சிறந்த ஆளில்லா விமானம் தயாரிக்கும் போட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வந்தது. இதில் அந்த பல்கலைக்கழகத்தில் அஜித்தை ஆலோசகராக கொண்ட தக் ஷா மாணவர் குழு சாதனை படைத்துள்ளது.
இந்த தகவலை அரிந்த அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
தக் ஷா மாணவர் குழுவின் விமானம் தொடர்ந்து 6 மணிநேரம் 7 நிமிடம் வானில் பறந்து உலக சாதனை படைத்துள்ளது.
இதில் பெட்ரோல் மூலம் எரிசக்தி மின்சாரமாக மாற்றப்படுவதால் அதிக நேரம் இயங்குவதாகவும், ரிமோட் மூலம் இல்லாமல் கணிணி மூலம் இதனை இயக்குவதால் எந்த இடத்தில் எவ்வளவு உயரம் பறக்க வேண்டும் என்பதை கூட தெளிவாக அளவிட்டு நிலைநிறுத்த முடியும் என்கின்றனர்.
Post a Comment