தஜ்ஜால் தொடர் - பதிவு- 46
இப்னு சய்யாத்- தஜ்ஜால் என்று சந்தேகிக்கப்பட்டவன்.
இப்னு சய்யாத் தூதர் வாழ்ந்த காலம் வரையிலும் யூதனாகவே தொடர்ந்தான்.
உமர்(ரலி) அவர்கள் ஒரு முறை தூதரின் சபையில் இருந்த போது இப்னு சய்யாத் தான் தஜ்ஜால் என்று சத்தியமிட்டு கூறினார்கள்.
உமரின் இந்த நடவடிக்கையை தூதர் கண்டிக்கவுமில்லை.அதே சமயத்தில் உமரின் செயலை அங்கீகரிக்கவுமில்லை.
தூதர் அவருடைய சந்தேகத்தில் தான் தொடரந்தார்.
ஆனால் உமர் உட்பட சில நபித்தோழர்கள் சந்தேகத்தையும் தாண்டி ஏறக்குறைய உறுதியான முடிவுக்கும் வந்திருந்தனர்.
இப்னு சய்யாத் தூதரின் மறைவிற்கு பின் இஸ்லாத்தை ஏற்றான்.அவன் இஸ்லாத்தை ஏற்ற பிறகும் கூட நபித்தோழர்கள் அவனை சந்தேகிக்கவே செய்தனர்.
அவன் ஹஜ் யாத்திரையை நிறைவு செய்த பிறகும் கூட நபித்தோழர்கள் சந்தேகத்தில் தான் இருந்தனர்.இப்னு சய்யாத்தின் நடவடிக்கைகளும் சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடியதாகவே இருந்தன.
இந்த நேரத்தில் நாம் ஒரு ஹதிஸை நினைவு கூறுவோம்.
நமது இறைத்தூதர் அவர்கள், அவருடைய கனவில் ஒரு நாள் நடுத்தர நிறமுடைய, நீளமான முடிக் கொண்ட, ஒருவர் காபாவை வலம் வந்ததை கண்டார்.அந்த நபருடைய முடியிலிருந்து நீர்துளிகள் சொட்டிக்கொண்டிருந்தன.அப்போது அந்த மனிதர் ஆனவர் நபி ஈஸா(அலை) என்று நமது தூதருக்கு அறிவிக்கப்பட்டது.
மேலும் அந்த கனவில் நபி ஈஸா(அலை) அவர்களை பின் தொடர்ந்தவாறு உடல் பருத்த,முடிகள் சுருண்ட ஒருவன் காபாவை வலம் வந்தான்.அவன் தஜ்ஜால் என்று தூதருக்கு அறிவிக்கப்பட்டது.
அந்த கனவில் தஜ்ஜாலின் தோற்றமானது இப்னு கத்தான் என்ற தோழரின் சாயலில் இருந்ததாகவும் தூதர் அறிவிக்கிறார்.
தூதருக்கு வரும் கனவுகள் என்பது இறைச்செய்திகள் ஆகும்..அந்த கனவின் படி தஜ்ஜாலோ அல்லது அவனுடைய அடியாட்களோ அல்லது அவனுடைய பித்னாக்களோ காபாவை அடையும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஆக இப்னு சய்யாத் ஹஜ் செய்துவிட்டான் என்ற ஒற்றை காரணம் அவன் தஜ்ஜால் இல்லை என்பதை நிருபித்துவிடாது.
தஜ்ஜால், தன்னை மஸிஹ் என்று அறிவித்துக் கொண்ட பிறகு தான், மக்காவிற்குள்ளோ அல்லது மதீனாவிற்குள்ளோ நுழைய முடியாது என்பதும் அதற்கு முன் அவன் நுழையலாம் என்பதும் தெளிவாகிறது.
இப்னு சய்யாத் தஜ்ஜால் இல்லை என்று நிருபிக்க தேவையான வரலாற்று சான்று என்பது அவன் தன்னை மஸிஹ் என்று பிரகடனப்படுத்தாமல் இறந்து போவது ஆகும்.
இப்னு சய்யாத் மக்கள் மத்தியில் இருந்த காலம் வரை தன்னை மீட்பர் என்று சொல்லிக்கொள்ளவில.லை.
அதே சமயம் அவனுடைய மரணம் தொடர்பான எந்த செய்தியும் வரலாற்றில் இல்லை.
முசைலமா,துலய்ஹா போன்ற அயோக்கியர்கள், தங்களை இறைத்தூதர் என்று அறிவித்துக்கொண்டதால், கலீபா அபுபக்கர் அவர்கள், முசைலமா மீது போர் தொடுத்தார்.இந்த போர் வரலாற்றில் ரித்தா யுத்தம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த போரிலும் இப்னு சய்யாத், அபுபக்கர்(ரலி) அவர்களுடைய படையில் இணைந்து தான் போரிட்டான்.தன்னுடைய படையில் இப்னு சய்யாத்தை அபுபக்கர்(ரலி) சேர்த்துக்கொள்கிறார் என்றால்,அபுபக்கர் அவர்கள் இப்னு சய்யாத் தான் தஜ்ஜால் என்ற கருத்தில் உடன்படவில்லை என்பதும் தெரிய வருகிறது.
