HEADER

... (several lines of customized programming code appear here)

Sunday, 10 November 2019




“கலைஞானி” கமல்ஹாசன் : 60 ஆண்டுகள் தமிழ் படைப்புலகின் சகலகலா இயக்கம்... https://e-funandjoyindia.blogspot.com/2019/11/60.html?spref=tw



"கமல் எனக்குக் கொடுத்த அட்வான்ஸ்... அன்னைக்கு நைட்டு தூக்கமே வரல”
இப்புடி ஒரு வாய்ப்ப தந்த கமல் சார் அப்பவும், இப்பவும் என் கண்ணுக்கு கடவுளா தெரியுறாரு." - வடிவேலு

தமிழ் சினிமாவின் பெருமையாகத் திகழும் உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் இன்று. அவர் சினிமாவுக்கு வந்து 60 ஆண்டுகளானதையும் கொண்டாடி வருகின்றது தமிழ் சினிமா. நகைச்சுவை நடிகர் வடிவேலு, கமல்ஹாசன் தனக்கு அளித்த நல்வாய்ப்பு குறித்தும் அவருடனான தனது பழக்கம் குறித்தும் நக்கீரனில் எழுதிய தொடரில் பகிர்ந்தது...

"பிரார்த்தனா ட்ரைவ்-இன் தியேட்டர்ல "சிங்காரவேலன்' படத்தோட ஷூட்டிங் நடக்குது. கமலோட பிரெண்டுகள்ல ஒருத்தனா அதுல நானும் நடிச்சுக்கிட்டிருக்கேன். ஷூட்டிங் பிரேக்ல நாம்பாட்டுக்கு. ஒரு ஓரமா போய் நிக்கிறேன். கமல் சார் என்னயவே பாக்குறாரு. கிட்ட வர்றாரு. அப்புடியே ஏந்தோளுமேல கையப்போட்டுக் கிட்டு "கொஞ்சம் நடந்துகுடுத்துட்டு வரலாம்'ங்கிறாரு. "ஆத்தாடீ... எம்புட்டு பெரிய நடிகரு. நம்ம தோள்ல கையப் போட்டு பேசுறாரே'னு மனசு பரபரக்குது. அவரு கூட போறேன். யூனிட்டு இருக்க எடத்த விட்டு கடேசிக்கு வந்துட்டம்.

‘"வடிவேலு ஒங்களுக்கு எந்த ஊரு?"னு கேக்குறார்.

‘"மதுரதேங்க சார்."

‘"மதுரயேவா.?"

"ஆமாங்க சார். அம்மா ஊரு செவகங்க பக்கம். எங்க கொலசாமி கோயிலு பரமக்குடிக்கிட்டத்தான் இருக்கு."

தலய ஆட்டிக்கிட்டாரு கமல்.

"ஒங்களுக்கு என்னென்ன தெரியும்?"

"எதுங்க சார்?"

"ஒங்களுக்கு சினிமா சம்பந்தமா என்னென்னா தெரியும்?"

"ஆடுவேன்... நல்லா பாடுவேன்."

"கத்துக்கிட்டீங்களா?"

"மொறயா கத்துக்கல. ஆனா கேள்வி ஞானம்பாங்களே... அப்புடித்தான் தெரியும்."

அடுத்த நிமிஷமே அங்ஙனக்குள்ளயே பாடூங்கிறாரு.

நானும் யோசிக்கல. டி.எம்.எஸ். பாட்டு... அதுவும் எம்.ஜி.ஆரு பாட்டுன்னா எனக்கு உசுராச்சே... எடுத்துவிட்டேன் சவுண்டா ஒரு பாட்ட. சிரிச்சாரு.

"என்னோட ஆபீஸ் போங்க. அங்க டி.என்.எஸ். இருப்பாரு. அவரப் போயி பாருங்க... நாளைக்கி காலைல போய் பாருங்க"ன்னாரு.

மறுபடி ஷூட்டிங் தொடங்குது. எனக்குன்னா இருப்பு கொள்ளல. ஷூட்டிங் முடிஞ்சதுமே 'கௌம்புடா வடிவேலு'னு கௌம்பீட்டேன் எல்டாம்ஸ் ரோட்டுக்கு.

டி.என்.எஸ். சாரைப் பாத்தேன். ஒரு கவர குடுத்தாரு. சஸ்பென்ஸ்ல மண்ட வெடுச்சிரும் போல இருந்துச்சு. வெளிய வந்து பிருச்சுப் பாத்தேன்.

