தஜ்ஜால் தொடர் -பதிவு- 48
நபி ஈஸா(அலை) அவர்களின் வருகையும் தஜ்ஜாலின் முடிவும்
நாம் இந்த தொடரில் தொடக்கத்திலிருந்து கூறி வருவது என்னவென்றால் தஜ்ஜாலின் செயல்திட்டம் நான்கு கட்டங்களை உடையது.
முதல் கட்டத்தில் அவன் பிரிட்டனை தலைமையாக கொண்டு ,அவனுடைய செயல்திட்டத்தை மிகச்சிறப்பாக செய்து முடித்தான்.இந்த கட்டத்தில் அவன் உத்மானிய இஸ்லாமிய பேரரசை வீழ்த்தி புனித நகரை ஆக்கிரமித்தான்.எதிரியின் மொழியில் சொன்னால் புனித நகருக்கு விடுதலை பெற்று கொடுத்தான்.
அதன் பின்பு அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு தன் செயல்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை தொடங்கினான்.இந்த கட்டத்தில் உலகிலுள்ள யூதர்கள் அனைவரையும் புனித நகரில் குடியேறச் செய்தான்.யூதர்களுக்கென்று ஒரு தனி நாட்டினை உருவாக்கினான்.இன்றைய தினம் புனித நகரத்தை,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் தலைநகரமாக அறிவித்துள்ளன.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ள அவனுடைய இரண்டாவது கட்டம் ஏறக்குறைய முடிவுக்கு வரவுள்ளது.
ஆம்.அமெரிக்கா என்ற சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது.
அமெரிக்கா என்ற நாடு 1970களிலேயே முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.ஆனால் அது இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கிறது.இதற்கு காரணமே சவூதி மன்னர் பைசல் அமெரிக்காவுடன் செய்துக்கொண்ட முட்டான்தனமான ஒப்பந்தமே.
இந்த ஒப்பந்தம் இல்லையென்றால் பெட்ரோ-டாலர் என்ற காகிதப்பண முறை வந்திருக்காது.
1970களிலிருந்து அமெரிக்காவின் முதுகெலும்பாக திகழ்வது இந்த பெட்ரோ டாலர் தான்.
ஆனால் இப்போது இந்த பெட்ரோ டாலரின் மீது சீனாவும்,ரஷ்யாவும் சில தசாப்தங்களாக போர் தொடுத்து வருகின்றன.
சீனாவும் ரஷ்யாவும் தாக்குதல் நடத்துவது ஆச்சரியமானது அல்ல.ஏனெனில் இவர்கள் அமெரிக்காவின் எதிரிகள்.ஆனால் இன்று அமெரிக்காவின் பெட்ரோ டாலரின் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்துவது அமெரிக்காவின் நெருங்கிய உறவினர்களான அமெரிக்காவின் யூத முதலாளிகளும் இஸ்ரேலும் சவூதி அரேபியாவும் தான்.
ஆம்.தஜ்ஜால் தன்னுடைய இரண்டாவது கட்டத்தை நிறைவு செய்ய போகிறான்...எனவே தான் ஒரு வீரியமற்ற கொரோனா வைரஸ் என்ற ஒற்றை காரணத்தை கொண்டு உலகம் முழுவதையும் லாக்-டவுன் என்ற சிறையில் அடைத்திருக்கிறான்.
இதன் விளைவாக ஏற்கனவே பெட்ரோலியத்தின் விலை,உலக சந்தையில் அதளபாதாளத்திற்கு சென்றது.
இந்த நிலையில் ரஷ்யாவுடன்,சவூதி அரசு பெட்ரோலிய உற்பத்தி போரில் ஈடுபட்டது.இதன் விளைவாக அதிகப்படியான எண்ணெய்யை உற்பத்தி செய்தது சவூதி.
லாக்டவுன் காரணத்தால் தேவை குறைந்துவிட்டது.ஆனால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.இதன் விளைவு அமெரிக்காவின் எண்ணெய் விலை எதிர்மறையில் சென்றது.ஆம்.அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் தங்களிடமிருந்து எண்ணெய் பெற்றுக் கொள்ள பணம் வழங்கியது.
தான் உற்பத்தி செய்த WTI எண்ணெயை சேகரிக்க முடியாத காரணத்தால் எண்ணெய் பெற்றுக் கொள்பவர்களுக்கு பணம் கொடுத்தன அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்.
இன்று அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் திவாலாக உள்ளன.
பெட்ரோலின் தேவை குறைந்தால் பெட்ரோ டாலரின் மதிப்பும் குறையும்.
மேலும் அமெரிக்காவிலும் லாக்டவுன் தொடர்வதால்,அமெரிக்க நிறுவனங்களுக்கும்,மக்களுக்கும் உதவிடும் பொருட்டு அந்நாட்டு அரசு,மத்திய வங்கியின் மூலம் புதிய டாலரை அச்சடித்து புழக்கத்தில் விடுகின்றன.
கொரோன பிரச்சனை வந்ததிலிருந்து அமெரிக்க மத்திய வங்கி தினமும் 125 பில்லியன் அமெரிக்க டாலர்களை அச்சடிக்கின்றன.
புதிது பதிதாக டாலர் அச்சடிக்க அச்சடிக்க அதன் மதிப்பு குறையும்.ஏற்கனவே பெட்ரோலின் தேவை குறைந்துவிட்டதால் பெட்ரோ டாலரும் சிக்கலில் இருக்கிறது.
