HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 7 July 2020

சினிமாவில் இருந்து விலக முடிவு எடுத்த ரஜினி? இதுதான் கடைசி படமா? – வெளியான ஷாக் தகவல்



தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். வயதானாலும் இன்னும் அதே ஸ்டைலுடன் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.
மேலும் இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ் என பலர் இணைந்து நடித்து வருகின்றனர். டி இமான் இசையமைத்து வருகிறார்.
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வைரஸ் பரவல் முழுமையாக முடிவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளார் ரஜினிகாந்த். அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்படியும் அடுத்த வருடம் தான் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த அண்ணாத்த படத்திற்கு பிறகு அரசியல் பயணத்திற்காகவும் உடல் நிலையில் கவனம் செலுத்துவதற்காகவும் திரையுலகில் இருந்து விலகிக் கொள்ள ரஜினி முடிவு எடுத்திருப்பதாக சமூக வலைதளங்களை தகவல்கள் கசிந்துள்ளன
இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தமிழக அரசியலில் ரஜினியால் மாற்றம் உருவாகும் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.
சினிமாவில் ஜொலிப்பது போல அரசியலிலும் ரஜினி ஜொலிப்பாரா என்பதை அவரின் முழு நேர அரசியல் பிரவேசம் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com