'டக்குடு டக்குடு டக்குடு டக்குடு'னு உள்ளுக்குள்ள சந்தோஷத்துல குருத ஓடுது. ஆனந்தத்துல கண்ணீரும் பொங்குது.

'தேவர் மகன்' படத்துல நடிக்கிறதுக்கு வாய்ப்பும் அஞ்சாயிரம் ரூபாய்க்கு ஒரு செக்கும். மிஞ்சிப்போனா ரெண்டாயிரத்துக்கு மேல ஸிங்கிள் பேமண்டு வாங்கினதில்ல. மொத மொதல்ல... அஞ்சாயிரம். அதுலயும் நான் வாங்குன மொதல் செக்கு. நைட்டெல்லாம் எங்க தூக்கம் வந்திச்சு?!

காலேல திரும்பவும் ‘சிங்காரவேலன்' ஷூட்டிங் ஸ்பாட்டு.

"நேத்தே போயிட்டிங்க போலருக்கு?" கேட்டாரு கமல்.

"காலேல வரைக்கும் தாங்காது சார். அதான்..."னு இழுத்தேன். சிரிச்சார்.

'தேவர் மகன்'ல வர்ற அந்த இசக்கி கேரக்டரு எனக்கு பெரிய வாழ்க்கய தந்துச்சு. படத்தோட பிரிவியூ ஷோ போட்ருக்காங்க. ஆஸ்பத்திரியில கைவெட்டுப்பட்டு கடப்பேன். கமல் சார் பாக்க வருவாரு. அப்ப சொல்லுவேன்... ‘"என்னா எழவு... திங்கிற கைலயே கழுவணும், கழுவுற கைலயே திங்கணும்'னு சொல்லுவேன். நான் வர்ற ஸீனப் பாத்திட்டு சிவாஜி அய்யா கமல் சார்கிட்ட சொல்றாரு... "யார்ரா இவேன். பெரிய்ய ஆளா வருவாண்டா"ங்கிறாரு.

நடிகர்திலகம் நம்மளப் பத்தி எதாச்சும் சொல்லாதான்னு ஏங்கிப் போயித்தான ஒக்காந்திருந்தேன். 'சடக்'குன்னு அவரு கால்ல விழுகுறேன்.

"இவேன் யாருடா?"ங்கிறாரு.

"நாந்தேய்யா வடிவேலுங்கய்யா"ங்கிறேன் கம்முன குரல்ல.

"டேய்ய்... நீதாண்டா ஒரிஜினல் மதுர பாஷ பேசீருக்க"னு என்னய தட்டிக்குடுக்குறாரு. ஒடம்பே சிலுத்துப் போகுது எனக்கு.

இப்புடி ஒரு வாய்ப்ப தந்த கமல் சார் அப்பவும், இப்பவும் என் கண்ணுக்கு கடவுளா தெரியுறாரு."

கமல் எனக்குக் கொடுத்த அட்வான்ஸ்... அன்னைக்கு நைட்டு தூக்கமே வரல” இப்புடி ஒரு வாய்ப்ப தந்த கமல் சார் அப்பவும், இப்பவும் என் கண்ணுக்கு கடவுளா தெரியுறாரு." - வடிவேலு...

Saturday, 9 November 2019


அஜித்தை அதிதீவிரமாக நேசிக்கும் எத்தனையோ ரசிகர்கள் இருக்கிறார்கள். இவ்வருடம் அவரின் நடிப்பில் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படத்தை கொடுத்து அசத்தி விட்டார்.
வசூலிலும் நல்ல சாதனை செய்தது என்பதை விட அஜித் எதிர்பார்த்தது போலவே மக்களிடம் நல்ல விசயங்கள் சரியான முறையில் சென்றடைந்தன.
அடுத்ததாக அவரின் வலிமை படத்தின் வேலைகளும் தொடங்கிவிட்டன. ரசிகர்கள் அவர் சார்ந்த ஒவ்வொரு விசயங்களையும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்ட தல ரசிகர்கள் அஜித்திற்காக கானா பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.


விரைவில் வெளியாகவுள்ள இப்பாடல் தலயோட பேர சொன்னா தமிழ்நாடே அதிருது என தொடங்குகிறது. அதன் புரமோ தற்போது வெளியாகியுள்ளது.. 

Coming Soon From Team Vellore Thala Kottai Team ....

400 people are talking about this

தலயோட பேர சொன்னா தமிழ்நாடே அதிருது! அஜித் ரசிகர்களுக்கு செம விருந்து...

Friday, 8 November 2019



கமல்ஹாசன், ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்கள். இவர்கள் நடிப்பில் அடுத்து தர்பார், இந்தியன் 2 ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் கே.பி அவர்களின் சிலை திறப்பு நிகழ்விற்கு கமல், ரஜினி இருவருமே கலந்துக்கொண்டனர், அதில் ரஜினிகாந்த் மிக நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ரஜினிகாந்த் கமல் தயாரித்து நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தை பார்த்து அசந்துவிட்டாராம்.
இரவு 2.30 மணிக்கு படம் முடிந்து உடனே கமல் வீட்டிற்கு சென்று, அவரிடம் ‘நீங்கள் என்னை விட வயதில் சிறியவர்.
இருந்தாலும் உங்கள் காலில் விழ நான் தயாராகவுள்ளேன்’ என்று ரஜினிகாந்த் சொன்னாராம்.

அந்த படத்தை பார்த்துவிட்டு, இரவு 2.30 மணிக்கு கமல் காலில் விழ வேண்டும் என்று நினைத்தேன்! ரஜினி நெகிழ்ச்சி


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அடுத்ததாக பணியாற்றப்போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி இன்னும் ரசிகர்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது.
தர்பார் படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி இருக்கும் வேளையில் அவரின் அரசியல் மீதான பார்வையும் அரசியல் வட்டாரத்தில் கூர்மையடைந்துள்ளது.
கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி இன்று சென்னையில் ராஜ் கமல் ஃபில்ம்ஸ் கட்டிட திறப்பு, இயக்குனர் பால சந்தர் சிலை திறப்பு விழாவிலும் கலந்துகொண்டார்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் திருவள்ளுவரைப் போல என் மீதும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள்: திருவள்ளுவரும் சிக்க மாட்டார், நானும் சிக்க மாட்டேன் என எதிர்பாராத அதிரடி கொடுத்துள்ளார்.
தற்போது அரசியல் பிரமுகர் திருமாவளவன், துணிச்சலாக தனது முடிவை தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்; ரஜினியின் கருத்து ஆறுதலை தருகிறது! என கூறியுள்ளார்.

எதிர்பாராத ஷாக்! காவி அமைப்பு அத்தனை பேருக்கும் ரஜினி கொடுத்த சரியான பதிலடி

Thursday, 7 November 2019



Happy Birthday to dear KAMAL HASSAN SIR. 


தமிழ் சினிமாவின் செல்வமாக, 60 ஆண்டுகளுக்கு முன்னர் களத்தூர் கண்ணம்மா என்கின்ற படத்தில், “செல்வம்”, என்னும் கதாபாத்திரத்தில், களமிறங்கிய கலைஞானி, சினிமா என்கின்ற பெரும் உலகத்தின் “அபூர்வ ராக”மாக, “விஸ்வரூபம்” எடுத்து 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

கமல்ஹாசன் என்னும் “கலைஞன்” சினிமா என்கின்ற கலை வடிவத்தை சரியான வடிவ நேர்த்தியுடன் கையாண்டு பிரவாகமெடுத்த “மகாநதி”. நிழலாக இருக்கும் இலக்கியத்தை, நிஜப்படுத்திய உலக சினிமா “நாயகன்”- தான் “நம்மவர்”, கமல் ஹாசன் . ‘உலக நாயகன்’ என்று, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதன் பின்னணியில், கலைஞானியின், சினிமா என்கின்ற கலை வடிவத்திற்கு தன்னையே அர்ப்பணித்த நேர்த்தி, சினிமாவின் கலைப்பூர்வமான நுணுக்கங்களை அழகுற கையாள்வதற்கான முனைப்பு, சினிமா என்னும் கனவு தொழிற்சாலையில் “நானும் ஒரு தொழிலாளி”, என்கின்ற உழைப்பு போன்ற அத்தனை அம்சங்களும் அழகுற “அரங்கேற்றம்” கண்டுள்ளது நிதர்சனம்.

