ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படும் அஜித்குமார் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து "விஷ்வாசம் " படத்தில் நடித்து வருகிறார்.
அஜித்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்த நயன்தாரா தற்போது நான்காவது முறையாக அஜித்துடன் "விசுவாசம்" படத்தில் கைகோர்த்துள்ளார்.
இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
மேலும், விஷ்வாசம் படத்தில் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அனிகா நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில். விஸ்வாசம் படத்திலும் ஒரு கிராமிய கரகாட்ட பாடல் இடம்பெறுகிறது. அஜித்துடன் இணைந்து தேனி, திண்டுக்கல் பகுதிகளை சேர்ந்த 300 கிராமிய கலைஞர்கள் பங்கேற்று ஒரு பாடல் காட்சியில் நடிக்க உள்ளனர். இந்த பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.
அழிந்து வரும் கலைக்கு புத்துயிர் ஊட்டும் தல அஜித்..!! 300 பேருக்கு வாழ்க்கை கொடுத்த அஜித்..! விஸ்வாசம் படத்தின் அப்டேட்..!!
July 26, 2018














