
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. எச். வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
பிங்க் படத்தின் ரீமேக் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித்துடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா, ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின், ரங்கராஜ் பாண்டே என பலர் நடித்துள்ளனர்.
தற்போது இப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் புதிய போஸ்டர் ஒன்றையும் ரிலீஸ் செய்துள்ளது.
இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் குதித்துள்ளனர்.
Post a Comment