கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
203 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய சென்னை அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் வாட்சன் 19 பந்துகளில் 42 ரன்களும் சாம் பில்லிங்ஸ் 23 பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள் உதவியுடன் 56 ரன்களும் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் தலைவர் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியின் அனுபவம் வாய்ந்த வீரரான ராபின் உத்தப்பா 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.
5 விக்கெட்டுகள் இழப்புக்கு 89 ரன்கள் மட்டும் எடுத்து ஒரு கட்டத்தில் கொல்கத்தா தடுமாறிக் கொண்டிருந்தது.
கொல்கத்தா அணியின் பேட்டிங் தரவரிசையில் ஏழாவதாக களமிறங்கிய ஆந்த்ரே ரஸல் 36 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரஸல் 11 சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மைதானத்தில் காலணி வீச்சு:-
ஆட்டத்தின் முதல் பாதியில் மைதானத்தில் ரசிகர்கள் மைதானத்திலும், சில வீரர்கள் மீதும் காலணிகள் வீசியதால் பதற்றம் நிலவியது.
முன்னதாக, சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழகத்தை சேர்ந்த பல தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தப் போராட்டங்களால் அண்ணாசாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், இந்தப் போட்டி நடப்பதற்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து மாலை 4 மணிக்கே புறப்பட வேண்டிய கிரிக்கெட் வீரர்கள் சற்று தாமத்தித்தே மைதானம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment