தஜ்ஜால் தொடர் -பதிவு- 50(நிறைவு தொடர்)
நபி ஈஸா(அலை) அவர்களின் வருகையும் தஜ்ஜாலின் முடிவும்
நபி ஈஸா(அலை) அவர்களுடைய வருகையை பற்றிய ஹதிஸை இப்போது காணலாம்.
இறைத்தூதர் நபி முகம்மது(ஸல்) அறிவித்தார்கள்:
எனக்கும் அவருக்கும் இடையே எந்த ஒரு தூதரும் இல்லை.அவர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஒரு வெள்ளை மினரா கொண்ட பள்ளியில் இறங்குவார்கள்.அப்போது அவர்கள் இரண்டு வானவர்களுடைய தோளில் கைகளை போட்டவாறு இறங்குவார்கள்.அவர் மஞ்சள் நிற ஆடை அணிந்திருப்பார்.நடுத்தர உயரமும், பொதுவான நிறமும், உடையவராக இருப்பார்.அவருடைய தலை முடிகளில் நீர்துளிகள் சொட்டிக்கொண்டிருக்கும்.அவருடைய கண் பார்வை அடையும் தொலைவிற்கு, அவருடைய மூச்சு காற்று செல்லும்.அந்த மூச்சு காற்று படும் அனைத்து தீயவர்களும் மாண்டு போவார்கள்.அவர் சிலுவையை உடைப்பார்கள், பன்றியை கொல்வார்கள்,ஜிஸ்யாவை மறுப்பார்கள்.
இவ்வாறு செல்கிறது ஹதிஸ்.
எனக்கும் அவருக்கும் இடையே தூதர்கள் இல்லை என்று நமது தூதர் அறிவிக்கிறார்கள்.
இதன் மூலம் தஜ்ஜால் உள்ளிட்ட எந்த பொய் தூதனையும் நாம் நம்பக்கூடாது என்று அறிவிக்கிறார்.
மேலும் தன்னை தூதர் என்று அறிவித்துக் கொள்ளும் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள் என்றும் தூதர் அறிவித்துள்ளார்.
ஆகையால் நாம் தஜ்ஜால் உட்பட முப்பது பொய்யர்கள் விஷயத்திலும் மிகுந்த கவனிப்புடன் இருக்க வேண்டும்.
நம்முடைய முஸ்லிம் சமூகத்திலேயே அஹமதியாக்கள் என்ற ஒரு பிரிவு உள்ளது.இவர்கள் மிர்சா குலாம் அஹம்மது என்ற பொய்யனை இறுதி தூதராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இவர்களுடைய நம்பிக்கையின் படி நபி ஈஸா(அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள்.
இந்த அஹமதியா பிரிவினரிடம் என்ன தான் எடுத்து சொன்னாலும் அவர்கள் ஏற்றுக்கொள்வதிற்கில்லை.
இதை ஏன் இங்கு எடுத்து சொல்கிறேன் என்றால் எதிர்காலத்தில் இன்னொரு பொய்யன்( மிர்சா குலாம் அஹம்மது) தோன்றலாம்.அவனை நம்பி இன்னொரு பிரிவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான்.
காலத்தில் பிந்தியவரான நமது தூதர் எனக்கும் அவருக்கும் என்று தம்மை முன்னிலைப்படுத்துவது என்பது எதை குறிக்கிறது என்றால் நபி ஈஸா(அலை) அவர்கள் இரண்டாவது முறை வருகை தரும் போது தூதராக தான் வருவார்கள் என்பதை காட்டுகிறது.
மேலும் நமது இறைத்தூதர் அவர்கள் நபி ஈஸா(அலை) அவர்கள் எங்கு வருவார்கள்? எப்போது வருவார்கள்? அவர் எப்படி இருப்பார்? என்பதை தெளிவாக கூறியுள்ளார்கள்.
இந்த தெளிவான ஹதிஸ் நம்மை ஒரு பெரிய சதியிலிருந்து காப்பாற்றும்.
அது என்ன சதி?
