HEADER

... (several lines of customized programming code appear here)

Friday, 11 August 2017

அஜித் நடிப்பில் விவேகம் ஆகஸ்ட் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
அப்படியிருக்க இப்படத்தை அதிக தியேட்டர்களில் திரையிட உள்ளனர் உலகம் முழுவதும் 2000 திரையரங்குகளுக்கு மேல் வரவுள்ளது, இதை நாம் முன்பே தெரிவித்து இருந்தோம்.vivegam
தற்போது ப்ரான்ஸ் நாட்டில் இதுவரை வந்த இந்திய படங்களிலேயே அதிக திரையரங்குகளில் விவேகம் தான் ரிலிஸாகவுள்ளதாம் இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.vivegam
இதன் மூலம் அஜித் வசூலில் பெரிய சாதனை படைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது சாதனைக்கு மேல் சாதனை  படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றன.

படம் வருவதற்கு முன்னாடியே சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் விவேகம்.!!!


அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் ஜேம்ஸ்பாண்ட் டைப்பில் உருவான ஒரு சர்வதேச தர திரைப்படம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தில் உண்மையிலேயே ஜேம்ஸ்பாண்ட் பட நடிகை ஒருவர் அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
பல படங்களில் ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் நடித்த பியர்ஸ் பிராஸ்னன் நடித்த 'தி நவம்பர் மேன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெஹிக் என்பவர் 'விவேகம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததோடு, ரிஸ்கான சண்டைக்காட்சிகளில் டூப் இன்றி நடித்துள்ளாராம்
இயக்குனர் சிவா மற்றும் அஜித்துடன் நடித்ததை பெருமையாக கருதுவதாக கூறிய அமிலா, அஜித்தை முதன்முதலில் சந்தித்தபொழுது துளி கூட தலைக்கனம் இல்லாமல் அவ்வளவு எளிமையாக மனிதராக எல்லோருடனும் பழகியதை பார்த்து ஆச்சரியம் அடைந்ததாகவும், அவருடைய தொழில் பக்தியை இதுவரை வேறெந்த நடிகரிடமும் பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் இன்னமும் அவரது கண்களில் ஒரு சிறுவனின் துள்ளலும் பாசிட்டிவிட்டியும் உள்ளதை தான் கவனித்ததாகவும் அவர் தெரிவித்தா
ர்

அஜித்தின் 'விவேகம்' படத்தில் ஜேம்ஸ்பாண்ட் பட நடிகை

































One of the most loved characters in Tamil Cinema, Raghuvaran from Velai Illa Pattadhari is now back again with VIP 2, as a more matured, family man.





Raghuvaran (Dhanush), who is working in Anitha Constructions, is being cornered by a real estate construction big shot Vasundhara Parameshwaran (Kajol) of Vasundhara Constructions. But why is he being cornered and why do Raghuvaran and Vasundhara have to lock horns? For those who ponder about the film's title, and is he once again becoming a Velai Illa Pattadhari is a surprise to watch out for! The cat and mouse game between Raghuvaran and Vasundhara is what the film is all about.

Dhanush is at his easy best, and he once again makes us fall in love with the character. He effortlessly essays the role with total charm. When he performs a few Superstar gestures, it is lovable to watch onscreen. Amala Paul, as the regular housewife, gives her best and her chemistry with Dhanush is good. Kajol, the Vennilave beauty is back to Kollywood after a big break and this comeback film has ample moments for her. Especially, her performance towards the end is very impressive. Samuthirakani and Vivek score equally good just the way they did in the first part. Ritu Varma replaces Surabhi’s role in a brief appearance.

Right from the initial minutes of the film, it takes you through many nostalgic moments and the audience is already emotionally attached to the characters from the word go. The characterisation of Vasundhara is impressive and they have balanced the sketching perfectly in an interesting manner. Her lip sync could have been better at few places, but otherwise, a fitting voice has been provided to her. Soundarya Rajinikanth's screenplay is engaging and takes the right path.

