லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக தயாராகி வந்தது. இந்த படத்தை ஆரம்பிக்கும் போதே பல பிரச்சனைகள் எழுந்தது. அதுமட்டுமல்லாமல் அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு படப்பிடிப்புகளில் நேரத்துக்கு செல்லாமல் படக்குழுவினரை இழுத்து அடித்துள்ளார்.
அதுவரை பொறுமை காத்த லைகா புரோடக்சன்ஸ் சமீபத்தில் நடந்த விபத்து முதலியவற்றை கமலஹாசன் தலையில் போட்டு விட்டது. இதனால் அவரும் கோர்ட் கேஸ் என அலைந்து கொண்டிருக்கிறார். மேலும் லைகாவுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையில் பிரச்சனை முற்றி விட்டதாக தெரிகிறது.
இதனால் தற்போது லைக்கா புரொடக்ஷன்ஸ் இந்தியன்-2 படத்தை கைவிடும் எண்ணத்தில் உள்ளதாம். சங்கர் தரப்பிலும் இதைப்பற்றி பேச முடியாத நிலை உருவாகி உள்ளது. யார் எப்படியோ போங்க என கமலஹாசன் தனது அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கிவிட்டாராம்.
தற்போது கமலஹாசனின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும்
அரசியலில் சந்தித்த சில தோல்விகளால் கமலஹாசன் தற்போது தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
மேலும் அந்த படம் கவுதம் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் தெரிகிறது.
Post a Comment