HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday, 16 March 2021

 

 
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் தங்களுடைய சினிமா கேரியரில் ஒரு குறைந்தது ஒரு மோசமான தோல்வி படத்தையாவது கொடுத்திருப்பார்கள். அந்த வகையில் ரஜினிக்கு அமைந்த திரைப்படம்தான் பாபா.

2002ஆம் ஆண்டு ரஜினிகாந்த் மற்றும் மனிஷா கொய்ராலா நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாபா. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த திரைப்படம்.

பாபா படத்தின் கதை மற்றும் திரைக்கதை அனைத்தையும் ரஜினிகாந்த் தான் எழுதியிருந்தார். மேலும் அந்த படத்தை சொந்தமாகவும் தயாரித்தார். அதற்கு முன்னர் வெளியான ரஜினி படத்தின் வெற்றியை வைத்து பாபா படத்தின் வியாபாரம் முடிக்கப்பட்டது.

ஆனால் பாபா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் சம்பந்தப்பட்டவர்களிடம் பாபா படத்தைப் பற்றிய விவரத்தை கேட்டு தெரிந்துகொண்டு ரஜினி செய்த செயல்தான் இன்று வரை தமிழ் சினிமாவில் அவரை சூப்பர் ஸ்டார் என கொண்டாடுவதற்கு காரணம் என தயாரிப்பாளர் ஆனந்த் L சுரேஷ் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

பாபா படத்தின் தோல்வியை விட தன் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்கள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளானது ரஜினிகாந்துக்கு இரவு முழுவதும் தூக்கத்தை தரவில்லையாம். இதனால் சம்பந்தப்பட்ட பெரியவர்களை அழைத்து பாபா படம் எந்தெந்த இடங்களில் எவ்வளவு தோல்வி அடைந்தது என கேட்டு தெரிந்து கொண்டாராம்.

உடனே இரவோடு இரவாக அந்த லிஸ்டை ரெடி செய்து நஷ்டத்தை ஈடு கட்டாமல் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தோடு சேர்த்து தன்னுடைய சொந்த பணத்தை எடுத்து கொடுத்தாராம் ரஜினிகாந்த்.

சமீபகாலமாக சிறுபிள்ளை நடிகர்கள் இரண்டு படம் நடித்து விட்டாலே நான் தான் சூப்பர் ஸ்டார் என பீற்றிக்கொள்ளும் நிலையில் இவ்வளவு பெரிய உதவியை செய்துவிட்டு சத்தம் இல்லாமல் தன்னுடைய அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விட்டாராம் ரஜினி. அதனால்தான் இன்றுவரை தியேட்டர்காரர்கள் ரஜினி படங்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள் எனவும் கூறியுள்ளார்

பாபா படுதோல்விக்கு ரஜினி செய்த கைமாறு.. இன்றைக்கும் எந்த நடிகரும் யோசித்து கூட பார்க்க முடியாத உதவி:-

 
























BIGG BOSS 4 GABRIELLA CHARLTON CUTE IMAGES:-

Sunday, 14 March 2021

 



தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே புதுமைகளை புகுத்தி பார்ப்பதில் மிகவும் முக்கியமானவர் கமலஹாசன். ஆண்டவர் என்று சும்மாவா சொல்கிறார்கள். வெளிநாடுகளில் எந்த புதிய டெக்னாலஜி வந்தாலும் அதை முதலில் தமிழ் சினிமாவுக்கு கொண்டுவருவதில் கில்லாடி இவர்.

அதுமட்டுமில்லாமல் பலரும் யோசித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு சினிமா நுண்ணறிவுகளைக் கொண்டவர். தன்னுடைய படங்களில் ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருக்க வேண்டுமென மெனக்கெட்டு உருவாக்குபவர். இதனாலேயே கமல்ஹாசன் காலம் கடந்தும் போற்றப்படுகிறார்.