Dhanush's story and dialogues give immense support to Soundarya’s screenplay and act as a pillar of strength. The last twenty minutes of the film is a surprising watch and you would not see what you’d have expected. The biggest strength of VIP was the liveliness of the characters, and that strength is being maintained even in the sequel. Look out for Saranya Ponvannan’s appearance, which may guarantee a few goosebumps.

On the flip side, the film falls predictable, mostly in the first half and only in the last twenty minutes, you find a good surprise. The entire fast half, though enjoyable, it is something that we've seen already and there is nothing fresh. The background music could have been a lot more impactful and one cannot avoid the feeling of missing Anirudh's punch in the movie. The first video song, Nada Da Raja doesn't make you dance and it could've been executed more powerfully. The film takes a while to get on the right track, as the majority of first half consists of family scenes.

Sean’s songs are good and Iraivanai Thandha Iraiviye is easily the pick of the album. However, the film's background score is an open debate as you can find both Anirudh's and Sean's scores being blended. Sameer’s visuals and GK Prasanna’s cuts are neat and clean. Soundarya has tried to make sure the film is as entertaining as the first part, she has succeeded to a major extent and won't leave the audience disappointed.

E-FUN&JOY REVIEW BOARD RATING
2.75
2.75 / 5.0 )

VELAIYILLA PATTATHARI 2 MOVIE REVIEW

Thursday, 10 August 2017

Vivegam Full Songs






புது புகைப்படங்களுடன் விவேகம் படத்தின் முழுப்பாடல்கள் இதோ




 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் சாட்டிலைட் டிவிக்களின் நிர்வாகத்தினர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடுகள் இருந்த நிலையில் பெரிய ஸ்டார்கள் படங்களின் சாட்டிலைட் உரிமை கூட விற்பனை ஆகாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது இரு தரப்பினர்களுக்கும் இடையே சுமுகமான சூழ்நிலை இருப்பதால் மீண்டும் சாட்டிலைட் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

எனவே முதல்கட்டமாக 'விவேகம்', 'சிங்கம் 3' மற்றும் 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களின் சாட்டிலைட் உரிமங்களை சன் டிவியும், 'விஜய்யின் 'மெர்சல்' படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீதமிழ் தொலைக்காட்சியும், சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவியும் பெற்றுள்ளன.
 
மேலும் சில பெரிய பட்ஜெட் படங்களின் சாட்டிலைட் உரிமை வியாபாரம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பதும், இதுகுறித்த விவாரங்கள் மிக விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

'விவேகம்', 'மெர்சல்', 'வேலைக்காரன்' சாட்டிலைட் உரிமை விபரங்கள்

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு சரவெடியாக மெர்சல் வரவிருக்கின்றது. இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இந்நிலையில் நள்ளிரவு இப்படத்தின் பாடல் டீசர் யு-டியூபில் வெளிவந்தது. இந்த டீசர் வெளிவந்து ஒரு சில நிமிடங்களிலேயே லட்சம் ஹிட்ஸை தாண்டியது.
தற்போது 1.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது, இவை வெறும் டீசர் தான், அப்படியென்றால் சிங்கிள் ட்ராக் வந்தால் என்னென்ன சாதனை படைக்கும் என்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

வேற லெவல் வரவேற்பு, மெர்சல் படைத்த இமாலய சாதனை

Wednesday, 9 August 2017









இளையதளபதி விஜய் நடித்துவரும் மெர்சல் படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முதல் பாடலை மட்டும் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்பே வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.
அது எப்போது வெளிவரும் என இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கவுள்ளனர். அது மட்டுமின்றி படத்தின் புதிய போஸ்டரும் வெளிவரும் என கூறப்படுகிறது.
அட்லீ இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க, காஜல், சமந்தா, நித்யா மேனன் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றனர். மூன்று ஹீரோயின்களில் யாரோ ஒருவர் இந்த போஸ்டரில் முதன்முறையாக காட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை 5 மணிக்கு விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் சர்ப்ரைஸ்



