HEADER

... (several lines of customized programming code appear here)

Friday, 13 April 2018

அஜித் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு தனி ஆளாக இருந்து வருகிறார். அவருக்கென ஒரு பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. ஆனால் எந்த விதமான ரசிகர் மன்றமோ, இயக்கங்களோ கிடையாது.
அவரின் எளிமை, அனைவருக்கும் மதிப்பு கொடுக்கும் விதம் பலரையும் கவர்ந்திருக்கிறது. அவரின் பிரியாணிக்கு படக்குழுவில் பல பேர் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பார்கள்.
சினிமாவில் இந்த இடத்தை அடைய அவர் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். அண்மையில் ஒரு மெடிக்கல் நிறுவனம் ஒன்று தன் வாடிக்கையாளர்களுக்கு தன்னம்பிக்கை தருவதற்காக அஜித்தின் வீடியோவை புரஜெக்டரில் போட்டு காண்பித்துள்ளது. இது சமூகவலைதளங்களில் வர ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான்.


தன்னம்பிக்கைக்காக அஜித் வீடியோவை போட்டு காட்டிய நிறுவனம்!

Thursday, 12 April 2018

காஷ்மீரில் முஹம்மது யூசஃப் என்பவரின் 8 வயது மகளை கடத்தி கோயிலில் பூஜை நடத்தும் அறையில் அடைத்து வைத்து ஒரு வாரம் கற்பழித்து விட்டு, பிறகு ஒரு பாலம் அருகே கொண்டு சென்று தலையில் கல்லைப் போட்டு கொன்றுள்ளார்கள் தேச பக்தர்கள்...!

காணாமல் போன அன்றே மகளை காணவில்லை என்று தகப்பனார் புகார் கொடுத்துள்ளார்,, ஆனால் காவல்துறையோ குற்றவாளிகளின் தலைவனான ராம் என்பவனிடம் ஒன்றரை லட்சம் பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு வழக்கை கிடப்பில் போட்டு விட்டது...!

பிறகு ஒரு வாரம் கழித்து சடலத்தை மீட்ட பிறகு இந்தப் பிரச்சினை பூதாகரமாகவே வழக்கினை காஷ்மீர் மாநில குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றபட்டுள்ளது,, அவர்கள் விசாரித்து குற்றவாளிகள் ராம், விஷால், காஜூரியா உட்பட 6 பேரையும் மற்றும் அவர்களிடம் லஞ்சம் வாங்கி குற்றத்தை மறைக்க முற்பட்ட 2 போலிசாரையும் கைது செய்துள்ளார்கள்...!

கொலை செய்வதற்க்கு இறுதி நிமிடங்கள் வரை கற்பழித்து சிதைத்திருக்கிறார்கள் அயோக்கிய மிருகங்கள்...!

இதில் உச்சகட்ட கொடுமை என்னவென்றால் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய விடாமல் அம் மாநில வழக்கறிஞர்களே தடுத்து போராட்டம் செய்துள்ளார்கள் என்பது தான்...!

அநீதிக்கு துணைப் போன எவன் வீட்டிலும் பெண் குழந்தைகள் இல்லை போல, அப்படியே இருந்தாலும்...? வேணாம் கோபத்தில் வார்த்தை தடித்து விடும் இதோட முடிச்சிப்போம்...!

தங்களை பாதுகாத்துக் கொள்ள கல்லெறியும் அம் மக்களுக்கு பெயர் மற்றவர்களின் பார்வையில் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்,,
ஆனால் அரக்கர்களுக்கோ தேச பக்தர்கள் என்ற மாவீரப் பட்டம்...!

வரலாற்றின் அனைத்து ஏடுகளிலும் பதியப்பட வேண்டிய மற்றுமொரு ஒடுக்கபட்ட, வஞ்சிக்கப்பட்ட இனம் காஷ்மீரிகள்...!

#JusticeforAsifa
#JusticeForAshifa
#பாவப்பட்ட_காஷ்மீரிகள்...!


#JusticeforAsifa...

An innocent 8 year old child, Asifa was brutally gang raped for 8 days in a Hindu Temple and murdered by Hindu extremists in the Kathura district of Kashmir. Shockingly, despite this outrageous, inhuman savagery, Currently thousands of Hindu Nationalists, radical clerics have gathered together in defense of the alleged rapists.

Although many Human Rights organizations have demanded justice to be done, there is absolutely no coverage about this in the Indian Media. The only crime of Asifa was that she was a Muslim child under the occupation of a tyrannical extremist Hindutva government.


