தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் வருகை பதிவேட்டில் தினமும் ஆசிரியர்கள் கை ரேகை மூலம் வருகையை பதிவு செய்வார்கள். 2016 ஆம் ஆண்டு இதனை சோதனை முயற்சியாக கொண்டு வந்தனர்.
இதனால் ஆசிரியர்கள் வரும் நேரம், தேதி என அனைத்தும் பதிவாகி இருக்கும். பள்ளி முடிந்து போகும்போதும் இந்த பதிவில் பதிவு செய்ய வேண்டும். இந்த எந்திரத்தில் தமிழ், ஆங்கிலம் இரண்டும் திரையில் காண்பித்து வந்தனர்.
தற்பொழுது இந்த எந்திரத்தில் தமிழ் மொழியை நீக்கி விட்டு ஹிந்தி, ஆங்கிலம் மட்டும் சேர்த்துள்ளனர். இதனால் ஆசிரியர்கள் புகார் அளித்துள்ளனர். இந்தியை தூக்கிவிட்டு மீண்டும் தமிழை வைக்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தியை திணிக்க இன்னும் என்ன என்ன வழி உள்ளதோ அது அனைத்திலும் முடிந்த அளவு ஹிந்தியை திணிக்க முயல்கின்றனர் மத்திய அரசு. கொஞ்சம் நாம் விழிக்கவில்லை என்றால் தமிழ் மொழியை மறக்க வேண்டியதுதான்.
Post a Comment