தஜ்ஜால் தொடர்- பதிவு- 6
கடந்த பதிவில் தமீம் சென்றடைய சாத்தியமான மூன்று கடல்கள் எவை என்று பார்த்தோம்.இந்த மூன்று கடலில் சரியான கடலை தேர்வு செய்வதும் அந்த கடலில் எந்த தீவு என்று ஆய்வதும் மிக கடினமான செயல்.ஆகவே மிகவும் சரியாக அந்த தீவை இனம் காண்பது என்பது மிக கடினம் என்றாலும் தோராயமாக நம்மால் அனுமானிக்க முடியும்.அந்த அனுமானிப்பு சரியாக இருப்பதற்கும் வாய்ப்புண்டு தவறாக இருப்பதற்கும் இரு மடங்கு வாய்ப்புண்டு.
நம்மிடம் உள்ள ஒரே clue (வாய்ப்பு) என்பது ஒரு மாத கால புயலும் அலை கழிப்பும்(மாறுபட்ட திசைகளில் பயணம்)
புயல் எப்போது வீசியது?பயணத்தின் தொடக்கத்திலா?முடிவிலா?முடித்து திரும்பும் போதோ?பதில் ஹதிஸில் இல்லை.
புயல் முடிந்த்தும் எந்த திசையை நோக்கி நகர்ந்து தாயகம் திரும்பினர்?பதில் இல்லை.
நம்மிடம் இருக்கும் ஒரே தெளிவு ஒரு மாத கால புயலும் பயணமும்.
எனவே நாம் கடல் காற்றின் திசைகளையும் புயல் ஏற்படும் கால அளவுகளையும் வைத்து ஓர் அளவிற்கு எந்த தீவு என்று அனுமானிக்கலாம்.
தமீம் பயணம் தொடங்கிய மத்திய தரை கடலின் கிழக்கு பகுதியில் (லேவண்ட் கடல்,அயனியோன் கடல்) பொதுவாக புயல்கள் ஏற்படுவதில்லை அரிதாக ஏற்பட்டாலும் வீசும் காற்றானது சீராக வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி வேகமாக வீசும் எனவே திசைமாறும் அலைகழிப்புக்கு இங்கு வேலையில்லை.
மத்திய தரைகடலின் மேற்கு பகுதிகள்(பேலிரிக் கடல்,தைரானியன் கடல்) கடுமையான புயல்களை ஏற்படுத்தும் பகுதி.இப்பகுதியில் காற்று கிழக்கிலிருந்து மேற்காகவும் ,மேற்கிலிருந்து வட கிழக்கு நோக்கியும் என்று திசை மாறி மாறி வீசும்.இப்பகுதியில் தமீம் கப்பல் சிக்கியிருக்கலாம்.(அனுமானம் தான்)
இப்பகுதியில் சிக்கும் கப்பல் (ஒரு மாத காலத்தில்) இதன் மேற்கு நோக்கிய புயல் காற்றின் காரணமாக ஜிப்ரால்டர் நீரிணையின் வழியாக அட்லாண்டிக் பெருங்கடலை அடைந்திருக்கலாம்.
பொதுவாக கடலில் புயல்காலம் என்பது ஐந்து அல்லது ஆறு நாட்களில் முடிந்துவிடும்.ஒரு மாத கால தத்தளிப்பு என்றால் அடுத்தடுத்து இவர்கள் புயலில் சிக்கியிருக்க வேண்டும்.
மத்திய தரை கடலிலும் அட்லாண்டிக் கடலிலும் புயல்கள் ஒரே காலக்கட்டத்தில் ஏற்படும்.அப்படியென்றால் மத்திய தரை கடலில் இருந்து அட்லாண்டிக் கடலில் நுழையும் போதும் புயல் காற்றின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்க வேண்டும்.
அட்லாண்டிக் புயல்காற்று என்பது மேற்கில் மையம் கொண்டு வடக்கிலிருந்து வடமேற்கு வரையிலும் வீசும் காற்றாகும்.
ஜிப்ரால்டர் அட்லாண்டிக் பகுதியில் லேசான வடமேற்கு திசையில் வீசும் மிக வேக புயலில் சிக்கும் கப்பல் ,ஆங்கில கால்வாயையோ அல்லது அதன் சுற்று பகுதியையோ(english channel)தொடும் வாய்ப்புகளே அதிகம்.
இந்த திசையில் தரை தட்டும் கப்பல்கள் சென்றடையும் தீவு என்பது கிரேட் பிரிட்டனாகவோ(GREAT BRITAIN)அதன் கட்டுப்பாட்டில் உள்ள தீவாக இருக்கலாம்.