JUSTICE FOR ASIFA:- RSS TERRORIST SHOULD BE PUNISHED..



இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..

ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....

மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.

ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.

அத்தருணத்தில் ரயில் வருகிறது....

தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....

உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....

நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?

இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...
ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....

உண்மையாக நாம் என்ன செய்வோம்...?

ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்..

ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்....

உண்மை தான் என்றோம்...

இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.

ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது

ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...

"Fault makers are majority, even they are protected in most situations"

இன்றைய நிலை....

"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்...

தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"


நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ராணுவத்தின் வலிமையை, ராணுவத் தளவாட உற்பத்தியில் இந்தியாவின் வலிமையை காட்டுவதற்கு நடந்த கண்காட்சியை சுத்தமாக மறக்கும் அளவுக்கு இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது மத்திய, மாநில அரசுகளை அதிர வைத்துள்ளது.
இந்த நிலையில், சென்னை அடுத்துள்ள திருவிடந்தையில் ராணுவக் கண்காட்சி தொடக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, மோடியின் வருகையின்போது கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கூறியிருந்தன.

அதன்படி சென்னையில் காலை முதலே பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஜிஎஸ்டி சாலை முடங்கியது. விமான நிலையம் அருகில், கறுப்பு பலூன்களை பறக்க விட்டும் போராட்டங்கள் நடக்கின்றன. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகின்றன.
இதற்கு மத்தியில் திருவிட[ந்தையில், ராணுவக் கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்தியாவின் ராணுவ தேவைகள் பற்றி மட்டும் விவாதிப்பதற்காக மட்டுமின்றி முதன்முறையாக முற்றிலும் இந்தியாவிலேயே உற்பத்தியாகும் ராணுவ பொருட்கள் பற்றி தெரியப்படுத்தவும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.


ஆனால், டிவி உள்ளிட்ட மீடியாக்களிலும், பேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டர் என்று எந்த சமூகதளமாக இருந்தாலும், ராணுவக் கண்காட்சியைவிட, கறுப்புக் கொடி போராட்டம் மற்றும் இன்ன பிற மோடி எதிர்ப்பு போராட்டமே விஸ்வரூபம் எடுத்துக் காணப்படுகிறது. டிவிட்டரிலும் மோடி எதிர்ப்பே உலக டிரெண்ட் ஆகியுள்ளது. ஒரு பிரதமருக்கு எதிராக இந்தியாவின் ஒரு மாநிலத்தில் இப்படிப்பட்ட பிரமாண்ட போராட்டம் நடப்பது இதுவே முதல் முறையாக இருக்கும் என்று தெரிகிறது.






வரலாறு காணாத மோடி எதிர்ப்பு.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழகம்!

Wednesday, 11 April 2018

நடிகர் அஜித்தின் விசுவாசம் படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக வெயிட்டிங்.
ஆனால் படத்தின் அறிவிப்பு வந்தபின் படத்திற்கான எந்த வேலைகளும் நடக்காமல் இருக்கிறது. காரணம் சினிமா முழு ஸ்ட்ரைக், இது எப்போது முடியும் என்பது தெரியவில்லை.
இந்த நேரத்தில் அஜித்தை பற்றி பிரபலங்கள் பேட்டிகளில் கூறிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில் நடிகை ரேவதி அஜித்தை பற்றி பேசிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அவர் பேசும்போது, அஜித்தை சின்ன பையனாக பார்த்திருக்கிறேன். புதிய முகம் பட காலத்தில் எனக்கு அவரை நன்றாக தெரியும், என் வீட்டிற்கு எல்லாம் வருவார். ரெட் படத்தின் போது எல்லாம் அவர் பெரிய ஸ்டார் ஆகிவிட்டார். ஆனால் என்னை பொறுத்த வரைக்கு அஜித் சின்ன பையன் தான், குட் பாய். இன்றைக்கு இப்படி ஒரு இடத்தில் அவர் இருக்கிறார் என்றால் அவருடைய தெளிவான முடிவுகளால் தான் என்றார்.


எனக்கு எப்போதுமே அஜித் சின்ன பையன்- பிரபல நடிகையின் டாக்...

1991 : மும்பை வாங்கடே மைதானத்தின் ஆடுகளத்தை சேதப்படுத்தி, பின் தொடர்ந்து கலவரங்கள் செய்து அந்த டெஸ்ட் போட்டி மட்டுமல்ல முழு தொடரையும் ரத்து செய்ய வைத்தது RSSஇன் ஒரு அமைப்பான சிவசேனா.

