
இந்தியன் 2 படம் டிராப் என்றும் இப்படத்தை இந்தியில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதை இப்படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.
ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது. இதனால் கமலுக்கும் ஷங்கருக்கும் சண்டை என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.
மேலும் இந்தியன் 2 படம் டிராப் என்றும் இப்படத்தை இந்தியில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதை இப்படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேலும் இப்படம் குறித்து அடிக்கடி மீட்டிங் நடக்கும் என்றும் அதில் படக்குழுவினர் உற்சாகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment