HEADER
Sunday, 27 October 2024
Friday, 18 October 2024
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், கமல் கூட்டணியில் கடந்த ஜுலை மாதம் ‘இந்தியன் 2’ படம் வெளியானது. ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பிற்கு பின் ரிலீசானது இப்படம். பல வருடங்களாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
சொல்லப்போனால், இயக்குனர் ஷங்கர் ஒரு ட்ரோல் மெடீரியலாக மாறினார். ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு சமயத்திலே பார்ட் 3-க்கான பெரும்பாலான காட்சிகளை படமாக்கி விட்டார் இயக்குனர் ஷங்கர். ‘இந்தியன் 2’ கிளைமேக்ஸ் காட்சியிலே அடுத்த பாகத்திற்கான ப்ரோமோ ஒன்றும் இணைக்கப்பட்டு இருந்தது.
இதை ரசிகர்கள் வச்சு செய்துவிட்டார்கள். இந்த நிலையில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து, படம் படு தோல்வி அடைந்ததால், அடுத்த பாகத்தை, OTT-யில் நேரடியாக வெளியிடலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்ததாக திடீர் தகவல் ஒன்று வெளியானது.
இந்நிலையில் தற்போது ‘இந்தியன் 3’ ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இரண்டாம் பாகம் தோல்வி அடைந்த காரணத்தால், சிறிது நாட்களுக்கு படத்தை ரிலீஸ் பண்ணாமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்துள்ளார் கமல்.
மேலும் நடிகர் கமல் ஹாசன் தற்போது தக் லைப் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் வெற்றி அடைந்த பின்னரே இந்தியன் 3-ஐ ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். அடுத்து தக் லைப் வெற்றி பின் தான் இந்தியன் 3 படம் ரிலீசாக வாய்ப்புள்ளது.
இந்தியன் 3 ரிலீஸில் புது ட்விஸ்ட் வைத்த கமல் அவர்கள்.. ரிலீஸில் தொடரும் சிக்கல்:-
Friday, 11 October 2024
ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.
Vettaiyan Review | விறுவிறுப்பான முதல் பாதி... மிரள வைக்கும் இரண்டாம் பாதி... கொண்டாடும் ரசிகர்கள்:-https://e-funandjoyindia.blogspot.com/2024/10/vettaiyan-review.html
அதே போல் ஜெய் பீம் படத்தின் மூலம் தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ள இயக்குனர் TJ ஞானவேல், தன்னுடைய இயக்கத்தில் சூப்பர்ஸ்டாரை எப்படி காட்டப்போகிறார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், முதல் நாள் உலகளவில் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
தமிழ்நாடு வசூல்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வேட்டையன் படம் முதல் நாள் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் ரூ. 72 கோடி வசூல் செய்த வேட்டையன் தமிழ் நாட்டில் முதல் நாள் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தமிழ் நாட்டை பொறுத்த வரை வலிமை படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 38 கோடி இதுவரை முறியடிக்கப்படவில்லை.
வேட்டையன் படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில். உலகமுழுவதும் ரூபாய் 240 கோடி வசூல் செய்துள்ளதாக LYCA productions அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது..
#Valimai - 38cr
#Leo - 34cr
#Annathea - 34cr
#GOAT - 29.5cr
#Beast - 29cr
#Jailer - 28cr
#Thunivu - 25.5cr
#vettaiyan -25cr
#PS1- 22cr
#Sarkar-21cr
#Thala Ajith is the king of opening..
வேட்டையன் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..:-
Thursday, 10 October 2024
மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் இன்று வெளியானது. சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்ததை அடுத்து கூடுதல் உற்சாகத்தோடு ரசிகர்கள் இருந்தார்கள். படத்தின் ப்ரீ டிக்கெட் புக்கிங்கிலும் படம் மிகப்பெரிய சாதனையை செய்தது படம். ஆரம்பமே அதகளமாக இருப்பதால் கண்டிப்பாக படத்தின் கண்டெண்ட்டும் மாஸாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு படம் பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றார்கள்..
அந்த எதிர்பார்ப்பை ஞானவேல் ஏமாற்றவில்லை. சமூகத்துக்கு தேவையான விஷயத்தையும், ரஜினியின் ரசிகர்களுக்கு தேவையான விஷயத்தையும் கலந்து ஒரு பக்கா படத்தை கொடுத்துவிட்டார் இயக்குநர் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் ரஜினி கடைசியாக ஹீரோவாக நடித்த ஜெயிலர் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தவகையில் வேட்டையனும் மெகா ஹிட்டாகிவிடும். வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.
ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் வேட்டையன் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது. இந்தப் படத்தில் வேறு ஒரு ரஜினியை ஞானவேல் கொண்டு வந்திருக்கிறார். சமூக நீதியை ரஜினியை வைத்து சொல்லிவிட்டு அவரது ரசிகர்களுக்கும் ஒரு கொண்டாட்டமான படத்தை கொடுத்திருக்கிறார்.