தமிழ் சினிமாவின், இலக்கியமாக திகழும் கலைஞானி கமல்ஹாசன், சினிமா வானில் மின்னி மறையும், நட்சத்திரமாக மட்டுமல்லாமல், ஒரு “மூன்றாம் பிறையாக “. இன்றும் திகழ்வதை இன்னும் ஒரு நூற்றாண்டுக்கும் , ” நினைத்தாலே இனிக்கும்”. சினிமாவும் , நம்மவரான, கலைஞானியும், “அபூர்வ சகோதரர்கள்”. “அவர்கள்”- நமக்கு ரசனைக்கான “ராஜபார்வை” தந்தார்கள். தமிழ் சினிமாவின் பால பாடத்திற்கான “குரு”-வாக திகழ்ந்து, இந்திய திரையரங்க வெண்திரைகளில், கடந்த 60 ஆண்டுகளாக விரிந்திட்ட பலவிதமான, “குணா”திசயங்களை , “மனிதரில் இத்தனை நிறங்களா”, என்கின்ற விந்தையான வியப்பில் ஆழ்த்தியவர், நம்மவர் “கலைஞானி” கமல்ஹாசன்.

முள்ளும் மலரும் நிறைந்த தமிழ் சினிமாவின் பாதையில், “செந்தாழம்ப்பூவில் வந்தாடும் தென்றலை..”, தனது சொந்த செலவில் தமிழ் சினிமாவின், சாமானிய ரசிகன் மீதும் தவழவிட்டவர் கமல்ஹாசன். இதனை இயக்குனர் இலக்கணமான மகேந்திரன் ஆமோதிக்கின்றார். மேலும், தமிழ் சினிமாவில், கூச்சல்கள், இரைச்சல்கள் சூழ்ந்திருந்த சூழலில், “சலங்கை ஒலி”-யினை சங்கமிக்கவைத்தவர், கலைஞானி கமல்ஹாசன். தமிழ் சினிமா என்னும் கலைவடிவ ஆழ்கடலில், “கடல் மீன்கள் ” போல் அவரின் சகல கலா திறன்கள் நிறைந்திருந்தாலும், “சிப்பிக்குள் முத்து”, என்று தன்னையும், தனது தனித்திறனையும் பலவித பரிசோதனைக்கு உட்படுத்தியவர், கலைஞானி கமல்ஹாசன்.

கலைஞர்களுக்கு சமூக அக்கறை வேண்டும் என்கின்ற விஷயத்தை முதன் முதலாக முன்னெடுத்தவர், நம்மவர், கலைஞானி கமல்ஹாசன் அவர்கள். கமல்ஹாசன் ரசிகர் நற்பணி மன்றங்களின் மூலமாக, இலங்கைத் தமிழர்களுக்கான பேரணியினை நடத்தியது, ரத்த தானம் முகாம்கள் நடத்துவது, தமிழ் இலக்கியத்தின், ஜாம்பவானாக, ஜெயகாந்தன் , ஞானக்கூத்தன், புவியரசு உள்ளிட்ட முன்னோடிகள் கூட ஆர்வமுடன் கலந்து கொள்ளும் அளவிலான சிறப்பு வாய்ந்த இலக்கிய கூட்டங்கள் நடத்துவது என்றும், “மைய்யம்”, என்னும் பத்திரிக்கை, நடத்தப்பட்டது போன்ற பல நலப்பணிகள் நடத்திவந்த நம்மவர், கலைஞானி, “உன்னால் முடியும் தம்பி”, என்னும் திரைக்காவியத்தில், “அமைதி புரட்சி இயக்கம்”, என்கின்ற பெயரில் தமிழகத்தின் தற்”போதை”ய, குடி போதை கலாச்சாரத்திற்கு தகுந்த சாட்டையடி கொடுக்கும் விதமாகவும், குடி போதைக்கெதிராக போராடுகின்ற, ‘உதயமூர்த்தி’, என்னும் கதையின் நாயகன், கதா பாத்திரத்தில், சிறப்பான பங்களிப்பினை இன்றளவும் பொருந்துகின்ற விதத்தில், இயக்குனர் சிகரம்,கே.பாலச்சந்தர் அவர்களின் கைவண்ணத்தில், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கருத்து விருந்து அளித்தது மட்டுமல்லாமல், அந்த படம் வெளிவந்த 1987-ம் ஆண்டிலிருந்து, “தமிழக காமல்ஹாசன் நற்பணி இயக்கம்”, என்னும் சமூக இயக்கத்தை தனது தலைமையில் கட்டியமைத்தார், கலைஞானி கமல்ஹாசன். 

