தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். வழக்கம் போல அவரது ரசிகர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஒரு நாள் முன்பாகவே தயாராகி விட்டனர். ஆனால் தற்போதைய இக்கட்டான சூழலில் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து விடுமாறு நடிகர் அஜித் கேட்டுக் கொண்டதாக அவரது தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் பாசக்கார ரசிகர்கள் வழக்கம் போல ட்விட்டர் பக்கத்தை அஜித்தின் படங்களை கொண்டு ஆக்கிரமிக்க தொடங்கினார்.
#HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக் மூலம் வாழ்த்து மழையை பொழிந்த ரசிகர்கள், நடிகர் அஜித் தொடர்பான கடந்த கால நினைவுகளை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினர். அதேபோல திரையுலக பிரபலங்களும் தங்களின் வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
நடிகர் தனுஷ், எளிமையாக பிறந்தநாள் வழ்த்துகள் என்று ட்வீட் செய்துள்ளார்.
தல பிறந்த நாளன்று அவரின் Common Dp வெளியிட முடியாமல் போனதற்கு நடிகர் சந்தானு ரசிகர்களிடையே வருத்தம் தெவிரித்துள்ளார். தல-க்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், அவர் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளதாகவும் சாந்தனு ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் பார்த்திபன், நடிகை ஹன்சிகா, இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் இமாம், இசையமைப்பாளர் யுவன், நடிகை நயன்தாரா, பாலிவுட் பிரபலங்கள், ஆளும் கட்சி MP, மற்றும் பலர் தங்களுடைய வாழ்த்து தெரிவித்தனர்...
அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகரில் அஜித் முக்கியமானவர். ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களை கொடுத்தாலும், அந்த வருடத்தின் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படங்களாக அமைந்து விடும். அஜித் படம் என்றால், விமர்சனங்கள் எப்படி இருப்பினும், ரசிகர்களால் அது கண்டிப்பாக கொண்டாடப்படும். அஜித் மீது ரசிகர்கள் இவ்வளவு பாசம் வைக்க அவர் என்ன செய்தார் என்ற கேள்வி நிச்சயம் எழும். மாறாக ரசிகர் மன்றங்களை கலைத்து, அவ்வப்போது சில கொண்டாட்டங்களுக்கு தடை போட்டும், ரசிகர்களின் விருப்பங்களை முற்றிலும் ஏற்று கொள்ளமலேயே இருந்து வந்துள்ளார் நடிகர் அஜித். இருந்தாலும் ஒரே மாதிரியான கிரேஸ் உடன் அஜித்தை போற்றுவதை நிறுத்தமால் செய்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.
நீண்ட காலமாகவே ஊடக வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், அவர் குறித்த ஏதோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாகி உலா வரும். அஜித் என்றால் எதார்த்தம், எளிமை, கடின உழைப்பு, தனியொருவனாக சினிமா துறையில் சாதனை, என அடுக்கிக் கொண்டே போவார்கள் அவரது ரசிகர்கள். அமர்களம், வாலி, காதல் மன்னன், முகவரி, காதல் கோட்டை, என பல ஹிட்களை அள்ளிக் கொடுத்த நேரத்திலும் சரி, ஜனா, ஜி, ஆஞ்சனேயா, ஆழ்வார், போன்ற எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத படங்கள் வெளி வந்த நேரத்திலும் சரி, ரசிகர்கள் நடிகர் அஜித்திற்கு உறுதுணையாகவே இருந்தனர்.
தன்னால் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ள அஜித் அவரது ரசிகர்களுக்கு வழங்கும் அறிவுரை வாழு, வாழ விடு என்பது மட்டுமே. குடும்பங்களை கவனித்து கொள்ளவும், கொண்ட முயற்சியில் முன்னோக்கி செல்லவும் மட்டுமே ரசிகர்களை நோக்கி அஜித்தின் குரல் வெளிப்படும். ரசிகர்களை எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர் அஜித். ஆனால், இன்னும் அஜித்திற்குரிய மாஸ் கூடிக் கொண்டேதான் செல்கிறது எனபதில் மாற்றுக் கருத்து இல்லை.
Post a Comment