படத்தின் ப்ளஸ்: ரஜினிகாந்த் இதில் அவ்வளவு அருமையாக நடித்திருக்கிறார். வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கிறார். அதேபோல் ஃபகத் பாசில் அசால்ட்டாக நடித்திருக்கிறார். அவரை இந்தக் கேரக்டருக்கு ஞானவேல் தேர்ந்தெடுத்தது நல்ல விஷயம். ரித்திகா சிங், துஷாரா, அபிராமி, ரோகிணி என அனைவருக்குமே இயக்குநர் ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுத்திருக்கிறார். பாலிவுட் பிக் பாஸ் அமிதாப் பச்சன் அமைதியாக நடித்துவிட்டு சென்றுவிடுகிறார். என் கவுண்ட்டருக்கு எதிரான கதை என்று மட்டும் இதை எடுத்துக்கொள்ள முடியாது. கல்வியில் நடக்கும் ஊழலையும் இதில் அருமையாக பேசியிருக்கிறார் இயக்குநர். இது அரசுக்கே சொல்லும் படமாக இருக்கும். படத்தின் மிகப்பெரிய இன்னொரு ப்ளஸ் அனிருத். ரஜினிகாந்த் வரும் இடத்தில் எல்லாம் அவருக்கென்று ஸ்பெஷலாக ரீ ரெக்கார்டிங் செய்திருக்கிறார். இந்தப் படத்தை மேலும் அவர் உயரத்துக்கு கொண்டு போயிருக்கிறார்.
படத்தின் மைனஸ்: படத்தில் மைனஸே இல்லையா என்று கேட்டால் இருக்கிறதுதான். முதல் பாதி விறுவிறுவென்று செல்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது.அதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அதேபோல் படத்துக்கு வில்லன் கேரக்டர் ரொம்பவே முக்கியம். இதில் ராணா வில்லன். நன்றாக அவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருந்தாலும்; ரஜினிக்கு வில்லன் என்றால் இன்னும் கொஞ்சம் அவர் நடிப்பில் மெனக்கெட்டிருக்கலாம். மேலும் அமிதாப் பச்சனுக்கும் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கலாம். அதை ஏன் ஞானவேல் செய்யவில்லை என்று தெரியவில்லை. மற்றபடி படம் அருமையாக இருக்கிறது" என்றார்.
Vettaiyan Review | விறுவிறுப்பான முதல் பாதி... மிரள வைக்கும் இரண்டாம் பாதி... கொண்டாடும் ரசிகர்கள்:-
Tuesday, 1 October 2024
பல கோடிகள் சம்பளம் வாங்கி வரும் அஜித்குமார் சினிமாவில் தன்னை வைத்து முதல் போட்டு, பிரமாண்ட பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தையும் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும் என பிரபல சினிமா விமர்சகர் கூறியுள்ளார்..
அமராவதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இன்று யாராலும் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக வளர்ந்திருக்கிறார் அஜித்குமார். அவர் யார் வம்புக்கும் போவதில்லை. யார் பற்றியும் அவதூறு பரப்புவதில்லை’ அவர் வேலையை அவர் செய்து வந்தாலும் அவர் மீது எல்லோருக்கும் ஒரு கண் உள்ளதுபோல் அவர் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது..
வயிற்றில் அடிப்பதாக சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘சினிமாவில் நடிகர் அஜித்தின் சின்சியாரிட்டி குறைஞ்சிருச்சு. அதை ஒத்துக்கொள்ள வேண்டும். கார் ரேஸ், பைக் ரேஸிங் என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், அவர் படங்களுக்குப் பணம் போட்ட தயாரிப்பாளர்களை அவர் நினைக்க வேண்டும்.
ஒரு படத்தில் நடிக்க அஜித்திற்கு ரூ.150 முதல் ரூ. 200 கோடி வரை சம்பளமாகக் கொடுக்கப்படும் நிலையில், விடாமுயற்சி படம் தொடங்கி ரிலீஸ் தாமதாகிவருகிறது. இதைப் பற்றியும், தயாரிப்பாளர்கள் பணம் போட்டு கஷ்டப்பட்டு படம் எடுப்பதை பற்றியும் அஜித் நினைத்துப் பார்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு பைக் ரேஸுக்கு செல்லலாமா? இப்படம் ரிலீஸ் தள்ளிப் போகாமல் இருந்தால் லைகாவுக்கு நஷ்டமிருந்திருக்காது’’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ‘விடாமுயற்சி பட ரிலீஸ் தாமதமாவதற்கு அஜித்தை மட்டும் ஏன் விமர்சிக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விடாமுயற்சி தாமதத்துக்கு LYCA-உடைய நிதி நெருக்கடி தான் காரணம் என்றும்.வரிசையா மிகப்பெரிய தோல்வி படம் கொடுத்ததால் அவர்களால் மற்ற படங்கள் மீது கவனம் செலுத்த முடியாமல் போனது தான் காரணம். இதற்கு பிறகு ஆரமித்து #GoodBadUgly படம் அஜித் அவர்களின் அர்பணிப்பால் கிட்டத்தட்ட முடியும் நிலையிலுள்ளது.மேலும், ‘அஜித் ஷீட்டிங்கின் போது ரேஸிங்கிற்கும் பைக் டிராவலுக்கும் செல்வதில்லை. அவர் ஓய்வின்போது தான், ஷூட்டிங் இடையில்தான் செல்கிறார்’ என்று கூறிவருகின்றனர்.