1998: மஹாராஷ்ட்ராவில் பாஜக-சிவசேனா கூட்டாட்சி. அப்பொழுது மும்பை மைதானத்தில் நடக்கவிருந்த டெஸ்டையும் தனது கலவரங்களால் ரத்து செய்யவைத்தது.

1999: டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் இந்திய-பாக்கிஸ்தான் அனியின் டெஸ்ட்டை நடத்த விடமாட்டோம் என்று சூளுரைத்தது RSSஇன் அங்கமான சிவசேனா. மீறி நடத்தினால் மைதானத்தில் விஷப்பாம்புகளை விடுவோம் என்றது. அந்த மிரட்டலுக்கு படியாத அரசு பலத்த பாதுகாப்புடன் டெஸ்டை நடத்தியது. இதற்கு எதிர்வினையாக மும்பை BCCI அலுவலகத்தை சூரையாடிய சிவசேனா, 1983ல் வாங்கிய உலகக்கோப்பையை சேதப்படுத்தியது.

மேலும் 2003, 2005, 2006 சாம்பியன்ஸ் ட்ராஃபி இப்படி RSSஇன் அங்கமான சிவசேனா எதிர்க்காத போட்டிகளே இல்லை.

இந்த வரலாறு கொண்ட RSSஇன் சங்கி கும்பல் இங்கே IPL தடைகோருவதை எள்ளி நகையாடுகிறது.
                                                                                      மராட்டியன் செய்தால் உரிமை போர்  !! தமிழர்கள் செய்தால் தேவை இல்லாத போராட்டம் !! இனி உங்களிடம் கெஞ்ச போவதில்லை எங்கள் உரிமைகளை நாங்களே மீட்டெடுப்போம்.                         #கொற்கைவேந்தன் ( #தமிழர்களம்)

செருப்பு வீசிட்டா
 தமிழர்களின் மானம் போய்டுச்சாம்,,,

ஈத்தர பயலே......
ஏன் டில்லில தமிழக விவசாயிகள் அம்மனமா போராட்டம் பண்ணுனப்போ உனக்கு மானம் போகல?

மெரினாவில் அமைதியா போராடியபோது, அடித்து மிதித்தானா இல்லையா???

தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த மீனவ உறவுகளை அடித்தார்களா இல்லையா,,

அப்போ,
உனக்கு மானம் எங்கடா போச்சு,




செருப்பு வீசிட்டா தமிழர்களின் மானம் போய்டுச்சாம்,,,

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

203 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய சென்னை அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் வாட்சன் 19 பந்துகளில் 42 ரன்களும் சாம் பில்லிங்ஸ் 23 பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள் உதவியுடன் 56 ரன்களும் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் தலைவர் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் அனுபவம் வாய்ந்த வீரரான ராபின் உத்தப்பா 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.
5 விக்கெட்டுகள் இழப்புக்கு 89 ரன்கள் மட்டும் எடுத்து ஒரு கட்டத்தில் கொல்கத்தா தடுமாறிக் கொண்டிருந்தது.

கொல்கத்தா அணியின் பேட்டிங் தரவரிசையில் ஏழாவதாக களமிறங்கிய ஆந்த்ரே ரஸல் 36 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரஸல் 11 சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைதானத்தில் காலணி வீச்சு:-


ஆட்டத்தின் முதல் பாதியில் மைதானத்தில் ரசிகர்கள் மைதானத்திலும், சில வீரர்கள் மீதும் காலணிகள் வீசியதால் பதற்றம் நிலவியது.
முன்னதாக, சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழகத்தை சேர்ந்த பல தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தப் போராட்டங்களால் அண்ணாசாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், இந்தப் போட்டி நடப்பதற்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து மாலை 4 மணிக்கே புறப்பட வேண்டிய கிரிக்கெட் வீரர்கள் சற்று தாமத்தித்தே மைதானம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.













ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..

