பல கோடிகள் சம்பளம் வாங்கி வரும் அஜித்குமார் சினிமாவில் தன்னை வைத்து முதல் போட்டு, பிரமாண்ட பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தையும் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும் என பிரபல சினிமா விமர்சகர் கூறியுள்ளார்..
அமராவதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இன்று யாராலும் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக வளர்ந்திருக்கிறார் அஜித்குமார். அவர் யார் வம்புக்கும் போவதில்லை. யார் பற்றியும் அவதூறு பரப்புவதில்லை’ அவர் வேலையை அவர் செய்து வந்தாலும் அவர் மீது எல்லோருக்கும் ஒரு கண் உள்ளதுபோல் அவர் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது..
வயிற்றில் அடிப்பதாக சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘சினிமாவில் நடிகர் அஜித்தின் சின்சியாரிட்டி குறைஞ்சிருச்சு. அதை ஒத்துக்கொள்ள வேண்டும். கார் ரேஸ், பைக் ரேஸிங் என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், அவர் படங்களுக்குப் பணம் போட்ட தயாரிப்பாளர்களை அவர் நினைக்க வேண்டும்.
ஒரு படத்தில் நடிக்க அஜித்திற்கு ரூ.150 முதல் ரூ. 200 கோடி வரை சம்பளமாகக் கொடுக்கப்படும் நிலையில், விடாமுயற்சி படம் தொடங்கி ரிலீஸ் தாமதாகிவருகிறது. இதைப் பற்றியும், தயாரிப்பாளர்கள் பணம் போட்டு கஷ்டப்பட்டு படம் எடுப்பதை பற்றியும் அஜித் நினைத்துப் பார்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு பைக் ரேஸுக்கு செல்லலாமா? இப்படம் ரிலீஸ் தள்ளிப் போகாமல் இருந்தால் லைகாவுக்கு நஷ்டமிருந்திருக்காது’’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ‘விடாமுயற்சி பட ரிலீஸ் தாமதமாவதற்கு அஜித்தை மட்டும் ஏன் விமர்சிக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விடாமுயற்சி தாமதத்துக்கு LYCA-உடைய நிதி நெருக்கடி தான் காரணம் என்றும்.வரிசையா மிகப்பெரிய தோல்வி படம் கொடுத்ததால் அவர்களால் மற்ற படங்கள் மீது கவனம் செலுத்த முடியாமல் போனது தான் காரணம். இதற்கு பிறகு ஆரமித்து #GoodBadUgly படம் அஜித் அவர்களின் அர்பணிப்பால் கிட்டத்தட்ட முடியும் நிலையிலுள்ளது.மேலும், ‘அஜித் ஷீட்டிங்கின் போது ரேஸிங்கிற்கும் பைக் டிராவலுக்கும் செல்வதில்லை. அவர் ஓய்வின்போது தான், ஷூட்டிங் இடையில்தான் செல்கிறார்’ என்று கூறிவருகின்றனர்.
Post a Comment