விளக்கமாக எடுத்து உரைக்கப்படுகிறது. இஸ்னவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் ஏலிமைவிட்டு பிரயாணம் பண்ணி, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சினாய்க்கும் நடுவே இருக்கிற சீன்வனாந்தரத்தில் சேர்ந்தார்கள். அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நாங்கள் இறைச்சி பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்த கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்து வந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள்............ கர்த்தர் மோசேயை நோக்கி : இஸ்ரவேல் புத்திரர்களின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களோடே பேசி, நீங்கள் சாயங்காலத்தில் இறைச்சிகளை புசித்து, விடியற்காலத்தில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்து கொள்வீர்கள் என்று சொல் என்றார். சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளையத்தை மூடிக்கொண்டது. விடியற்காலத்தில் பாளையத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது. ( யாத்திராகமம் 16:1-13)


"உண்ணுங்கள் நாம் உங்களுக்கு வழங்கியுள்ள தூய பொருட்களிலிருந்து" இதுபோன்ற இடங்களில்  குல்னா என்னும் சொல் மறைத்துள்ளதாக குர்ஆன் விரிவுரையாளர்கள் கணிக்கிறார்கள்  அதாவது "இந்த பொருட்களை நாம் அவர்களுக்கு வழங்கினோம். உண்ணுங்கள், நாம் உங்களுக்கு வழங்கிய தூய பொருட்களிலிருந்து என அவர்களிடம் சொன்னோம்." இதுபோன்ற இடங்களில் 'சொன்னோம்' , 'சொன்னான்' என்னும் சொல்லை வெளிப்படையாக சொல்லாமல் மறைத்து விடுவதில் ஒரு மொழி நுட்பம் அடங்கி இருப்பதாக நாம் கருதுகிறோம். அதில் என்னவெனில் அல்லாஹ்வின் ஒவ்வோர் அருட்கொடையும் தனது வடிவம் மற்றும் தோற்றத்தின் மூலமாக பேசுகின்றது. அதாவது காட்சி மொழியால் பேசுகின்றது. இறைவனின் இந்த அருட்கொடையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதை கொடுத்த உங்கள் படைப்பாளனுக்கு நன்றி செலுத்துங்கள் என்று சொல்கின்றது. இந்த நுட்பம் வான்மறை குர்ஆனில் பல்வேறு இடங்களில் விரிவாகவும் கூறப்பட்டுள்ளது. இதே இங்கே நாம் கண்டுள்ளதைப் போல் சில இடங்களில் மறைமுகமாகவும் கூறப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தில் தென்படுகின்ற ஒவ்வோர் அத்தாட்சிகளிலும் மறைந்துள்ள குறிப்புகளைத் தேடி படித்துக் கொள்ளும்  அறிவை பெற்றவர்கள் மிக எளிதாக இந்த அறிவிப்பை வாசித்துவிடுகிறார்கள். 


இவ்வசனத்திற்கு முன்-பின் உள்ள வசனங்களை உற்றுநோக்கினால் இறைவன் தமக்கு வழங்கிய மகத்தான அருட்கொடைகளை இஸ்ரவேலர்கள் உணரவுமில்லை அதன் விளைவாக கடமையாகின்ற உரிமைகளை செலுத்தவுமில்லை என்பதை உணரலாம். அருட்கொடைகளை பெற்றுக்கொண்டு நன்றி செலுத்துவதற்கு பதிலாக மாறு செய்தார்கள். இவ்விஷயம் சொற்களால் இங்கு சொல்லப்படவில்லை. குறிப்பால் உணர்த்தப்படுகின்றது. "அவர்களால் நம்மை ஒன்றும் செய்யமுடியவில்லை. மாறாக தங்களுக்குத்தானே அநீதம் இழைப்பவர்களாகத்தான் அவர்கள் இருந்தார்கள்" என்னும் சொற்றொடர் மூலமாக இக்கருத்து புரியவைக்கப்ப்படுகின்றது. 


இறைவன் அருட்கொடை ஏதாவது ஒன்றை பெற்றுக்கொண்டு அதற்கு மதிப்பளிக்காமல் முறையாக பயன்படுத்தாமல், இறைவனுக்கு நன்றி செலுத்தாமல் மனம்போன போக்கில் நடந்து கொள்பவன் இறைவனுக்கு எந்த தீங்கையும் இழைத்துவிடப் போவதில்லை அவனால் இறைவனை ஒன்றுமே செய்ய முடியாது. மாறாக, தனக்கு தானே தீங்கிழைத்து, தன்னைதானே அழித்து நாசம் செய்து கொள்கிறான். மேலே கண்ட பல விஷயங்கள் யூதர்களை நேருக்கு நேராக விளித்து முன்னிலையில் வைத்து சொல்லப்படுகின்றன. ஆனால், இக்கடைசி விஷயம் அவர்களிடம் இருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு படர்க்கை சொல்லில் கூறப்படுகின்றது. வெறுப்பு! முகம்பார்த்து சொல்லாமல், முகத்தை திருப்பிக் கொண்டு, வேறு எங்கோ பார்த்து சொல்கின்ற அளவிற்கு அவர்களுடைய நடத்தையால் ஏற்பட்ட வெறுப்பு !