சினிமாவில் டாப் ஸ்டார் யார் என்பதை நிர்ணயிக்கும் முக்கிய விஷயங்களில் ஒன்று சம்பளம். யாருடைய படத்துக்கு அதிக வசூல் ஆகிறதோ அந்த நட்சத்திரங்கள் கேட்ட தொகையை அள்ளிக் கொடுப்பது தயாரிப்பாளர்களின் வழக்கம். இதனாலேயே வெற்றிகள் கூடக் கூட நட்சத்திரங்களின் சம்பள பில்லும் எக்கச்சக்கமாய் எகிறும்.
தமிழகத்தில் முன்னணியில் உள்ள பிரபல நடிகைகள் தங்கள் சம்பளத்தை திடீரென உயர்த்தியுள்ளனர். தமிழ் படங்கள் ஆந்திரா, கேரளாவிலும் வசூல் குவிப்பதோடு, தெலுங்கு படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு லாபங்களை கொட்டி வருவதால் நடிகர், நடிகைகள் சம்பளத்தை ஏற்றியுள்ளனர்.
அதன் படி 2017-ல் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல் இதோ,
  • சூரியா – 29 கோடி
  • கமல் ஹாசன் – 30 கோடி
  • விஜய் – 45 கோடி
  • அஜித் –  55 கோடி ( சம்பளத்திற்குண்டான வரியை அஜித்தே செலுத்துவார்)
  • ரஜினி – 80 கோடி
  • காஜல் அகர்வால் – 1 கோடி
  • மடோனா சபஸ்டீன் – 1 கோடி
  • லக்ஷ்மி மேனன் – 2  கோடி
  • ஸ்ருதிஹாசன் – 2  கோடி
  • ஸ்ரீதிவ்யா – 1.5 கோடி
  • திரிஷா – 4 கோடி
  • ஹன்ஷிகா – 3 கோடி
  • கீர்த்தி சுரேஷ் -4.80 கோடி
  • அனுஷ்கா – 6.90 கோடி
  • நயன்தாரா – 7 கோடி
  • சந்தானம் – 7 கோடி
  • சிம்பு,கார்த்தி,விஷால் – 7 கோடி
  • ஜெயம் ரவி – 8.5 கோடி
  • சிவகார்த்திகேயன் –  17 கோடி
  • விஜய் சேதுபதி –  12 கோடி
  • தனுஷ் – 10 கோ
    டி