எவன்ஜலிகல் கிறித்தவ உலகம் போலி ஈஸா நபியை உருவாக்கும் திட்டத்தில் உள்ளதாகவும் அதற்கு முன்னேற்பாடாக தான் Messiah என்ற படத்தை Netflix ல் வெளியிட்டுள்ளார்கள் என்றும் சதிக்கோட்பாட்டாளர்கள் சமூக வளைத்தளங்களில் கூற தொடங்கியுள்ளனர்.
ஆக எவன்ஜலிகல் கிறித்தவ உலகத்தின் சதியில் நாம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க நமக்கு இறைத்தூதர் அறிவித்த ஹதிஸ் மிகுந்த பயனளிக்கும்.
நபி ஈஸா(அலை) அவர்கள் டமாஸ்கஸ் நகரில் இறங்குவார்கள்.பஜ்ர் நேரத்தில் இறங்குவார்கள்.பள்ளிக்கு வெளியே தஜ்ஜாலின் படைகள் முகாமிட்டிருக்கும்.
பள்ளியின் கதவுகளை திறப்பதற்கு நபி ஈஸா(அலை) அவர்கள் ஆணையிடுவார்கள்.
பள்ளியின் கதவுகள் திறக்கப்படும்.
உண்மையான மீட்பரான நபி ஈஸா(அலை) அவர்களை கண்டவுடன் போலி மீட்பன் தஜ்ஜால் தன் படைகளுடன் பின் வாங்குவான்.
டமாஸ்கஸ் நகரில் தொடங்கும் துரத்தல் 350 கிலோமீட்டர் தூரத்திற்கு நீளும்.
350 கிலோ மீட்டர்களுக்கு ராணுவ நடவடிக்கைகள் என்றால் துரத்தல் என்பது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு நீளும்.
இறுதியில் டெல்அவிவ் என்ற நகருக்கு அருகில் (இன்றைய இஸ்ரேலின் வர்த்தக தலை நகரம்) லூட் என்ற கிராமத்தில் தஜ்ஜால் கொல்லப்படுவான்.நபி ஈஸா(அலை) அவர்களின் கைகளில் தஜ்ஜாலின் ரத்தம் படியும்.
குரசான் பகுதியிலிருந்து வரும் முஸ்லிம் படையினர் யூதர்களை ஓட ஓட விரட்டுவர்.
அந்த நாளில் கல்லும் கூட என் பின்னால் யூதர் இருக்கிறான் அவனை கொல்லுங்கள் என்று கூறும்.
இறுதியாக ஜெருசலம் கைப்பற்றப்படும்.நபி சுலைமான்(அலை) அவர்களின் அரியணை மிக்க தகுதி படைத்தவரான நபி ஈஸா(அலை) அவர்களிடம் வரும்.
ஐநூறு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சுரண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இதன் பின்பு ஏழு ஆண்டுகள் உலகில் அமைதி நிலவும்.
பல்லி இறந்தாலும் வால் துடிக்கும் என்ற கணக்கில் தஜ்ஜாலின் அடியாட்களான யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் பெரும்படையுடன் நபி ஈஸா(அலை) அவர்களை முற்றுகையிடுவார்கள்.
இறைவன் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தை அழிப்பான்.
நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கம் உலகை ஆளும்.
ஜெருசலத்தை மையமாக கொண்டு, நபி இப்ராஹிம் (அலை) அவருடைய இளைய மகனின் சந்ததிகளும், மதினாவை மையமாக கொண்டு ,அவருடைய மூத்த மகனின் சந்ததிகளும், உலகத்தில் இறைவனின் சட்டத்தை அமல்படுத்துவார்கள்.
உலகம் தூய்மையடையும்.அபரிமிதமான செல்வங்களை பூமியும் வெளிப்படுத்தும்.
அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் உயந்தவன்.