தமிழகத்தின் இன்னும் நிகழ்கின்ற ஜாதி ஆணவ வன்மத்திற்கு, பதிலடியை, 1992-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று , இந்திய சினிமாவின் முது பெரும் படைப்பாளிகளாக, ஷ்யாம் பெனெகல் மற்றும் திலீப் குமாரை வைத்து, வெளியிட்ட, தேவர் மகன், படத்தில், “புள்ள குட்டீங்கள படிக்க வைங்கடா..”, என்று நம்மவர் அன்று அறிவுறுத்தியதை, பின்பற்றியிருந்தால், இன்று நிகழும் பெருவாரியான, ஜாதி ஆணவ படுகொலைகள் தடுக்கப்பட்டிருக்கும். மேலும், காந்தியடிகள் எந்த கொள்கைக்கு சொந்தம், எந்த கொள்கைக்கு எதிரி என்று, “ஹே ராம்”, படத்தில், கலைஞானி வெளிப்படுத்தியதை, 2000-ம் ஆண்டில் புரிந்துகொண்டிருந்தால், நாம் 60-ம் ஆண்டு கலைஞானியின், கலை வாழவை கொண்டாடுவது மேலும் அர்த்தப்படும், மதிப்பு கடும். 

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதியில், 42 ஆண்டுகளுக்கு முன்னர், இலக்கிய உரை ஆற்றிட சென்ற கலைஞானி, ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில், தனது அறிவார்ந்த உரையினை பொழிந்து, தமிழ சினிமா ரசிகனின் கௌரவத்தையும், தமிழனின் அறிவார்ந்த ரசனையையும் உலக அளவில் உயர்த்தியும், ஏற்றியும் வைத்தார் உலக நாயகன். குவியும் புகழாக, சத்யபாமா பல்கலைக்கழகத்தில், முனைவர் பட்டம் பெற்று, தமிழ் சினிமாவின் சராசரி ரசிகர்களுக்கான தகுதியை முன்னெடுத்து, புது முகவரி தந்துள்ளார்.

அடுத்த வினாடி புதிர்களில், மூழ்கிக்கிடக்கும் நமது நெஞ்சங்களை, “அன்பே சிவம்”, என்று கலைஞானியுடனான, கலை பூர்வமான உறவின் மூலமாக தமிழ் கலாச்சாரம், கலை வடிவம், படைப்புத்திறன் சார்ந்த விழுமியங்களில், தமிழ் சினிமா கண்டெடுத்த , “கலைஞானி”, இன்னும், இன்னும் தமிழ் கலை சார்ந்த, படைப்பு இயக்கங்களுக்கான, “தலைவன் இருக்கின்றான்”, என்று, கலை, படைப்பு, அர்ப்பணிப்பு என்று, தன்னை தமிழ் சமூகத்திற்கு ஒப்படைத்து, 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கலைஞானி வாழும் சம காலத்தில் நாம் வாழ பிறந்தோம், கலை பூர்வமாக கடைத்தேற்றம் பெற்றோம் என்று பூரித்திடும் வகையில் நம்மை சிலிர்ப்பு கொள்ளும் உணர்விற்கு இன்றளவும் ஆழப்படுத்துபவர், உலகின் ஒரே
“உலக நாயகன்”, “கலைஞானி”, கமல்ஹாசன், என்பது தமிழ் சமூகத்திற்கு என்றென்றும் புகழ் மகுடமாகும்.. 



“கலைஞானி” கமல்ஹாசன் : 60 ஆண்டுகள் தமிழ் படைப்புலகின் சகலகலா இயக்கம்...

Tuesday, 5 November 2019

Image



தல அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்ளிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகியாகி நடித்து இருப்பார்.
இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். முழுக்க குடும்ப படமாக எடுக்கப்பட்ட படம் விஸ்வாசம். ரோபோ சங்கர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
அப்பா, மகள் செண்டிமென்ட் மையமாக வைத்து உருவான படம் இது. இந்த படம் வெளியாகி இன்றுடன் 300 நாள் ஆகிறது. 

இப்படம் உலகமுழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தமிழ் நாட்டில் மட்டும் 133cr கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த சாதனையா, பிகில் படம் மால் கூட இன்று வரை கூட   முறியடிக்க முடியவில்லை. தமிழ் நாட்டில் பொறுத்தவரை தல அஜித்தின் விஸ்வாசம் தான் NO 1 கலேக்‌ஷன் ஆகும். 

