தஜ்ஜால் தொடர்- பதிவு- 5
தமிமூத்தாரீ ஹதிஸின் விளக்கம்
தமீம் பயணம் செய்த கடல் எது?
தமீம் அவர்கள் தார் குலத்தை சேர்ந்தவர். இவர் பாலஸ்தீன பகுதியை சேர்ந்த கிறித்தவ பாதிரி.
இவருடன் பயணம் செய்தவர்கள்,லக்ம்,
ஜூதாம் குலத்தை சேர்ந்தவர்கள்.
ஜூதாம் குலத்தை சேர்ந்த அரபுகளான இவர்கள் பண்டைய ஷாம் பகுதியின் தெற்கு பகுதியில்(பாலஸ்தீன்) வாழ்ந்தார்கள்.இந்த பகுதி அந்த கால கட்டத்தில் பைசாந்திய கிழக்கு கிறித்தவ பேரரசின் கீழ் இருந்தது. இம்மக்களும் அரசுக்கு விசுவாசமாகவும் கிறித்தவ மத நம்பிக்கை கொண்டவர்களாகவும் விளங்கினர்.
லக்ம் குலத்தை சேர்ந்தவர்கள் தெற்கு ஈராக் பகுதியிலிருந்து பாலஸ்தீன் வரை பரவியிருந்தனர்.மேலும் லக்ம் மற்றும் ஜூதாம் குலத்தினர் ஒருஙருக்கொருவர் மிகுந்த நம்பிக்கையான உறவில் இருந்தனர்.
தமீம்,லக்ம்,ஜூதாம் மூவரும் பாலஸ்தீன பகுதியில் வாழ்ந்த்தால் இவர்கள் பாலஸ்தீனத்துடன் தொடர்புடைய மத்திய தரைக்கடலில் பயணம் செய்திருக்க வேண்டும்.
பதில்:2
பண்டைய அரபுகளின் ஏற்றுமதியில் மூன்று முக்கிய வழித்தடங்கள் இருந்தன.
1.பட்டுப்பாதை(silk route)
2.வாசனை திரவிய பாதை (அத்தர்,சென்ட்)(incense route)
3.நறுமணப்பொருள்(ஏலக்காய் இலவங்கம்) பாதை(spice route)
இந்த மூன்று பாதையில் பட்டுப்பாதை என்பது முழுவதும் நிலம் சார்ந்த பயணத்துடன் தொடர்புடையது எனவே இதை பற்றி நாம் விவாதிக்க வேண்டியதில்லை.
நறுமண பொருள் பாதை என்பது இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதியிலிருந்து ஏலக்காய் ,கிராம்பு,முத்து,நவரத்தின கற்களை அரபு மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு கொண்டு வரும் பாதை.(இந்தியாவிலிருந்து அரபுக்கு இற்க்குமதி)
வாசனை திரவிய பாதை என்பது கடல் மற்றும் நிலம் இரண்டையும் சார்ந்த பாதையாகும்.இப்பாதை என்பது யமன் நாட்டின் மரப்பசின்களையும்(அக்கால அத்தர்) (மிர் மற்றும் பிரான்க் ) ஆப்ரிக்க அத்தரையும்,இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களையும்,பாலஸ்தீனத்தின் காஸா வரையில் தரை மார்க்கமாக கொண்டு வந்து பிறகு மத்திய தரைகடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பாதையாகும்.(அரபு நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி).ஐரோப்பிய மக்கள் பண்டைய பாலஸ்தீன் பகுதியை levent(லெவன்ட்) என்று அழைத்தனர்.
ஆக இந்த பண்டைய வாசனை திரவிய பாதை தான் நேரடியாக தமீம் மற்றும் லக்ம்,ஜூதாம் குலத்தார் வாழ்ந்த காஸா(பாலஸ்தீன்) பகுதியுடன் தொடர்புடையது.மேலும் அரபு குல வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி தமீம் அவர்களும் மிர் மரப்பிசின்(அத்தர்) வணிகர் தான்.
ஆக தமீம் அவர்கள் வாசனை திரவிய பாதையுடன் தொடர்புடைய மத்திய தரை கடலில் தான் பயணித்திருக்க வேண்டும்.
தமீம் மற்றும் ஜூதாம் குலத்தார் இருப்பிடத்தை வைத்து ஆய்வு செய்தாலும் சரி அல்லது பண்டைய வணிக பாதைகளை வைத்து ஆய்வு செய்தாலும் சரி தமிமூத்தாரீ அவர்கள் பயணம் செய்த கடல் எது என்ற கேள்விக்கு பதில் மத்திய தரை கடல் தான்.
தமீம் சென்றடைந்த தீவு(தஜ்ஜால் தீவு) எது?
தமீம் அவர்கள் மத்திய தரைகடலில் தான் பயணித்திருக்க முடியும் என்பதை நேற்றைய பதிவில் கண்டோம்.