Tuesday, 10 April 2018

சென்னை: ஆயிரக்கணக்கானோர் அமரக் கூடிய சென்னை சேப்பாக்கம் மைதானமே காலியாக உள்ளதால் ஐபிஎல் நிர்வாகம் பேரதிர்ச்சி அடைந்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அண்ணா சாலை முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள, வீரர்கள் மைதானத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் பெரும்பாலானோர் மைதானத்தில் டிக்கெட்டுகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் ரசிகர்கள் மைதானத்துக்குள் சென்றனர்.
மைதானத்தில் சில நூறு பேர் மட்டுமே அமர்ந்துள்ளனர். 40 ஆயிரம் பேர் வரை அமரும் மைதானத்தில் சில நூறு பேர் மட்டுமே இருந்ததால் ஐபிஎல் நிர்வாகம் பேரதிர்ச்சியில் உள்ளது.

தமிழகத்தில் நுழைய வேண்டியது - #காவிரி

நுழையவே கூடாதது - #காவி

#பீ_கேர்_புஃல் 😉



விரல் விட்டு எண்ணும் கூட்டம்.. வெறிச்சோடிய சேப்பாக்கம்.. அதிர்ச்சியில் ஐபிஎல்!..

அஜித் பிறந்தநாள் மே 1, அவரது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். வழக்கம் போல ரசிகர்களை தாண்டி திரையரங்குகளிலும் அவரின் படங்களை ஸ்பெஷலாக திரையிட முடிவு செய்துள்ளனர்.
இந்த நேரத்தில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் அஜித் மற்றும் ஷாலினி குறித்து பேசியுள்ளார். எனக்கும், என் மனைவிக்கும் அஜித்தை மிகவும் பிடிக்கும். விஜய்-அஜித் ஒன்றாக நடித்தபோது என் மனைவி அஜித்திற்கு சமையல் செய்து தருவார்.
ஷாலினியின் அப்பாவும் எனக்கு மிகவும் நெருக்கமானவர். இன்னும் பல, பல பிறந்தநாளை

கொண்டாடி, நிறைய சாதனைகள் படைக்கனும். நல்ல சந்தோஷமாக அவர் இருக்க வேண்டும் என்று அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.






அஜித் பிறந்தநாள் குறித்து விஜய்யின் அப்பா கூறிய விஷயம்...

அஜித்தின் விசுவாசம் படம் பற்றி கடந்த சில மாதங்களாக நிறைய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. படக்குழு படப்பிடிப்பு ஆரம்பிக்கும் நேரத்தில் சினிமா ஸ்ட்ரைக் என்று அறிவித்துவிட்டார்கள்.
படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் அப்படியே இருக்கிறது. தற்போது படத்தின் கதை குடும்பம் சம்பந்தப்பட்டதாகவும், காதல் காட்சிகள், காமெடி, ஆக்ஷன் காட்சிகள் என எல்லாம் படத்தில் இடம்பெறுகிறதாம்.
முழுக்க முழுக்க இது ஒரு என்டர்டெயின்மென்ட் படமாம், இதுவரை படத்திற்காக 2 பாடல்கள் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது.




விசுவாசம் படம் எப்படிபட்ட கதை, படக்குழு இதுவரை என்னென்ன முடித்திருக்கிறார்கள்- முழு விவரம்..

பிராமணர்கள் நடத்தும் டி.சி.எஸ், சி.டி.எஸ் நிறுவனங்களில் இருந்து திராவிடர்கள் வெளியேறத் தயாரா? #எஸ்_வி_சேகர்..

வீட்டில் இனி சோறு பொங்கி உண்ணாமல் இருக்க சேகர் தயாரா???
சரவணபவனில் அமர்ந்து வெண்பொங்கல் உண்ணாமல் இருக்க சேகர் தயாரா???
சாம்பார் சாதமும், தயிர் சாதமும் வெளுத்துக் கட்டாமல் இருக்க சேகர் தயாரா???

பாலால் ஆன ஃபில்டர் காஃபி பருகாமல் இருக்க சேகர்த் தயாரா???
மொத்தத்தில் அரிசி மற்றும் பால் ஆகியவற்றையால் தயாரிக்கப்படும் உணவுகள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை இனி உண்ணாமல் பருகாமல் இருக்க சேகர் தயாரா???

அதே சமயம் இதையெல்லாம் வெட்கம் மானம் சூடு சொரனை இருந்தால் சேகர் செய்வதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பிராமணர்களையும் செய்ய சொல்லி உத்தரவிட சேகர் தயாரா???

என்ன Sve Shekher Venkataraman தயாரா???

தான் உண்பது யார் விளைவித்த அரிசி??? என்பதையே மறக்கச் செய்வது தான் உண்டுக் கொழுத்து திரியும் பிராமணத் திமிரு!!!
நடு வயலில் இழுத்துப் போட்டு கோமணத்தோடு நிற்க வைத்து ஒரு நாள் விவவசாயம் பார்க்க வைத்தால் கொழுப்புக் கூந்தல் குறையும் என்று நினைக்கிறேன்!!!

