HEADER

... (several lines of customized programming code appear here)

Monday, 24 July 2017

அஜித் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இன்று மாபெரும் உச்சத்தில் உள்ளார், இவரது திரையுலக வாழ்க்கை வரும் ஆகஸ்ட் 3 ம் தேதியுடன் 25 வருடங்கள் ஆகயுள்ளது.


ajith

 

இந்த சிறப்பான தினத்தை கொண்டாட விவேகம் படக்குழுவினரும் ட்ரைலரை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான GK சினிமாஸ் ஆகஸ்ட் 3-ம் தேதி அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான அமர்க்களம் படத்தை திரையிட முடிவு செய்துள்ளது.


அப்பறம் என்ன ரசிகர்களே சொல்லவா வேணும், அந்த நாளை அமர்களப்படுத்த ரெடி தானே?

ஆகஸ்ட் 3 அஜித் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் தான் - மரண மாஸ் தகவல் உள்ளே.!


நடிகர் ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ என்ற மோஷன் கேப்சரிங் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். தற்போது தனுஷ், அமலா பால், கஜோல் மற்றும் பலர் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சௌந்தர்யாவிடம் எதிர்காலத்தில் தமிழில் யார் நடிக்கும் படத்தை இயக்க ஆசை என்று கேட்டதற்கு, ‘அஜித் நடிக்கும் படத்தை இயக்க வேண்டும்’ என்றார்.
சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சௌந்தர்யாவிடம், தெலுங்கு பத்திரிகையாளர்கள் எதிர்காலத்தில் தெலுங்கில் யார் நடிக்கும் படத்தை இயக்க ஆசை என்று கேட்டதற்கு ‘சிரஞ்சீவி நடிக்கும் படத்தை இயக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.
தமிழில் அஜித்திற்கும், தெலுங்கில் சிரஞ்சீவிக்கும் ரசிகர்கள் மிகவும் அதிகம். அவர்களது படங்களை இயக்கினாலே ஒரு நட்சத்திர இயக்குனர் அந்தஸ்து வந்துவிடும். அதனால்தான் சௌந்தர்யா அப்படி கூறியிருக்கிறார் போலிருக்கிறது.
சௌந்தர்யா இயக்கியுள்ள ‘வேலையில்லா பட்டதாரி 2’ படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.

தமிழில் அஜித், தெலுங்கில் சிரஞ்சீவி – சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரே போடு

Saturday, 22 July 2017



அஜித்தின் விவேகம் படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. புரொமோஷன் வேலைகளில் படக்குழு பிஸியாக இருக்க, ஒருபக்கம் ரசிகர்களுக்காக பாடல்கள் வெளியிடுவது போன்ற வேலைகளையும் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அஜித்தின் விவேகம் பட டிரைலர் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாக இருப்பதாகவும், ஆகஸ்ட் 10 படம் வெளியீடு என்றும் கூறப்படுகிறது. சிவா மிகவும் மாஸ் கதைக்களத்தை வைத்து இயக்கியிருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷாரா ஹாசன் நாயகிகளாக நடித்திருக்கின்றனர்.
அனிருத் இப்படத்திற்காக இசையமைத்திருக்கும் மூன்று பாடல்கள் வெளியாகிவிட்டன.