முன்னணி நடிகர்/நடிகைகளின் சம்பளம் 2017 கணக்கின் படி

Monday, 7 August 2017



``ஒரு பன்னாட்டுக் காவல்துறை - ஒரு சர்வதேச குற்றப் பின்னணி. இந்த இரு துருவங்களுக்குமான மோதல்தான் `விவேகம்'. `இந்த ஒன்லைனுக்கு வொர்க் பண்றீங்களா?'னு சிவா கேட்டார். ஆச்சர்யமும் சந்தோஷமுமா இருந்தது. ஏற்கெனவே `கவண்' படத்தோட திரைக்கதைக்கு வொர்க் பண்ண அனுபவம் இருந்ததால, உடனே ஓகே சொன்னேன். சிவா சார், ஆதிநாராயணன், நான்... மூவரும் `விவேகம்' படத்துக்கான திரைக்கதையை உருவாக்கத் தயாரானோம்!'' என்கிறார் கபிலன் வைரமுத்து. அஜித்தின் `விவேகம்' படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை எழுதியிருப்பதோடு, கதைக்களத்திற்கும், திரைக்கதைக்கும் கரம் கொடுத்திருக்கிறார்.
கபிலன் வைரமுத்து - விவேகம்
``நீங்க பேப்பர்ல எழுதின காட்சிகளைத் திரையில் பார்க்கும்போது எப்படி இருந்தது?"
``சந்தோஷமா இருந்தது. படத்தோட எடிட்டிங் போய்க்கிட்டிருந்தப்போ, `உங்க மனத்திரையில் நீங்க பார்த்த மாதிரி இந்த விஷுவல்ஸ் திரையில் இருக்கா?'னு சிவா சார் கேட்டார். `அதைவிடப் பிரமாதமா வந்திருக்கு'னு சொன்னேன். அஜித் சாரோட பெர்ஃபாமன்ஸ், படத்துல இருக்கிற பாடல்கள், அக்‌ஷராவோட ஆக்‌ஷன் காட்சிகள்னு படத்துல எனக்கு பெர்சனலா பிடிச்ச விஷயங்கள் அதிகம். படத்தோட இடைவேளைக் காட்சியைப் பார்த்தப்போ, உடம்புல மின்சாரம் பாயுற மாதிரி இருந்தது.''
``அஜித் படம், ரசிகர்கள் எப்படி எடுத்துப்பாங்கனு தெரியாது. திரைக்கதை உருவாக்கத்துல கொஞ்சம் பதற்றம் இருந்திருக்குமே?"
``முதல் நாள் அந்தப் பயம் இருந்தது. சிவா சார் ஏற்கெனவே `வீரம்', `வேதாளம்'னு அஜித் சாரோட ரெண்டு படங்களை இயக்கியதால, ஆடியன்ஸ் என்ன எதிர்பார்ப்பாங்க, அஜித் ரசிகர்களுக்கு என்ன தேவை, அஜித் சாரோட கேரக்டரை எப்படி வடிவமைக்கணும்னு எல்லாம் தெரிஞ்சிருந்தது. அதனால, எங்களுக்கு இருந்த பதற்றத்தை அவர் பொறுப்புல எடுத்துக்கிட்டார். ஆனா, `இது அஜித் ரசிகர்களுக்கான படமா மட்டும் இருக்கக் கூடாது. பொதுவான ரசிகர்கள் தியேட்டருக்கு வரணும். அவங்களும் படத்தைப் பாராட்டணும்'னு சொன்னார். அந்தப் பொறுப்பை நாங்க சரியா பண்ணியிருக்கோம்னு நம்புறேன். நிறைய விஷயங்களை சிவா சார் பாராட்டினார். என் எழுத்துமேல எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனா, அந்த எழுத்தைச் சந்தைப்படுத்துறதுக்கு எனக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டது. `கவண்' மூலமா கே.வி.ஆனந்த் சார் அதைத் தொடங்கிவைத்தார். சிவா சாரோட வொர்க் பண்ண பிறகு சினிமாவோட நட்சத்திர முகத்தைப் புரிஞ்சிக்க முடிஞ்சது.''
கபிலன் வைரமுத்து - விவேகம்
``டீஸர்ல அஜித் பேசுற நீளமான வசனம் யாரோட ஐடியா?"
``சிவா சாரோடது. `சிவா - அஜித்'ங்கிற கூட்டணியோட ஸ்பெஷலே வசனம்தான். அஜித்துக்கு சிவா சார் எழுதுற வசனம் அவ்ளோ ஸ்பெஷலா இருந்தது. `சிவா பூஜையில எதுக்கு கரடி'னு அந்த ஏரியாவை நான் தொடலை!''
`` `காதலாட...' பாட்டு படத்தோட எந்த சிச்சுவேஷன்ல வருது?"
``அஜித்தும் - காஜல் அகர்வாலும் கணவன்-மனைவி. அவங்க வர்ற காட்சிகளுக்காக உருவான பாட்டு இது. தவிர, இந்தப் பாடல் இந்தப் படத்தோட ஆன்மானு சொல்லலாம். பாடல்கள் மட்டுமல்ல, படத்துல வர்ற எல்லாமே கமர்ஷியலா மட்டும் கடந்துபோயிடாம, உணர்வுபூர்வமா இருக்கணும்னு உழைச்சிருக்கோம். படத்துக்காக முதல்முதல்ல கம்போஸ் பண்ண பாட்டு இதுதான். திரைக்கதையிலேயும் வொர்க் பண்ணதுனால, பாடலோட சூழலை எளிமையாப் புரிஞ்சுக்கிட்டு எழுத முடிஞ்சது.''