அப்படியென்றால் தமீம் சென்றடைந்த தஜ்ஜால் தீவு மத்திய தரை கடலிலோ அல்லது மத்திய தரை கடல் தொடர்பு கொள்ளும் மற்ற கடல்களிலோ தான் இருக்க முடியும்
மத்திய தரைகடல் தொடர்பு கொள்ளும் கடல்கள்:
1.மேற்கில் ஜிப்ரால்டர் நீரிணையின் வழியாக அட்லாண்டிக் பெருங்கடலில் தொடர்பு கொள்ளுகிறது
2.வட கிழக்கில் கருங்கடலுடன் தொடர்பு கொள்ளுகிறது
3.தெற்கில் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடலுடன் தொடர்பு கொள்ளுகிறது.
இதில் சூயஸ் கால்வாய் எனபது 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசு ஏற்படுத்திய செயற்கை கால்வாய்.ஆக தமீம் காலத்தில் இது இல்லை என்பதால் அன்றைய காலத்தில் மத்திய தரை கடலுக்கும் செங்கடலுக்கும் தொடர்பில்லை.
தமீம் சென்றடைந்த தீவு மத்திய தரை கடலிலோ,அட்லாண்டிக் கடலிலோ,கருங்கடலிலோ தான் இருக்க வேண்டும்.
இந்த மூன்று கடலுமே மதீனாவின் கிழக்கு பகுதியில் இல்லை.மதீனாவிற்குமேற்கு திசையிலும்,வட மேற்கு திசையிலும் தான் இவைகள் உள்ளன.
ஆனால் தூதர் தஜ்ஜாலின் தீவை சுட்டுவதற்கு கிழக்கு திசையை நோக்கி விரல் நீட்டுகிறார்.
தீவை சென்றடைந்த தமீமும் சூரியன் மறையும் திசை என்று கூறுகிறார்.மேற்கு திசையை உறுதி செய்கிறார்.
அப்படியென்றால் தஜ்ஜாலின் தீவு என்பது மேற்கு திசையில் உள்ளது.தூதர் அது என்று கிழக்கு திசையை சுட்டுவது தஜ்ஜாலின் தீவை அல்ல.தஜ்ஜாலின் மிகப் பெரிய பித்னாவை பற்றியது தான் என்பது தெளிவாகிறது.
கிழக்கு திசையில் உள்ள தஜ்ஜாலின் பித்னா எது?
மதினாவிற்கு மிக சரியான கிழக்குப் பகுதிகள்:
1.ரியாத்(நஜ்த்)-கேடுக்கெட்ட சவூதி அரச குடும்பத்தின் பூர்வீகம்.முஸ்லீம்களுக்கு உலகெங்கிலும் எதிரிகளை பரிசளித்த வகாபியிசத்தின் பிறப்பிடம்.ஷைத்தானின் தலைமுறைகளான இவர்களின் இருப்பிடத்தை தான் தஜ்ஜாலின் இடம் என்று தூதர் கூறியிருக்கலாம்.
2.இந்தியா-(குஜராத் மாநிலம்)-உலக அளவில் முஸ்லீம்கள் அதிக அளவில் உள்ள இரண்டாவது நாடு இந்தியா.இந்த தேசத்தில் உள்ள முஸ்லிம்களை கொலை செய்வதற்கு தேச அளவிலும் உலக அளவிலும் ஏதோ விருந்துக்கு அழைப்பது போல் தன்னுடைய நண்பர்களை அழைக்கிறது குஜராத் இரட்டைகள்.இந்த இரட்டைகளின் சட்டங்களை(தஜ்ஜாலின் பித்னாக்களை) தஜ்ஜாலின் இருப்பிடமாக கிழக்கு நோக்கி தூதர் சுட்டி இருக்கலாம்.
3.மியான்மர்-ரோஹிங்யா முஸ்லீம்களை சமீபத்தில் ஓட ஓட விரட்டியடித்த தேசம்.இதை தூதர் சுட்டி இருக்கலாம்.
4. மதீனாவின் லேசான வட கிழக்கு பகுதி இஸ்பஹான்(ஈரான் மாநிலம்) தஜ்ஜால் முதன்முதலாக வெளிப்படும் பகுதி இதை சுட்டி இருக்கலாம்.
5.மதீனாவின் தென்கிழக்கு பகுதி-இந்தோனேசியா-தங்கள் நாட்டு மக்களின் ரத்தத்தை, அமெரிக்காவின் எலும்பு துண்டுகளுக்காக விற்ற அந்நாட்டு ஆட்சியாளர்களை சுட்டி இருக்கலாம்.
இவைகள் அனைத்தையும் அல்லது இவைகளில் ஏதேனும் ஒன்றை சுட்டுவதற்கு கூட கிழக்கு திசையை தூதர் காட்டிருக்கலாம். அல்லாவே அறிந்தவன்.
முத்தஸாபிகாத் வடிவிலான ஹதிஸ் மற்றும் குர்ஆன் வசனங்களுக்கு நாம் அளிக்கும் விளக்கம் சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம்.ஆகவே்அல்லாவே அறிந்தவன் என்ற வாசகத்தோடு விளக்கத்தை முடிப்பது தான் சிறந்தது.
பதிவு நாளை தொடரும்....
தஜ்ஜால் தொடர் - பதிவு- 4 தஜ்ஜாலுடன் தமிமூத்தாரீ என்பவரின் சந்திப்பு:-https://e-funandjoyindia.blogspot.com/2020/09/4.html?spref=tw
Post a Comment