விவேகம் பட டிரைலர் தேதி- அடுத்த அதிரடிக்கு தயாரான ரசிகர்கள்








#Thala #Ajith #Vivegam Movie Stills


வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே இளைஞர்களை ஃபோக்கஸ் செய்து தான் இருக்கும். பல வருடங்களாக மாஸ் படங்களிலேயே நடித்து வந்த அஜித்தை வீரம் படத்தின் மூலம் குடும்பங்கள் ரசிக்கும் படியான படத்தை கொடுத்து அதில் வெற்றியும் கண்டார் இயக்குனர் சிவா.
தொடர்ந்து வேதாளம் படத்திலும் தங்கை செண்டிமெண்ட் வைத்திருந்தார். ஆனால், படத்தின் பிற்பாதியில் வரும் மாஸ் காட்சிகள் செண்டிமெண்டை ஓவர்டேக் செய்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.
அதன் பிறகு, தற்போது விவேகம் படத்தின் மூலம் அஜித்துடன் மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் இயக்குனர் சிவா. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து டீசர், இரண்டு பாடல்கள் என அனைத்தும் அதிரடி மற்றும் மாஸ் படங்களுக்கே உண்டான பாணியில் இருந்தன.
ஆனால், திடீர் திருப்பமாக கர்நாடிக் இசையில் மனதை மாயக்கும் “காதலாட” என்று தொடங்கும் ஒரு பாடலை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்கள்.
அஜித் ரசிகர்கள் இந்த பாடலை கேட்டால் கூட இது விவேகம் படத்தின் பாடலா? என்று ஒரு வித சந்தேகத்துடன் கேட்கும் அளவிற்கு படத்தின் மீதான கண்ணோட்டத்தை அப்படியே திருப்பி போட்டு விட்டது இந்த பாடல் என்றே சொல்ல வேண்டும்.
இந்த பாடல் மட்டுமல்ல, பாடலில் இடம் பெரும் காட்சிகள் கூட மனதை மயக்கும் விஷுவல் ட்ரீட்டாகவே உள்ளது. காஜல் அகர்வால் முந்தைய படங்களை விட இந்த படத்தில் மிக அழகாக குடும்ப பாங்கான, பக்கத்து வீட்டு பெண் போல காட்சியளிக்கிறார்.
இந்த காட்சிகளை குறிப்பிட்டு அஜித் ரசிகர் ஒருவர் ” ஃபேமிலி ஆடியன்சையும் கவர் பண்ணியாச்சு..” என்று டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதனை ஒப்புகொள்ளும் விதமாக அந்த டிவிட்டை லைக் செய்துள்ளார் இயக்குனர் சிவா.
ஆனால், இந்த செண்டிமெண்ட் காட்சிகள் எந்த விதத்திலும் படத்தின் வேகத்தை குறைத்து விடாது என்று இயக்குனர் சிவா முன்பே கூறியிருந்தது குறிப்பிடதக்கது.

ஃபேமிலி ஆடியன்ஸ் கவர் பண்ணியாச்சு – ரசிகரின் கருத்தை ஏற்றுகொண்ட இயக்குநர் சிவர்

Thursday, 20 July 2017


அனல் தெறிக்கும் சர்வைவா, கோப கனலை கக்கும் தலை விடுதலை என விவேகம் படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே ஹிட் வரிசையில் இணைந்து விட்டன
இந்நிலையில், சற்று முன் வெளியாகி இருக்கிறது தூய்மையான காதலை முன்னிறுத்தி, அமைதியே ரூபமாக மழையில் நனைவது போன்ற உணர்வை தரும் காதலாட காதலாட காத்திருந்தேனே எனும் பாடல்.
உன்னோடு வாழ்வது ஆனந்தமே..! ஒவ்வொரு பொழுதிலும் போரின்பமே..! என தொடங்கும் இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.
அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ள இந்த பாடலை சாஸா திரிபாதி மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் பாடியுள்ளனர்.
நீல வானம் மாய்ந்த போதும் நீ இருப்பாயே… தேவ கானம், தூய மௌனம் நீ கொடுப்பாயே.! வரிகள் காதலின் உச்சம். அணிருதின் இசையை தாண்டி, சாஷா த்ரிபாதி மற்றும் பிரதீப்பின் குரல் மனதை வருடி செல்வது அதிசயம்.
எவ்வளவோ கர்நாடிக் இசை மேலோடி பாடல்களை கேட்டிருந்தாலும். நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் படத்தில் கர்நாடிக் இசையில் இப்படியொரு மெலோடி பாடல் அஜித் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என கூறலாம்.
சரி இந்த பாடல் குறித்து ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் வாங்க பார்க்கலாம்..!
JUST HEARD THIS #KADHALAADA SONG ❤️@SASHASUBLIME VOICE + @ANIRUDHOFFICIAL MUSIC MADE THIS SONG EPIC..
THOSE CLASSICAL PORTIONS FROM MAM ❤️

விவேகம் – காதலாட பாடல் – இசை விமர்சனம் – இதயம் வருடி செல்லும் அதிசயம்





விவேகம் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் வரவுள்ளது. இதனால், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.
இப்படத்தின் தெலுங்கு டீசர் நேற்று நள்ளிரவு வெளிவர, அதற்குள் அந்த டீசரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
27 ஆயிரம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர், மேலும், மகேஷ் பாபு, பவன் கல்யான், என்.டி.ஆர் என அனைத்து தெலுங்கு நடிகர்கள் ரசிகர்களும் இந்த டீசர் செம்ம மாஸாக உள்ளதாகவும் தங்கள் நடிகர்களின் சார்பில் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளனர்.


தெலுங்கிலும் பிரமாண்ட வரவேற்பு பெற்ற விவேகம்- தெலுங்கு ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?











SAI PALLAVI CUTE IMAGES..

Wednesday, 19 July 2017

#Vivegam UPDATE : -
Next Song - 20th July
Full Album - 26th July
Trailer Release - 3rd August
Film Release - 10th August




#Vivegam UPDATE : -


GST Rates India

2017 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி அன்று, ஜிஎஸ்டீ கவுன்சில் என்பது 98 பிரிவுகளில் 1211 சரக்குகளுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிஎஸ்டீ விகிதங்களை முடிவு செய்து, இறுதி செய்வதற்காக கூடியது. அடுத்த நாள் அன்று, ஜிஎஸ்டீ கவுன்சிலானது 36 வகையான சேவைகளுக்கு ஜிஎஸ்டீ விகிதங்களை இறுதிசெய்வதற்காக கூடியது.

தொடக்கத்தில், கிட்டத்தட்ட 81% சரக்குகளானது 18 சதவிகிதம் அல்லது அதற்கு குறைவான ஜிஎஸ்டீ விகிதத்தில் வகைப்படுத்தப்படும் என்றும், மீதமுள்ள 19% சரக்குகளானது 28 சதவிகிதம் அல்லது அதற்கு அதிகமான ஜிஎஸ்டீ விகிதத்தில் வகைப்படுத்தப்படும் என்றும் இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறை செயலாளரான ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.
GST Rates
5 ஜிஎஸ்டீ வரி ஸ்லாப்களில் வகைப்படுத்தப்பட்டுள்ள சில முக்கிய சரக்குகளையும் சேவைகளையும் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜிஎஸ்டீ-யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவை

சரக்குகள்
    • கோழிப்பண்ணை தயாரிப்புப்பொருட்கள் – இறைச்சி, மீன், கோழிக்கறி, முட்டைகள்
    • பால் தயாரிப்புப்பொருட்கள் – பால், தயிர், மோர், வெல்லம் (குர்), லஸ்ஸி, பேக் செய்யப்படாத பன்னீர்
    • புதிய பழங்கள் & காய்கறிகள்
    • உணவு பொருட்கள் – இயற்கையான தேன், மாவு (கோதுமைமாவு மற்றும் மைதா), பயறு வகைகள், பாஸ்மதி அரிசி, கடலை மாவு (கடலை), ரொட்டி, காய்கறி எண்ணெய், பிரசாத இனிப்புகள் (பிரசாத்), உப்பு
    • அழகுசாதனப் பொருட்கள் மற்றும் துணைப் பொருட்கள் – பிண்டி, குங்குமம்(சிந்தூர்), வளையல்கள்
    • எழுதுபொருட்கள் – தபால் தலைகள், நீதித்துறை பேப்பர்ஸ், அச்சிடப்பட்ட புத்தகங்கள், செய்தித்தாள்கள்
    • கைத்தறி தயாரிப்புப்பொருட்கள்
    • ஜவுளி – சணல், பட்டு
    • கருத்தடை சாதனங்கள்
சேவைகள்
    • ரூ.1000க்கும் குறைவாக விலை கொண்ட உணவக சேவைகள்
    • கல்வி (முன்பில் இருந்தே விலக்கு தொடர்கிறது)
    • சுகாதார சேவை (முன்பில் இருந்தே விலக்கு தொடர்கிறது)

