HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday, 24 September 2020

தஜ்ஜால் தொடர் - பதிவு- 4 தஜ்ஜாலுடன் தமிமூத்தாரீ என்பவரின் சந்திப்பு:-

 தஜ்ஜால் தொடர் - பதிவு- 4

தஜ்ஜாலுடன் தமிமூத்தாரீ என்பவரின் சந்திப்பு






தஜ்ஜால் தொடர்பான ஹதிஸ்களிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்த ஹதிஸ் தமிமூத்தாரீ தஜ்ஜாலை சந்தித்த ஹதிஸ் தான்.
இந்த ஹதிஸை நாம் பலரும் படித்திருப்போம் ஆனால் ஆராய்ந்திருக்க மாட்டோம்.
இந்த ஹதிஸில் தஜ்ஜால் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் அவன் லட்சியத்துடன் மிக நுட்பமாய் இணைந்திருக்கும் இந்த ஹதிஸை குறைந்த்து மூன்று முறையாவது படியுங்கள்.அப்போது சில கேள்விகள் உங்களுக்கு உதயமாகலாம்.
அந்த ஹதிஸ் பின்வருமாறு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துச் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது சிரித்தபடியே அமர்ந்தார்கள். "ஒவ்வொருவரும் தாம் தொழுத இடத்தில் அப்படியே இருங்கள்" என்று கூறினார்கள். பிறகு, "நான் உங்களை ஏன் ஒன்று கூட்டினேன் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு ஆர்வமூட்டுவதற்கோ அச்சுறுத்துவதற்கோ நான் உங்களை ஒன்றுகூட்டவில்லை. மாறாக, (மற்றொரு தகவலைச் சொல்வதற்காகவே) உங்களை ஒன்றுகூட்டினேன். கிறித்தவ மதத்தைச் சேர்ந்த தமீமுத் தாரீ எனும் ஒரு மனிதர் (என்னிடம்) வந்து வாக்குறுதிப் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
அவர் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார். அது(பெருங்குழப்பவாதியான) மசீஹுத் தஜ்ஜால் குறித்து நான் உங்களிடம் தெரிவித்திருந்த செய்திக்கு ஒத்திருந்தது. அவர் என்னிடம் கூறினார்:
நான் "லக்ம்" , "ஜுதாம்" ஆகிய குலங்களைச் சேர்ந்த முப்பது பேருடன் ஒரு கப்பலில் கடல் பயணம் மேற்கொண்டேன். அப்போது கடல் அலை ஒரு மாதகாலம் எங்களைக் கடலில் அலைக் கழித்துவிட்டது. பிறகு நாங்கள் கடலில் சூரியன் அஸ்தமிக்கும் (மேற்குத்) திசையில் ஒரு தீவில் ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து அங்கிருந்த தீவுக்குள் சென்றோம்.
அங்கு (உடல் முழுவதும் அடர்ந்த) முடிகள் நிறைந்த ஒரு பிராணி எங்களைச் சந்தித்தது. அதன் முன்பகுதி எது,பின்பகுதி எது என்றே எங்களால் அறிய முடியவில்லை. (உடல் முழுவதும்) முடிகள் நிறைந்திருந்ததே அதற்குக் காரணம்.
அப்போது நாங்கள், "உனக்குக் கேடுதான். நீ யார்?" என்று கேட்டோம். அதற்கு அந்தப் பிராணி "நான்தான் ஜஸ்ஸாஸா"என்று சொன்னது. "ஜஸ்ஸாஸா என்றால் என்ன?" என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அந்தப் பிராணி, "கூட்டத்தாரே! இந்த மண்டபத்திற்கு உள்ளே இருக்கும் மனிதரை நோக்கிச் செல்லுங்கள். அவர் உங்களைப் பற்றிய செய்தி அறிய ஆவலாக உள்ளார்" என்று சொன்னது.
அந்தப் பிராணி ஒரு மனிதனைப் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்டு அது ஷைத்தானாக இருக்குமோ என்று நாங்கள் பயந்துவிட்டோம். உடனே நாங்கள் அந்த மனிதனை நோக்கி விரைந்து நடந்தோம். நாங்கள் அந்த மண்டபத்தைச் சென்றடைந்தோம். அங்கு மாபெரும் உருவமுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை. அவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தான். அவனுடைய கைகள் அவனது தோளோடு சேர்த்து வைத்து இறுகக்கட்டப்பட்டிருந்தன. அவனுடைய முழங்கால்கள் கணுக்கால்களோடு சேர்த்துச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன. அவனிடம் நாங்கள், "உனக்குக் கேடுதான். நீ யார்?" என்று கேட்டோம்.
