ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகரான தல அஜித் நடிப்பில் படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவரை பெரிய திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தனர். சரி எப்படியும் இந்த பொங்கல் தல பொங்கல் தான் என நினைத்து கொண்டிருந்த சமயத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்த காரணத்தால் அவரின் பட வெளியீடு தள்ளி சென்றது.
தற்போது ஊரடங்கு விதிமுறைகள் எதுவும் இல்லாத காரணத்தால் வலிமை படத்தை மீண்டும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.அதன்படி படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னதாக படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
மேலும் தல நடிப்பில் ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் வெளியாகும் படம் என்பதால் தல ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து வருகிறார்கள்.
ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு காரணமாக தற்போது வலிமை படத்தின் டிமாண்ட் அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் வலிமை படம் வெளியானால் நிச்சயம் கல்லா கட்டி விடலாம் என்பதால் பல தியேட்டர் ஓனர்கள் நீ நான் என போட்டி போட்டு வருகிறார்களாம்.
படம் தள்ளிப்போனதால், அந்த நேரத்தை வீணடிக்காமல் படத்தை 5 மொழிகளி வெளியிட முடிவுசெய்து. அதற்கான பணியை இந்த மாதத்தில் தொடங்கினர், இப்போது அந்த வேலை முடிவடைந்துள்ளது.
அதன் விளைவாக வலிமை படத்தின் மார்க்கெட் விலை எகிறிவிட்டது. தற்போதைய நிலவரப்படி வலிமை படம் வெளியாகும் முன்பே அனைத்து மொழிகளையும் சேர்த்து ₹400 கோடி ரூபாய் வரை வியாபாரமாகி உள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு உள்ள உச்சபட்ச டிமாண்டே படம் இந்த அளவிற்கு அதிக தொகைக்கு வியாபாரமாக காரணம் என விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். இதனால் கோலிவுட் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.
Post a Comment