5% ஜிஎஸ்டீ

சரக்குகள்
    • பால் தயாரிப்புப்பொருட்கள் – ஆடை நீக்கிய பால் பவுடர், குழந்தைகளுக்கான பால் உணவுகள், கண்டன்ஸ்டு பால், பேக் செய்யப்பட்ட பன்னீர், கிரீம்
    • உறைய வைக்கப்பட்ட காய்கறிகள்
    • உணவுப் பொருட்கள் – சர்க்கரை, வாசனைப் பொருட்கள், சாப்பிடக்கூடிய எண்ணெய், பீட்ஸா ரொட்டி, ரஸ்க், இனிப்புகள், மீன் துண்டுகள், மரவள்ளிக்கிழங்கு (சாபு தானா)
    • பானங்கள் – காபி, தேயிலை, பழச்சாறுகள்
    • ஆடை – 1000 ரூபாய்க்கு குறைவானது
    • காலணி – 500 ரூபாய்க்கு குறைவானது
    • எரிபொருள் – மண்ணெண்ணெய், எல்பிஜி, நிலக்கரி
    • சோலார் மின் தகடுகள்
    • பொதுவான பயன்பாடுகள் – துடைப்பம்
    • மருத்துவப் பொருட்கள் – மருந்துகள், ஸ்டெண்ட்கள்
    • செய்தித்தாள்
    • லைஃப் போட்கள்
    • ஜவுளி – பருத்தி, இயற்கை நார் மற்றும் இழைகள்
    • ஊதுபத்திகள் (அகர்பத்தி)
சேவைகள்
    • ரயில்வே பயணம்
    • பொருளாதார வகுப்பு விமானப் பயணம்
    • கூட்டு கேப்கள் (எ.கா. உபேர் & ஓலா)

ஜிஎஸ்டீ 12%

சரக்குகள்
    • பால் தயாரிப்புப்பொருட்கள் – வெண்ணெய், பாலாடைக்கட்டி, நெய்
    • பேக் செய்யப்பட்ட உலர் பழங்கள்
    • உணவுப் பொருட்கள் – ஸ்நாக்ஸ் (நாம்கீன் & புஜியா), பேக் செய்யப்பட்ட சிக்கன், சாசேஜ்கள், ஜாம்கள், சுவையூட்டிகள்
    • பானங்கள் – பழச்சாறுகள், பேக் செய்யப்பட்ட இளநீர்
    • ஆடை – 1000 ரூபாய்க்கு மேல்
    • தனிநபர் சுகாதாரம் – பற்பொடி
    • எழுதுபொருள் – பயிற்சி புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள்
    • பொதுவான பயன்பாடுகள் – தையல் இயந்திரம், குடை
    • ஆயுர்வேத மருந்துகள்
    • மொபைல் தொலைபேசிகள்
சேவைகள்
    • ஏசி அல்லாத விடுதிகள் & உணவகங்கள்
    • பிசினஸ் வகுப்பு விமானப் பயணம்

18% ஜிஎஸ்டீ

சரக்குகள்
    • பால் தயாரிப்புப்பொருட்கள் – ஐஸ் கிரீம்
    • பாதுகாக்கப்பட்ட காய்கறிகள்
    • உணவுப் பொருட்கள் – நறுமணமூட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பாஸ்தா, கார்ன் ஃப்ளேக்ஸ், பாஸ்ட்ரீஸ், கேக்குகள், சூப்கள், உடனடி உணவு கலவைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள்
    • பானங்கள் – மினரல் வாட்டர்
    • பிராண்டட் ஆடைகள்
    • காலணி – 500 ரூபாய்க்கு மேல்
    • தனிநபர் சுகாதாரம் – திசுக்கள், கழிவறை பேப்பர், கூந்தல் எண்ணெய், சோப் பார்கள், பற்பசை
    • எழுதுபொருட்கள் – மேலுறைகள், ஃபவுண்டைன் பேனா
    • மின்னணு உபகரணம் – பிரிண்டட் சர்க்யூட்கள், மானிட்டர்கள்
    • இரும்பு & எஃகு தயாரிப்புப்பொருட்கள்
    • பிரி மேல் இலைகள் (டெண்டு பட்டா)
    • பிஸ்கட்டுகள்
    • ஜவுளி – மனிதனால் செய்யப்பட்ட இழை மற்றும் நூல்
சேவைகள்
    • ஏசி விடுதிகள் மற்றும் மதுபானம் வழங்கும் உணவகங்கள்
    • தொலைத்தொடர்பு சேவைகள்
    • தகவல் தொழில்நுட்ப சேவைகள்
    • நிதிசார்ந்த சேவைகள்
    • ஒப்பந்த பணிகள்
    • 100 ரூபாய் அல்லது அதற்கு குறைவான சினிமா டிக்கெட்