ஒரு சில சமயம் கமல் எடுக்கும் முயற்சிக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைத்ததுள்ளது. ஆனால் பல சமயம் அவருடைய புதிய முயற்சிகள் தோல்வியை சந்தித்தன. அந்த வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த திரைப்படம் என்றால் ஆளவந்தான் திரைப்படம் தான்.

அன்றைய காலத்தில் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவான திரைப்படம். மேலும் ரஜினிக்கு பாட்ஷாவை கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு. இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தாலும் கதைக்கரு மற்றும் திரைக்கதை கமலுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி அனைத்தும் பிரம்மாண்டமாக உருவான ஆளவந்தான் திரைப்படம் தோல்வி பெற்றதற்கு காரணமே அதனுடைய திரைக்கதை ஓட்டம் சரியாக அமையவில்லை என்பது தானாம். ஒரு படத்தின் கதைக்கரு சரியாக இருந்தாலும் அந்தக் கருவை எடுத்து செல்ல வேண்டிய திரைக்கதை சரியாக இருந்தால் மட்டுமே படம் ரசிகர்களை கவரும்.

ஆனால் அதை ஆளவந்தான் திரைப்படம் செய்ய தவறி விட்டதாம். இந்த படத்தை எப்படி உருவாக்கினார்கள் என்று வியந்தாலும் பெரும்பாலும் ரசிகர்களுக்கு ஆளவந்தான் படம் புரியவில்லை என்பது தான் உண்மை கருத்தாக இருந்ததாம். மேலும் சலிப்படைய வைக்கும் திரைக்கதை படத்திற்கு மேலும் சோதனையை கொடுத்ததால் அன்றைய காலத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த படங்களில் முக்கிய இடத்தை பெற்றதாம் ஆளவந்தான். இதனை சித்ரா லட்சுமணன் என்ற பிரபலம் ஓப்பனாக கூறியுள்ளார்.


பிரம்மாண்டமாக உருவான ஆளவந்தான் படம் தோல்வியடைய காரணம் இதுதான்.. வெளிப்படையாக சொன்ன பிரபலம்:-

Wednesday, 10 March 2021

 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் எந்திரன். 2010 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

இன்று வரை பல இடங்களில் எந்திரன் படத்தின் வசூல் தான் டாப் இடத்தில் உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். எந்திரன் படத்தில் ரஜினிக்கு முன்பாக கமல்ஹாசன் தான் நடிக்க இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

1998 ஆம் ஆண்டு கமல் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா நடிப்பில் உருவாக இருந்த எந்திரன் படத்தின் போட்டோ சூட் நடைபெற்றதுடன் படப்பிடிப்பு காலதாமதமாகி கைவிடப்பட்டது. அதற்கு காரணம் என்ன என்பதை அந்தப் படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றிய முத்து என்பவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

கமல் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா கூட்டணியில் உருவான எந்திரன் படத்தை மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்ததாம். மேலும் சங்கர் கொடுத்த பட்ஜெட்டை யோசித்து யோசித்து நாட்கள் கடத்திக் கொண்டிருந்தார்களாம். இதனால் கடுப்பான கமலஹாசன் மற்ற படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் எந்திரன் படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்துவிட்டாராம்.

enthiran-kamal-cinemapettai

enthiran-kamal-e-fun&joy

அதன் பிறகுதான் இந்த படம் ரஜினிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு எந்திரன் படம் படைத்த சாதனை எல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒரு கட்டத்தில் எந்திரன் படமும் மொத்தமாக கைவிடப்பட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானது.

அதன்பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் எந்திரன் படத்தை கையில் எடுத்து பிரமாண்ட வெற்றிப் படமாக கொடுத்ததாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எப்போதுமே நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல பேட்டிகளிலும் தெரிவித்துள்ளார். ஒருவேளை எந்திரன் படத்தில் கமல் நடித்திருந்தால் படம் எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனையாக ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.