விரைவில் அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவுள்ளது.இதையே காரணமாக வைத்து,இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் யூத முதலாளிகளின் ஆணைக்கிணங்க,சவூதி இளவரசன் முகம்மது பின் சல்மான், பெட்ரோ-டாலர் ஒப்பந்தத்தை தடை செய்வான்.
இந்த நிகழ்வு நடைபெறும் போது அனைத்து நாடுகளும் தங்களின் கையிருப்பிலுள்ள டாலரை நீக்கும்.இதன் விளைவாக அமெரிக்காவில் மேலும் டாலர் புழக்கம் கணக்கில் அடங்காமல் அதிகரிக்கும்.
இறுதியாக வெனிசுவேலா,ஜிம்பாப்வே போன்ற நாடுகளின் பணம் மாண்டது போல் அமெரிக்காவின் டாலரும் வீழும்.
அமெரிக்க டாலர் வீழும் போது அமெரிக்கா என்ற சாம்ராஜ்யம் முடிவுக்கு வரும்.
கொரோனாவால் மக்கள் இறந்து போகிறார்கள் என்பது உண்மையா?பொய்யா? என்பது எனக்கு தெரியாது.ஆனால் அமெரிக்க டாலர் இறக்கப்போகிறது என்பது மட்டும் நன்கு தெரிகிறது.
அமெரிக்காவை வீழ்த்த திட்டமிட்டுள்ள, அமெரிக்க யூத முதலாளிகள் மற்றும் அவர்களுடைய பினாமிகள், அமெரிக்கா வீழ்வதற்கு முன்னரே தங்களுடைய செல்வங்களையும்,வணிக நடவடிக்கைகளையும் இஸ்ரேலுக்கு மாற்றி விடுவார்கள்.
இறுதியாக அமெரிக்கா வீழும்.அமெரிக்கா வீழும் போது தஜ்ஜால் தன்னுடைய இரண்டாவது கட்டத்தை நிறைவு செய்து வெற்றிகரமாக மூன்றாவது கட்டத்திற்குள் நுழைவான்.
இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் அமெரிக்காவிற்கு யூதர்கள் முடிவெழுதுவார்கள்.
அமெரிக்காவின் பணம் உலக பணமாக உள்ளது.அது வீழும் போது அமெரிக்காவிற்கு மட்டும் அது அழிவை தராது.உலகிற்கே பேரழிவை உருவாக்கும்.அப்போது உலக நாடுகள் அனைத்தும் ஒன்று கூடி(ரஷ்யா மற்றும் சீனா மற்றும் ஆதரவு நாடுகள் தவிர்த்து)புதிய பணமுறையை உருவாக்குவார்கள்.
அந்த பணம் நாட்டுக்கொரு பணமாக இல்லாமல்,உலகத்திற்கே பொதுவான ஒரு பணமாக இருக்கும்.
இந்த உலகப்பொது பணம் அறிமுகப்படுத்தப்படும் போது காகிதம் மற்றும் டிஜிட்டல் என்ற இரு வடிவிலும் இருக்கும்.ஆனால் இறுதியாக டிஜிட்டல் பணம் மட்டுமே மிஞ்சும்.
இந்த உலகப்பணத்தின் கட்டுப்பாடு இஸ்ரேலின் கையில் இருக்கும்.
அராபிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்தோ அல்லது ஆக்கிரமித்தோ மத்திய கிழக்கின் எண்ணெய் மேல் இஸ்ரேல் ஆதிக்கம் பெறும்.
பைசல் அமெரிக்காவுடன் செய்த ஒப்பந்தம் போல சல்மான் இஸ்ரேலுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளக்கூடும்.
சுருக்கமாக கூறினால் தஜ்ஜாலின் மூன்றாவது கட்டம் தொடங்க உள்ளது.இஸ்ரேல் உலக வல்லரசாக உருவெடுக்க உள்ளது.
மூன்றாவது கட்டத்தில் உலக வல்லரசாக இஸ்ரேல் உருவெடுக்கும் போது மல்ஹமா நடைபெறும்.மல்ஹமாவின் முடிவில் தஜ்ஜால் வெளிப்படுவான்(இறுதி கட்டத்தில்)
மல்ஹமாவின் முடிவில் உலக வல்லரசாக இருக்கும் இஸ்ரேலுக்கு சவால் விடும் வகையில் புதிய இஸ்லாமிய அரசு(நபி முகம்மது(ஸல்) அவர்களுடைய உம்மத்துகளின் அரசு) இமாம் மஹதி தலைமையில் உருவாகும்.
போட்டியாக உருவாகியுள்ள அரசை தஜ்ஜால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டான்.
தஜ்ஜாலின் படைகள் டமாஸ்கஸில் இமாம் மஹதியை முற்றுகையிடும்.
இதன்பின்பு பஜ்ர் நேரத்தில்,யுக முடிவு நாளின் மிக மிக மிக மிக முக்கிய அடையாளமான நபி ஈஸா(அலை) அவர்களின் வருகை ஏற்படும்.
மீட்பரை பற்றிய செய்திகளை இன்ஷா அல்லாஹ் நாளை காணலாம்.
பதிவு நாளை தொடரும்....
தஜ்ஜால் தொடர் பதிவு- 47; நேற்று பதிவை நிறைவு செய்யும் போது, இன்று நபி ஈஸா(அலை) அவர்களின் வருகையையும் தஜ்ஜாலின் முடிவையும் காணலாம் என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதற்கு முன்பாக தஜ்ஜாலை குறிப்பிடும் குர்ஆன் வசனத்தை பற்றி இன்று காணலாம்:- https://e-funandjoyindia.blogspot.com/2021/01/47.html?spref=tw
Post a Comment