அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர். பிரபலம் என்றாலே இந்த விஷயங்கள் எல்லாம் செய்ய வேண்டும், இப்படியெல்லாம் ரசிகர்களை செய்ய சொல்ல வேண்டும் என்ற வழக்கமான முறை இருக்கிறது. அதுபோல் தான் பல நடிகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அதையெல்லாம் உடைத்து இதுதான் சரி, இப்படி செய்தால் தவறில்லை என்று பல விஷயங்களை சினிமாவில் மாற்றியவர் ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித். பெரிய நடிகர்கள் கூட பேச பயப்படும் போது 2010ம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த முதலமைச்சர் முன்பு தைரியமாக ஒரு விஷயத்தை பேசினார், அதற்கு நாம் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடும் ரஜினி அவர்களும் எழுந்துநின்று கைத்தட்டல்கள் கொடுத்தார்.
அதேபோல் ரசிகர் மன்றம் இல்லையென்றால் சினிமா பயணம் முடங்கிவிடுமோ என்று பெரிய நடிகர்களே பயப்படும் நேரத்தில் 2010ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி அஜித் ஒரு அதிர்ச்சியான அறிக்கை வெளியிட்டார். இனி என் பெயரின் கீழ் இருக்கும் நற்பணி மன்றங்களை கலைக்கிறேன் என்ற பதிவு தான்.
அவரது ரசிகர்களை தாண்டி பிரபலங்களும் ஏன் இப்படி செய்துவிட்டார் அவரது சினிமா பயணம் இனி இருக்காதே என்று விமர்சித்தனர். ஆனால் அங்கு தான் அவரை ரசிகர்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். நற்பணி மன்றம் இல்லையென்றாலும் நாங்கள் உங்களது ரசிகர்கள், எப்போதும் ஆதரவாக இருப்போம் என்று இப்போது அவருக்கு பக்கபலமாக இருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள்.
அப்படி சினிமா பயணத்தில் ஒரு பெரிய முடிவு எடுத்து அஜித் அறிக்கை வெளியிட்ட நாள் இன்று.
Post a Comment