நூல் : ததப்புருல் குர்ஆன்


விரிவுரையாளர் : மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி (ரஹ்)


மொழிபெயர்ப்பாளர் : Abdurrahman Umari 



யூதர்களுக்கு அல்லாஹ் வழங்கிய; மன்னு, சல்வா என்றால் என்ன ? அதன் விளக்கவுரை:-

Sunday, 3 October 2021

 


Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE





குளோபல் வார்மிங் மற்றும் மின்சாரம் இவைகளைவைத்து தஜ்ஜால் செய்யும் மோசடியும்; அதன்மூலம் அஜெண்டா 21 நிறைவேற்ற முயற்சியும்?:-

Saturday, 2 October 2021

 


குளோபல் வார்மிங் மற்றும் மின்சாரம் இவைகளைவைத்து தஜ்ஜால் செய்யும் மோசடியும்; அதன்மூலம் அஜெண்டா 21 நிறைவேற்ற முயற்சியும்?:-https://e-funandjoyindia.blogspot.com/2021/10/21.html



அஜித் நடித்த வலிமை படத்தினை பற்றிய தகவல்தான் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தினந்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு தகவல் வெளியானாலும் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலிமை படத்தின் அப்டேட் பற்றியே கேட்டு வருகின்றனர்.

சமீபத்தில் வலிமை படத்திலிருந்து வெளியான கிலிம்ஸ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் படம் வேற லெவல் இருக்கும் எனக் கூறிவந்தனர். அதுவும் அஜித் ஓட்டும் பைக் காட்சி திரையரங்கில் தெறிக்க விடுவோம் என சபதம்மிட்டு வந்தனர். இதனால் போனிகபூர் மகிழ்ச்சியில் இருந்தார்.

தற்போது வினோத் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இவருடைய முதல் படமான சதுரங்கவேட்டை திரைப்படம் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு வெளியானது. அதேபோல் வட மாநிலத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்டு தீரன் படம் வெளியானது. இந்த 2 படங்களுமே கதையிலும் சரி, கதாபாத்திரத்தின் சரி தனது திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

அதேபோல்தான் வலிமை படமும் இந்தியா மற்றும் மற்ற நாடுகளுக்கு இடையே பை ரேஸில் நடக்கும் ஊழல்களை பற்றிய கதைதான் என கூறிவருகின்றனர். மேலும் வலிமை படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியையும் உண்மை சம்பவத்துடன் ஒப்பிட்டு வினோத் இயக்க உள்ளதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த உண்மை சம்பவங்கள் அனைத்தும் மிகபெரிய சர்ச்சையை வெளிநாடுகளில் உருவாக்கியதாம்.

சும்மா விடுவாரா நம்ம வினோத். வெளிநாடுக்குதான் அது பழசு நமக்கு அது புதுசா இருக்குமாம். மேலும் வினோத் எப்போதும் தனது படத்தில் ஒவ்வொரு காட்சியையும் ஆரவாரத்தோடு கொண்டு செல்வார். அதுவும் இப்படம் பைக் காட்சிகளை மையமாக கொண்டு உருவாகியுள்ளதால் திரைக்கதை சுவாரசியமாக இருக்கும் என கூறி வருகின்றனர். முழு படத்தையும் பார்த்த அஜித் அசந்து போய்விட்டாராம். அதனால்தான் அடுத்த படத்திற்கு யோசிக்காமல் கால்ஷீட் கொடுத்துள்ளார்.


உண்மை கதையை வைத்து கெத்து காமிச்ச வினோத்.. வலிமை படத்தை பார்த்து அசந்துபோன அஜித்; அடுத்த படத்திற்கு யோசிக்காமல் கால்ஷீட் கொடுத்த தல:-

Tuesday, 28 September 2021

 



கமல் ஹாசன், விஜய் சேதுபதி பகத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், விக்ரம் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

அதேபோல் தான் விக்ரம் படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். 

விக்ரம் படத்தில் இப்படியொரு ட்விஸ்ட்டா..? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவிற்கும் லோகேஷ் கனகராஜ்:-

Saturday, 25 September 2021

 



சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த.

இப்படத்தின் படபிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இதில் இப்படம் வரும் 2021 தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ரஜினியின் அண்ணாத்த தீபாவளி பண்டிகை அன்று வெளியாக வாய்ப்பில்லை என்று பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

மேலும், அண்ணாத்த திரைப்படம் அடுத்த வருடம் 2022 பொங்கலுக்கு தான் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வலிமை தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிபோது.

இதையடுத்து அண்ணாத்த படமும் தள்ளிப்போனால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் தான்.

தீடீர் திருப்பதில் அண்ணாத்த படம்.. ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்:-

Friday, 24 September 2021

 



தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம், அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சமீபத்தில் வலிமை திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று காலையில் இருந்தே வலிமை திரைப்படத்தின் Glimpse-காக எதிர்பார்த்து காத்திராத ரசிகர்களுக்கு மாலை 6.30 மணியளவில் Glimpse வெளியிடப்பட்டது.

வெறித்தனமான காட்சிகளுடன் வெளியான அந்த Glimpse இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

#Valimai beats #BheemlaNayak in just 15 hours. #ValimaiGlimpse - 750k* #BheemlaNayak - 728K #RadheShyam - 394K

மேலும் தற்போது வலிமை Glimpse யூடியூப்பில்  7 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது, மேலும் 8 லட்சம் லைக்ஸ்களை பெற்று ட்ரெண்டிங் NO.1-ல் இருந்து வருகிறது

வெளியான 24 மணி நேரத்திற்கு முன்பே, இருக்கும் அனைத்து 24 மணி நேர சாதனைகளையும் வலிமை முறியடித்தது:-

Wednesday, 22 September 2021

 



PRAGYA NAGRA CUTE IMAGES:- https://e-funandjoyindia.blogspot.com/2021/09/pragya-nagra-cute-images.html?spref=tw

அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடல் மற்றும் First லுக் இரண்டுமே ரசிகர்கள் கொண்டாடிவிட்டனர்.

இந்நிலையில் நாளை வலிமை படத்தில் இருந்து Glimpse ஒன்று வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் முழுவதுமாக தல அஜித்தின் பைக் Stunt காட்சி மட்டுமே இருக்குமாம்.

இந்த Glimpse-ன் இறுதியில் வில்லன் கார்த்திகேயாவின் மாசான வசனத்துடன் முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 



 

நாளைக்கு வரும் வலிமை படத்தின் Glimpse இப்படித்தான் இருக்குமாம்:-

Saturday, 11 September 2021

 


PRAGYA NAGRA CUTE IMAGES:- https://e-funandjoyindia.blogspot.com/2021/09/pragya-nagra-cute-images.html?spref=tw


உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விக்ரம்.

இப்படத்தில் கமலுடன் முதல்முறையாக விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்து வருகின்றனர். இவர்கள் மூவரும் இடம்பெற்றுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை எகிற வைத்தது.

மேலும் அண்மையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஷிவானி, மைனா நந்தினி, மஹேஸ்வரி என மூவரும் நடிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் விக்ரம் படத்தில் கமல் மிகவும் இளமையாக கடந்த 80களில் இருந்தது போன்ற ஒரு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

விக்ரம் படத்தில் இப்படியொரு கெட்டப்பில் கமல் நடிக்கிறாரா! ஆச்சர்யமளிக்கும் தகவல்:-

Monday, 6 September 2021























PRAGYA NAGRA CUTE IMAGES:-

 


PRAGYA NAGRA CUTE IMAGES:- https://e-funandjoyindia.blogspot.com/2021/09/pragya-nagra-cute-images.html?spref=tw 


தமிழகத்தில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வரிசையாக திரைப்படங்கள் வெளியாகி வருகிறது.

மேலும் ரசிகர்கள் அனைவரும் எப்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் என காத்து கொண்டு இருக்கின்றனர்.

இதனிடையே அடுத்தாக வரவுள்ள மிக பெரிய பண்டிகை என்றால் அது தீபாவளியாக தான் இருக்க முடியும், தீபாவளி அன்று ஏற்கனவே ரஜினி அண்ணாத்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் தற்போது தல அஜித்தின் வலிமை திரைப்படமும் தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த இரண்டு திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகாமல் வெவ்வேறு தேதிகளில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

மீண்டும் மோதவுள்ள அஜித் மற்றும் ரஜினி, தீபாவளிக்கு கொண்டாட்டம் தான்..

Saturday, 28 August 2021

 



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். மேலும் அண்ணாத்த படம் 2021 தீபாவளி வெளியீடு என்று ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்திற்கான இயக்குனர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் ரஜினியின் 169 வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் அல்லது தேசிங்கு பெரியசாமி இருவரில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

ரஜினி தன்னுடைய உடல் எடையை கருத்தில் கொண்டு இன்னும் குறைந்தது இரண்டு படங்கள்தான் செய்வார் என ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. அந்த வகையில் ரஜினியின் கடைசி படத்தை யார் இயக்குவார்? என்ற கேள்வியும் எழுந்தது.

அதை ரஜினி ஏற்கனவே முடிவு செய்துவிட்டாராம். தன்னுடைய கடைசி படத்தை தனக்கு ஏற்கனவே பல வெற்றிகளை கொடுத்த மூத்த இயக்குனர் ஒருவருக்குத்தான் தரப்போகிறேன் என தன்னுடைய வட்டாரத்திற்கு சஸ்பென்ஸ் வைத்து விட்டாராம்.

அது கண்டிப்பாக கேஎஸ் ரவிக்குமாராகத்தான் இருக்கும், அப்படி இல்லை என்றால் பி வாசுவாக இருக்கும் என இப்போதே ரசிகர்கள் தங்களுடைய கணிப்புகளை பேச ஆரம்பித்துவிட்டனர்.

என்னுடைய கடைசி படம் அவருக்குத் தான்.. முடிவு செய்தார் ரஜினி:-

Monday, 23 August 2021




Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEO HERE





தாலிபான் வெற்றியும் மஹ்தி (அலை) திடீர் வருகையும்:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com