தமிமூத்தாரீ சென்றடைந்த தீவு பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் (GREAT BRITAIN).
இது கடல் காற்றுகள் மற்றும் புயல்கள் தொடர்பான புரிதலின் அடிப்படையிலான ஒரு அனுமானமே.இது ஒரு உறுதியான பதில் அல்ல.
என்னுடைய இந்த பதில் 100% சரியாகவும் இருக்கலாம் 200% தவறாகவும் இருக்கலாம்.
Great Britain is not perfect answer.it is my probable opinion.
இதை யாரும் கண்மூடி ஏற்க வேண்டியதில்லை.அதே போல் இது தவறு என்று என்னை வசை பாட வேண்டிய அவசியமுமில்லை.
சரியான பதிலை கடல்சார் விஞ்ஞான அறிவு பெற்ற ஒருவரால் வழங்க முடியும்.
தமிமூத்தாரீ என்பவர் இஸ்லாமிய நம்பிக்கைகளை ஒட்டி கதைகளை எழுதக்கூடியவரும் ஆவார்.அவர் தஜ்ஜாலை பற்றிய எழுதிய கதை புத்தகத்தில் மேலதிக தகவல்கள் இருக்கலாம்.அப்புத்தகத்தை என்னால் இணையத்தில் பெற முடியவில்லை.
பிரிட்டன் தான் தமீம் சென்றடைந்த தீவு என்பதை வரலாற்று நிகழ்வுகளை இணைப்பதன் மூலம் (by the way of historical logics).
தஜ்ஜால் தீவு- பிரிட்டிஷ்
தஜ்ஜால் எந்த தீவிலிருந்து வெளிபடுகிறானோ அந்த தீவிலிருந்து தான் அவன் தனது லட்சிய பயணத்தை தொடங்க வேண்டும்.அப்படியென்றால் தமீம் சென்றடைந்த தீவுக்கும் அவன் முதன்மை பணியான ஜெருசலத்தின் விடுதலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும்.
பல நூற்றாண்டுகளாக இஸ்லாமிய கிலாபத் கீழ் இருந்த ஜெருசலம்
முதலாம் உலகப் போர் காலம் வரையிலும் இஸ்லாமிய அரசின் கீழ் (உத்மானிய பேரரசு-Ottomon empire) தான் இருந்தது.
மிகுந்த பலம் வாய்ந்த உத்மானிய பேரரசை நேரடியாக தாக்கி வீழ்த்துவது என்பது இயலாத காரியம்.நேரடியாக வீழ்த்துவதற்கு முன் உள் நாட்டு கலவரங்களை தூண்டினால் தான் அதன் மூலம் அதை சிதறடித்த பிறகு அதை நேரடியாக தாக்கி வீழ்த்த முடியும்.
உத்மானிய பேரரசு பகுதியில் அரபு மற்றும் துருக்கி இனங்களுக்குள் இனவெறி தூண்டப்படுவதற்கு தஜ்ஜால் தீவானது(பிரிட்டிஷ்) அதன் ஜஸ்ஸாஜா பிராணியை(ஜஸ்ஸாஜாவின் பொருள் - வேவு பார்த்தல் -SPY -வேவு பார்க்கும் உளவு துறையினரை) பேரரசுக்குள் அனுப்பியது.
எட்வர்ட் லாரன்ஸ் பிற்காலத்தில் லாரன்ஸ் ஆப் அரபியா என்று அழைக்கப்பட்டவனின் தலைமையில்(மேற்பார்வையில்) அரபு கழகம்(Arabian revolt) தூண்டப்பட்டது.
லாரன்ஸ் ,மக்கா நகரின் ஷரிப் - ஹுசைன் இப்னு அலி என்ற துரோகியிடம் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டான் அதன்படி துருக்கியர்களான உத்மானிய பேரரசு ஆட்சியாளர்களிடமிருந்து அரபு பகுதிகளை பிரித்து ஹுசைனிடம் ஒப்படைப்பதகாவும் அதற்கு அரபுகள் பிரிட்டிஷ் படையுடன் இணைந்து உத்மானிய படையை தாக்க வேண்டும் என்பது தான் ஒப்பந்தம் மேலும் ஷரீப் ஹுசைனுக்கு 7 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் (இன்றைய மதிப்பில் பில்கேட்ஸ் சொத்தை காட்டிலும் அதிக மதிப்பு கொண்ட பணம்) சன்மானமாக வழங்கப்படுவதுடன் மாதம் 2 லட்சம் பவுண்டுகள் ஊதியமாக வழங்கப்படும்.
