தஜ்ஜால் தொடர்- பதிவு- 7
தமிமூத்தாரீ ஹதிஸின் விளக்கம்
நேற்றைய தினம் பிரிட்டிஷ் உடன் கைக்கோர்த்த அரபு துரோகிகள் குறித்து பார்த்தோம்.இன்றைய பதிவில் துருக்கிய துரோகிகளை பார்ப்போம்.
ஒரு பேரரசை அழிப்பது முக்கியம் என்றால் மீண்டும் அதை உருவாகாமல் பார்த்துக் கொள்வது அதை விட முக்கியம்.எனவே அரபுகளில் மட்டும் துரோகியை ஏற்படுத்துவது போதாது.கோபம் கொண்ட துருக்கியர்கள் பார்வை மீண்டும் கிலாபத்தை ஏற்படுத்தும் பாதையிலோ அல்லது அரபு பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்கும் பாதையிலோ செல்லாமல் இருப்பதற்கு ,தங்கள் துரோகியை வைத்து துருக்கிய தேசிய இனவெறியை பரப்பியது.
அந்த துரோகியின் பெயர் தான் முஸ்தபா கமால் பாட்ஷா.
முதலாம் உலகப்போரில் பல பகுதிகளை இழந்த உத்மானிய அரசின் தலைநகரான கான்ஸ்டான்டி நோபிளை நோக்கி ரஷ்யப்படைகள் முன்னேறின.
ரஷ்யா,பிரிட்டிஷ் உடன் கூட்டு வைத்திருந்த போதும் ரஷ்யாவின் வெற்றியை பிரிட்டிஷ் விரும்பவில்லை.
இந்த ரஷ்யாவின் தாக்குதல் நடைபெற்ற அதே நேரத்தில் கிரிஸ் உத்மானிய பேரரசின் இதய பகுதியான அனடோலியாவை தாக்கியது.
தோல்வி உறுதி என்ற நிலையில் மிகுந்த அச்சத்துடன் அடிமை வாழ்வை எதிர்நோக்கி துருக்கி மக்கள் இருந்த நிலையில், கலிபோலி என்ற இடத்தில் முஸ்தபா கமால் தலைமையிலான ராணுவ பிரிவு ரஷ்ய கூட்டுப்படைகளை தோற்கடித்தது.பின்பு கிரிஸ் படையையும் தோற்கடித்தது.பிரிட்டிஷ் அமைத்து கொடுத்த வியூகத்தால்.
இந்த வெற்றியால் முஸ்தபா கமால் மிகவும் பிரபலமானான்.நாளடைவில் கலிபா ஓரம்கட்டப்பட்டு தேசத்தின் தலைவராக முஸ்தபா உருவெடுத்தான்.
இவன் காலத்தில் தான் துருக்கிய மொழிவெறி ஊட்டப்பட்டது.எந்த அளவிற்கு என்றால் தொழுகை,அதற்கான அழைப்பும் கூட (அஜான்) துருக்கிய மொழியில் இருந்தது.
துருக்கிய நாடும் மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.கிலாபத் கலைக்கப்பட்டது.
இந்த முஸ்தபா கமால் என்பவன் முஸ்லிம் அல்ல என்பது தான் பலரும் அறியாத ஒன்று.
துருக்கி பகுதியில் தன்னை வெளியே இஸ்லாமியனாக காட்டிக்கொண்டு உள்ளூர யூத சடங்குகள் செய்யும் டான்மே(DONMEH) பிரிவை சார்ந்தவன்.
எப்படியோ கிலாபத்தை கலைத்த பிரிட்டிஷ், அது மறு உருவாக்கம் ஆகாமலும் பார்த்துக்கொண்டது.
புனித நகரான ஜெருசலத்தின் விடுதலையில் பிரிட்டிஷ் பங்கெடுக்க அந்நாட்டு யூத முதலாளிகள் அரசின் மீது கொடுத்த அழுத்தத்தையும் பதிவில் காணலாம்.மேலும் தமீம் ஹதிஸில் உள்ள சில குறியீடுகளுக்கான விளக்கத்தை அளித்து தமிமூத்தாரீ ஹதிஸின் விளக்கத்தையும் நிறைவு செய்யலாம்.
தஜ்ஜால் தீவும்(பிரிட்டிஷ்) அதன் பால்போர் பிரகடனமும்.
பால்போர் பிரகடனம் என்பது ஜெருசலம் நகரத்தில் ஐரோப்பிய யூதர்களை குடியேற்றம் செய்வது தொடர்பானதாகும்.
இங்கிலாந்து அரசானது, இந்த பிரகடனத்தை ஒரு தபால் வடிவத்தில், பிரிட்டிஷ் ஜியோனிச சபையின் தலைவரான ரோத்சைல்ட் இடம் சமர்பிக்கிறது.
ஜியோனிஸட் அமைப்பு என்பது யாது?
