HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday, 21 April 2018

ஜம்ஜம் தண்ணீர்..மெக்காவின்.. அதிசயம்..உண்மை . நான் படித்து அதிசயித்து அறிந்ததை பகிர்கிறேன்... அ.அப்பர்சுந்தரம். மயிலாடுதுறை.



ஜம் ஜம் நீரின் அற்புதத் தன்மை அதிர்ச்சியில் விஞ்ஞானிகள். 5 ஆயிரம் வருடம் பாரம்பரியம் கொண்ட இக்கிணற்று நீரை, உலகில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்கள் அருந்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். மக்காவிற்கு உலகின் பலதேசங்களில் இருந்து புனித பயணம் வரும் முஸ்லிம்கள் இந்த கிணற்றுநீரை ஒரு நபர் குறைந்தது 20 லிட்டராவது
தனது நாட்டிற்கு எடுத்து கொண்டு செல்லாமல் இருக்க மாட்டார்கள்.
அப்படிப்பட்ட அற்புதமான இந்த ஜம் ஜம் கிணற்றை பற்றி காண்போம்.
‘ஜம் ஜம்’ என்றால் நில் நில் என்றும் அதிகம் என்று அர்த்தம்.
சென்ற நூற்றாண்டில், ஒரு முறை ஜரோப்பிய மருத்துவர்கள், சுகாதாரத்திற்காக இந்தகிணற்றினை சுத்தப்படுத்த வேண்டும் என்று சவுதி அரசுக்கு ஆலோசனை கூறினர். இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரசு 8அதி நவீன ராட்சத பம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும் பகலுமாக15 நாட்கள் இந்த நீரை இறைத்தது.ஆனால் நீரின் அளவு குறையவில்லை. மாறாக நீரின் மட்டம் ஒரு அங்குலம் உயர்ந்து இருந்தது. ஒரு வினாடிக்கு சுமார் 8000 லிட்டர் என்ற அளவில், தினமும் 691.2 மில்லியன் லிட்டர் தண்ணீரை இடவேளையின்றி
ராட்சத மோட்டார்கள் மூலம் இந்தக் கிணற்றிலிருந்து உறிஞ்சப்படுகிறது.
நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய கிணற்றில் ஒரு வருடம் எடுக்கும்அளவு நீரை, ஒரே நாளில் ‘ஜம் ஜம்’ கிணற்றிலிருந்து எடுக்கபடுவது மிகப்பெரிய அதிசயம், அதை விட அதிசயம் 691.2 மில்லியன் நீரை தினமும் எடுத்தபோதும் இதன் அளவு குறைவதில்லை.
சுவையும் மாறியதில்லை.
ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20லட்சம்
மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக்
கிணற்றில் இருந்து தான் குடிநீர்வினியோகிக்கப்படுகிறது.
குறைந்த ஆழம் உள்ள இந்தக்கிணறு, பாலைவனத்தில் அமைந்துள்ளது, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக்
கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும். எந்த ஊற்றாக இருந்தாலும் சில/பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும்.
ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும். ஜம்ஜம் கிணறு அருகே எந்த தாவரமும் வளருவதில்லை. எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின்
போன்ற மருந்துகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன.
ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.
மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971-ம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது.
பூமியிலுள்ள நீரில் மிகச்சிறந்தது ‘ஜம் ஜம்’ நீர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளது சோதனையில் தெரிய வந்துள்ளது.
கால்ஷியம் மற்றும் மெக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக்
கொடுக்கக் கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம். மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளைஅழிக்க வல்லது.
அங்கே அற்புதம் நடக்கிறது,அல்லாஹ்வின் அற்புதத்தால் கிடைத்த ஜம்ஜம் தண்ணீர்
எத்தனை வருடம் பிடித்து வைத்தாலூம் கெடுவதில்லை இதுவும் ஓர்அதிசியம்தான்……….
ஜம்ஜம் நீர் பற்றிய அதிசய தகவல்...!
ஆழம் : 30 மீட்டர் வீதி 11.08
ஒரு வினாடிக்கு 8000 லிட்டர்கள் தண்ணீர். பம்ப் செய்யும் மணிக்கு 2 கோடியே 880 லட்சம் லிட்டர்கள். ஒரு மாதம் 2073 கோடியே 60 லட்சம் லிட்டர்கள்.
ஒரு லிட்டர் தண்ணீரில் அடங்கியுள்ள மூலதனங்கள்...!
சோடியம் – 133.00ml
கால்சியம் – 096.00ml
மேக்கனிசியம் – 038.80ml
புளோரைட் -000-77ml
பொட்டாசியம் – 043.03ml
நைட்ரேட் – 124.08ml
டைகார்ப்நெட் – 124.00ml
சல்ஃபேட் – 124.00ml
ஸம் ஸம் தண்ணீர் - இதை விட ஒரு அதிசயம் இல்லைஅரேபியாவில் ஸம் ஸம் தண்ணீர் என்பது அனைவராலும் அருந்த கூடியது...



About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com