எந்திரன் படத்திலிருந்து கமல் வெளியேற காரணம் இதுதான்.. இப்படி பண்ணா அப்புறம் யாரு தான் இருப்பாங்க?:-

Friday, 5 March 2021

 


அரசியல் மற்றும் உடல்நிலை சர்ச்சைக்கு பிறகு தற்போது ரஜினிகாந்த் அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அந்த வகையில் ஏற்கனவே நடித்து பாதியில் நிற்கும் அண்ணாத்த படத்தை விரைவில் முடித்துக் கொடுக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர்கள் பலரிடமும் ரஜினி கதை கேட்டு வருவதாக தெரிகிறது. அதில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி மற்றும் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் முதல் வரிசையில் உள்ளார்களாம்.

அதுமட்டுமில்லாமல் இனிமேல் அரசியல் இல்லை என்பதால், இனி வருடத்திற்கு 2 படம் நடிக்க வேண்டும் என உறுதி எடுத்துள்ளார். அதற்குத் தகுந்த மாதிரி சுறுசுறுப்பாக வேலை செய்யும் இளைஞர் கூட்டத்தை தேடிச் செல்கிறார் ரஜினிகாந்த்.

அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் சமீபகாலமாக தன்னுடைய படங்களில் சில விஷயங்களை தூக்கியாக வேண்டும் எனவும், இல்லையென்றால் அது தன்னுடைய மார்க்கெட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தன்னுடைய வட்டாரங்களில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது கதைகூற வரும் இயக்குனர்களிடம் தன்னுடைய வயதுக்கு ஏற்ற கதைகளை உருவாக்குங்கள் எனவும், ஹீரோயின்களுடன் டூயட், பறந்து பறந்து போடும் சண்டைக் காட்சிகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ரஜினிக்கு கதை எழுதும் இயக்குனர்கள் அனைவருமே தற்போது அவரது வயதுக்கு ஏற்ப எழுத வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இனி வரும் ரஜினி படங்களில் கண்டிப்பாக ஹீரோயினை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சிகள் இருக்காது. மேலும் வயதுக்கு ஏற்ற ரொமான்ஸ் இருக்கும் என்கிறார்கள்.

இனிமேல் என் படத்தில் இந்த விஷயம் இருக்கக் கூடாது.. இயக்குனர்களுக்கு கட்டளையிட்ட ரஜினி:-

Thursday, 4 March 2021

 


தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு அப்புறம் நடிப்பிற்காக பிறந்தவர் என மக்களிடம் பெயர் பெற்றவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் கிட்டத்தட்ட கலைத்துறை வாழ்க்கையில் பல விருதுகள் வாங்கியுள்ளார். சமீபகாலமாக எந்த ஒரு விருது விழாக்களிலும் நடிப்பிற்காக இவர் பரிந்துரைக்கப்படவில்லை, அதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் தனது வித்தியாச வித்தியாசமான நடிப்பால் அசத்தியிருப்பார். தமிழ் சினிமாவில் இன்னும் பல நடிகர்கள் கமல்ஹாசன் சாதித்ததை முறியடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் பல சாதனைகள் படைத்துள்ளார் கமல்ஹாசன். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் ஒரு விருது விழாவில் ஒரு படம் நன்றாக ஓடினாலோ, வசூல் பெற்றாலோ அது வெற்றி கிடையாது என்றும், என்னை பொருத்தவரை படம் எப்படிப்பட்ட படம் என்பதையும் தாண்டி நான் இறந்த பிறகும் அந்த படம் நின்று பேசுமேயானால் அதுதான் வெற்றி என தெரிவித்திருந்தார்.