"என்னைப் பற்றிய தகவலை நிச்சயம் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். (முதலில்) நீங்கள் யார் என்று கூறுங்கள்?" என்று கேட்டான். "நாங்கள் அரபு மக்கள். நாங்கள் கப்பலொன்றில் கடல் பயணம் மேற்கொண்டோம். கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ஒரு மாதகாலமாகக் கடல் அலை எங்களை அலைக்கழித்துவிட்டது. பிறகு நீயிருக்கும் இந்தத் தீவில் நாங்கள் கரை ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து இந்தத் தீவுக்குள் நுழைந்தோம்.
அப்போது உடல் முழுவதும் அடர்ந்த முடிகள் கொண்ட பிராணி ஒன்று எங்களைச் சந்தித்தது. உடல் முழுவதும் முடிகள் நிறைந்திருந்த காரணத்தால் அதன் முன்பகுதி எது, பின்பகுதி எது என்று அறிய முடியவில்லை. நாங்கள் "உனக்குக் கேடுதான். நீ யார்?" என்று கேட்டோம். அது "நான்தான் ஜஸ்ஸாஸா" என்று சொன்னது. "ஜஸ்ஸாஸா என்றால் என்ன?" என்று கேட்டோம். அதற்கு அது, "இந்த மண்டபத்திலுள்ள இந்த மனிதரை நோக்கிச் செல்லுங்கள். அவர் உங்களைப் பற்றிய செய்தியை அறிய பெரும் ஆவலுடன் இருக்கிறார்" என்று கூறியது. ஆகவேதான், நாங்கள் உன்னை நோக்கி விரைந்து வந்தோம். அது ஷைத்தானாக இருக்கலாம் என்பதால் எங்களால் அச்சம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை" என்று சொன்னோம்.
அப்போது அவன், "பைசான் பேரீச்சந்தோட்டத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்றான். "அந்தத் தோட்டத்தில் நீ எதைப் பற்றிக் கேட்கிறாய்?" என்று கேட்டோம்.
அதற்கு அவன், "அந்தப் பேரீச்சந்தோட்டத்தின் மரங்கள் கனிகள் தருகின்றனவா என்பதைப் பற்றியே நான் கேட்கிறேன்" என்றான். நாங்கள் "ஆம்" என்று பதிலளித்தோம். அவன், "அறிந்துகொள்ளுங்கள். அது கனியே தராத காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது" என்று கூறினான்.
பிறகு "தபரிய்யா நீர்நிலை பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான். "அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்?"என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவன், "அதில் தண்ணீர் இருக்கிறதா?" என்று கேட்டான். நாங்கள், "அதில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது" என்று பதிலளித்தோம். அவன், "அறிந்துகொள்ளுங்கள்: அதிலுள்ள நீர் வற்றும் காலம் நெருங்கிவிட்டது" என்று சொன்னான்.
பிறகு, "(ஷாம் நாட்டிலுள்ள) ஸுஃகர் நீரூற்றைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான். நாங்கள், "அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்?" என்றோம். அதற்கு அவன், "அந்த ஊற்றில் தண்ணீர் உள்ளதா? அந்த ஊற்றுத் தண்ணீரால் மக்கள் பயிர் செய்கிறார்களா?" என்று கேட்டான். நாங்கள் "ஆம், அதில் தண்ணீர் அதிகமாக உள்ளது. அங்குள்ளவர்கள் அந்தத் தண்ணீரால் விவசாயம் செய்கிறார்கள்" என்று சொன்னோம்.
பிறகு அவன், "எழுத்தறிவற்ற மக்களின் இறைத்தூதர் பற்றி எனக்குச் சொல்லுங்கள். அவர் (இப்போது) என்ன செய்கிறார்?" என்று கேட்டான். நாங்கள், "அவர் மக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்று யஸ்ரிபில் (மதீனாவில்) தங்கியிருக்கிறார்" என்று பதிலளித்தோம்.
அவன், "அவருக்கும் அரபியருக்குமிடையே போர் நடந்ததா?" என்று கேட்டான். நாங்கள், "ஆம்" என்றோம். அவன், "அவர்களை அவர் என்ன செய்தார்?" என்று கேட்டான். நாங்கள், "அவர், தம் அருகிலுள்ள அரபியரை வெற்றி கொண்டுவிட்டார். அரபியர் அவருக்குக் கட்டுப்பட்டு விட்டனர்" என்று சொன்னோம். அதற்கு அவன், "அப்படித்தான் நடந்ததா?" என்று கேட்டான். நாங்கள் "ஆம்" என்றோம்.