இது நாள் வரையிலும்,நமது மதரஸாக்களினால், வெறுமே பூச்சாண்டி கதை போல பிரசுரிக்கப்படும் தஜ்ஜாலுக்கு பின்னுள்ள வரலாற்றையும், பொருளாதாரத்தையும், உலக அரசியலையும், கடந்த 50 தொடர்களில் பார்த்தோம்.
இந்த தொடருக்கு அடிப்படையாக இருந்தது இம்ரான் ஹுசைன் என்ற அறிஞரின் சொற்பொழிவே.அவர் இது தொடர்பாக பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
மிகச்சிறந்த கல்வியை எடுத்துரைத்த இம்ரான் அவர்களுக்கு இறைவன் அருள் புரியட்டுமாக.
இம்ரான் அவர்களுக்கு முறையான மார்க்க கல்வி அளித்த மவுலான பஜ்லூர் ரஹ்மான் அவர்களுக்கும் இறைவன் அருள் புரியட்டுமாக.
இவருடைய ஆசிரியரும், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் வெளிப்பட்டுவிட்டது என்ற உண்மையை நூறு ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து சொன்னவருமான, மவுலானா முகம்மது இக்பால் அவர்களுக்கும் இறைவன் அருள் புரியட்டுமாக.
இந்த 50 தொடர்களில் நான் உங்களுக்கு வழங்கியது சிறிய அறிமுகம் மட்டுமே.
உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள யூ டீயிப்லும், விக்கிபீடியாவிலும், அதிகமாக தேடுங்கள்.கிடைக்கும் தகவல்களை ஹதிஸ் மற்றும் குர்ஆன் உடன் ஒப்பிட்டு உண்மையை உணருங்கள்.
யூ-ட்யூப் ல் நீங்கள் தேடும் போது பழைய பூச்சாண்டி கதைகள் தான் நிறைய இருக்கும் ஆனால் இம்ரான் ஹுசைனின் சொற்பொழிவு சரியான தேர்வாக இருக்கும்.
ஆனால் இம்ரான் ஹுசைன் அவர்களின் சொற்பொழிவும், புத்தகமும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும்.
ஆகையால் தஜ்ஜாலை பற்றிய தேடல்களை பல இடங்களில் விரிவுபடுத்துங்கள்.
தஜ்ஜாலை பற்றி புரிந்து கொள்ள குர்ஆன் மற்றும் ஹதிஸ் மட்டும் போதாது.பைபிளும் தேவை.தவ்ராத்தும் தேவை.
அதே போல் உலக அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான அறிவும் தேவை.அதே போல அனைத்து துறைகளை பற்றிய பொது அறிவும் தேவை.
தஜ்ஜாலை பற்றி ஆராய, அதை பற்றி மக்களிடம் எடுத்துரைக்க, அரசியல்,சட்டம்,சமூகம்,பொருளாதாரம்,மருத்துவம்,தகவல் தொழில் நுட்பம் உட்பட பல துறைகளில் அனுபவம் பெற்ற, மார்க்கம் தெரிந்த ஒரு குழு குறைந்தது மாவட்டத்திற்கு ஒன்றாவது இருக்க வேண்டும்.இருந்தால் தான் தஜ்ஜாலின் பித்னாக்களையும், தினசரி சதிகளையும் நாம் மக்களிடம் கொண்டு செல்ல முடியும்.....
ஒருவரின் மரணத்திற்கு பின்னும் மூன்று காரியங்கள் அவருக்கு நன்மையளிக்கும். அவைகள்
1.பயனுள்ள சேவைகள்(ஸதக்கத்துல் ஜாரியா): -மரங்கள் நடுதல் ,நீர்நிலை ஏற்படுத்தல்.
2.பயனுள்ள கல்வி(இல்முன் நாபியா): - மக்களுக்கு நன்மையை அளிக்கும் கல்வியை பரப்புதல்
3.ஷாலிஹான குழந்தைகள்(வலதுன் ஷாலிஹ்)
இதில் நான் இரண்டாவது நற்காரியத்தை செய்திருப்பதாக கருதுகிறேன்.
ஒரு பயனுள்ள கல்வியை உங்களிடம் கொண்டு வந்துள்ளதாக கருதுகிறேன்.