லாரன்ஸ் , அரபியாவின் இன்னொரு பகுதியான நஜ்த் தற்போதைய ரியாத் பகுதியின் தலைவனான அப்துல் அஜீஜ் இப்னு சவூத்(தற்போதைய சவூதி அரேபியா நிறுவனர்) என்ற மற்றொரு துரோகியிடம் இது போன்ற மற்றொரு ஒப்பந்தத்தை மேற்கொண்டான்.ஆனால் சன்மானம் மாதம் வெறும் 5 ஆயிரம் பவுண்ட் தான்.ஏனெனில் இவன் பகுதியின் கீழ் புனித தளங்கள்(மக்கா மதீனா வரவில்லை).ஆனால் அதையும் ஏற்று கொண்டான் துரோகி இப்னு சவூத்.
இது போன்ற உள் நாட்டு கலகத்தால் உத்மானிய பேரரசு முதலாம் உலகப்போரில் வீழ்ச்சியடைந்தது.
வெற்றிக்கு பின் மக்கா ஷரீப் தன்னை ஒட்டு மொத்தமாக அராபிய பகுதிக்கும் அமீராக அறிவித்தான்.ஆனால் பிரிட்டிஷ் இதை அங்கீகரிக்கவில்லை. ஹிஜாஜ் பகுதிக்கு(மக்கா,மதீனா) மட்டுமே அமீராக அறிவித்தது.மேலும் பாலஸ்தீன், சிரிய பகுதிகளை பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் தங்களுக்குள் பங்கீட்டுக் கொண்டது.இதனால் கோபம் கொண்ட ஹுசைன் வெர்சய்ல் உடன்படிக்கையை மறுத்ததுடன் யூதர்களை ஜெருசலத்தில் குடியேற்றம் செய்யும் பால்போர் (BALFOUR DECLARATION)அறிக்கை தொடர்பான உடன்படிக்கையிலும் கையெழுத்திட மறுத்தான்.
விளைவாக இப்னு சவூத் ஹிஜாஜ் பகுதியை கைப்பற்றி ஹுசைனை விரட்டியடித்தான்.மேலும் தன்னை ஹிஜாஜ் மற்றும் நஜ்த் பகுதியின் ஆட்சியாளராக அறிவித்துக் கொண்டான்.இதுவே பிற்காலத்தில் சவூதி அரேபியாவாக உருவானது.
இப்னு சவூத்தையும், ஹுசைனையும் வைத்து கிலாபத்தை பிரிட்டிஷ் உடைத்ததுடன் மீண்டும் கிலாபத்தை ஏற்படுத்தும் எண்ணம் இல்லாதவர்களின் கையில் புனித தங்களின் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தது.இப்னு சவூத் போன்ற துரோகிகளிடம் பால்போர் அறிக்கை தொடர்பான உடன்படிக்கையையும் மேற்கொண்டது.
உள்நாட்டு கலகத்தில் தவித்த உத்மானிய அரசின் மீது இறுதியாக பிரிட்டிஷ் போர் தொடுத்து ஜெருசலத்தை கைப்பற்றியது.ஜெருசலத்தை கைப்பற்றி அதில் யூதர்களை குடி அமரத்தியது.யூதரகளின் பொற்காலத்திற்கான முதல் வாசலை பிரிட்டன் திறந்தது.
தஜ்ஜால் தன் முதல் பணியை தான் சிறை பிடிக்கப்பட்டு பின் வெளியேறும் தீவிலிருந்து தான் தன் பயணத்தை தொடர முடியும் என்ற logic ன் அடிப்படையில்- பிரிட்டிஷ் மூலம் ஜெருசலம் வெற்றி கொள்ளப்பட்டதால் தமீம் சென்ற தீவு பிரிட்டிஷ் தான் என்று வரலாற்று ஆய்வுகளின் மூலம் நான் அனுமானிக்கலாம்.
அனுமானம் சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம்.எனவே இதை பற்றி சிந்தித்து சரி என்று தோன்றினால் ஏற்றுக் கொள்ளுங்கள்.
வரலாற்று விளக்கம் தொடரும்.....
தஜ்ஜால் தொடர்- பதிவு- 5 தமிமூத்தாரீ ஹதிஸின் விளக்கம் தமீம் பயணம் செய்த கடல் எது? :- https://e-funandjoyindia.blogspot.com/2020/09/5.html?spref=tw
Post a Comment