ஜியோனிஸ்ட் அமைப்பை பற்றி வரும் தொடர்களில் விரிவாக காணலாம்.
யார் இந்த ரோத் சைலட்?
இங்கிலாந்து நாட்டின் மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகளில் மிக அதிக முதலீடுகளை பெற்றிருந்த நிதியியல் சார்ந்த வணிகன்.
இவனை பற்றிய மேலதிக தகவலை வரும் தொடர்களில் காணலாம்.
பிரிட்டிஷ் புனித நகரை கைப்பற்றியதில் ஜியோனிஸ்ட்கள் பங்கு என்ன?
கடற்படைகளின் ராணி என்று அறியப்பட்ட பிரிட்டிஷ் அதன் ஆயுத கப்பல்களை,முதலாம் உலகப்போரின் தொடக்கத்தில் ஜெர்மனியின் நீர்மூழ்கி கப்பல்களுக்கு பலி கொடுத்தது.இந்த தாக்குதலில் ஏற்பட்ட பேரிழப்புகளால் போரில் பிரிட்டிஷ் படையினருக்கு அமெரிக்காவின் உதவி தேவைப்பட்டது.ஆனால் அமெரிக்காவோ போரில் ஆர்வமற்று இருந்தது.இந்த சூழலில் தான் பிரிட்டிஷ் ஜியோனிஸிட் அமைப்பு பிரிட்டிஷ் அரசை சந்தித்து ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டது.அந்த ஒப்பந்தம் என்னவென்றால் நாங்கள் அமெரிக்காவை உங்களுக்கு உதவியாக போருக்கு கொண்டு வந்தால் அதற்கு பிரதிபலனாக நீங்கள் புனித நகரை மீட்டு ஐரோப்பிய யூதர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதாகும்.
அமெரிக்க சியோனிச அமைப்பின் மூலமாக அமெரிக்காவை போருக்கு கொண்டு வந்தது பிரிட்டிஷ் ஜியோனிச அமைப்பு.இதற்கு பலனாக பால்போர் பிரகடனத்தை பெற்றனர்.ஐரோப்பிய யூதர்களை புனித நகரில் குடியேற்றினர்.
பிரிட்டிஷ் அரசும் பிரிட்டிஷ் ஜியோனிச முதலாளிகளும் புனித நகரை கைப்பற்றியதன் வரலாற்று நிகழ்வுகளையும் தஜ்ஜாலின் பணிகளையும் நாம் இணைக்கும் போது தமீம் சென்ற தீவு பிரிட்டிஷ் தான் என்ற அனுமானம் கூடுதல் உறுதி பெறுகிறது.
ஒரு வருட காலம் போன்ற நீண்ட முதல் நாளில் , தஜ்ஜால் பிரிட்டனை தலைமையிடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்று பதிவு எண் - 2 ல் பதிவிட்டிருந்தேன். அதற்கான விளக்கத்தை பிறகு அளிக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.அதற்கான விளக்கத்தை கடந்த சில பதிவுகளில் மிக நீளமாக விளக்கியுள்ளேன்.
இந்த தமீம் ஹதிஸில் தீவானது ஜஸ்ஸாஜாவை கொண்டிருந்ததும் தஜ்ஜால் பாழடைந்த தேவலாயத்தில் இருப்பதும் விளக்கப்பட்டிருக்கும்.இதற்கு சில மார்க்க அறிஞர்கள் கீழ்க்காணுமாறும் விளக்கமளிக்கிறார்கள்.
ஜஸ்ஸாஜா என்பதன் பொருள் உளவாளி.
பாழடைந்த தேவலாயம் என்பது அந்த தீவில் மதம் என்பதற்கு ஒரு முக்கியத்துவம் இருக்காது என்பதற்கான குறியீடு.
மேற்காணும் தெளிவுகளின் படி, உளவு பார்ப்பதில் மிகுந்த பரிட்சயம் பெற்ற மதம் சார்ந்த கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் இல்லாத மதச்சார்பற்ற அரசை கொண்ட ஒரு தீவு தான் தமீம் சென்ற தீவு என்றும் இந்த வரையரைகளின் கீழ் வரும் தீவு பிரிட்டிஷ் தான் என்றும் விளக்குகிறார்கள்.
தமிமூத்தாரீ ஹதிஸ் தொடர்பான விளக்கம் இன்றுடன் நிறைவடைகிறது.
நாளைய பதிவிலிருந்து தஜ்ஜாலின் அடியாட்கள்(யஃஜூஜ் மஃஜூஜ்) பற்றி விரிவாக காணலாம்.
தஜ்ஜால் தொடர்- பதிவு- 6 தமிமூத்தாரீ ஹதிஸின் விளக்கம்:- உத்மானிய பேரரசு முதலாம் உலகப்போரில் வீழ்ச்சியடைந்தது.:- https://e-funandjoyindia.blogspot.com/2020/09/6.html?spref=tw
Post a Comment