மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் டி20 சீசன்-11 முதல் போட்டியில் ரன்கள் வித்தியாசத்தில்சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் வெற்றியுடன் இந்த சீசனை சென்னை தொடங்கியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் டி20 சீசன்-11 கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 43, குர்ணால் பாண்ட்யா 41, இஷான் கிஷன் 40 ரன்கள் எடுத்தனர். சென்னை அணி பந்து வீச்சில் வாட்சன் 2 விக்கெட்டும், சாகர், தாஹிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
...
...
Post a Comment