மேலும் இந்த படத்தை பற்றி ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று வந்து உள்ளது. 125 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 50 நாட்கள் கடந்த இந்த படம்..
50-வது நாளிலும் 1 கோடி ருபாய் செய்ததாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த படத்திற்கு பிறகு பெண்கள், குடும்ப ரசிகர்கள் அஜித்துக்கு அதிகமானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

விஸ்வாசம் படம் வெளியாகி இன்றுடன் 300 நாட்கள் ஆகிவிட்டது, இந்த படம் 50-வது நாட்களில் மட்டும் எவ்வளவோ வசூல் செய்தது தெரியுமா???....

Monday, 4 November 2019

கடைசி காலகட்டத்தில் அதிகமான பெண்கள் தஜ்ஜாலை பின்பற்றுவார்கள் இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ள நிகழ்வு நடக்க வேண்டுமென்றால் இந்த பூமியில் பெண்களை வழி கெடுக்க கூடிய அனைத்து விதமான சட்டங்களையும் பெண்களுக்கு இனிமை ஊட்டக்கூடிய வகையில் அது மோட்டிவேஷன் என்ற பெயரில் இன்று சினிமாவில் வலம் வருவதை காணலாம்..



பிகில் இந்த திரைப்படத்திலும் பெண்களுக்கு இனிமையான சட்டங்களும் மார்க்கத்திற்கு முரனான சட்டங்களும்.... We will release this video very soon.
“பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.
இந்த மார்க்கத்தில் பிறந்த உங்களுக்கு இதை சொல்ல தேவையில்லை சகோதரர்களே மார்க்க விடயங்களை அதிகமாக தேடிப் படியுங்கள்.
தஜ்ஜால் கையைப்பிடித்து கூப்பிட மாட்டான் வாருங்கள் உங்களை வழிகெடுக்க போகிறேன் என்று...இப்படித்தான் அவனுடைய முதல் சூழ்ச்சியையும் குழப்பங்களையும் உண்டு பண்ணுவான்.
Movie: BIGIL
Song Verithanam
Youtube: https://youtu.be/XL1kGUcBS7s?t=127
Please watch bigil Song video 2:07 to 2.14
If someone wears Illuminati Symbolism T Shirt in a movie. it doesn't  mean he/she belongs to illuminati group. he/she could be belongs to that group..
Mostly those who produces will show their brand by these ways
Don't ask whether vijay is Illuminati... i don't know whether vijay belongs to that Illuminati group or not.
Anyway only god knows

Image may contain: 1 person, smiling, night

கடைசி காலகட்டத்தில் அதிகமான பெண்கள் தஜ்ஜாலை பின்பற்றுவார்கள் ..




















GENELIA D'SOUZA CUTE IMAGES...



GENELIA/D'SOUZA/CUTE/IMAGES:-https://e-funandjoyindia.blogspot.com/2019/11/genelia-dsouza-cute-images.html?spref=tw

திரையில் பார்க்கும் ரசிகர்களையும் தாண்டி உடன் நடிக்கும் நடிகர்களும் அஜித் புகழ் பாடுவதும் இயல்பான ஒன்று. 

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகராக இருந்தாலும் அனைவரிடத்திலும் மரியாதை, எளிமை போன்ற இயல்புகளால் அனைவரையும் வசீகரித்து விடுகிறார் அஜித்குமார். 

அஜித்துடன் நடித்த பாதிப்பில் தன் செயல்பாடுகளில் எளிமையையும், மரியாதையையும் கொண்டுவந்துள்ளேன் என கூறிய பல நடிகர், நடிகைகள் கோலிவுட்டில் உண்டு. 

ரசிகர்களோடு சேர்ந்து எத்தனையோ நடிகர்களும் அஜித்தின் திரைப்படங்களை முதல் நாள் பார்த்து சிலாகிப்பதும் வாடிக்கை. ஆனால், படம் நடிப்பதை தவிர வேறு எந்த விதத்திலும் ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதில்லை நடிகர் அஜித்.

திரைப்படம் தவிர்த்து ரசிகர்களுடன் இவர் கடைசியாக பேசியது தனக்கும் அரசியலுக்குமான தொடர்பு என்ற ஒரு அறிக்கை மூலம் தான்.அஜித்திடம் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் இருந்தும் அவர் பேட்டி கொடுப்பதற்கு தயாராக இல்லை. 