இந்த தொடரை நான் என் வாழ்வில் செய்துள்ள மிகப்பெரிய நற்காரியமாகவும் கருதுகிறேன்.
இந்த பதிவுகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் இறைவன் என்னை மன்னித்து சரியானதை எனக்கு கற்பிக்கட்டும்.
மேலும்
இஸ்லாமும் வணிகவியலும் என்ற தலைப்பிலும்
ஜின்களும் வழிகேடுகளும் என்ற தலைப்பிலும்
இரண்டு தொடர்களை வெளியிடுவதற்கான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது இந்த தஜ்ஜால் தொடரினை, புத்தகமாக வெளியிட்டு அதை என்னால் முடிந்த எண்ணிக்கையில் இலவசமாக வழங்கவும் முடிவு செய்துள்ளேன்.
சீன தேசம் சென்றேனும் கல்வியை கற்றுக்கொள், என்ற நமது தூதரின் அறிவுரை எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை பற்றியும் உண்மையான கல்வியின்(நமது பள்ளி கல்வி அல்ல) தேவை என்ன என்பதையும் இந்த தஜ்ஜால் தொடர் நமக்கு விளக்கியுள்ளது.
இந்த தொடரை, இந்த குழுவில் பதிவிட்ட இந்த பதிவாளர்(நான்), சரியானதை எடுத்துரைத்துள்ளார் என்று நீங்கள் கருதினால், இந்த பதிவாளரின் பதிவு பயனுள்ள ஒன்று என்று நீங்கள் கருதினால், இந்த பதிவாளருக்காக(எனக்காக) நீங்கள், இறைவனிடம் பாவமன்னிப்பு கோரிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த தொடரினை பொறுமையாக படித்து வந்த அனைத்து உள்ளங்களுக்கும் இறைவன் அருள்புரியட்டும் என்று பிரார்த்தித்து இந்த தொடரை நிறைவு செய்கிறேன்.
இறைத்தூதர் அவர்கள் தனது ஹஜ்ஜின் போது ஆற்றிய இறுதி பேரூரையில்(ஹஜ்ஜத்துல் விதா),இங்கு வந்துள்ளவர்கள் இந்த செய்திகளை இங்கு வராதவர்களிடம் கொண்டு செல்லுங்கள் என்ற வார்த்தைகளை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த தொடரை படித்து தெரிந்துக்கொண்டவர்கள்,தஜ்ஜாலை பற்றி அறியாதவர்களிடம் கொண்டு செல்லுங்கள்.
நீங்கள் ஒரு கல்வியை கற்றுக்கொண்டால் அதை கற்பிப்பதும் உங்கள் கடமை என்ற இறைக்கட்டளைக்கு பயந்து தான் நான் இந்த தொடரை எழுதினேன்.
நீங்களும் இந்த செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக.அருள் புரிவானாக
எழுதியவர்:
அபுபக்கர் சித்தீக் முகமது கௌஸ் மைதீன்.
வெளியீட்டாளர்கள்:
உபேதுல்லா முகம்மது கௌஸ் மைதீன்.
Mohammed sajeeth மற்றும்
மறுமைக்கான அடையாளம் நண்பர்கள்.
இந்த தொடரை இன்டர்நெட் (https://e-funandjoyindia.blogspot.com) வெளியிட்டது:- D.ஆஷிக் உமர்
பதிவு நிறைவு பெற்றது.........
தஜ்ஜால் தொடர் -பதிவு- 49; நபி ஈஸா(அலை) அவர்களின் வருகையும் தஜ்ஜாலின் முடிவும், பனூ இஸ்ராயில்கள் பாபிலோனில் அடிமைகளாக்கப்பட்டு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நேரத்தில்,நபி உஜைர்(அலை) அவர்கள் பனூ இஸ்ராயில்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் முன்னறிவிப்பினை வழங்கினார்:- https://e-funandjoyindia.blogspot.com/2021/01/49.html?spref=tw
Post a Comment