``அஜித்?"
``படத்தைப் பற்றிப் பேசினதைவிட, பொதுவா நிறைய விஷயங்கள் பேசினோம். குறிப்பா `முடிவெடுத்தல்' பற்றிச் சொன்னார். `இன்னிக்கு நாம இந்த இடத்துல இருக்கிறதுக்கு, என்னிக்கோ எடுத்த ஒரு முடிவு காரணமா இருக்கும். இன்னிக்கு நாம எடுக்கிற முடிவுதான், நாளைக்கு நாம எப்படி இருக்கப்போறோம்னு தீர்மானிக்கும்' இது அஜித் சார் சொன்ன அர்த்தமுள்ள வரிகள். தவிர, `மனித நாகரிகம்'ங்கிற டாபிக்ல நிறைய விஷயம் ஷேர் பண்ணிக்கிட்டார். `ஒருவேளை மனிதகுலம் தன்னோட பயணத்தை மறுபடியும் முதல்ல இருந்து தொடங்குமோ?'னு கேட்பார். ஒவ்வொரு வார்த்தையிலயும் அவரோட அனுபவம் பிரதிபலிச்சதைப் பார்க்க முடிஞ்சது.'' 
கபிலன் வைரமுத்து - விவேகம்
``குடும்பம், நண்பர்கள் எல்லாம் என்ன சொல்றாங்க?"
``அஜித் படத்துல நான் வொர்க்பண்றேன்னு தெரிஞ்சதுல இருந்து, நண்பர்கள்கிட்ட இருந்து அடிக்கடி நிறைய கேள்விகள். சில பேர் கதை கேட்பாங்க, சில பேர் `அஜித் கேரக்டர் என்ன?'னு கேட்பாங்க. எல்லோருக்கும் `முதல் நாள் முதல் ஷோவுல தெரியும்'னு சொல்லிச் சமாளிச்சிருக்கேன். அப்பா, அம்மா, அண்ணன் மூணு பேருக்குமே என் கதை, திரைக்கதையில நம்பிக்கை உண்டு. ஏன்னா, சின்ன வயசுல அவங்க மூணு பேரையும் உட்காரவெச்சு `கட மாஸ்டர்'னு ஒரு கதையைத் திரும்பத் திரும்பச் சொல்லி டார்ச்சர் பண்ணியிருக்கேன். `விவேகம் படத்துல வொர்க்பண்றேன்'னு சொன்னதும், `உன்னோட `கட மாஸ்டர்' கதையைத் தவிர வேற எதை வேணும்னாலும் எழுது'னு சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க. கதை, திரைக்கதையில புதுசா எதையாவது பண்ணணும்கிறதுதான் என் ஆசை. என் முதல் நாவல் `பூமரேங் பூமி' ஆஸ்திரேலியாவின் அபாரஜின் பழங்குடிகள் பற்றிய பதிவு. அவங்களுக்கும் தென்மாவட்டத் தமிழர்களுக்கும் மரபியல்ரீதியான தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்லுது. இதுமாதிரி புதிய களங்களில் இயங்குற கதைகளுக்குத் திரைக்கதை எழுதணும்னு ஆசை!''
`` `கவண்' மாதிரி படம் வந்தாலும், `பிக் பாஸ்' மாதிரி ஷோ வெற்றியடையுதே?''
`` `கவண்' படத்தோட எதிரிகள், `பிக் பாஸ்' நிகழ்ச்சியைவிட வலிமையானவர்கள். தினம் தினம் நம்மைச் சுற்றி நிறைய நாடகங்கள் நடக்குது. இதுல ரசிக்கவேண்டிய நாடகங்கள் எது, புறக்கணிக்கவேண்டிய நாடகங்கள் எதுனு முடிவு எடுக்கிறது சிரமம். இப்படி ரெண்டு வகை இருக்குனு பதிவுசெய்யறது மட்டும்தான் `கவண்' படத்தோட வேலை. அதை நாங்க நல்லவிதமாவே செஞ்சோம்!'' 
கபிலன் வைரமுத்து - விவேகம்
``நீங்க ஆரம்பிச்ச `மக்கள் அணுக்கப் பேரவை' என்னாச்சு?"
``கல்லூரி படிக்கும்போது ஆரம்பிச்ச பேரவை அது. அப்பவே 10,000 பேர் அதுல உறுப்பினரா சேர்ந்தாங்க. சில காரணங்களுக்காக அதைத் தொடர முடியலை. அந்த முயற்சிகளை `இளைஞர்கள் எனும் நாம்' என்ற பெயரில் ஆவணப்படமா உருவாக்கியிருக்கோம். அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும். தமிழ்நாட்டுல இன்னிக்கு மாற்று அரசியலுக்கான தேவை இருக்கு. எங்க கல்லூரிப் பருவத்துல நாங்க அதுக்கான முன்னெடுப்பைத் தொடங்கினோம். அந்த முயற்சி குழந்தைத்தனமா இருந்தாலும், இன்றைய தலைமுறைக்கு அது தேவைனு தோணுச்சு. அதுக்குத்தான் இந்த ஆவணப்படம்.'

'

மின்சாரம் பாயுற மாதிரி ஒரு இன்டர்வெல் சீன் - 'விவேகம்' சீக்ரெட் பகிரும் கபிலன் வைரமுத்து

Thursday, 3 August 2017






தல அஜித்குமார்ன் சிலை #vivegam #vivegamcelebartion


தமிழ் சினிமாவில் தனக்கென தனி ராஜ்யத்தை உருவாக்கியவர் தல அஜித். பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் இவர் தற்போது விவேகம் படத்தின் ரிலிஸ்காக காத்திருக்கிறார்.
தொடர் வெற்றிகளை தந்து கொண்டிருக்கும் அஜித் இன்றோடு சினிமாவில் அறிமுகமாகி 25 வருடத்தை நிறைவு செய்துள்ளார்.
இதை ரசிகர்கள் 25YRS OF INCOMPARABLE AJITH என்ற ஹேஷ்டேக்கோடு கொண்டாடி வருகின்றனர்.
தற்போது தொடர்ந்து அஜித்தோடு ஹாட்ரிக் படத்தை கொடுத்துள்ள இயக்குனர் சிவா அஜித்திற்கு வாழ்த்துக்களை நன்றியாக தெரிவித்துள்ளார்.
25வருட சினிமாவில் நேர்மையான, பணிவான பெரிய மனிதர். உண்மையான தூண்டுகோலாக இருப்பதற்கு நன்றி என்று கூறியுள்ளார்.
சினிஉலகமும் 25 வருடத்தை நிறைவு செய்த அஜித்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.


SAI SAI 

25 வருடத்தை நிறைவு செய்த நேர்மையான தல - நன்றி தெரிவித்த விவேகம் சிவா

Wednesday, 2 August 2017

நாங்கள் ரேஷன் கடைகளில் இனி பொருட்கள் விற்க மாட்டோம் என்றுதான் சொல்ல வந்தோம் அதற்குள் திருமுருகன் காந்தி ரேஷன் கடைகளை நாங்கள் மூட போகிறோம் என்று திரித்து சொல்லி விட்டார் - தேச பக்தாள்


ரேஷன் கடைகளை நாங்கள் மூட போகிறோம் என்று திரித்து சொல்லி விட்டார் - தேச பக்தாள்

Tuesday, 1 August 2017

மாதம் 8500 க்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே இனி ரேஷன் கார்டு.
மாதம் 8500 க்கு கீழ சம்பாதிக்கிறவன் பாதி பேரு தெருவுலதான் வாழ்றான்.
தெருவுல வாழ்றவன் போனா உனக்கு அட்ரஸே இல்ல, ரேஷன் கார்டு கிடையாது போன்னு விரட்டி விடுவான்.
கேஸ் மானியமும் இல்ல. ரேஷன் கார்டும் கிடையாது. விலைவாசியும் குறையாது.
காங்கிரஸ் 60 வருசமா ஆட்சி செஞ்சி என்னத்தை கிழிச்சதுன்னு கேட்டானுங்க.
அவனுங்க உண்மையிலேயே இப்டியெல்லாம் கிழிக்கல தான்.
மூன்று வருட ஆட்சியில் மோடி செய்த ஒரே சாதனை காங்கிரசை வெறுத்தவன் கூட காங்கிரஸே பரவாயில்லை என நினைக்க வைத்தது தான்.
குறிப்பு:- "மோடிக்கு சொம்பு தூக்கிட்டுவரும் பக்தாளுக்கு ஆபாச அர்சணை இங்கு இலவசமாக செய்யப்படும்"

#நினைவில்_இருக்கட்டும் 😏

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com