ஏன், பேட்டி கொடுப்பதை தவிர்த்து வருகிறேன். என்று சின்னத்திரை பிரபலம் கோபிநாத்திடம்  அஜித் கூறியுள்ளார். அவர் கூறியதாவது,  அஜித்திடம் அவர் ஏன் பேட்டி கொடுப்பதில்லை என்று நான் கேட்ட போது, அவர் கூறிய பதில் எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. 

அஜித் கூறியதாவது, ஆரம்பத்தில் நடிக்க வந்தபோது எனக்கு தமிழ் சரியாக தெரியாது. பேட்டி கொடுக்கும்போது 'தமிழ் நடிகருக்கு தமிழ் தெரியாதா?' என விமர்சித்தார்கள். 

அதன் பிறகு ஆங்கிலத்தில் பேட்டி கொடுக்க ஆரம்பித்தேன், 'இவரு.. தமிழ் நடிகர்.. ஆனா, பெரிய இதாட்டம்.. இங்கிலிஷ்ல தான் பேசுவாரு!' என்று விமர்சித்தார்கள். 

நான் எதார்த்தமாக பேசிய வார்த்தைகளுக்கு வேறு அர்த்தம் இருந்தால் மீடியாக்கள் அதை கண்டுபிடித்து வேறு மாதிரி திரிக்கும் விதமாக செய்தி போட செய்தார்கள். அதனால் தான் அமைதியாக இருக்க ஆரம்பித்துவிட்டேன். அதன் பிறகு பேட்டி கொடுப்பதையே தவிர்த்தேன். இப்போதும், 'பேச கூட மாட்டேங்குறாரு, பேட்டி கொடுக்க மட்டேங்குறாரு என விமர்சிகிறார்கள்.என்று கோபிநாத்திடம் அஜித் கூறினாராம்.

இதன் மூலம் அஜித் பேட்டியே கொடுக்க மாட்டேன் என்கிறார் என்று கூறும் மீடியாக்கள் தான் அஜித் பேட்டி கொடுப்பதை தவிர்த்ததற்கு காரணம் என்று இதன் மூலம் தெளிவாக தெரிகின்றது.

தல அஜித் அவர்களை பற்றி கோபிநாத் அவர்கள் கூறிய சுவாரஸ்ய தகவல்...

Sunday, 3 November 2019

Image result for kamal hassan thalaivan irukiran latest images


அகழ்ப்போருக்கு முன்/அகழ்ப்போரின் போது/ கர்பலா - 13, கர்பலா - 14, கர்பலா-15:-https://e-funandjoyindia.blogspot.com/2019/11/13-14-15.html?spref=tw

தேவர் மகன்’ படத்தின் 2-ம் பாகமே ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது.
1992-ம் ஆண்டு சிவாஜி, கமல், ரேவதி, நாசர், கெளதமி, வடிவேலு, தலைவாசல் விஜய், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தேவர் மகன்’. பரதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய சாதனை படைத்தது. விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேநேரம் படத்தின் பெயர் காரணமாக சில சர்ச்சைகளும் அப்போது எழுந்தது.
இந்தப் படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கவுள்ளதாக கமல் கூறிவந்தார். ஆனால் ‘தேவர் மகன் 2’ என்ற பெயரில் இருக்காது என்றும் கூறியிருந்தார். தற்போது ‘தேவர் மகன் 2’ கதையைத்தான் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற பெயரில் உருவாக்க கமல் திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
‘தேவர் மகன்’ கதைப்படியே, இந்தப் படத்திலும் வடிவேலு இருக்கிறார். அவரிடம் கமல் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து வடிவேலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
முதல் பாகத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். தற்போது ‘தலைவன் இருக்கின்றான்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். தனது அரசியல் பயணத்துக்கு இந்தப் படத்தின் கதை பொருத்தமாக இருக்கும் என கமல் நினைக்கிறாராம்.
‘இந்தியன் 2’ படத்தை முடித்தவுடன், ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கப்படுகிறது.லைகா நிறுவனமே தயாரிக்க உள்ளதாம்.

தலைவன் இருக்கிறான்’ படத்தை பற்றி ஆச்சயர்யமளிக்கும் முக்கிய தகவல்கள்,கமல் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்....

Saturday, 2 November 2019

அல்லாஹ்வின் மீது ஆணையாக சொல்றேன்... ஆரம்பத்தில் உங்க சொற்பொழிவு எனக்கு ரொம்ப குழப்பமா இருந்துச்சி. அதுக்கப்புறம் தெளிவா கவனத்தோடு கேட்டேன். அல்லாஹ் புரிய வச்சிட்டான்.