28% ஜிஎஸ்டீ

சரக்குகள்
    • உணவுப் பொருட்கள் – சாக்லேட்டுகள், சூயிங் கம், கஸ்டர்டு தூள்
    • பானங்கள் – ஏரேட்டட் வாட்டர்
    • தனிநபர் சுகாதாரம் – டியோட்ரண்டுகள், சவரக் கிரீம், ஆஃப்டர் ஷேவ், கூந்தல் ஷாம்பூ, டை (சாயம்), சன்ஸ்க்ரீன், வாசனை திரவியம், பேஸ் கிரீம்கள், டிட்டர்ஜெண்ட்டுகள்
    • வெள்ளைப் பொருட்கள் – வாக்யூம் க்ளீனர், ஷேவர்கள், முடி க்ளிப்பர்ஸ், சலவை இயந்திரங்கள், டிஷ் வாஷர்ஸ், வாட்டர் ஹீட்டர்கள் & மற்ற வீட்டு உபகரணங்கள்
    • ஒலிப்பெருக்கி
    • கேமராக்கள்
    • ஆட்டோமொபைல்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் *
    • வீட்டுக் கட்டுமானப் பொருட்கள் – பெயிண்ட், வால்பேப்பர், பீங்கான் டைல்ஸ், சிமெண்ட்
    • எடை இயந்திரங்கள், விற்பனை இயந்திரங்கள், ஏடிஎம்
    • பட்டாசுகள்
    • சொகுசு / கேடு விளைவிக்கும் பொருட்கள்* – பான் மசாலா, புகையிலை, பீடி, காற்று ஏற்றப்பட்ட பானங்கள் & மோட்டார் வாகனங்கள்
சேவைகள்
    • 5-நட்சத்திர ஹோட்டல்களின் அறைகள் மற்றும் உணவகங்கள்
    • பந்தயத்தில் பெட் கட்டுதல்
    • 100 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சினிமா டிக்கெட்
* குறிப்பு – மேலே பட்டியலிடப்பட்டுள்ள சொகுசு / கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு 28% ஜிஎஸ்டீ விகிதத்திற்கு மேல் ஒரு இழப்பீட்டு தீர்வை வசூலிக்கப்படும்

ஜிஎஸ்டீ வரி விகித ஸ்லாப்களுக்கு வெளியே உள்ள பொருட்கள்

    • தங்கம், விலையுயர்ந்த கற்கள், நகைகள் – 3%
    • விலைமதிப்பில்லாத & விலையுயர்ந்த கற்கள் – 0.25%
    சொகுசு / கேடு விளைவிக்கும் பொருட்கள் கருதப்படுதல்
சரக்குகள் மற்றும் சேவைகளின் முக்கிய பிரிவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விகிதங்களுக்குக் கூடுதலாக, ஜிஎஸ்டீ கவுன்சிலானது 5 ஆடம்பர / கேடு விளைவிக்கும் பொருட்களுக்கான இழப்பீட்டு விகிதங்களை அங்கீகரித்துள்ளது. இந்த தீர்வைகளின் வருமானமானது, ஜிஎஸ்டீ-ன் முதல் ஐந்து ஆண்டுகளில் வரி வருவாய் இடைவெளியால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இழப்பீட்டு நிதிக்குச் செல்லும்.
ஜிஎஸ்டீ விகிதங்களுக்கு மேல் இழப்பீட்டு தீர்வைகள் விதிக்கப்படும் பொருட்களுக்குப் பொருந்துபவை பின்வருமாறு:
பொருட்கள்ஜிஎஸ்டீ விகிதம் பொருந்தக்கூடியதுஅங்கீகரிக்கப்பட்ட தீர்வை வரையறைஅதிகபட்ச தீர்வை
நிலக்கரி5%ரூ.400 / டன்ரூ.400 / டன்
பான் மசாலா28%60%135%
புகையிலை28%61% – 204%ரூ. 4170/ ஆயிரம்
ஏரேட்டட் பானங்கள்28%12%15%
மோட்டார் வாகனங்கள்**28%1% – 15%15%
** குறிப்பு – 1500 சிசி-க்கும் மேற்பட்ட எஞ்சின் திறன் கொண்ட கார்கள், மற்ற விளையாட்டுரக மற்றும் ஆடம்பர கார்கள் ஆகியவற்றுக்கு தீர்வை என்பது 15% ஆக இருக்கும். சிறியரக கார்களுக்கு தீர்வை என்பது 1% ஆக இருக்கும்.

ஜிஎஸ்டீ விகிதங்கள் – ஒரு கையேடு

உலக விமான கண்காட்சியில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!


"கலாம் சாட்" என்ற பெயரில் கையடக்கச் செயற்கைக்கோள் தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய தமிழகத்தை சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பினர் ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக விமான கண்காட்சியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உள்ளனர்.  

உலகின் சிறிய எடையிலான செயற்கைகோள் தயாரித்து நாசாவால் அனுப்பப்பட்ட “கலாம் சாட்” குழுவினருக்கு தமிழக அரசு 10 லட்சம் பரிசு அளித்து கெளரவித்தது. இந்த நிலையில் ஸபேஸ் கிட்ஸ் அமைப்பின் பணிக்கு தற்போது உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.  

உலகின்  புகழ்பெற்ற விமானக் கண்காட்சி ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதிலிரும் இருந்து 87 நாடுகளை சேர்ந்த முண்ணனி விமானம் தயாரிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.  இந்த கண்காட்சியில்  கலாம் சாட் குழுவினர் தயாரித்த செயற்கோள் மாதிரிகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. 

தமிழக மாணவர்களின் கண்டுபிடிப்புகள் ரஷ்ய வர்த்தக துறை அமைச்சர் மனம் திறந்து பாராட்டியதோடு, இந்தியாவிலிருந்து அதிகளவில் மாணவர்கள் இத்தகைய பணியில் ஈடுபட வேண்டும் என்றும், அதற்கு ரஷ்யா உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தாக ஸ்பேஸ் கிட்ஸ் தலைவர் ஶ்ரீமதி கேசன் தெரிவித்துள்ளார். 

 ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவன பணியை அங்கீரிக்கும் வகையில், ரஷ்ய தொழில் மற்றும் வர்த்தக துறை - ஸ்பேச் கிட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்து போட்டுள்ளது  என்றும், அடுத்த ஆண்டு அரசு பள்ளிகளிலிருந்து அதிகளவில் மாணவர்கள் ரஷ்யா கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கலாம் சாட் தயாரித்த ரிபாத் சாருக் உள்ளிட்ட 7 மாணவர்களும், மூன்று பள்ளிகூட மாணவர்களும் கலந்துகொண்டுள்ளனர். ரஷ்யாவில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் பங்கேற்றதால் பல புதிய அனுபவங்களை பெற்றுள்ளதாக தமிழகம் திரும்பியவுடன், புதிய முயற்சிகள் மேற்கொள்ள படும் என்கிறார் ரிபாத்.
===

உலக விமான கண்காட்சியில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!


Beautiful Click ! #Thala #Ajith and #KajalAggarwal From #Vivegam


கமல்ஹாசன் தொடர்ந்து அரசியல் பற்றி விமர்சித்து வந்தார், ஒரு கட்டத்தில் தமிழக அரசியலில் அணைத்து துறைகளிலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது என குற்றம் சாட்டினார், இதனால் அவரை அமைச்சர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

kamalhaasan 



இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நள்ளிரவில் ட்விட்டரில் அரசியல் சார்ந்த மாதிரியான கவிதை ஒன்றை பத்தி செய்துள்ளார், மேலும் புரியாதவர்களுக்கு நாளை ஆங்கில பத்திரிகையில் வரும் எனவும் கூறியுள்ளார்.

இதனால் என்ன நடக்குமென்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது, எதுவாக இருந்தாலும் விரைவில் உறுதியாக தெரிந்து விடும்.


அரசியலில் குதிக்கிறாரா கமல்? - என்ன தான் நடக்கும்?

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com