அபுபக்கர்(ரலி),உமர்(ரலி) இருவரும் இப்னு சய்யாத்தின் மீது இரு வேறு கருத்து உடையவர்களாக இருந்திருக்கலாம் என்பதும் தெரிய வருகிறது.
ரித்தா யுத்தத்தில் யமாமா நகருக்கு அருகில் முசைலமா கொல்லப்பட்டான்.அந்த போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்.அந்த போருக்கு பின் இப்னு சய்யாத் என்பவன் தொலைந்து போனான்.
கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களுக்கு மத்தியில் அவன் உடல் இல்லை.அவன் கொலை செய்யப்பட்டதற்கான எந்த செய்தியும் இல்லை.
போரின் முடிவில் சில அராபிய பழங்குடிகள் அவனை பல்லக்கில் வைத்து தூக்கி சென்றதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால் அது உறுதியான செய்தியாகவும் இல்லை.
இப்னு சய்யாத் எங்கே போனான்?என்ன ஆனான்?.யாருக்குமே தெரியாது.
அவன் தொலைந்த போன சில நாட்களிலேயே அவனுடைய மனைவியும் குழந்தைகளும் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிர் இழந்தனர்.
இப்னு சய்யாத் மரணித்தானா?என்ன ஆனான்? என்பது பற்றி யாருக்கும் தெரியாது.
ஆக மொத்தத்தில் இப்னு சய்யாத் தஜ்ஜாலா?இல்லையா?என்பது பற்றிய ஐயம் இன்றும் நீடிக்கிறது.
அல்லாவே அறிந்தவன்
முடிவு என்னவென்று தெரியாத இப்னு சய்யாத்தின் வாழ்வு அவன் மீதுள்ள சந்தேகத்தையும் தொடர வைத்துவிட்டது.
அவன், மீது தூதருக்கும் நபி தோழர்களுக்கும் ஏற்பட்ட சந்தேகம் நமக்கு சில செய்திகளை தந்திருக்கின்றன.அது நமக்கு கிடைத்த பயன்.
இப்னு சய்யாத்தின் மீதான சந்தேகத்திற்கு உரிய பதில் இல்லாமலேயே நாமும் அவனை பற்றிய விவாதத்தை முடித்துக் கொள்ளலாம்.
நாம் இந்த தொடரில் நமக்கு கிடைத்த செய்திகளின் படி தஜ்ஜாலின் காலக்கட்டத்தை வரிசை படுத்தலாம்.
தஜ்ஜால் யூத குடும்பத்தில் சாதாரண மனிதனாக பிறக்கலாம்.
அதன் பின் அவன் தஜ்ஜாலுக்குரிய பணியை தொடங்கலாம்.
பணியை அவன் தொடங்கும் போது ஜின்களின் உதவியால் பல்வேறு SPACE TIME குள் செல்லும் வழியை பெறலாம்.
தன்னுடைய ஒரு வருடம் போன்ற ஒரு நாளில்(முதற் கட்டத்தில்) அவன் ஒரு உலக அரசை உருவாக்கலாம்
அது-PAX-BRITTANICA
அதன் பின் ஒரு மாதம் போன்ற ஒரு நாளில் (இரண்டாவது கட்டத்தி்தில்) ஒரு உலக அரசை உருவாக்கலாம்.
அது- PAX-AMERICANA
அதன் பின் தன்னுடைய ஒரு வாரம் போன்ற நாளில் தன்னுடைய சொந்த அரசை உருவாக்குவான்
அது PAX-JUDAICA(GREATER ISRAEL)
அதன் பின் அவன் தன்னை தஜ்ஜால் என்று பிரகடனப்படுத்துவான்.
அதன் பின்பு அவனுடைய அட்டூழியம் தலை விரித்தாடும்
அதன் பின் நபி ஈஸா(அலை) அவர்களின் வருகை அமையும்.
நாளைய பதிவில் நமது தொடரின் இறுதி பகுதியை, நபி ஈஸா(அலை) அவர்களின் வருகையும் தஜ்ஜாலின் முடிவும் என்ற தலைப்பில் காணலாம்.
இன்ஷா அல்லாஹ் பதிவு நாளை தொடரும்......
தஜ்ஜால் தொடர் - பதிவு- 45; இப்னு சய்யாத்- தஜ்ஜால் என்று சந்தேகிக்கப்பட்டவன். கடந்த பதிவில், ஒரு முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தோம் அதற்கான பதிலை இப்போது காணலாம்:- https://e-funandjoyindia.blogspot.com/2021/01/45.html?spref=tw
Post a Comment