அகழ்ப்போருக்கு முன் |கர்பலா - 13




அகழ்ப்போரின் போது அல்லாஹ் புகழ்ந்த முன் மாதிரி | கர்பலா - 14





நபி(ஸல்) அவர்கள் மக்கா சென்றது ஏன் ? | கர்பலா-15




பத்ருப் போர்க் கைதிகளும் அல்லாஹ்வின் தீர்ப்பும் | கர்பலா-10.11.12:- https://e-funandjoyindia.blogspot.com/2019/10/10.html?spref=tw


அகழ்ப்போருக்கு முன்/அகழ்ப்போரின் போது/ கர்பலா - 13, கர்பலா - 14, கர்பலா-15...



POOJA HEGDE CUTE IMAGES:- https://e-funandjoyindia.blogspot.com/2019/10/pooja-headge-cute-images.html?spref=tw




நடிகர் விஜய்யின் "பிகில்" திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக கடந்த 25-ம் தேதி வெளியானது. ரிலீஸ் தேதியில் இருந்து இன்று வரை அமோகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு போட்டியாக கைதி திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகின்றது.

இந்நிலையில், பிகில் படத்தை தமிழ்நாட்டில் வாங்கிய விநியோகஸ்தர் படம் முதல் வார முடிவில் (7 நாட்களில்) ரூ. 100 கோடிக்கு வசூலித்துள்ளது என அறிவித்துள்ளார்.

ஆனால், அதே நேரம் கடந்த பொங்கல் பண்டிகையன்று ரஜினியின் பேட்ட படத்தை எதிர்த்து களமிறங்கிய அஜித்தின் விஸ்வாசம் படம் 8 நாள் முடிவில் ரூ.125 கோடி வசூலித்துள்ளதாக அந்த படத்தின் விநியோகஸ்தர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இதன் மூலம், நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் வசூல் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் வசூலை விட குறைவான வசூலை செய்துள்ளது. எனவே, இந்த வருடம் வெளியான படங்களில் தமிழகத்தில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் விஸ்வாசம் தான் முதலிடம் என்பது உறுதியாகியுள்ளது.

யூட்யூப், ட்விட்டர் என பிகில் ஃபர்ஸ்ட்லுக் முதல் ட்ரெய்லர் வரை சாதனை மேல் சாதனை படைத்த விஜய் ரசிகர்களுக்கு களத்தில் விஸ்வாசம் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க முடியாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் வாரத்தில் தமிழக வசூலில் விஸ்வாசத்திடம் தோல்வியடைந்த பிகில்., விநியோகஸ்தர்கள் கூறிய சூப்பர் தகவல்...

Friday, 1 November 2019



மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டி என்ற ஊரில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட நிகழ்வு இந்தியாவையே கண்ணீரில் மூழ்கடித்தது.

திரையுலக பிரபலங்கள் பலரும் சுஜித்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

ஆனால் இதுவரை இது பற்றி அஜித்தோ, விஜயோ எதையும் பேசாமல் இருந்து வந்த நிலையில் தல தன்னுடைய நண்பர்களுடன் இது பற்றி பேசியுள்ளார்.


2 வயது சிறுவன் உணவு, தண்ணீர் கூட இல்லாமல் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கி தவித்து இறந்தது வேதனைக்குள்ளான ஒன்று, சுஜித்தின் மரணத்தால் தூக்கம் கூட வரவில்லை.

முதல் நாளே சிறுவனை உயிருடன் மீட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் வீட்டில் எல்லாருமே பிராத்தனை செய்து கொண்டிருந்தோம், ஆனால் சுஜித்தை காப்பாற்ற முடியவில்லை.

நம்மிடம் எவ்வளவோ தொழில்நுட்பம் இருந்தும் இது போன்ற விசயங்களுக்கு நம்மிடம் ஒன்றுமே இல்லை என்பது வருத்தத்திற்கு உரிய விசியம் தான், அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகில் இனியும் ஆழ்துளை கிணறுகளால் எந்த குழந்தையின் உயிரும் பறிபோக கூடாது என பேசியுள்ளார்.

சுஜித்தின் மரணம் குறித்து வேதனையுடன் பேசிய அஜித் –என்ன சொன்னார் தெரியுமா?...

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com