அவன், "அறிந்துகொள்ளுங்கள். அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதே அவர்களுக்கு நல்லதாகும். (இனி) நான் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன்நான்தான் மசீஹ் (அத்தஜ்ஜால்) ஆவேன். நான் (இங்கிருந்து) புறப்பட அனுமதிக்கப்படும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நான் புறப்பட்டு வந்து, நாற்பது நாட்களில் பூமியில் எந்த ஓர் ஊரையும் விட்டுவைக்காமல் பூமியெங்கும் பயணம் செய்வேன்; மக்காவையும் தைபாவையும் தவிர! அவ்விரண்டிற் குள்ளேயும் நுழைவது எனக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்விரு நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நுழைய நான் நாடும்போதெல்லாம் என்னை நோக்கி வானவர் ஒருவர் வருவார். அவரது கையில் உருவியவாள் இருக்கும். (அதை வைத்து) அதற்குள் நுழைய விடாமல் அவர் என்னைத் தடுத்துவிடுவார். அதன் ஒவ்வொரு நுழைவாயிலிலும் வானவர் ஒருவர் இருந்து, அதைக் காவல் காத்துக்கொண்டிருப்பார்" என்று கூறினான்.
இதைக் கூறியபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம்மிடமிருந்த கைத்தடியால் சொற்பொழிவு மேடைமீது குத்தியவாறு இது -அதாவது மதீனா நகரம்-தான் தைபா; இதுதான் தைபா; இதுதான் தைபா" என்று கூறிவிட்டு, "இதைப்பற்றி நான் உங்களுக்கு (முன்பே) அறிவித்துள்ளேன் அல்லவா?" என்று கேட்டார்கள். மக்கள், "ஆம் (அறிவித்தீர்கள்)" என்று பதிலளித்தனர். "தமீமுத் தாரீ சொன்ன இந்தச் செய்தி, தஜ்ஜாலைப் பற்றியும் மதீனா மற்றும் மக்கா பற்றியும் நான் ஏற்கெனவே உங்களிடம் நான் கூறியிருந்ததற்கு ஒப்பவே அமைந்திருக்கிறது" என்று கூறினார்கள்.
பிறகு அறிந்துகொள்ளுங்கள்: அது, ஷாம் நாட்டுக் கடலில், அல்லது யமன் நாட்டுக் கடலில் உள்ளது. இல்லை; அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது. அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது. அது கிழக்குப் பகுதி கடலில் உள்ளது" என்று (அறுதியிட்டுச்) சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறும்போது கிழக்குத் திசையை நோக்கி தமது கரத்தால் சைகை செய்தார்கள். ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தே மனனமிட்டேன்.
தமிமூத்தாரீ ஹதிஸின் விளக்கம்
அரபு வர்த்தக கூட்டத்திடம்,தஜ்ஜால் கேட்ட கேள்விகளில் ஒன்று தபர்ரியா ஏரியை பற்றியது.
தபர்ரியா ஏரி எது?
தபர்ரியா ஏரி இன்றைய தினம் இரண்டு பெயர்களில் அறியப்படுகிறது
1.கினரெட்
2.Sea of Galilee(கலிலி கடல்)
2.இது எங்கு உள்ளது?
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதியில் உள்ளது.
3.இன்றைய தினம் அதன் நிலை என்ன?
தஜ்ஜாலிடம் அரபு கூட்டம் அதில் நீர் அதிக அளவில் உள்ளது என்று பதிலளித்த போது, தஜ்ஜால் அது விரைவில் வற்றும் என்று மறு பதிலளித்தான்.
அது போல இன்று தபர்ரியா ஏறக்குறைய 90% வற்றிவிட்டது.இனி அது மீள்வதற்கு வாய்ப்பில்லை என்றும் நீரியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
தபர்ரியா ஏரியுடன் தொடர்புடைய மற்றொரு ஹதிஸ்:
யஃஜூஜ் மஃஜூஜ் வெளிப்பட்டவுடன் உலகம் முழுவதும் பரவுவார்கள்.அவர்கள் ஜெருசலம் நோக்கி வரும் போது முதலில் வரும் கூட்டம் தபர்ரியாவில் நீர் அருந்துவார்கள் இறுதியாக வருபவர்களுக்கு அங்கு நீர் இருக்காது.ஆக தபர்ரியாவில் 90% நீரை யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம், பாலைவனத்தை சோலையாக மாற்றும் திட்டத்திலும் ஏனைய பயன்பாடுகளிலும் பயன்படுத்திவிட்டது.(குடித்துவிட்டது).