அந்த வரிசையில் கமல்ஹாசன் கலைத்துறையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நின்று பேசக்கூடிய படங்கள் ஏராளமாக உள்ளன. கிட்டத்தட்ட கலைத்துறையில் 19 பிலிம்பேர் அவார்ட் வாங்கிய கமல்ஹாசன் தற்போது எந்த ஒரு விருது விழாக்களில் விருது வாங்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

kamal haasan cinemapettai

அதற்கு என்ன காரணம் என்வென்றால் 2000 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இனிமேல் விருதுக்கு என்னை பரிந்துரைக்க வேண்டாம் என தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி ஃபிலிம் ஃபேர் விருது துறைக்கு அனுப்பிவிட்டார். அதில் இனி இளைஞர்களுக்கு விருது கொடுக்கும்படி பெருந்தன்மையாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஒரு காரணத்தால் தான் தற்போது வரை தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கமல்ஹாசனுக்கு பெரிய அளவில் விருதுகள் எதுவும் தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கமலஹாசன் 2000ம் ஆண்டு வெளியான ஹேராம் படத்திற்காக பிலிம்பேர் விருது வாங்கினார். அதன் பிறகு பல படங்களில் நாமினேட் செய்யப்பட்டாலும் பிலிம்பேர் நிறுவனம் விருது கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




19 ஃபிலிம்பேர் விருதுகள் வாங்கிய உலகநாயகன்.. ஹேராம் படத்திற்கு பிறகு வாங்காத காரணம் என்ன?:-

Sunday, 28 February 2021

 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலகுறைவு மற்றும் அரசியல் சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தன்னுடைய பழைய சுறுசுறுப்புடன் படங்களில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ரஜினி நடிப்பில் கடைசியாக உருவாகிக் கொண்டிருந்த திரைப்படம் தான் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படத்தில் ரஜினியின் எவர்கிரீன் ஜோடிகளான குஷ்பு மற்றும் மீனா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர் 

அதனைத் தொடர்ந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் போன்ற பல நட்சத்திரங்கள் அண்ணாத்த படத்தில் நடித்து வருகின்றனர். டி இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் திடீரென சிலருக்கு குரானா தொற்று ஏற்பட்டு அதன் காரணமாக படப்பிடிப்பு பாதியில் விடப்பட்டது.

தற்போது மீண்டும் விரைவில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்குவதற்கான வேலைகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. முன்னதாக ரஜினி கூறாமல் அண்ணாத்த படம் அடுத்த கட்டத்திற்கு நகராது என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

தற்போது ரஜினியே சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் நேரடியாக பேசியதாக செய்திகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் மார்ச் 15ஆம் தேதி ரஜினி அண்ணாத்த படக்குழுவினருடன் இணைய உள்ளாராம். சில நாட்கள் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேரடியாக பொள்ளாச்சியில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.

2021 தீபாவளி ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அண்ணாத்தே படத்தை விரைவில் முடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் ரஜினி அடுத்த படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அரசியல் இல்லை என்றாலும் சினிமாவில் மூச்சுள்ள வரை இருப்பேன் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறாராம்.

அண்ணாத்த படத்திற்காக ரஜினி போட்ட மாஸ்டர் பிளான்.. தலைவர் தலைவர்தான்!:-

Thursday, 25 February 2021

 



த்ரிஷ்யம் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மற்ற மொழிகளில் த்ரிஷ்யம் 2 படத்தை ரீமேக் செய்வதற்கான வேலைகளை தொடங்கி விட்டனர். தெலுங்கு சினிமாவில் திரிஷ்யம் 2 படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

இந்நிலையில் தமிழில் கமல்ஹாசன் பாபநாசம் என்ற திரிஷ்யம் ரீமேக் படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது பாபநாசம் 2 படத்தை உருவாக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்களாம். மேலும் பாபநாசம் 2 படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பழங்கால நடிகை ஸ்ரீபிரியா வாங்கியுள்ளார்.

சமீபத்திய பேட்டியில் கூட ஸ்ரீபிரியா கமலஹாசன் இல்லாமல் பாபநாசம் 2 வாய்ப்பே இல்லை என குறிப்பிட்டிருந்தார். தற்போது அரசியலில் பிசியாக இருக்கும் கமலஹாசனும் ஸ்ரீபிரியாவும் இது குறித்து பேசியதாக செய்திகள் வெளியாகின.

பாபநாசம் படத்தை மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் இயக்கினார். ஆனால் அப்போது கமலுக்கும் ஜீத்து ஜோசப்புக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. கமலஹாசன் கதையில் தலையிட்டதாகவும் கூறுகின்றனர்.

இதனால் தன்னுடைய மாற்றத்திற்கு அவர் சரிபட்டு வரமாட்டார் என தெரிந்து ஜீத்து ஜோசப் வேண்டாம் என கூறிவிட்டாராம் கமல். இந்நிலையில் கமலஹாசனின் ஃபேவரைட் இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் பாபநாசம் படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

மேலும் தேர்தல் முடிந்து ஒரே மாதத்தில் பாபநாசம் 2 படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிப்பதற்கான வேலைகளை முன் கூட்டியே செய்து விடுங்கள் என தயாரிப்பு நிறுவனத்திற்கு கமல் கூறியதாக தெரிகிறது. கமல் மற்றும் கே எஸ்ரவிக்குமார் கூட்டணியில் முதல் முறையாக ஒரு திரில்லர் படம் உருவாக உள்ளது. தமிழில் இப்படி இழுபறி நடந்துகொண்டிருக்கும் நிலையில் மலையாளத்தில் த்ரிஷ்யம் 3 படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள் என்பதும் கூடுதல் தகவல்.


பாபநாசம் 2, ஜீத்து ஜோசப் வேண்டாம், நம்ம இயக்குனர கூப்பிடுங்க.. கூண்டோடு படக்குழுவை மாற்றிய கமல்:-

Saturday, 13 February 2021

மிக அதிர்ச்சி தகவல். வாழைப்பழத்தில் கரபான்பூச்சி மரபணு. கேட்கவே அருவருப்பாக உள்ளது. இந்த காணொளியை பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி. 
Arise & Ascend
 
  21 GM Contaminated Food Items:- 

            allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW




 

மரபை மாற்றும் மரபணு | மிக அதிர்ச்சி தகவல். வாழைப்பழத்தில் கரபான்பூச்சி மரபணு. கேட்கவே அருவருப்பாக உள்ளது. இந்த காணொளியை முழுமையாகப் பாருங்கள் :-

Friday, 12 February 2021

 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அரசியல் பிரபலமாகவும் ஒரே நேரத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் கமலஹாசன் கடைசி நேரத்தில் சொதப்பியதால் லோகேஷ் கனகராஜ் தற்போது வேறு ஒரு நடிகருடன் கை கோர்க்க உள்ளாராம்.

தமிழ் சினிமாவின் ஆல் டைம் டாப் நடிகர்களில் மிக முக்கியமானவர் உலகநாயகன் கமலஹாசன். கடந்த சில வருடங்களாகவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவு ரசிகர்களை கவரவில்லை. பாபநாசம் படம் மட்டுமே வெற்றி பெற்றது.

இதற்கிடையில் திடீரென அரசியலில் நுழைந்து மக்கள் நீதி மையம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இன்னும் சில மாதங்களில் எலக்சன் வரப்போவதால் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி விட்டாராம் கமலஹாசன்.

இதற்கிடையில் திடீரென அரசியலில் நுழைந்து மக்கள் நீதி மையம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இன்னும் சில மாதங்களில் எலக்சன் வரப்போவதால் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி விட்டாராம் கமலஹாசன்.

இதனால் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து பணியாற்ற இருந்த விக்ரம் என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக ஒரு ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் வெகுவேகமாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மாஸ்டர் படத்தில் பவானி கதாபாத்திரம் விஜய்சேதுபதியை உலக அளவில் பிரபலப்படுத்தி விட்டதால் லோகேஷ் கனகராஜை பயன்படுத்தி ஹீரோவாகவும் வேற லெவல் ஹிட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.

