நடிகர் அஜித்தின் விசுவாசம் படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக வெயிட்டிங்.
ஆனால் படத்தின் அறிவிப்பு வந்தபின் படத்திற்கான எந்த வேலைகளும் நடக்காமல் இருக்கிறது. காரணம் சினிமா முழு ஸ்ட்ரைக், இது எப்போது முடியும் என்பது தெரியவில்லை.
இந்த நேரத்தில் அஜித்தை பற்றி பிரபலங்கள் பேட்டிகளில் கூறிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில் நடிகை ரேவதி அஜித்தை பற்றி பேசிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அவர் பேசும்போது, அஜித்தை சின்ன பையனாக பார்த்திருக்கிறேன். புதிய முகம் பட காலத்தில் எனக்கு அவரை நன்றாக தெரியும், என் வீட்டிற்கு எல்லாம் வருவார். ரெட் படத்தின் போது எல்லாம் அவர் பெரிய ஸ்டார் ஆகிவிட்டார். ஆனால் என்னை பொறுத்த வரைக்கு அஜித் சின்ன பையன் தான், குட் பாய். இன்றைக்கு இப்படி ஒரு இடத்தில் அவர் இருக்கிறார் என்றால் அவருடைய தெளிவான முடிவுகளால் தான் என்றார்.
Post a Comment