ஆக யஃஜூஜ் கூட்டம் அங்கே நீர் அருந்துவது(பயன்படுத்துவது) என்பது தஜ்ஜாலின் திட்டம்.
தஜ்ஜாலுக்கும் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்துக்கும் என்ன தொடர்பு?
தஜ்ஜாலை பின்பற்றுவர்களின் உருவத்தை பற்றி தூதர் கூறியது என்னவென்றால் அவர்கள் கண்கள் சிறுத்தும் கேடயம் போன்ற முகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
தஜ்ஜாலை ஆசிய யூதர்கள் (இஸ்ராயில் மக்களிலுள்ள யகூதிகள்) பின்பற்றுவார்கள் என்பது நாம் அறிந்த்தே.ஆனால் அவர்களின் உருவ அமைப்பு சிறுத்த கண்களும் கேடயம் போன்ற முகமும் அல்ல.அப்படியென்றால் தஜ்ஜாலை பின்பற்றும் இன்னொரு கூட்டம் எது?
யஃஜூஜ் மஃஜூஜ் உருவ அமைப்பை பற்றி தூதர் கூறியது:அவர்கள் சிறுத்த கண்களும் கேடயம் போன்ற முகமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இதன் மூலம் நாம் அறிவது யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் தஜ்ஜாலை பின்பற்றும் அடியாட்கள்.
இந்த ஐரோப்பிய இனத்தை சேர்ந்த யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் தான் யூதர்கள் என்ற போர்வையில் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து அதன் இயற்கை வளமான தபர்ரியாவை,தங்களின் வளர்ச்சிக்காக, வரையரையே இல்லாமல் பயன்படுத்தி தபர்ரியாவை அழித்திருக்கிறார்கள்.
ஜெருசலத்தை கைப்பற்றும் முயற்சியை தஜ்ஜால் தன் அடியாட்கள் மூலம் சாதித்துக் கொண்டான் என்பது தான் உண்மை.
தமிமூத்தாரீ ஹதிஸின் விளக்கம்
தஜ்ஜால் ,அரபு கூட்டத்திடம் கேட்ட மற்ற கேள்விகள்
1.பைஸான் தோட்டம் பற்றியது
2.ஜூகர் நீர் வீழ்ச்சி பற்றியது
இவைகள் எங்கு உள்ளன
பைஸான் பேரித்தம் தோட்டம் ஜோர்டன் நாட்டில் உள்ளது
ஜூகர் நீர்வீழ்ச்சி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் உள்ளது.
பைசான் தோட்டத்தின் நீராதாரம் ஜோர்டன் ஆறு ஆகும்.இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பகுதியில் பிறக்கும் இந்த ஆற்றின் குறுக்கே பல அணைகளை கட்டி இதன் நீராதாரம் முழுவதையும் இஸ்ரேலே பயன்படுத்தி கொள்கிறது.
இதன் விளைவால் ஜோர்டனின் மிக முக்கிய பொருளாதார மான பேரித்தம் விவசாயம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
ஜோர்டனின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் அந்நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் அந்நாட்டை ஆக்கிரமிக்கவும் துடிக்கிறது இஸ்ரேல்.
ஜோர்டன் பழைய ஷாம் தேசத்தில் ஒரு பகுதி என்பதால் தன்னுடைய Greater Israel projectல் ஜோர்டனை இணைத்துக் கொள்ள துடிக்கிறது இஸ்ரேல்.
ஜோர்டனை வீழ்த்துவதும்(greater Israel project காக) தஜ்ஜாலின் ஒரு லட்சியமாகும்.
ஜூகர் நீர்வீழ்ச்சியையும் தபர்ரியாவை போல வரையரையே இல்லாமல் பயன்படுத்தி அதை அழித்திருக்கிறது இஸ்ரேல்.
தஜ்ஜால் கூறியது போல் ஏறக்குறைய தபர்ரியாவும் ஜூகரும் வற்றிவிட்டது பைசானும் அழிந்துவிட்டது.ஏறக்குறைய அவன் சொன்னதை செய்து விட்டான்.
ஹதிஸின் விளக்கம் நாளையும் தொடரும்.


தஜ்ஜால் தொடர்-பதிவு-2 &3, தஜ்ஜாலின் பணிகள், இன்றளவும் ஒரு இறைதூதருக்காக, மீட்பருக்காக காத்திருக்கும் இஸ்ராயில் மக்கள். ஹதிஸின் குறியீட்டு சொற்களும் விளக்கமும்.... https://e-funandjoyindia.blogspot.com/2020/10/2.html?spref=tw

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com