பிரபல முன்னணி நடிகருடன் அவசரஅவசரமாக கூட்டணி போடும் லோகேஷ் கனகராஜ்!! கமலின் விக்ரம் படம் கைவிடப்பட்டதா?? இதோ லோகேஷ் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்:-

Wednesday, 10 February 2021

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு கடைசி நேரத்தில் ரசிகர்களை கழுத்தருத்தது தான். பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும் சூப்பர் ஸ்டாரின் உடல்நிலை கருதி அவருடைய முடிவை மனதார ஏற்றுக் கொண்டனர். மேற்கொண்டு சினிமாவில் ரஜினிகாந்த் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வியும் நடிகர்கள் மத்தியில் எழுந்தது. அந்த கேள்விக்கு பதிலாக சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வருகின்ற தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் கோலாகலமாக வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். அதனை தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்போது விடுபட்ட அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பு தொடரும் என்பது தான். அதற்கான நேரமும் வந்து விட்டதாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம். மேலும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளாராம்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக சீயான் விக்ரம் நடிக்கும் சீயான் 60 படத்தை இயக்கப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சினிமாவில் மீண்டும் மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளாராம். அதாவது வருகின்ற தீபாவளிக்கு அண்ணாத்த படமும், அடுத்த பொங்கலுக்கு இன்னொரு படமும் கொடுத்துவிட வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம்

சூப்பர் ஸ்டாரின் மாஸ்டர் பிளான்.. அணைகட்டி தடுக்க அண்ணாத்த கால்வாய் இல்லடா, காட்டாறு!:-

Sunday, 7 February 2021

 



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் 6 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக பிரபல தயாரிப்பாளர் கூறிய செய்தி தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தல அஜித் பற்றி பலரும் நல்ல விதமாக கூறி கொண்டிருக்கிறோம். மேலும் தல அஜித் போல் ஒரு ஜென்டில்மேன் தமிழ் சினிமாவில் இல்லை என்பது போல பலரும் சிலாகித்து கூறியுள்ளனர். உடன் நடித்த நடிகர்கள், அஜித் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளிகள் என அனைவரும் தல அஜித்தின் பண்பைப் பற்றிப் பெருமையாக கூறினர்.

தற்போது அவருக்கு எதிராக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் குற்றசாட்டு வைத்தாலும் பரவாயில்லை, ஆனால் அஜித்தை அவன் இவன் என்று ஒருமையில் பேசியது பலருக்கும் பிடிக்கவில்லை.

இப்படி அஜித் மீது இவர் குற்றம் சாட்டி இருக்கும் நிலையில், தல அஜித் தன்னுடைய நண்பர் படம் ஒன்றிற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுப்பதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளது தல அஜித் எப்படிப்பட்டவர் என்ற குழப்பத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

தல அஜித் ஷாலினி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அமர்க்களம். 1999ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை அஜித்தின் நெருங்கிய நண்பர் சரண் இயக்கினார். அப்போது தல அஜீத்துக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் செக்கை தற்போது வரை தல அஜித் டெபாசிட் செய்யாமல் வைத்துள்ளாராம்.

ஏன் என்று கேட்டதற்கு, காதல் மன்னன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் தயாரிப்பாளர் பல நஷ்டங்களை சந்தித்ததால் அமர்க்களம் பட வெற்றியை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் எனவும், அதில் எனக்கு பத்து பைசா கூட வேண்டாம் எனவும் அந்த செக்கை வாங்கி வைத்துக் கொண்டாராம். இதனை தல அஜித்தின் நெருங்கிய நண்பரும் அமர்க்களம் படத்தின் இயக்குனருமான சரண் குறிப்பிட்டுள்ளார்.

நண்பருக்காக சம்பளமில்லாமல் நடித்த தல அஜித்.. இந்த மனுஷன போய் அந்த தயாரிப்பாளர் கேவலமா திட்டிவிட்டாரே!:-

Friday, 5 February 2021

Allahduriilah, what an explanation. Super bayan. Please watch this without fail. If possible, pls watch all videos from this channel.


             allah, allah names, ya allah           

PLEASE WATCH VIDEOS BELOW



 

குர்ஆன் ஹதீஸில்- நகரங்கள்/Halal Money:-

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com