#நன்றி


என்ன Sve Shekher Venkataraman தயாரா???

Monday, 9 April 2018

உத்தராகண்டின் அகஸ்தியமுனி பகுதியில், சில வலதுசாரி இந்து அமைப்புகளும் அப்பகுதி வியாபார சங்கத்தினர் சிலரும் சேர்ந்து முஸ்லிம்களுக்குச் சொந்தமணா சுமார் 15 கடைகளை சூறையாடி தீவைத்துள்ளனர். இதற்கு காரணம் பத்து வயது இந்து சிறுமி ஒருவரை முஸ்லிம் ஒருவர் கற்பழித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட போலியான செய்தி என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை அகஸ்தியமுனி காவல்நிலையம் அருகில் சுமார் 2000 பேர் கொண்ட கும்பல் கூடி கற்பழிக்கப்பட்டதாக கூறப்பட்ட  சிறுமிக்கு நீதி வேண்டும் என்று கோஷமிட்டுள்ளது. அதே நேரத்தில் அப்பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 15 கடைகளை அந்த கும்பலில் சிலரும், அப்பகுதி வியாபார சங்கத்தை சேர்ந்தவர்களும், அப்பகுதி மாணவர் அமைப்பான ஜெய் ஹோ என்ற அமைப்பினர் மற்றும் ஏபிவிபியினர் சேர்ந்து சூறையாடியுள்ளனர்.
இந்த வன்முறை கும்பல் முஸ்லிம்களின் கடைகளில் உள்ள மொபைல் ஃபோன்கள், கைக்கடிகாரம், ஆடைகள், காய்கறி முதற்கொண்டு பொருட்கள் அனைத்தையும் சூறையாடி பின்னர் கடைகளுக்கு தீவைத்துள்ளனர் என்றும் ஆனால் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் ருத்ரபிரயாக் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வன்முறை சூறையாடல் சம்பவத்திற்குப் பிறகு மாவட்ட மாஜிஸ்திரேட் மங்கேஷ் கில்டியால் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இந்து சிறுமி கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் செய்தி போலியானது என்று விளக்கமளித்துள்ளார்
தனது வீடியோவில் அவர், சிறுமி கற்பழிக்கப்பட்டதாக கூறும் அந்த வீடியோவில் உள்ளவர்களின் முகங்கள் தெளிவாக இல்லை, அந்த வீடியோவில் உள்ள ஆண் மற்றும் பெண் யாரென்று தெரியவில்லை. மேலும் இந்த கற்பழிப்பு தொடர்பாக எந்த ஒரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை. இந்த போலியான வீடியோவை பரப்பிவிட்ட நபர்களை நாங்கள் தேடி வருகிறோம். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த வன்முறை நடைபெற்றுள்ள பகுதி கேதர்நாத் தளத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. அப்பகுதி மக்களின் கருத்துப்படி இத்தகைய மத விரோத வன்முறை சம்பவம் நடைபெறுவது அப்பகுதிக்கு இதுவே முதன்முறை என்று கூறப்பட்டுள்ளது. இந்த வன்முறை குறித்து அகஸ்தியமுனி பகுதியில் வசித்து வரும் கஜேந்திர ரவ்டேலா என்பவர் கூறுகையில், “அகஸ்தியமுனியில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர். தற்போது தங்கள் கடைகள் சூறையாடப்பட்ட முஸ்லிம்களில் பலர் இங்கு பிறந்து வளர்ந்தவர்கள். இன்று வரை நான் இது போன்று மத வன்முறை சம்பவங்கள் இங்கு நடைபெற்று கண்டதில்லை. இன்று நடைபெற்றது அதிர்ச்சியளிக்கின்றது.” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடைகளை சூறையாடியவர்கள் மீதும் போலியான செய்தியினை பரப்பியவர்கள் மீதும் அகஸ்தியமுனி காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவ தொடர்பாக காவல்துறையால் சிலர் கைது செய்யப்பட்டும் பலர் தேடப்பட்டும் வருகின்றனர்.


உத்தராகண்டில் முஸ்லிம் கடைகளை எரித்த வலதுசாரி இந்து குண்டர்கள்: சமூக வலைதளத்தில் பரவிய போலிச் செய்தியால் வன்முறை

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com